Yaaro Paarkirargal
By Rajesh Kumar
5/5
()
About this ebook
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Athikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNamruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Vellai Nirathil Oru Vaanavil Rating: 5 out of 5 stars5/5
Related to Yaaro Paarkirargal
Related ebooks
Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Kaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Oru Eastman Nira Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNizhalin Kural Rating: 5 out of 5 stars5/5Vaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Kutram Kutrame! Rating: 5 out of 5 stars5/5Uchi Nila! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 5 out of 5 stars5/5Urainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsVibareethathin Vilai Vidhya Rating: 5 out of 5 stars5/5Anu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsNovember Rathirigal Rating: 5 out of 5 stars5/5Thittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Sathamillatha Samuthiram! Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 3 out of 5 stars3/5Saiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Kashmiril Oru Karuppu Naal Rating: 0 out of 5 stars0 ratingsKann Yethirey Oru Uyir Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Puthithai... Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Naanum Pommai Rating: 1 out of 5 stars1/5Miss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5
Reviews for Yaaro Paarkirargal
1 rating0 reviews
Book preview
Yaaro Paarkirargal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
யாரோ பார்க்கிறார்கள்
Yaaro Paarkirargal
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
யாரோ பார்க்கிறார்கள்
1
அது ஒரு மே மாதத்திய மத்தியான நேரம்.
கடற்கரைச் சாலையில் இருந்து வந்த மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் அந்த பைனான்ஸ் கம்பெனியின் போர்டு பித்தளை எழுத்துக்களில் மின்னிக் கொண்டிருக்க - உள்ளே மானேஜிங் டைரக்டரின் ஏர்க் கண்டிஷனர் உறுமும் அறைக்குள் டெலிபோன் காதுகளை உறுத்தாத டெஸிபிலில் முணுமுணுத்தது.
ஃபைல் ஒன்றைப் புரட்டிப் பார்த்து - பொன்னிறப் பேனாவால் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த மாலா நிமிர்ந்தாள். இருபத்தைந்து வயதைப் போன மாதம் முடித்துக் கொண்ட மாலாவுக்குச் சற்று ஒடிசலான தேகம். ரோஸ்மில்க் நிறம். பெரிய கண்கள். அளவான நாசிக்குக் கீழே ரோஜா இதழ்களை ஒட்ட வைத்த மாதிரி உதடுகள்.
மருதாணிப் பூச்சில் குளித்திருந்த வலக் கையை நீட்டிரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ..
என்ன மாலா லஞ்ச் முடிஞ்சதா..?
மறுமுனையில் கணவன் சங்கரின் குரல் கேட்டது.
ம்... முடிஞ்சது...
என்ன குரல்ல தெம்பையே காணோம்...?
காலையிலிருந்து சரியான வேலை... பர்சனல் க்ளார்க் லீவு போட்டுட்டு ஹாஸ்பிடல்ல யாரையோ பார்க்கப் போயிட்டா..! இப்போ எல்லா வேலையும் என் தலைக்கு மேல.
இருக்கிற... வேலைப் பளுவில் இன்னிக்கு நமக்குக் கல்யாண நாள் என்கிறதை மறந்துடாதே...
மாலா சிரித்தாள்.
அதை மறக்க முடியுமா..?
சாயந்தரம் எத்தனை மணிக்கு வீட்ல இருப்பே…?
அஞ்சு மணிக்கு…
நோ... நோ... நாலு மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கணும்… நானும் ஷார்ஃப்பா அதே நாலு மணிக்கு வந்துடுவேன். நாலு மணியிலிருந்து நமக்கு என்னென்ன ப்ரோக்ராம் தெரியுமா..?
சொல்லுங்க...
போன்ல வேண்டாம். நேர்ல சொல்றேன்... ராத்திரி பனிரெண்டு மணிவரைக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கு... டைட் ஷெட்யூல் பை...த... பை...ஃபார் யுவர் இன்பர்மேஷன்... நம்ம கல்யாண நாளை முன்னிட்டு உனக்கு ஒரு ப்ரஸண்ட்... சர்ப்பரைஸா பரிசு ஒண்ணைத் தரப்போறேன்...
என்ன பரிசு...?
நாலு மணிக்குத் தெரியும்...
சங்கர் சிரித்துக் கொண்டே ரிஸீவரை வைத்துவிட மாலா மணிக்கட்டில் அப்பியிருந்த தன் வாட்ச்சைப் பார்த்தாள்.
