Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnil Ennai Kaangirean
Unnil Ennai Kaangirean
Unnil Ennai Kaangirean
Ebook129 pages43 minutes

Unnil Ennai Kaangirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003368
Unnil Ennai Kaangirean

Read more from Kulashekar T

Related to Unnil Ennai Kaangirean

Related ebooks

Reviews for Unnil Ennai Kaangirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnil Ennai Kaangirean - Kulashekar T

    http://www.pustaka.co.in

    உன்னில் என்னைக் காண்கின்றேன்

    Unnil Ennai Kaangirean

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    காதலினால் மானுடர்க்கு கவிதையுண்டாம்

    கானமுண்டாம், சிற்பமுதற் கலைகள் உண்டாம்

    ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

    அன்று ஹாஸ்டல் தினம். அந்த இனிய மாலை நேரத்தில் அந்தப் பெண்கள் கல்லூரி விடுதி செம குஷியிலிருந்தது. விதவிதமான ரோஜாக்களும், மல்லிகைகளும், கனகாம்பரங்களும், பிச்சிகளும், மனோரஞ்சிதங்களும், மகிழம்பூக்களும், அரிதான சில குறிஞ்சிகளும் ஒன்றுகூடி விழா துவக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பார்வையாளர் இருக்கைக்கு அருகிலிருந்த மரத்தடிகளிலும், பூக்கூட்டம் சிறுசிறு கொத்துக்களாய்ச் சேர்ந்துகொண்டு கடிஜோக்குகளும், இளமை ஜோக்குகளும் பரிமாறிக்கொண்டு, மின்னல் வெண்மையாய் பளீர் சிரிப்பை சிதறவிட்டுக் கொண்டிருந்தனர்.

    திறந்தவெளிப் பகுதியில் விழாமேடை அமைத்திருந்தார்கள். அந்த பெண்கள் விடுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய், எங்கும் இளமையோடிப் போயிருந்தது. விடுதியின் டோபோகிராபி பற்றிச் சொல்வதென்றால், கிட்டத்தட்ட நாற்பது அறைகள் கொண்ட மூன்றடுக்கு கட்டிடம் அது. எதிரேயிருக்கும் விசாலமான, பகுதியில்தான் மேடை போட்டிருப்பது. திறந்தவெளிப் பகுதியெங்கும் சீர்செய்யப்பட்ட புல்வெளி. சுற்றிலும் வரிசை வரிசையாய் பூச்செடிகள். இடையிடையே இருந்த வாதாம் மரங்கள், பூவரசு மரங்கள் திறந்தவெளிப் பகுதிக்கு குடை பிடித்தவண்ணமிருந்தன. திறந்தவெளியின் மையத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் பலகையை விழாவிற்காக சங்கிலியோடு கழற்றி, சுவரோரமாய் நிற்க வைத்திருந்தார்கள். திறந்தவெளிப் பகுதியடுத்து ஆபீஸ் மற்றும் மெஸ். விடுதி கட்டிடத்திற்கு இடப்புறம் கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி உயரத்தில் நீளமான ஒற்றைக்கல் மதில்சுவர். அதற்கு அந்தப்புறம் ஒரு மெக்கானிக் ஷெட்.

    சுவையான சிற்றுண்டியைத் தொடர்ந்து விழா களைகட்டத் துவங்கியது. சில ரோஜாக்கள் பாடினர். சில மல்லிகைகள் ஆடினர். அடுத்ததாய் குறிஞ்சியொன்று பேசுவதற்கு மேடையேறி வர, ஒட்டுமொத்தமாய் எல்லாப் பூக்களும் ரிதம் தவறாமல் கைதட்டி, கோரஸாய், 'கவிதா... கவிதா' என்று ஒரே அலைவரிசையில் கோஷமிட்டனர்.

    கவிதா பேச வந்த தலைப்பைச் சொல்லாமலே பேசத்துவங்கினாள். ரோட்டோரம் ஸ்பீக்கர் வைத்து வல்லாரை லேகியம் விற்பவர் பாணியில் ஜாலியாகவே ஆரம்பித்தாள். பரிசுத்தமான பிரியங்களில் தோய்த்தெடுத்த சஞ்சீவினி இது. மனதின் பதினாறு வகை வேர்கள் ஒன்று சேர்ந்து உருவான மாமருந்து இது. மனதில் குமைச்சலா, புளித்த ஏக்கமா, விரட்டியடித்துக் கொண்டிருக்கும் விரக்தியா, உணர்வுகளில் பூகம்பமா, வெறிபிடித்தாட்டும் பேதங்களினால் ஏற்படும் ரத்தப்பெருக்கா, நொடியில் விடுபட உதவும் சர்வலோக நிவாரணி இது. விலை கிடையாது இதற்கு. விலைமதிப்பில்லாததும், விற்பனைக்கு ஆட்படுத்த முடியாததுமான சமூக உறவின் பிணி தீர்க்கும் மந்திரம் இது! என்றவள், மாணவிகள் பார்த்து எது? என்று புருவம் உயர்த்திக் கேட்க, கூட்டம் கோரஸாய், த்ரி லெட்டர் மேஜிக் என்று ஓங்கி குரல் எழுப்பினார்கள். கவிதா, யெஸ்! அதே மூன்றெழுத்து மந்திரந்தான் நான் பேசப்போற தலைப்பு என்றதும், ஹாஸ்டலே கைதட்டலில் நிரம்பியது.

