Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamyum Arputha Vilakkum
Appusamyum Arputha Vilakkum
Appusamyum Arputha Vilakkum
Ebook280 pages2 hours

Appusamyum Arputha Vilakkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580112301950
Appusamyum Arputha Vilakkum

Read more from Bakkiyam Ramasamy

Related to Appusamyum Arputha Vilakkum

Related ebooks

Related categories

Reviews for Appusamyum Arputha Vilakkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamyum Arputha Vilakkum - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமியும் அற்புத விளக்கும்

    Appusamyum Arputha Vilakkum Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books
    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அப்புசாமியும் அற்புத விளக்கும்

    பாக்கியம் ராமசாமி
    முன்னுரை

    அந்தந்த காலக் கட்டங்களில் அரசியல் கட்சிகள் பச்சோந்தி வண்ணம் காட்டிப் பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்தான்.

    நேற்றுவரை எதிர்க் கட்சிகளாக இருந்தவை இன்று கூட்டணியாகின்றன. சென்ற கூட்டணியில் உற்சாகமாகப் பங்கு கொண்டவை அடுத்த தேர்தலில் எதிரிகளாகின்றன.

    அரசியல் ஒரு கூவம். ஆனால் அதைச் சகித்துக் கொண்டே பொதுமக்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

    இந்த நாவலில் அப்புசாமி சும்மா இருக்க மாட்டாமல் அரசியல் விவகாரத்தில் இறங்கும் படியாகிறது.

    அலாவுதீனுக்கு ஒரு அற்புத விளக்கு கிடைத்தது போல ஒரு விளக்கும், அதைத் தேய்த்தால் ஏவின பணியைச் செய்யவல்ல ஒரு சோப்ளாங்கி பூதமும் கிடைத்து விடுகின்றன. நல்ல நாளிலேயே கிறுக்குத்தனத்துக்கு அவரிடம் பஞ்சமில்லை. பூதத்தோடு சேர்ந்து அவர் அடிக்கும் கொட்டங்கள் விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. நூலிலுள்ள அரசியல் கருத்துக்கள் அவ்வப்போது கட்சிப் பத்திரிகைகளில் வெளிவந்தவையே தவிர கற்பனையானவை அல்ல. ஆகவே எந்தத் தனிப்பட்ட தலைவரையும் கேலி செய்யவோ, மனசு புண்படவோ எழுதப்பட்டவை அல்ல.

    - பாக்கியம் ராமசாமி

    1

    அப்புசாமியின் அப்பா பெயர் முஸ்தபா அல்ல. அவர் தையற்காரரும் அல்ல. சீனாவின் தலைநகரத்தில் அவர் வசித்தவரும் அல்ல. ‘நான்தான் உன் ஒடிப்போன சித்தப்பா’ என்று எந்த ஆப்பிரிக்க தேசத்து மந்திரவாதியும் குடும்பப் பாட்டைப் பாடிக்கொண்டு அப்புசாமியைத் தேடி வரவுமில்லை.

    மந்திர குகைக்குள் அப்புசாமியை இறங்கச் சொல்லி ஐந்து தலைப் பாம்பின் விசேஷ காவலில் இருந்த அற்புத விளக்கை அணைத்து, (ஞாபகமாக எண்ணெயைக் கொட்டி விட்டு) விளக்கை மட்டும் வெளியே எடுத்து வந்து கொடுக்கச் சொல்லி எந்தத் தந்திரக்கார மந்திரவாதியும் அப்புசாமியை வற்புறுத்தவும் இல்லை.

    இத்தனை இல்லைகள் இருந்தும்.... தும்... தும்... தும் .. அப்புசாமிக்கு அற்புத விளக்கு ஒன்று கிடைத்துவிட்டது.

    எப்படி? விளக்கு பற்றி விளக்கவுரை ஐந்தாம் அத்தியாயத்தில் (ஞாபகமிருந்தால்) தரப்படும். அதற்கு முன் சுருக்க விளக்க உரையாக –

    அந்த விளக்கு மாயாஜால விளக்கு.

    தேய்த்தால் பூதம் வரும் - கொஞ்சம் லேட்டாக.

    லேட்டாக பூதத்தை வரவழைப்பது விளக்கின் கோளாறு அல்ல, பூதத்தின் கோளாறு நடக்கவோ பறக்கவோ போதுமான சக்தி கிடையாது. பூதம் பஞ்சத்திலடிபட்ட பூதம், சாப்பிட்டு ஆயிரம் வருஷமாயிற்று (பூதத்தின் பெயரே - பஞ்ச பூதம்).

