Ezhavathu Arivu
By Rajeshkumar
2/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Ezhavathu Arivu
Related ebooks
7 - vathu Arivu Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Andre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Astami Ratthirigal Rating: 4 out of 5 stars4/5Roja Mul Kireedam Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Mannikkathey Marakkathey Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsVivek Vidivatharkul Vaa Rating: 5 out of 5 stars5/5Ethuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaththu Vinaadi Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Irandu Per Rating: 5 out of 5 stars5/5Vaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsInimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Divya Rating: 5 out of 5 stars5/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Otrai Megam Rating: 0 out of 5 stars0 ratingsVendru Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravai! Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Michamillai Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Pagal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Ezhavathu Arivu
1 rating0 reviews
Book preview
Ezhavathu Arivu - Rajeshkumar
23
1
கடவுள் கிட்ட ‘ட்ரடி’ கேட்டேன். ஜவுளிக்கடையையே கொடுத்தார். சாப்பாடு கேட்டேன். ஹோட்டலையே வாங்கிக் கொடுத்தார். செலவுக்கு பத்தாயிரம் கேட்டேன். உன்னுடைய செல் நெம்பர் கொடுத்தார். எப்ப வரட்டும் ப்ரதர்...?
விவேக் தன் மாருதி ஜென்னை அறுபதில் அரட்டிக் கொண்டே செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு விஷ்ணு
என்று கூப்பிட்டான். பாஸ்...!
இப்ப எங்கே இருக்கே...?
‘ரத்னாஸ் கபே’யில் தயிர்வடைக்கு முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்... பாஸ்...
அதைத் தியாகம் பண்ணிட்டு உடனேபுறப்பட்டு வாடா...
எங்கே பாஸ்...?
ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பயலாஜிகல் மியூசியம் இருக்கே தெரியுமா...?
தெரியாதே பாஸ்...!
பாத்திமா லேடிஸ் ஹாஸ்டல் தெரியுமா...?
அது தெரியுமே...! கடந்த பத்து வருஷ காலமாய் அந்த ஹாஸ்டல் வழியாக எத்தனை தடவை போயிருப்பேன். அது ஹாஸ்டல் இல்லை பாஸ்... தேவதைகளுக்கு சொர்க்கம் போரடித்தால் வந்து தங்கிட்டுப் போற புண்ணிய ஸ்தலம்...!
டேய்... தயிர்வடை தடியா...! அந்த பாத்திமா ஹாஸ்டலுக்கு நேர் எதிரில் இருக்கிற கட்டிடம் தான் அந்த பயலாஜிக்கல் மியூசியம்.
ஓ... அதுவா பாஸ்...! சாயம் போன மாதிரி காபி நிறத்தில் இருக்குமே... ஒரு கட்டிடம்! அதுவா...?
அதேதான்....!
என்ன பாஸ்...! திடீர்னு மியூசியத்திற்கு கூப்பிடறீங்க...? அங்கே ஏதாவது பிரச்னையா...?
பிரச்னையெல்லாம் கிடையாது. அங்கே ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் நடந்துட்டிருக்கு... பார்த்துட்டு வரலாமேன்னு புறப்பட்டேன்.
உண்மையா பாஸ்...?
விஷ்ணு வாயைப் பிளப்பது செல்போனிலேயே தெரிய விவேக் தொடர்ந்தான்.
அரைமணி நேரத்துக்குள்ள நீ வரணும்...! இல்லேன்னா உள்ளே உன்னை அலவ் பண்ண மாட்டாங்க...
இதோ வந்துட்டேன் பாஸ்...! தயிர்வடையும் காராபூந்தியும் கான்சல்... பாஸ்! என்னை விட்டுட்டு உள்ளே போயிடாதீங்க...
லேட் பண்ணாம வா...
விவேக் செல்போனை அணைத்து விட்டு சர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஜென்னின் வேகத்தை அதிகப்படுத்தினான். நெரிசலான காலை போக்குவரத்தில் - இருபது நிமிஷ பயணம். மயிலாப்பூர், மந்தைவெளியை சிரமமாய் கடக்க - ராஜா அண்ணாமலைபுரம் வந்தது.
மேலும் ஒரு ஐந்து நிமிஷ பயணத்தில் பூவரசம் மரங்களுக்கு மத்தியில் ஒளிந்திருந்த அந்த பிரிட்டிஷ் கால காவி நிற கட்டிடம் ‘உயிரியல் அருங்காட்சியகம்’ என்ற பெயர் பலகையோடு பார்வைக்குக் கிடைத்தது.
விவேக் திறந்திருந்த காம்பவுண்ட் கேட் வழியாக காரை நுழைத்து ஒரு மரத்துக்குக் கீழே மௌனமாக்கி இறங்க - விஷ்ணு பைக்கோடு காத்திருந்தான். விவேக் நெற்றி சுருங்கினான். டேய்... எப்படிடா... இவ்வளவு சீக்கிரத்துல வந்தே...?
பறந்து வந்தேன் பாஸ்...! ஸ்பீட் பெட்ரோல் வந்ததிலிருந்து நம்ம பல்ஸர் பைக் ரோட்டுக்கு மேல் பத்தடி உயரத்தில் தான் பறக்கும்.
