Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavin Karaigalil
Kanavin Karaigalil
Kanavin Karaigalil
Ebook171 pages1 hour

Kanavin Karaigalil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580109902462
Kanavin Karaigalil

Read more from Kanchana Jeyathilagar

Related to Kanavin Karaigalil

Related ebooks

Related categories

Reviews for Kanavin Karaigalil

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Great story but as i read the story some thing told me Nalinas husband could b the culprit
    Onthe whole made me read in one stroke
  • Rating: 4 out of 5 stars
    4/5
    Good story liked it like other stories of kanchana msm

Book preview

Kanavin Karaigalil - Kanchana Jeyathilagar

A picture containing icon Description automatically generated

https://www.pustaka.co.in

கனவின் கரைகளில்

Kanavin Karaigalil

Author:

காஞ்சனா ஜெயதிலகர்

Kanchana Jeyathilagar

For more books

https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

1

காற்றும் கடற்பரப்பும் கலந்து சரசமாடி அவற்றை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. சின்னதும் சீறுபவையுமான கடலலைகளை!

எஜமானைக் கண்டதும் எம்பி குதூகலித்து, பிறகு அவர் வீடு நுழைவதற்காய் பவ்யமாய் பின்வாங்கும் நாய்குட்டிபோல கும்மாளமிட்ட அவற்றையே பார்த்தபடி இருக்க, மனம் அமைதிபட்டதை அவளால் உணரமுடிந்தது.

பகலின் வெக்கையோடு, தன் மனப் புழுக்கத்தையுமே அலைகள் ஓடிப் புரண்டு துடைப்பது போலொரு மாயம்…

பிசுபிசுத்த கடல் காற்றும் அதற்கு உதவியது.

அவளருகே கண்ணியமான இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த சரணும் அப்படியே உணர்ந்திருப்பான் போலும்…

ஆழ மூச்செடுத்தவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

இவளுக்கும் தங்களிடையே உருவாகி இருந்த அமைதியைத் தள்ளிவிட மனமில்லை. இப்படியே சில… பல மணி நேரங்கள் கூட இருக்கலாம் என்ற ஒரு சுகசௌகர்யம்!

நாம பழகிய இந்த ஒன்னரை வருஷத்தில் இப்பதான் ‘பீச்சில்’, சந்திக்கிறோமில்லையா ஹம்ஸ்?

ம்ம்… தாங்க்ஸ். உடனே வர சம்மதிச்சதுக்கு அவனைப் பார்க்காமல் கடலைப் பார்த்தபடி சொன்னாள்.

கரும்பு தின்ன கூலி தர்ற விஷயமில்லையா இது? நீயும் கடற்கரையும் ரெண்டுமே இனிப்பான விஷயங்கள். சேர்த்து அனுபவிக்கிறேன்.

அவன் பார்வை அவளில் பதிந்திருந்தது.

ஆனா நான் சொல்ல வந்தது… அதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை, சரண்.

யக்கா கை முறுக்கு வாங்குக்கா… இப்பத்தான் போட்டது.

குறுக்கிட்ட பையனிடம் ஹம்ஸா வேண்டாமென்று கை அசைக்க, சுண்டல் ரெண்டு பாக்கெட் தரட்டாண்ணா? சூடு ஆறலை விடாமல் வியாபாரம் பார்த்தான் பையன்.

அப்புறம் வாங்கறோம்ப்பா.

இப்ப வாங்குக்கா, அப்புறமாச் சாப்பிடுங்க.

அவளுக்குச் சலித்தது.

இங்கே நிம்மதியாய் பேசலாம்னு நினைச்சேன்… ம்ப்ச்.

சரண் புன்னகைத்தான்.

"ஒரு குட்டி கவிதை ஹம்ஸ்,

‘விசுவாமித்திரர்கள் தவம் செய்ய

அமரும் போதெல்லாம்-தவறாமல்

வந்துவிடுகிறார்கள்

மேனகைகள்!’

எங்கேயும் இடையூறு இல்லாமல் இருக்குமா? நாமதான் சமாளிச்சுக்கணும்."

இப்போது அவள் பார்வை அவனில் முழுதாய் நிலைத்தது. அவனிடம் அவளுக்குப் பிடித்த குணமிது. அவன் எதையும் பெரிதுபடுத்துவதில்லை. சலிப்பதில்லை… சரண் வாங்கிய சுண்டல் சுவையாகவே இருந்தது… ரசித்து சாப்பிட்டாள்.

நாம இனி அடிக்கடி இங்கே வரணும் ஹம்ஸ்

தான் சொல்லப் போவதைக் கேட்ட பிறகு இதைச் சொல்வானா?

நான் ஆரம்பத்திலேயே என்னைப் பற்றி… அதாவது என் குடும்பம் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கணும் சரண். எப்போதாவது சந்தித்த சில அரை மணி நேரங்களில் நாம மேம்போக்காய் பேசினதோடு சரி.