    அப்புசாமி தற்செயலாக விளக்கைத் தேய்த்தார்.

    நோஞ்சானாகப் பூதம் தோன்றியது.

    ‘நான் இந்த விளக்கின் உரிமையாளருக்கு அடிமை; கட்டளை இடுங்கள். அதற்கு முன் ஒரு சின்னப் பொறையாச்சும் குடு நைனா, சாப்பிட்டு ஆயிரம் வருஷமாச்சு’ என்று பஞ்சபூதம் பரிதாபமாகச் கெஞ்சியது.

    அப்புசாமி பூதத்தை வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தார். ஆனால் அடுத்த கணமே அவர் முகத்தைச் சோகம் சூழ்ந்தது.

    ‘விடியாமூஞ்சி வேலைக்குப் போனானாம். ‘வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படலையாம்.’

    கிடைத்ததுதான் கிடைத்தது. ஒரு நல்ல சூப்பர் பூதமாகக் கிடைக்கக் கூடாதா? இது சுத்தப் பாப்பர் பூதமாகவல்லவா இருக்கிறது என்று மனம் நொந்தார்.

    நைனா, பொறேய்! நைனா! பசி; பசி! நச்சரித்தது பூதம்.

    அப்புசாமிக்கு பூதத்தின் முகரைக் கட்டையையோ அது போட்டிருந்த கைக்குட்டையையோ, அதன் முகத்திலிருந்த பிளாஸ்திரியையோ, தொங்கு மீசையையோ, தேவாங்கு போன்ற உடம்பையோ துளியும் பிடிக்கவில்லை. ஏண்டாப்பா விளக்கைத் தேய்த்தோமென்று தோன்றிவிட்டது.

    பூதம் நொடிக்கு நொடி, பொறேய்! பொறேய்! நைனா! ஒரு சின்னப் பொறயாச்சும் போடு நைனா…… சாப்பிட்டு ஆயிரம் வருஷமாச்சு! என்று கெஞ்சிக் கொண்டேயிருந்தது.

    யோவ் பஞ்ச பூதம்! நானே ஒரு லாட்டிரி ஒரு அஞ்சு ரூபாக்காசு வேணும்னாக்கூட சீதே கிழவிக்கிட்டே கெஞ்சறவன்….. என்றார் எரிச்சலுடன்.

    எனக்கும் சேர்த்துக் கெஞ்சு நைனா…. தெனமும் உனக்கு அய்ய் ஞ்.... ஞ்…. ஞ்……. சு.. ரூபா கிடைக்குதா? பூதம் விட்ட ஆழ்ந்த பொறாமைப் பெருமூச்சிலிருந்த உஷ்ண சக்தியைக் கொண்டு ஒரு ரயிலையே ஓட்டலாம்.

    அப்புசாமி பூதத்தை முறைத்தார். சுத்த அல்ப பூதமாயிருக்கியே. பொறாமைப்பட்டுப் பொறாமைப்பட்டுத்தான் இப்படி ஒல்லிப் பிச்சானாக இருக்கே. ஆமாம், கையிலே என்ன கட்டு?

    இதுவா? பாபிலோனியாவிலே ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே ஒரு பாவிக்கு அடிமையாயிருந்தேன். அவன் சீனாவுக்குப் போய் குங்க்பூ என்கிற வித்தை கற்றுக்க ஆசைப்பட்டான். சரின்னு சீனாவுக்குத் தூக்கிக்கிட்டுப் போய்விட்டேன். வித்தைக் கத்துக்க ஏற்பாடும் பண்ணினேன், பாவிப் பய வித்தையைக் கத்துக்கிட்டு, ‘எலும்பை நல்லா உடைக்க முடியுதா பார்க்கணும், கையைக் காட்டுன்னு எனக்கு உத்தரவிட்டான். கையைக் காட்டினேன். படால்னு ஒரு அடி போட்டான். அப்போ உடைஞ்ச கைதான்...