என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சந்தேகக் குரலில் கேட்டான். என்ன பாஸ்... ஏதோ டான்ஸ் ப்ரோக்ராம்ன்னு சொன்னீங்க... அதுக்கான அறிகுறிகள் ஒண்ணையும் காணலையே... ஏதோ ஒரு மயானத்துக்குள்ள இறுதி அஞ்சலி செலுத்தறதுக்காக வந்த மாதிரி இருக்கு. நம்ம கையில் மலர்வளையம் ஒண்ணுதான் இல்லை...
விஷ்ணு பேசிக் கொண்டிருக்கும் போதே சஃபாரி அணிந்த ஒரு நபர் விவேக்கிற்கு பக்கத்தில் வந்து நின்றார்.
ஸார்...
விவேக் திரும்பினான்.
எஸ்...
உங்களுக்காக கமிஷனரும், டைரக்டரும் இரண்டாவது மாடியில் வெயிட் பண்ணிட்டிருக்காங்க...
ஃபாரன்ஸிக் சித்திக் அலி வந்துட்டாரா?
வந்துட்டார் சார்...
டாக்டர் பரிமேலழகர்...?
அவரும் வந்துட்டார் ஸார்... ஆல் ஆர் வெயிட்டிங் ஃபார் யூ... சார்...
சஃபாரி அணிந்த நபர் சொல்லி விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்துவிட, விஷ்ணு, விவேக் காதருகே கிசுகிசுத்தான்.
என்ன பாஸ்! கமிஷனர், டைரக்டர், சித்திக் அலி, பரிமேலழகர் இவங்க நாலு பேர்க்கும் டான்ஸ் தெரியுமா...? அவங்க ஆடி நான் பார்த்ததே இல்லையே...! ஒரு வேளை இன்னிக்குத்தான் அரங்கேற்றமா...?
விஷ்ணு! பேசாம வா! உன்னை நான் எதுக்குக் கூப்பிட்டேன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்குத் தெரியும்.
எனக்கு புரிஞ்சு போச்சு பாஸ்...
என்ன புரிஞ்சுது...?
விவேக் நடந்து கொண்டே கேட்டான்.
பாஸ்! இந்த அரதப் பழசான மியூசியத்துல எத்தனையோ விலையுயர்ந்த பொருள்கள் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணு காணாமே போயிருக்கலாமே...?
உனக்கு பயங்கர மூளைடா...?
"என்னமோ தெரியல பாஸ்...! போன குருப் பெயர்ச்சியிலேயிருந்து எனக்கு எல்லாமே ‘ஒர்க்அவுட்’ ஆயிட்டு வருது. ஸ்டெல்லா மேரீஸ் பக்கம் போக முடியலை பாஸ். பஸ்சுக்கு காத்துக்கிட்டிருக்கிற இளம் பெண்களிலிருந்து பேரிளம் பெண்கள் வரை எல்லாருமே ‘ஹாய் விஷ்ணு’ன்னு சொல்லி டாட்டா காட்றாங்க...
நல்லாப் பார்த்தியாடா...! ‘டாட்டா’ காட்டினாங்களா? இல்லை ‘பாட்டா’ காட்டினாங்களா?
உங்களுக்கு பொறாமை பாஸ்...! நான் இன்னொரு விஷயத்தைச் சொன்னா அப்படியே திகைச்சுப் போயிடுவீங்க...
அப்படியா...!
ஆமா பாஸ்...! நான் இப்போ சொல்லப் போற விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க... கடந்த சில நாட்களாய் தலை சீவறதுக்காக கண்ணாடி முன்னே போய் நின்னா கண்ணாடியில் என்னோட தலை மட்டும் தெரியறது இல்லை பாஸ்... கூடவே...
கூடவே... ஐஸ்வர்யாவோட தலையும் தெரியுதா?
இல்ல பாஸ்...
பின்னே...?
என்னோட தலைக்குப் பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியும் பாஸ்.
டேய்ய்ய்ய்...
எனக்குத் தெரியும் பாஸ்... இதையெல்லாம் நீங்க நம்ப மாட்டீங்க. காலம் ஒரு நாள் பதில் சொல்லும்...
விவேக் மியூசியத்திற்குள் நுழைந்து எதிர்பட்ட பழமையான மரப்படிகளில் ஏறி - முதல் தளத்தை அடைந்து முதல் அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள் அரைவட்டமாய் ஒரு மேஜை போடப்பட்டிருக்க, அதைச் சுற்றிலும் போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணாவும், மியூசியம் டைரக்டர் பஞ்சலிங்கமும், ஃபாரன்ஸிக் ஆபீஸர் சித்திக் அலியும், டாக்டர் பரிமேலழகரும் இறுகிப்போன முகங்களோடு உட்கார்ந்திருந்தார்கள்.
விவேக்கும் விஷ்ணுவும் போலீஸ் கமிஷனர்க்கு சல்யூட் அடித்து விட்டு தளர்ந்தார்கள்.
கமிஷனர் ராமகிருஷ்ணா நிமிர்ந்தார். "மிஸ்டர் விவேக்..