    காதல்... நட்பின் இன்னொரு பரிணாமம். மெய்க்காதல் என்பது சுயநலமனோபாவத்திலிருந்து, விட்டுக்கொடுக்கிற மனோபாவத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி. வரதட்சணையை 'வழியனுப்பி வைக்கவல்ல மகாசக்தி. காமத்திற்கு நாகரீகம் கற்றுத்தரும் வேதம். வக்கிரம் வற்றிப்போன வீரிய ஒட்டுச்சேர்க்கை. மனிதம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான உலக சிந்தனை என்று கவிதா பேச்சைத் துவக்க, எல்லாப் பூக்களும் சலசலப்பைத் துறந்துவிட்டு மெளன பாஷை அணிந்து கொண்டார்கள்.

    ஜீவிதம் தொடங்கிய நாளிலிருந்து இதற்காகத்தான் எத்தனையெத்தனை கதைகள்! உலக அதிசயம் உருவாக்கிய ஷாஜகான் - மும்தாஜ் கதை, மதத்தை வென்ற சலீம் - அனார்கலி கதை, உயிர்க்காவு கொடுத்து, காதலுக்கு உயிர் அளித்த அம்பிகாவதி - அமராவதி கதை என்று இங்கு ஜீவித்திருக்கும் எண்ணிலடங்கா கதைகள் யாவும் காதலுக்கு கட்டியம் கூறும் அழியாசாசனங்கள்

    மெக்கானிக்கல் ஷெட்டில் ரவி தரையில் மல்லாந்து படுத்தபடி ஒரு ஹீரோ ஹோண்டா பைக் என்ஜினுக்கு பைபாஸ் சர்ஜரி நிகழ்த்திக் கொண்டிருந்தான். லவ்ட்ஸ் பீக்கர் வழியாக வந்துகொண்டிருந்த கவிதாவின் பேச்சு இங்கும் தெளிவாகவே கேட்டது.

    கவிதா சற்றே உணர்ச்சிவயப்பட்டவளாக, அடுத்தவங்க சந்தோஷத்தை தன் சந்தோஷமா நினைக்கிற மனசை எல்லாத்துக்கும் பிடிக்கும். அந்த மனசைத் தர்றதே காதல்தான். அதனாலதான் நான் இங்க காதலுக்கு கொடி பிடிக்கிறேன் என்றதும், ரவியின் இதயம் உற்சாகத்தில் சீட்டியடித்தது.

    கவிதா முத்தாய்ப்பாய்,

    "கல்லானால்

    காந்தக்கல்லாய் இரு!

    செடியானால்

    தொட்டால் சுருங்கிச் செடியாய் இரு!

    மலரானால்

    அணிச்சமலராய் இரு!

    மானுடரானால்

    மறவாமல் காதல் இதயத்தோடு இரு!"

    என்றதும், ரவிதான் முதல் முதல் இங்கிருந்தே கரகோஷம் எழுப்பினான். அவனைத் தொடர்ந்து கூட்டம் அதை எதிரொலித்தது.

    2

    நம்பிக்கையின் திசையைக் காட்டும்

    வழிகாட்டி மரம்

    காதல்.

    விடுதியில் உள்ள ரெக்ரியேஷன் ஹாலில் தூக்கம் வராத மாணவிகள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரக்கனவு ஓடிக்கொண்டிருந்து. கவிதாவிற்கு படம் சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. 'வெண்ணிலவே... வெண்ணிலவே’ பாடலுக்கான காட்சி துவங்கும் வரை. அந்தப் பாடலின் பி.ஜி.எம்மில் பிரபுதேவா - கஜோலின் கண்களில் தெரியும் தீட்சண்யம் தரிஷிக்க முடியாமல் தடுமாறி, அந்த ஜுவாலைக்குள் அடங்கிப்போக, கவிதாவால் ஏனோ அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதயத்திற்குள் அனல் பற்றிக்கொள்ள, ரத்தம் வருவது கூட உரைக்காமல் நகம் கடித்தாள்.

    மாணவிகள் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்தப் பாடலில் ஒருகட்டத்தில் பிரபுதேவா கரம் கஜோலின் கரத்துடன் உரசி, மெல்ல மெல்ல தைரியம் பெற்று பற்றிக்கொள்ள யத்தனிக்கையில் கரண்ட் கட்டாக, மாணவிகள் "ஹ்ஹோ'வென ஏக்கப்பெருமூச்சு விட்டுவிட்டு, தடவித்தடவி அறைகளுக்குச்

    Enjoying the preview?
    Page 1 of 1