மணி இரண்டரை,
அவர் நமக்குப் பரிசாக ஒன்றைத் தரும்போது நானும் ஏதாவது தரவேண்டாமா..?
இது ஏன் எனக்குத் தோன்றாமல் போய் விட்டது?"
பார்த்துக் கொண்டிருந்த ஃபைலைத் தள்ளிவைத்து விட்டு எக்ஸிக்யூடிவ் நாற்காலியினின்றும் தன்னை உருவிக் கொண்டு எழுந்தாள். இண்டர்காமில் ஒரு பட்டனைத் தட்டிவிட்டு மானேஜரோடு பேசினாள்.
மிஸ்டர் நாதன்...
மேடம்...
என்னோட பர்சனல் வேலையா வெளியே கிளம்பறேன். சாயந்தரம் ஆபீஸிக்கு வரமாட்டேன். ஏதாவது முக்கியமான விஷயமா என்னை டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கா..?
எதுவும் இல்லை மேடம்... பார்ட்டிக்கு அனுப்ப வேண்டிய ஒரு லெட்டரில் மட்டும் கையெழுத்து போட வேண்டியிருக்கு…
அந்த லெட்டரை நாளைக்குக்கூட அனுப்பலாமில்லையா?
அனுப்பலாம் மேடம்...
சரி... நான் கிளம்பறேன். நாளைக்குக் காலையில பத்து மணிக்குப் பார்க்கலாம்...
எஸ்... மேடம்...
மாலா மேஜையின் ஓரத்தில் இருந்த கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டாள். வெளியே சாத்திருந்த வெப்பக் காற்று அவளுடைய உடம்பை அலம்பியது.
வராந்தாவில் நடக்கும்போது - எதிர்ப்பட்ட ஊழியர்கள் குட் ஈவினிங் மேடம்
- என்று தயக்கமாய் ஒதுங்கி நின்று பவ்யமாய்ச் சொல்ல, மாலா தலையசைப்பால் ஏற்றுக்கொண்டு போர்டிகோவைத் தொட்டாள். காத்திருந்த அந்தக் கடல் வண்ண மாருதிக்குள் தன்னைத் திணித்துக் கொண்டு அதை நகர வைத்து ரோட்டுக்கு வந்தாள். கடற்கரைச்சாலையின் போக்குவரத்தில் கலந்ததும் ஆக்ஸிலேட்டரை மிதித்தாள்.
பத்து நிமிஷப் பயணம்.
அடையாறு போகும் வழியில் ரோஹிணி கார்டன்ஸ் வந்ததும் காரின் வேகத்தைக் குறைத்து, போகன் வில்லால் பூக்கள் நிறம் நிறமாய் மண்டிய இந்தச் சின்னப் பங்களாவின் காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய்க் காரை நிறுத்தி நீளமாய் ஹார்ன் கொடுத்தாள்.
அரை நிமிஷ அவகாசத்தில் பங்களாவின் பக்கவாட்டு ஜன்னல் கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.
மாலா காருக்கு வெளியே தலை நீட்டிக் குரல் கொடுத்தாள். ரமா…! வீட்ல நீ ஃப்ரீயா இருக்கியா?
என்ன விஷயம்...?
நீ ஃப்ரீயா இருக்கியா இல்லையா?
ஃப்ரீதான்…
சரி... வா... எனக்கு ஒரு மணிநேரம் கம்பெனி குடு...
எதுக்கு…?
சொன்னாத்தான் வருவியா?
என்னோட அத்தை காரணம் கேட்டா சொல்ல வேண்டாமா?
சரி... ஷாப்பிங் போறோம்…
இந்த மத்தியான நேரத்திலா...?
உன்னால இப்போ வரமுடியுமா முடியாதா?
வர்றேன்... வர்றேன்... கோபிச்சுட்டுக் காரைக் கிளப்பிட்டுப் போயிடாதே...
டயம் அஞ்சே நிமிஷம்தான்…! அதுக்குள்ளே சேலை மாத்திட்டு வரணும்...
உள்ளே... வாடி..
வேண்டாம்... நான் உள்ளே வந்தா நீ லேட் பண்ணிடுவே... சட்டுபுட்டுன்னு வெளியே வா…
ஜன்னலில் ரமாவின் தலை மறைந்தது. மாலா காரின் ஸ்டீரியங்கில் விரல்களால் தாளம் போட்டபடி யோசித்தாள்.
என்ன பரிசுப் பொருள் வாங்கலாம்...
