Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Kadhal Vendum
Konjam Kadhal Vendum
Konjam Kadhal Vendum
Ebook158 pages59 minutes

Konjam Kadhal Vendum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

சினிமா ஆசை என்பது ஒன்வே மாதிரி. ஒருமுறை சென்னைக்கு புறப்பட்டு வந்தவன் தோற்றாலும் திரும்ப மாட்டான். ஏனெனில் திரும்பி ஊருக்குப் போனால் நான் முன்னால் சொன்னதைப் போல் வாழ்க்கை முழுக்க ஊராரின் கேலிக்கு ஆளாகி அவமானப்பட வேண்டியிருக்கும்.

எனவே பெரும்பான்மையினர் தோற்றாலும் சென்னையிலேயே தங்கி வேறு ஏதாவது தொழிலில் இறங்கி விடுவார்கள். இந்தக் கதையில் வரும் 'ஜனா' என்ற இளைஞனும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு படை எடுத்தவன்தான்.

சினிமாவை நினைத்து வருபவர்கள் ஏறக்குறைய தங்கள் இளமையையும் எதிர்காலத்தையும் அடகு வைப்பது போல்தான். சினிமாவுக்கு படையெடுப்போரில் பாதிப் பேர் தங்களது திறமையைப் பற்றி நிர்ணயிக்காமல் ஆசையில் மட்டும் உந்தப்பட்டவர்களாய் இருப்பார்கள்.

ஆனால் ஜனா திறமைசாலியாக இருந்தும் நேரமும் அதிர்ஷ்டமும் கைகூடாது கஷ்டப்படுவது மிக மிக யதார்த்தமான சூழ்நிலையாகும். அதோடு சினிமாவுக்கு முயற்சிக்கும் இளைஞனுக்கு குடும்ப பின்னணி சாதகமாக இல்லையெனில் அதுவே அவனது முன்னேற்றத்திற்கு முட்டுக்கல். ஜனா தன் தங்கையின் திருமணத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் சினிமாவோடு அவன் போராடுவது... குடும்பத் தலைவனாக வறுமையில் தவித்தும் தொடர்ந்து போராடி காதல் கோட்டை மூலம் தேசிய விருது பெற்ற நண்பர் அகத்தியன் நினைவுக்கு வருகிறார்.

சினிமா போராட்டத்தின்போது "காதல் பிறக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. சில காதல் சினிமாவையே மறக்கடிக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிடும் மிகமிக சொற்பமாக சில காதல்களே சினிமா லட்சியத்துக்கு திரியாகி ஒளிரச் செய்யும். பிரதிபா, ஜனாவுக்கு அப்படி ஒரு திரியாக உதவுகிறாள். புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. திறமைசாலியான ஜனா மீண்டும் சினிமாவில் ஜெயிக்கப்போகிறான் என்ற தன்னம்பிக்கைக்கு வித்திட்டது பாராட்டுக்குரியது.

- கே. பாக்யராஜ்

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900229
Konjam Kadhal Vendum

Read more from Pattukottai Prabakar

Related to Konjam Kadhal Vendum

Related ebooks

Related categories

Reviews for Konjam Kadhal Vendum

Rating: 4.4 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Kadhal Vendum - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கொஞ்சம் காதல் வேண்டும்

    Konjam Kadhal Vendum

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    முன்னுரை

    ன்புள்ள உங்களுக்கு...

    என் பள்ளிப் பருவத்தில் சுற்றுலா சென்றபோது கன்னியாகுமரியில் நான் பார்த்த முதல் சினிமா ஷுட்டிங். புவனா ஒரு கேள்விக்குறி படத்தன் ஷுட்டிங். சினிமா நபர்களின் பரபரப்பான இலக்கம் எனக்கு பிரமிப்பூட்டியதே ஒழிய நாமும் சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

    ‘உங்கள் ஜுனியர்’ பத்திரிகை துவங்கி அதில் சிறப்புப் பேட்டிக்காக 1988 வருடம் இயக்குநர் திரு. கே.பாக்யராஜை சந்திக்கச் சென்றபோது அந்தச் சூழல், அவர் பேட்டியில் சொன்ன சில கருத்துக்கள் எல்லாமாக சேர்ந்து ஓர் ஆர்வ விதை மனதில் விழுந்தது.

    அது முளைவிட்டதும் அவரையே சந்தித்து சினிமாவின் தொழில் நுட்பம் மற்றும் திரைக்கதை அமைப்பை கற்க விருப்பமென்று தெரிவித்தேன். சம்மதித்தார். அவரோடு சில படங்களின் விவாதங்களில் கலந்து கொண்டேன். இரண்டு படங்களுக்கு உதவி இயக்குநராக பணி புரிந்தேன். (அவரோடு இணைய பாலம் அமைத்தவர்கள் என் இனிய சுரேஷ்-பாலா)

    அந்த அனுபவங்கள், அப்போது கிடைத்த பல அறிமுகங்கள் அதன்பிறகு எனக்கு அவ்வளவு உபயோகமாக இருந்தன. பல படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். சில படங்களுக்கு வசனம் எழுதினேன். சின்னத்திரைத் தொடர்களுக்கு நானே திரைக்கதை, வசனம் செய்துக் கொடுத்தேன். செய்தும் வருகிறேன்.

    இந்தத் துறையில் இயக்குநராக வர வேண்டும் என்கிற வேட்கையோடு பல வருடங்களாக விடா முயற்சியுடன் போராடி வரும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும். ஆனால், அத்தனைப் பேருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்தப் போராட்ட இளைஞர்களை மையப்படுத்தி கதை எழுத வேண்டும் என்கிற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது.