    பஞ்ச பூதம்…. அதிலேயும் கை ஒடிஞ்ச பூதமா? என் தலையெழுத்து அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார். அவர் மட்டும் ஒரு கவுண்டமணியாயிருந்திருந்தால் பூதத்தை, ‘அடே, வங்குவாயா, ஈச்சங்காய்த் தலையா, இஞ்சிக் கண்ணா, சுக்கு மூக்கா, நாய்ப் பையா, பேய்ப் பேரா’ என்று திட்டித் தீர்த்து ஆசை தீர உதைத்திருப்பார்.

    நைனா, பசி நைனா… சாப்பிட்டு ஆயிரம் வருஷம் ஆச்சு நைனா… பூதத்தின் தொந்தரவு தாங்கவில்லை.

    அப்புசாமி வெறுப்புடன் கேட்டார். நீ ஒழிஞ்சு போகணும்னா நான் என்ன பண்ணனும்?

    வெளக்கிலேருந்து வரவழைச்சிட்டியானால் எப்படியும் ஏதாவது துன்னறதுக்குக் குடுத்தாத்தான் நான் போவேன்…... இல்லாங்காட்டி ‘பசி நைனா, பசி நைனா’ன்னு கத்திகிட்டே இருப்பேன். பசி நைனா….. பசி நைனா…… பசி நைனா….. அழுத்த மறந்த அலாரம் மாதிரி பூதம் அலறிக் கொண்டேயிருந்தது.

    அப்புசாமி தன் ஜிப்பாப் பையை அவசரமாகத் துழாவினார். அதிர்ஷ்டவசமாக ஒரு ரூபாய் அகப்பட்டது.

    யோவ் பஞ்ச பூதம்! பொற வாங்கித்தர்றேன். ஆமாம், நீ வாங்கித் துன்னுட்டுப் போய்க்கினே இருந்தால் எனக்கென்ன பிரயோஜனம்? என்று சாமர்த்தியமாகப் பேரம் பேசினார்.

    பூதம் ஒமக்குச்சி நரசிம்மன் மாதிரித் தனது தலைமுடியை ஸ்டைலாகக் கோதி விட்டுக் கொண்டது. பொறை தின்னாச்சுன்னா, நாயாட்டம் நீ சொல்ற வேலையெல்லாம் செய்வேன்... அப்புறம் பார் சாமர்த்தியத்தை...

    அப்புசாமி அருகிலிருந்த பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் தந்து இரண்டு பொறை வாங்கிக் கொண்டார். ஒன்றைத் தனக்கு வைத்துக் கொண்டு மற்றதை பூதத்துக்குத் தந்தார்.

    எதிலேயோ ஒண்ணுலே இதைத் தோய்ச்சித் தோய்ச்சி சாப்புடுவாங்களே? ஹி…. ஹி….. ஹி…... அது இல்லையா? என்றது பஞ்ச பூதம்.

    பூதம் டீ கேட்கிறது என்பதை அப்புசாமி புரிந்து கொண்டார். ஆனாலும் அதுகேட்கிற தினுசிலிருந்து டீயைப் பற்றிய அறிவு அதற்கு இல்லை என்று தீர்மானித்தார். ஆகவே மறந்தும் டீ பெயரைச் சொல்லக் கூடாது என்று உறுதி பூண்டார். பொறையை எதிலும் தோய்த்துத் தோய்த்துச் சாப்பிட மாட்டாங்க. அங்கே பாரு ஒரு நாய். அது டீயிலா தோய்ச்சுப் சாப்பிடுது! வாயாலே வெறுமே கவ்விக்கிட்டுத்தானே போகுது! என்றார்.

    ஹை! ஞாபகம் வந்துடுச்சி! அதன் பேரு டீய்! டீய்! டீய்தான்! என்று பூதம் கும்மாளமிட்டது, நைனா…. டீய் கெடையாதா? ஒரு சிங்கிள் டீ…"

    கவனப் பிசகாக டீ பெயரைத் உச்சரித்து விட்ட தவறை உணர்ந்த அப்புசாமி தலையைச் சொறிந்து கொண்டார்.

    நைனா.. டீ நைனா.. ஏன் தலையைச் சொறியறே! நான் நல்லாப் பேன் பார்ப்பேன்…. இப்படி வந்து என் மடியிலே தலையை வெச்சுக்கோ…. ஆயிரம் பேனிருந்தால் அரை நிமிஷத்திலே எடுத்துடறேன்… என்ற பஞ்ச பூதம், நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு பேன் வறுவல் கூட ரொம்ப நல்லா இருக்கும்... இங்கெல்லாம் யார் பண்ணித் தர்றாங்க? சீனாவுலே ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலே ஒரு தரம் சாப்பிட்டதுதான்…

    அப்புசாமி முகத்தைச் சுளித்துக் கொண்டார். அறிவு கெட்ட சனியனே! என் தலையிலே பேனும் இல்லை... வெங்காயமும் இல்லை...

