Vaasalvarai Vandhaval
()
About this ebook
திரைப் பட நடிகை... அதிலும் மார்க்கெட் இழந்த நடிகையின் கதை... அது என்னவோ தெரியவில்லை... இந்த சினிமா சம்பந்தப்பட்ட கதைகளை எழுதும் போது அந்த வட்டாரத்தில் நடக்கும் சம்பவங்களும், டயலாக்கும் அப்படியே என் எழுத்தில் வந்து உட்காருகிறது. இத்தனைக்கும் நான் வடபழனி பக்கம்-அதாவது தமிழ்நாட்டு ஹாலிவுட் பக்கம் அதிகம் போனதே இல்லை! ஆனால், சில நல்ல நடிகைகள் - சினிமாவிலும் காலூண்ற முடியாமல், மனசுக்குப் பிடித்த மனிதரை மணந்து குடும்ப வாழ்க்கை நடத்தவும் முடியாமல் அவஸ்தைப் படுவதை நான் அறிந்திருக்கிறேன்… அது மட்டுமல்ல... இந்தக் கதையில் வரும் பத்திரிகை நிருபர் ஹரி... உண்மையிலேயே இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி தலை தப்பியது பெரிய அதிசயம்! நடிகை இந்து-நிஜ வாழ்வில் கடைசி வரையில் பெற்றோருக்காக உழைத்து, காதலித்தவரை மணக்க முடியாமல், வேறு ஒருவரை மணந்து - ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகி-சமீபத்தில் தான் நிரந்தரமாய் கண்ணை மூடினாள். அவளுக்கு என் அஞ்சலி...
Read more from Anuradha Ramanan
Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsNanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Poisugam Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsMogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Poo Manasu Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaasalvarai Vandhaval
Related ebooks
Aasai Konda Devathai Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Ippadikku Nandriyudan… Rating: 0 out of 5 stars0 ratingsIvarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Illatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsSandhippu Thodarum Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsKarkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Kanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsSamathiley Naan Varava Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Veliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsMom From India Rating: 0 out of 5 stars0 ratingsKaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Kaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Unnai Marappena? Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Oomai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nila Sudum Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vaasalvarai Vandhaval
0 ratings0 reviews
Book preview
Vaasalvarai Vandhaval - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
வாசல்வரை வந்தவள்
Vaasalvarai Vandhaval
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
முன்னுரை
'வாசல் வரை வந்தவள்' - திரைப் பட நடிகை... அதிலும் மார்க்கெட் இழந்த நடிகையின் கதை... அது என்னவோ தெரியவில்லை... இந்த சினிமா சம்பந்தப்பட்ட கதைகளை எழுதும் போது அந்த வட்டாரத்தில் நடக்கும் சம்பவங்களும், டயலாக்கும் அப்படியே என் எழுத்தில் வந்து உட்காருகிறது. இத்தனைக்கும் நான் வடபழனி பக்கம்-அதாவது தமிழ்நாட்டு ஹாலிவுட் பக்கம் அதிகம் போனதே இல்லை! ஆனால், சில நல்ல நடிகைகள் - சினிமாவிலும் காலூண்ற முடியாமல், மனசுக்குப் பிடித்த மனிதரை மணந்து குடும்ப வாழ்க்கை நடத்தவும் முடியாமல் அவஸ்தைப் படுவதை நான் அறிந்திருக்கிறேன்… அது மட்டுமல்ல... இந்தக் கதையில் வரும் பத்திரிகை நிருபர் ஹரி... உண்மையிலேயே இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி தலை தப்பியது பெரிய அதிசயம்! நடிகை இந்து-நிஜ வாழ்வில் கடைசி வரையில் பெற்றோருக்காக உழைத்து, காதலித்தவரை மணக்க முடியாமல், வேறு ஒருவரை மணந்து - ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகி-சமீபத்தில் தான் நிரந்தரமாய் கண்ணை மூடினாள். அவளுக்கு என் அஞ்சலி...
***
இப்படிக்கு அன்புடன்,
அனுராதா ரமணன்
வாசல்வரை வந்தவள்
1
அந்த வீட்டு வாசற் கதவைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான் ஹரி. பயபக்தியுடன் பஸ்ஸரை அழுத்தினான்.
இது அவனது முதல் வேலையின், முதல்நாள். உத்தியோகம் ஒன்றும் பிரமாதமானதில்லை. ஒரு பத்திரிகையின் ரிப்போர்ட்டர் வேலை. அதுவும் சாதாரணப் பத்திரிகைகூட இல்லை ஒரே அறையில் ஒரேயொரு மனிதர் - ஆசிரியர் வேலையிலிருந்து அறையைக் கூட்டிப் பெருக்கும் வேலை வரையில்... அத்தனையையும் ஒண்டி ஆளாகச் சமாளித்துக் கொண்டிருந்தார். ஹரியின் போதாத காலமோ - அவரின் நல்ல காலமோ - அவன் இவரிடம் வந்து சேர்ந்தான்.