    அதன் வெளிப்பாடே ‘கொஞ்சம் காதல் வேண்டும்’ நாவல். இதன் முடிவை யதார்த்தமாக அமைத்திருக்கிறேன். அந்த யதார்த்த உண்மை அறிய பல உதவி இயக்குனர்கள் என்னை நேரிலும் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு எங்கள் நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக இதன் இன்னொரு பாகம் எழுத வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். ஆகவே இதன் தொடர்ச்சியாக ‘எப்படியும் ஜெயிக்க வேண்டும்’ எழுதினேன்.

    இந்த இரண்டு நாவல்களையும் பூம்புகார் பதிப்பகத்தார் ஒரேப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் - மிகச் சிறப்பாக. அவர்களுக்கு என் இதய நன்றி.

    இந்தப் புத்தகத்திற்கு எனது திரையுலக திசைகாட்டி திரு.கே. பாக்யராஜ் முன்னுரை எழுதினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதி தொடர்பு கொண்டபோது ஆர்வமாக சம்மதம் தெரிவித்தார். அழகாக எழுதிக்கொடுத்தார். திரையுலகில் நான் சந்தித்த பல பிரமுகர்கள் மனசுக்கும் மேக்கப் போட்டவர்கள். மனசுக்கு மேக்கப் போடாத வெகு சிலரில் திரு. கே. பாக்யராஜும் ஒருவர். ஒரு சிறப்பான இயக்குநர் அவர் என்பது நாடே அறிந்த விஷயம். மிகச்சிறந்த மனிதர் என்று அருகில் சென்றபோதுதான் அறிந்து கொண்டேன்.

    அன்றும், இன்றும், என்றும் என் மரியாதைக்குரிய அவருக்கு என் இதயப் பூர்வமான நன்றி.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    லாரம் ஒலித்தபோது, அது வேறு கிரகத்தில் நிகழ்வது போலத்தான் இருந்தது. அதன் தொடர் ஒலி நித்திரை என்னும் சுகமான வாகனத்திலிருந்து என்னை கீழே இறக்கியது. எல்லை இல்லாத, அர்த்தமில்லாத ஆனால், சுகமான கனவுலகப் பணயம் அத்தோடு நிறைவுக்கு வந்து... யதார்த்த உலகில் கைலி நழுவியிருப்பது உணர்ந்து கை சரி செய்தது. மறு கை நீண்டு அலாரம் நிறுத்தியது.

    எழுந்து அமர்ந்து கொண்டேன். கொட்டாவி வந்தது. இமைகள் நழுவின. உடல் கெஞ்சியது. நள்ளிரவில் குடித்த இரண்டு பெக் விஸ்கி இன்னும் கொஞ்சம் போதையை விட்டு வைத்திருந்தது. பொட்டில் லேசாக வலி, சரிந்து படுத்து தொடைகளுக்கு நடுவில் தலையணை வைத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போய்விட ஏக்கமாய் இருந்தாலும்...

    அலாரம் டைம்பீசில் மணி ‘நான்கு, முப்பத்தைந்து’ என்று சொன்ன முட்கள் என்னை நோக்கி துப்பாக்கி நிமிர்த்துவதைப் போல உணரவே, தலையை உதறிக் கொண்டேன்.

    அறையின் இரவு விளக்கின் நீல ஒளியில் சுகமாக உறங்கும் வெங்கடேஷ்வரனைப் பார்க்க பொறாமையாக இருந்தது. ராஸ்கல்! ரயில்வே ஸ்டேஷனில் அடிக்கும் தண்டவாள மணி மாதிரி அலறிய இந்த அலாரத்தின் ராட்சச சத்தத்தையும் மீறி இப்படி உறங்குகிறானே...

    ஆனால் உடனே மனம் சமாதானமானது. அவனுக்கு என்னை மாதிரி அப்படியொன்றும் பிரமாதமான எதிர்கால லட்சியம் இல்லை. அதை நோக்கிய சதா சிந்தனை இல்லை. அதற்கான அலைச்சலோ, பரபரப்பான செயல்பாடுகளோ இல்லை. நன்றாக சாப்பிட்டு அதன் ஜீரணத்துக்காகக் காத்திருக்கும் எருமை மாடு மாதிரி உப்பு சப்பில்லாத வாழ்க்கை அவனுக்கு.

    ஒரு செக்குமாட்டுத்தனம் கொண்ட வாழ்க்கை! காலையில் எட்டு மணிக்கு எழுகிறான். காபி குடித்துவிட்டு அரை மணி நேரம் பேப்பரில் வெட்டு, குத்து, கொலை, வெடிகுண்டு, ஆசிட் வீச்சு, கற்பழிப்பு, கள்ளக்காதல, கைது, கோர்ட் விசாரணை, போராட்டம், பந்த், கலவரம், பயங்கர நோய், போர்... என்று வழக்கம்போல் நெகடிவ் செய்திகளை படிக்கிறான். குளித்து, டிரெஸ் பண்ணி, மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு, இரண்டாம் கையாக வாங்கிய ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து பாரீஸ் கார்னரில் இருக்கும் தன் ஆபீசுக்குப் போகிறான். பத்து முதல் ஆறு வரை அங்கே மேலதிகாரி சொல்கிறபடி ஃபைல்களில் மூழ்கி ஸ்டேட்மெண்ட்ஸ் தயாரித்து கொடுத்துவிட்டு ஆறரை மணிக்குத் திரும்புகிறான். மீண்டும் ஒரு முறை

    Enjoying the preview?
    Page 1 of 1