    வெங்காயம்? பூதம் களிப்புடன் ஹையா என்றது. உரிச்சாக் கண்ணிலே தண்ணி வருமே! அய்யோ! வெங்காய சாம்பார்னா எனக்கு உசிரு! ஆனால் யாரு பண்ணித் தர்றாங்க. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே தமிழ்நாடுங்கற இடத்திலே ஒரு தரம் சாப்பிட்டிருக்கேன்.

    அப்புசாமி எரிச்சலுடன் பஞ்ச பூதத்தைப் பார்த்தார். ‘இந்தச் சனியனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த உணவுப் பண்டத்தின் பெயரையும் இதன் காதில் உச்சரித்துவிடக் கூடாது’ என்று எண்ணிக் கொண்டு உஷாரானார். பூதம் அவர் மெளனத்தைக் கலைத்தது. நைனா! டீ கேட்டதும் ஏன் தலையைச் சொறிஞ்சே? அதன் விருத்தாந்தம் என்ன? அந்த விஷயத்தை எனக்குச் சொல்லு நைனா? என்னாலான உதவியை நான் செய்யறேன்…

    அப்புசாமி மோவாயைச் சொறிந்து கொண்டார். நீ டீ கேட்டியா?

    ஆமாம்... டீ... எனக்கு வேண்டும் டீ... புத்துணர்ச்சி பெற உடனே எனக்குத் தேவை டீ... நாலுரோஜா டீ... ஒரு ரோஜா நிறத்துக்கு... ஒரு ரோஜா மணத்துக்கு… ஒரு ரோஜா சுவைக்கு.. ஒருரோஜா கடைக்காரருக்கு.. ஆமாம் நாலு ரோஜா டீ… எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாலு ரோஜா டீ…" என்ற பூதம் அப்புசாமியை ஏக்கத்துடன் பார்த்தது.

    அகோ, கேளும் பூதப் பிள்ளாய்... என்றார் அப்புசாமி. ‘டீ என்றதும் நான் ஏன் தலையைச் சொறிஞ்சேன் தெரியுமா? அந்த டீக்கடைக்காரனுக்கு மூணு குடம் தண்ணிர் வாங்கிய வகையிலே ஒண்ணரை ரூபாய் நான் தரணும்…"

    பூதம் இளக்காரமாக ஹை! நைனா! என்னை அறிவு கெட்ட பூதம்னு நினைச்சிட்டேயில்லே? டீக்கடையிலே டீதான் விற்பாங்க. தண்ணி கூடவா விற்பாங்க? இந்த உடான்ஸெல்லாம் நம்மளாண்டை உடாதே…. நான் மெஸ்படோமியா, பாபிலோன், சீனா எல்லாம் சுத்தின அந்தக் காலப் பூதம்!

    அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார். அவருக்குப் பூகோளப் பாடம் என்றால் அடியோடு பிடிக்காது. பூகோளத்திலும் இங்கிலிஷ் கிராமரிலும் தவறாமல் நூற்றுக்கு ஐந்து அல்லது ஆறு மார்க்தான் வாங்குவது வழக்கம்.

    பூதம் கேட்டது. சொல்லு நைனா... டீக்கடையிலே தண்ணி விற்கறாங்களா? நீ டீயையேதான் சொல்றியா?

    அப்புசாமி தலையைக் கைகளால் பற்றிக் கொண்டார் - அதாவது தன் தலையை.

    சரியான மட பூதமாயிருக்கிறது. தண்ணிப் பஞ்சம்னா என்னான்னே தெரியாது போலிருக்கிறது. அந்த டீக்கடைக்காரர் கடைக்குள்ளே ஒரு போர் போட்டுத் தண்ணிர் அடித்து அடித்து ஒரு குடம் ஐம்பது பைசா என்று விற்கிறவர், மூன்று குடம் தண்ணிர் வாங்கிய வகையில் கடைக்காரருக்கு ஒன்றரை ரூபாய் தரவேண்டியுள்ளது என்பதையெல்லாம் சொன்னால் இந்த மட பூதத்துக்கு விளங்குமா?