அதைச் சரியில்லைன்னும் சொல்ல முடியாது! இப்போ பேச நினைப்பதை எல்லாம் சொல்லிடுடா… எதுன்னாலும் கலங்காமப் பேசு.

சரண் அக்கறையுடன் பேசினான்.

குரலில் கிண்டலோ, பதட்டமோ இல்லை. கரிசனை மட்டுமே. ஹம்ஸா அவனைச் சற்று நெருங்கி, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளுள் கொப்பளித்த ஏக்கத்திற்கு அவனது ஆண்மை தேவைப்பட்டது… ஆனால் இப்போது இந்த நெருக்கம்… நியாயமில்லை.

நேர்மையுடன் பேச வேண்டிய நேரமிது!

என் குடும்பத்தைப் பற்றி உங்களிடம் நான் விவரமாய் சொன்னதில்லை, சரண்.

அப்பா, அம்மா இல்லை. ஒரே அக்கா கல்யாணமாகி ராமேஸ்வரத்தில் இருக்காங்க…

என் முழுப் பெயரையும் கூட உங்களிடம் சொல்லலை. அது ஹம்ஸா நந்தி அக்கா பெயர் நளினகாந்தி.

சற்று விலகி அவன் முகம் பார்த்து பேசினாள். ஆக அங்கு தெரிந்த ஆச்சரியத்தை கவனிக்க முடிந்தது.

விநோதமான பெயர்கள் இல்லையா? இரண்டுமே ராகங்களுடையவை! அம்மா அரசு பள்ளியில் மியூஸிக் டீச்சர். அப்பா போஸ்டர்களில் படம் வரைபவர்… ஆக எங்களது வித்தியாசமான வீடு.

கலைக் கோயில் மாதிரின்னு சொல்லலாமா?

பிராக்டிகலான வீடு இல்லை, சரண். வீட்டில் அடிக்கடி எங்க டின்னர் ‘ரெண்டு நிமிஷ நூடுல்ஸ்’ எப்போதும் ரொட்டி, ஜாம், பழம்னு இருக்கும். அடிக்கடி வெளியேயிருந்து சாப்பாடு வரவழைப்பாங்க. நினைச்ச மாத்திரம் அப்பா, அம்மா வெளியூர் போய் ரெண்டு நாள் பொறுத்தே வருவாங்க. எங்களைப் பற்றின ஞாபகமே இல்லாதது போல…

ஓ? விரல்களை மண்ணில் அளையாமல், கவனமாய் கேட்டிருந்தான்.

அம்மா இறந்ததும் அப்பா பித்து பிடித்தவர் போலாகி… வீட்டைவிட்டுப் போனவர்தான் பிறகு அப்பா பற்றிய தகவலே இல்லை.

இப்போது அவன் முகம் வியப்போடு வருத்தம் காட்டியது.

ஸாரி - அப்பாவின் போட்டோ ஒன்று தா ஹம்ஸ். விசாரிப்போம்.

அக்கம் பக்கத்தார் அவங்களை வினோதமாய்தான் பார்த்தாங்க. இளம் வயசில் எங்களுக்கு அதிகம் புரியலை… ஆனாலும் இப்போ தோணுது அவங்க இயல்பாய் இல்லைன்னு.

கலைஞர்களின் மனம் வேறு உலகில் சஞ்சரிக்கும்னு கேள்விபட்டிருக்கேன்… அவங்க ஒருத்தருக்கொருத்தர் பழகி, புரிந்து தம்பதிகளாகி இருக்கணும்?

ஆமா… அம்மாவின் உதடு சதா ஏதோ முணுமுணுத்தபடி இருக்கும்… ஏதோ பாட்டு, ஸ்வரம் சொல்றாங்கன்னு நினைச்சேன்.. பிறகுதான் அம்மா தனக்குள்ளாய் பேசிக்கறாங்கன்னு உறைச்சது.

பணக் கஷ்டம் இருந்ததா? அது அவங்களை சஞ்சலப்படுத்தி இருக்கலாம்.

"முதலில் சிறு பத்திரிகைகளில் அப்பா சித்திரம் வரைந்தார்… பிறகு சினிமா போஸ்டர் டிஸைனிங் வரை போனது. அவரைப் போலவே அவர் வேலையும் வித்தியாசமாய் இருக்கும். ஆக அதில் நல்ல வருமானம். அப்பாவைப் பெற்ற பாட்டி திட்டுவாங்க.

‘பொறுப்பத்து இருக்கியே? கன்னிக் கடமை பெரும் பொறுப்பு பார்த்துகோ’ன்னு. அதனாலோ என்னவோ அப்பா காசு விஷயத்தில் பிராக்டிகலாய் இருந்தாங்க. சொந்த வீடு போக, அக்காவிற்கும் எனக்கும் ஆளுக்கு அறுபது, எழுவது பவுன் வரை நகைகள் உண்டு."

சிறு ஆச்சரியத்துடன் தலையாட்டினான்.