வெறுமே வரவில்லை, கையில் இவன் சித்தப்பாவின் மைத்துனர் மனமுவந்து கொடுத்த சிபாரிசுக் கடிதம், ஒரு சீப்பு வாழைப்பழம் இத்யாதிகளுடன் பதவிசாக வந்து நின்றவனை ஏற இறங்கப் பார்த்து - ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டுத்தான் உத்தியோகத்தைக் கொடுத்தார் ஆசிரியர்.
இதப் பாரு... இங்கே பெரீசா ஒண்ணும் புரட்டறதுக்கில்லே. சினிமா நியூஸ் - அதுவும் ஆக்டர்ஸோட பர்ஸனல் விவகாரம், இது ஒண்ணுதான் மெயின். ஒண்ணு ரெண்டு இன்டர்வியூ வரும். மத்ததெல்லாம் இங்கிலீஷ் மாகஸின்ஸ்லேருந்து லாவிடலாம்…
சரிதான் சார்...
அந்தக் கணத்தில் வேலை கிடைத்தால் போதுமென்கிற நிலைமை அவனுக்கு. அவர் என்ன சொன்னாலும் தலையாட்டத் தயாராக இருந்தான்.
இந்தா... இந்த போன் நெம்பரெல்லாம் வச்சுக்க. அடுத்த இஷ்யூவுல விறுவிறுப்பா ஒரு இன்டர்வியூ வரணும். முதல் வேலையா நாலு நம்பர் தரேன். போன் பண்ணிப்பாரு. உடனே பதில் கிடைக்கலைன்னாலும் விடாதே... எனக்கு சாப்பாட்டுக்கு செலவு செய்யக்கூட மனசு வராது; டெலிபோன் பில் கட்ட அஞ்சமாட்டேன். ஆனா, அதுக்காக போனை உன் சொந்த உபயோகத்துக்கு யூஸ் பண்ணிக்கக் கூடாது. என்ன சம்பளம் எதிர்பார்க்கறே...?
நீங்க என்ன தந்தாலும் சரிதான் சார்!
"என்னால் பணமா தரமுடியாது. நான் பக்கத்துல இருக்கிற முனியாண்டி விலாஸ்லேதான் சாப்பிடறேன். அதுல நீயும் சாப்பிடு. முப்பது டிக்கெட் வாங்கித் தரேன்...''
அவன், முதுகில் கரப்பான் ஊர்வது போல நெளிந்தான்.
"முப்பது டிக்கெட் பதினைஞ்சு நாளைக்குத்தான் சார் வரும். ஒரு நாளைக்கு ரெண்டு வேளையாவது சாப்பிடணும்... இல்லே... முப்பதை ரெண்டால வகுத்துப் பாருங்க... பதினைஞ்சு. பதினைஞ்சு நாளைக்குத்தான்...''
அவரின் முகத்தைப் பார்த்தபடி, தயங்கித் தயங்கி அவன் சொல்ல - அந்த மனிதர், காதளவுப் புன்னகை யொன்றைப் பரவ விட்டபடி சொன்னார்:
நீ இப்பவே ஓவர் வெயிட்டா இருப்பியோன்னு நினைக்கறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடு... போதும். ராத்திரி இந்தப் பக்கத்துக் கடையில ரெண்டு வாழைப்பழமும், ஒரு டீயும் வாங்கிக் குடி... அங்கேயும் என் கணக்குல நீ வாங்கிக்கலாம். ஆனா, நினைவு வச்சுக்க. ரெண்டு வாழைப்பழம் ஒரு கப் டீதான். அதுக்கு மேல ஆசைப்பட்டாயானா - உன் கைக்காசுதான். இதைத்தவிர - ஒரு நாளைக்கு ரெண்டுரூபா தருவேன், பஸ் சார்ஜுக்கு; அதாவது இன்டர்வியூ பண்ணிட்டு வர்றதுக்கு கன்வேயன்ஸ் சார்ஜ். இதுக்கு மேல நான் ஒரு பைசா தர முடியாது. பார்த்துக்க...
சார்... நான் எங்க சித்தப்பா வீட்டுலதான் இப்ப தங்கியிருக்கேன். அவங்க வீடு தண்டையார் பேட்டையில இருக்கு...
இருக்கட்டுமே...
தினம் நான் அங்கேயிருந்து இங்கே...
"எதுக்கு இந்த அவதி... நம்ம ஆபீஸ்லேயே தங்கிடு. காலையில் எழுந்து இதோ - இந்தக் குப்பையை ஒதுக்கி வாசப்புறமா தள்ளிட்டு, பானையைக் கழுவி தண்ணி பிடிச்சு வை. பக்கத்து டீக்கடையில தண்ணி கேட்டு வாங்கிக்க. விடிகாலையில எழுந்து - இதோ... இப்படி நேரே ஸ்டோருக்குள்ள போனா கிணத்தடியும், பாத்ரூமும் இருக்கும். அங்கே