    உனக்குச் சொன்னால் புரியாது என்றார் அப்புசாமி.

    புரியும், சொல்லு நைனா.. வேலைக்காரன் மேலே நம்பிக்கை வெச்சாத்தான் அவன் வேலை செய்வான். இவன் ஒண்ணும் புரியாதவன்னு வேலையை சொல்லாம விட்டால் அவன் துருப்புடிச்சுப் போயிடுவானே.. என்னை நம்பு நைனா….

    நீ பழைய காலப் பூதமாச்சே உனக்கு புரியுமான்னு டவுட்டா கீதூ என்றார் அப்புசாமி.

    வாயைவுட்டுச் சொல்லேன் புரியுதா புரியலையான்னு சொல்றேன்.

    அப்புசாமி பூதத்தை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு மெதுவாக, காவேரி, கிருஷ்ணா அப்படீன்னா ஒனக்குத் தெரியுமா? குறுவை சாகுபடின்னா தெரியுமா? என்றார்.

    பூதம் கடகட வென்று சிரித்தது. குருவைச் சாகடிக்கிறதா? ஹஹஹ! அப்படிச் சாகடிச்சதாலேதான் இந்த மாதிரி நோஞ்சான் பூதம் ஆயிட்டேன். அது ஒரு பெரிய கதை. ஏழாம் அத்தியாயத்திலே சொல்றேன்…. காவேரி. கிருஷ்ணான்னா என்ன? சுமேரியா தேசத்து அழகிங்களா? சோக்கான சுந்தரிங்களா?

    நீ சரியான மண்டு பூதம்னு தெரிஞ்சு போச்சு... காவேரி, கிருஷ்ணான்னா உனக்குத் தெரியவே இல்லை. பொறந்த குழந்தைக்குக்கூடத் தெரியுமே. அது போகட்டும். தமிழ்நாட்டு முதல்வர் பேர் தெரியுமா?

    பூதம் பெப்பே என்று விழித்தது.

    டி. வி., குவிஸ் நிகழ்ச்சிக்காரர் போல அப்புசாமி சில க்ளுக்கள் கொடுத்தார். அப்படியும் தெரியவில்லை ‘கட் அவுட்’ டெல்லாம் கூட வைப்பாங்களே’ என்று ஞாபகப்படுத்திப் பார்த்தார். ஊஹூம்.

    தமிழக முதல்வர் பற்றித் தெரியாதா? நீயெல்லாம் ஒரு பூதம்னு வந்துட்டே! கோபித்துக் கொண்டார்.

    முதல்வர்னா? தமிழகம்னா? பூதம் விழித்தது.

    அப்புசாமி ராகம் போட்டுப் பாடினார். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தண்ணி வந்து பாயுது காதினிலே.

    பூதம் ‘ஹி… ஹி... ஹி... என்று சிரித்தது.

    தண்ணி! ஆகா! அடிச்சா இன்னா ஷோக்கா இருக்கும். பாக்தாத்தில் ஒருத்தர் கிட்டே நான் அடிமையாயிருந்தப்போ தம்மாதூண்டு அவன் தண்ணி குடுத்தான். ‘நீயும் அடி பூதம்னு. அப்ப அடிச்சதுதான். ஏன் நைனா… நாளைக்கு எனக்குத் தண்ணி வாங்கித் தர்றீயா?

    அப்புசாமிக்கு விளக்கைப் பூதத்தின் தலையிலேயே போட்டு உடைத்து விடலாமா என்று தோன்றியது.

    ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஏய் பஞ்ச பூதம்! என்றார்.

    சொல்லுங்க நைனா! என்றது பூதம்,

    அப்புசாமி எரிச்சலுடன், சும்மாத் தலைவான்னு கூப்பிடு... நான் உனக்கு எஜமானில்லையா? நைனா நைனா என்கிறே? பல்லு கில்லெல்லாம் தட்டிடுவேன். ஒரு எஜமானைப் பார்த்து வேலைக்கார நாயி கேட்குது - தண்ணி வாங்கித்தர்றியா நாளைக்குன்னு.. ஆயிரம் கர்ணம்போடு! அதுதான் உனக்குத்தண்டனை!