இந்தக் கால கன்னிகள் கெட்டிகாரிகள்… தெளிவாய் தங்களுக்கான வாழ்வை அமைச்சுக்கறாங்க. உங்கக்கா. ஏன் உனக்குமே கல்யாணமானது போலத்தான். அதாவது என் வீட்டில் நான் லேசாய் கோடி காட்ட, நம்ப கல்யாணத்திற்கு ஆட்சேபணை ஏதுமிலை ஹம்ஸ். அண்ணா சிங்கப்பூரில் இருக்கான். அவனுக்கு ரெண்டு சின்ன குழந்தைங்க. அண்ணியும் பாசமானவங்க, ஆக அப்பா அவங்களுக்கு ஒத்தாசையாய் அவர்களோடு சந்தோஷமாய் இருக்கார். அம்மா தவறி மூணு வருஷமாச்சு.

எங்க வீடு பற்றித் தெரிஞ்சால்…?

திடீர்னு ஏனிந்த புலம்பல் ஹம்ஸ்? உன் அப்பா, அம்மா அந்நியோன்யமான தம்பதிகளாய் இருந்திருக்காங்க… அதைக் குறையாய் ஏன் நினைக்கறே?

ரெண்டு இளம் மகள்களை விட்டுட்டு அப்பா போனது… அது உங்களுக்கு விகல்பமாய் படலையா சரண்? புத்தி பிசகினால்தான் அப்படி ஒரு பொறுப்பற்ற முறையில்… இப்போ நான் சொல்லவர்றது உங்களுக்குப் புரியுதா?

ஏற்கெனவே சொன்னதுபோல, அப்பாவின் ஃபோட்டோவைக் கொடு அவருக்கு என்னாச்சுன்னு தெரிய, உனக்குப் பதட்டம் இருக்காது.

அவன் கையை அழுத்தப் பற்றினாள் - நன்றியோடு!

சரணுக்குப் புரியவில்லையா அல்லது இதைப் பெரிது படுத்தாதே என்கிறானா?

இது… இதெல்லாம் பரம்பரையாய் தொடரும் குறைபாடு, வியாதி இல்லையா, சரண்?

அவனது கையும் இப்போது அவளதைப் பற்றியது.

நீ இயல்பான, புத்திசாலித்தனமுள்ள, நல்ல பெண், ஹம்ஸ்… அது எனக்குத் தெரியும்

புன்னகைக்கும் முயற்சி தோற்று, அவளது உதடுகள் உணர்வுபெருக்கில் நடுங்கின. காற்று கலைத்த கூந்தலும், கலங்கிய முகமும் கூட அவள் அழகை மங்கவிடவில்லை, என்பதை ரசித்தான்.

கலாரசனையுள்ளவர்களுக்குப் பிறந்தவள் இல்லையா - நளினம் இயல்பாய் வாய்த்திருந்தது.

இதுவரை நான் இதுபற்றி யோசிக்கலை, கலங்கலை சரண். ஆனால் அக்கா சமீபமாய் பேசுவது என்னை ரொம்பக் குழப்பிடுச்சு…

‘சொல்’ என்பதாய் அவளையே அமைதியாய் பார்த்திருந்தான். நளினாவின் திருமண ஏற்பாடு சமயம்தான் இவர்களின் சந்திப்பு நேர்ந்தது.

‘பூ அலங்காரம், ம்யூஸிக், சாப்பாடு எல்லாவற்றுக்குமான ஆட்கள் குருசரணுக்குத் தெரியும். சகாய ரேட்டில் செய்யச் சொல்வான்’ என்று ஹம்ஸாவின் சிநேகிதி சொல்ல, அந்த அறிமுகம் பிறகு நன்றி நவிலல் வரைப் போய், விடாமல் தொடர்ந்திருந்தது.

எத்தனையோ பெண்களுடன் பழகியவன் ஹம்ஸாவைப் பார்த்ததுமே தடுமாறினான்… அவளை அடிக்கடி தேடிப் போய் பேசினான். அதே வியாதி அவளையும் தொற்றிக் கொண்டது!

குருசரணுக்கு அது பெரிய நிம்மதி என்றாலும், உடனே அதைக் கல்யாணத்திற்கு கொண்டு போக தயங்கினான்.

‘ஈவன்ட்-மேனெஜ்மென்ட், நான் ஆரம்பித்தபோது இத்தனை பிரபலமில்லை ஹம்ஸ் நிறைய நண்பர்கள், ஐடியாஸ், உற்சாகம் இருந்ததால் புதுத்துறையில் கால் ஊனிட்டேன். அருமையான டீம் சேர்ந்தாச்சு. ஆனா இது நிலையானதில்லை… ஆக, இதில் வந்த பணத்தைக்கொண்டு விழாக்களுக்கான ஹால் போல கட்டிடணும்னு ஒரு எண்ணம். வெறும் கல்யாண மண்டபம் போலில்லை. எந்த விழாவிற்கும் ஏற்றதுபோல… வேலை

Enjoying the preview?
Page 1 of 1