எது வாங்கினாலும் சரி... அவர் அசந்து போகிற மாதிரி இருக்கணும்...!
கோல்ட் ப்ராஸ்லெட்?
ரேபான் கூலிங்கிளாஸ்...?
யோசிப்பில் நிமிஷங்கள் கரைந்து கொண்டிருக்கும் போதே - ரமா உள்ளேயிருந்து வந்தாள். இளம் பச்சை நிறத்தில் கம்ப்யூட்டர் சேலை. உயர்த்திப் போட்ட கொண்டை. காற்றுக்குத் தலைமுடி சிலும்ப... காதில் பொன் வளையங்கள் அசைந்தன.
ம்... போகாலமா?
ஏறு...
ரமா அவளுக்குப் பக்கத்துச் சீட்டை ஆக்ரமிக்க கார் நகர்ந்தது. உன் அத்தை கிட்ட சொல்லிட்டியா?
சொல்லிட்டேன்...
போலீஸ் ட்ரைய்னிங் கோர்ஸூக்குப் போன உன்னோட ஹஸ்பெண்ட் வந்துட்டாரா..?
நாளைக்குக் காலையில்தான் வர்றார்...
அப்படீன்னா அஸிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் பொண்டாட்டியா இருக்கிற நீ அடுத்த ஒரு மாசத்துக்குள்ளே கமிஷனர் பொண்டாட்டி ஆயிடுவேன்னு சொல்லு...
அவ்வளவு சீக்கிரத்துல ப்ரமோஷன் கிடைச்சுடாது. எப்படியும் ஒரு வருஷமாயிடும்... அதுவும் ப்ரமோஷன் ஆன் ட்ரான்ஸ் பர்லதான் கிடைக்கும்... அது இருக்கட்டும்... இந்த மத்தியான நேரத்துல எதுக்குத் திடீர் ஷாப்பிங்..?
இன்னிக்குத் தேதி என்ன..?
மே எட்டு...
ரெண்டு வருஷத்துக்கு முந்தி மே மாசம் எட்டாம் தேதி ஹேமமாலினி கல்யாண மண்டபத்துல என்ன நடந்தது…?
ரமா தன் இடக்கை நெய்ல் பாலீஷ் பூச்சு விரல்களால் நெற்றியில் நோகாமல் அடித்துக் கொண்டாள்.
அட... உன் கல்யாணம்...
இன்னிக்கு ரெண்டாவது வெட்டிங் அனிவர்ஸரி. என்னோட கணவர்க்கு ஏதாவது ப்ரஸன்ட் பண்ணனும்னு நினைச்சேன். மனசுக்கு ஏதும் தோணலை... அதான் உன்கிட்டே வந்தேன்... என் கணவர் அசந்து போகிறமாதிரி என்ன ப்ரசன்ட் பண்ணலாம்... சொல்லு?
அசந்து போற மாதிரி...?
ஆமா...
சொன்னா கோபிச்சுக்கமாட்டியே...?
மாட்டேன்... சொல்லு…
இல்லே... உனக்குக் கோபம் வரும்.
வராது... சொல்லு...
வேண்டாம்...
இப்ப... நீ... சொல்லப் போறியா... இல்லையா?
சரி... சொல்றேன். உன்னோட கணவர் சந்தோஷத்துல பூரிச்சு போகணும்ன்னா... ஒரு பொருளைக் கொடுத்தா போதும்.
சொல்லு... வாங்கிடுவோம்.
ஜானி வாக்கர். ஃபாரின் விஸ்கி பாட்டில்...
மாலாவின் முகம் சட்டென்று நிறம் மாற ரமா புன்னகை செய்தாள். இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்.
பரவாயில்லே...
என்மேல கோபமா..?
சேசே...! நீ சொன்னது வாஸ்தவமான வார்த்தை. ஜானி வாக்கர் பாட்டிலை வாங்கிக் கொடுத்தா அவர் படற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது…
அவரோட குடிப் பழக்கத்தை நிறுத்தறதுக்கு ஏதோ முயற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கிறதா போன தடவை சந்திச்சப்ப சொன்னியே. ஏதாவது பலன் கிடைச்சதா...?
காரை ஒரு வளைவில் திருப்பிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினாள் மாலா, "ஒரு பலனும் கிடைக்கலை... அப்படியேதான் இருக்கார். அவ்வளவு சுலபத்துல திருத்த முடியும்னு எனக்குத் தோணலே... கொஞ்சம்