    ஐயோ! தலைவா? அலறியது பூதம். ஒரு கரணம் போடறதுக்கே என்னால் முடியாது. இப்படிப்பட்ட கஷ்டமான வேலையை எனக்குத் தர்றது நியாயமா? கை வேற உடைஞ்சிருக்கு. நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் இனிமேல் டாண் டாண்ணு பதில் சொல்லிடறேன். எனக்கு எல்லாப் பதிலும் தெரியும். சும்மா டமாஸுக்காக உங்ககிட்டே தெரியாதது மாதிரி நடிச்சேன்."

    அப்புசாமி தொண்டையைச் செருமிக் கொண்டார்.

    தமிழகத்தின் தற்போதைய முதல்வர் யார்?

    பூதம் தன் தொங்கு மீசையின் வலது பக்கத்தை ஒரு தரம் இழுத்துக் கொண்டது. அதுதான் அறிவு ஸ்விட்ச், அதை இழுத்துக் கொண்டால் அதற்கு டகாரென்று எந்தக் கேள்விக்கும் விடை தெரியும்.

    செல்வி ஜெயலலிதா! என்றது.

    அப்புசாமி உனக்கு ஐந்து மதிப்பெண் தரப்படுகிறது - அதாவது பாதி மார்க்.

    ஏன் பாதி மார்க்? பதறியது பூதம்.

    நீ முழுமையான விடை தரவில்லை. சரியான விடை, மாண்புமிகு முதல்வர், புரட்சித் தலைவி செல்வி டாக்டர் ஜெயலலிதா என்பதாகும் என்று அப்புசாமி பூதத்துக்குத் தரவேண்டிய மதிப்பெண்களை வேண்டுமென்றே அடாவடியாகக் குறைத்தார். முழு மதிப்பெண் கொடுத்தால் அதற்குக் கர்வம் வந்துவிடக் கூடுமல்லவா?

    பூதம், சார், சார், சரியான விடைதானே நான் தந்தது. இன்னும் ஒரு மார்க்காவது கொடுக்கக் கூடாதா? என்று எலிமெண்ட்டரி ஸ்கூல் பையன் மாதிரி கெஞ்சியது.

    ஆறு மார்க்காவது போடுங்க.

    அப்படியெல்லாம் சில்லறையாக மார்க் கொடுத்தால் கூட்டலிலே தகராறு வரும் என்றார் அப்புசாமி.

    கொடுத்தால் அஞ்சு, இல்லையானால் பத்து... இப்படித்தான் மதிப்பெண் தரமுடியும். சில்லறை சில்லறையாக, ஆறு, ஏழு, மூன்றுன்னு கொடுத்தால் யாராலே சரியாகக் கூட்டிச் சொல்ல முடியும்? புரியுதா? டி. வி. யிலே குவிஸ் நிகழ்ச்சியிலே கூட பாரு. நீ டி. வி. பார்த்ததில்லை?

    பாரசீக ஷா ஒருத்தரு வீட்டிலே டீ இருந்திச்சு, ஆனால் வி அங்கே இல்லே…."

    அப்புசாமி பரிதாபமாக பூதத்தைப் பார்த்தார். ரொம்பப் புத்திசாலிப் பூதம்னு தம்பட்டம் அடிச்சுகிட்டே டி. வி. பார்த்ததில்லையா?

    அதனால்தாங்கோ புத்திசாலியாயிருக்கேன்.

    இப்போவெல்லாம் காலம் மாறிப்போச்சு. நீ சுத்தக் கற்காலப் பூதமாக இருக்கிறே... இப்போ டி.வி. யிலே பூராப் பூரா ஜாலியா எல்லாச் சானலிலும் சினிமாதான். சினிமா பார்த்தா, நிச்சயம் அறிவு வளரும்னு தமிழ் நாட்டுலே கண்டுபிடிச்சிருக்காங்க.

    அப்படியா?

    அப்பா அம்மாகிட்டே பக்தியாக இருக்கணும்னு சினிமாவுலே காட்டினால் எல்லாரும் பக்தியா இருப்பாங்க. ஒருத்தன், ‘ஏண்டா டேய், நீயெல்லாம் ஒரு அப்பனா? ஏண்டி முண்டை நீயெல்லாம் ஒரு தாயான்னு’ திட்டினால் எல்லோரும் அப்படியே திட்டுவாங்க.

    குருன்னு சொல்லுங்க

    "ஆமாம். சரி, தமிழக

    Enjoying the preview?
    Page 1 of 1