Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irumbu Pattaampoochikal
Irumbu Pattaampoochikal
Irumbu Pattaampoochikal
Ebook563 pages4 hours

Irumbu Pattaampoochikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Irumbu Pattaampoochikal

Read more from Rajeshkumar

Related to Irumbu Pattaampoochikal

Related ebooks

Related categories

Reviews for Irumbu Pattaampoochikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irumbu Pattaampoochikal - Rajeshkumar

    34

    1

    அந்த அதிகாலையின் கிழக்குத் திசை ஆகாயம் முழுவதும் ஆரஞ்சு வண்ண டிஸ்டெம்பர் அடிக்கப்பட்ட தினுசில் தெரிய...

    பிரேம்குமார் ஜாக்கிங் சூட்டில் வியர்க்க வியர்க்க நடந்து கொண்டிருந்தான். முப்பது வயது. ஆறடி உயரம். தொப்பை போடாத எழுபது கிலோ உடம்பு. அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே கொஞ்சம் பெண்மைத்தன கண்கள். கறுப்பு பெயிண்ட்டைத் தொட்டு நேர்த்தியாய் கோடு இழுத்த மாதிரி மீசை.

    குட்மார்னிங் பிரேம்குமார்... தினசரி வாக்கிங்கின் போது வழக்கமாய் எதிர்ப்படும் டாக்டர் குருபரன் குரல் கொடுத்தார்.

    குட்மார்னிங் டாக்டர்...

    என்ன பிரேம்குமார்... இன்னிக்கு நீங்க லேட் போலிருக்கே...?

    ஆமா... கொஞ்சம் தூங்கிட்டேன்...

    பிசினஸ் எப்படிப் போயிட்டிருக்கு?

    வெல் கோயிங்... சொல்லிக் கொண்டே குருபரனை பிரேம்குமார் கடக்க முயல, அவர், ஒரு நிமிஷம் என்றார்.

    எஸ்...

    உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...

    பை... ஆல் மீன்ஸ்!

    இருவரும் ரோட்டோரமாய் ஒதுங்கி நின்றார்கள். பிரேம்குமார் வியர்வையில் மினுமினுத்த தன் முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே குருபரனை ஏறிட்டான்.

    நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி. நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காமே இருக்கீங்க?

    பிரேம்குமார் புன்னகைத்தான்.

    நேரம் வரலை...

    அதாவது, உங்களுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு அமையல?

    அதேதான்...!

    ஏஸ்... எ வெல்விஷர்... நான் உங்க கல்யாண விஷயத்தில் மூக்கை நுழைக்கலாமா?

    தாராளமா...

    இந்தப் பொண்ணைப் பாருங்க... -குருபரன் சொல்லிக் கொண்டே தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் கையை விட்டு போட்டோவை எடுத்துக் காட்டினார். பத்து விநாடி இமைக்காமல் பார்த்த பிரேம்குமாரின் தோளைத் தட்டினார் டாக்டர்.

    பொண்ணு எப்படி...?

    ஃபைன்!

    நேர்ல பார்க்க இன்னும் அம்சமா இருப்பா. பேரு வைஜெயந்தி. பெங்களூர். அப்பா கோமதிநாயகம். பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். ஒரே பொண்ணு. கோடிக்கணக்கான சொத்து. உங்க அந்தஸ்துக்கு ஏற்ற ஃபேமிலி. நீங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு காரியத்தில் இறங்குவேன்...

    கோமதிநாயகம் உங்களுக்கு உறவா டாக்டர்?

    நோ... நோ... அவர் என்னோட ஃப்ரண்ட். பால்ய சிநேகம். உங்களை ஏதோ ஒரு பார்மசூடிகல்ஸ் சம்பந்தப்பட்ட இடத்தில் பார்த்தாராம். அவருக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுப் போனதால தன் பொண்ணை உங்களுக்குக் கொடுக்கப் பிரியப்படறார். பொண்ணு உங்களுக்கு ஓ.கே.ன்னா மேற்கொண்டு பேசலாம்...

    டாக்டர்! இந்த விஷயத்தில் நான்மட்டும் முடிவெடுக்க முடியாது. அப்பாகிட்டேயும் கேட்கணும்...

    தாராளமாக் கேளுங்க... இந்தாங்க... போட்டோவைக் கொண்டு போங்க. அப்பா கிட்டே காட்டுங்க. ஓ.கே. சொன்னார்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் நேர்ல வர்றேன். மேற்கொண்டு பேசுவோம்...

    போட்டோவை பிரேம்குமார் வாங்கிக் கொண்டு புன்னகைத்தான்.

    டாக்டர்! என் கல்யாண விஷயத்துல நீங்க எடுத்துக்கிட்ட அக்கறைக்கு நன்றி. நான் அப்பா கிட்டே பேசிட்டு ஒரு பத்து மணி சுமார்க்கு ஃபோன் பண்றேன்...

    குருபரன் நடக்க ஆம்பித்து விட, பிரேம்குமார் அதே இடத்தில் அசையாமல் நின்று- நடந்து போகிற டாக்டரின் முதுகையே வெறித்துப் பார்த்தான். அவர் தலை மறையும் வரை பார்த்து விட்டு அந்தப் பெண் வைஜெயந்தியின் போட்டோவை உயர்த்திப் பிடித்தான்.

    பார்வையில் இப்போது நெருப்பாய் கோபம். நிமிஷ நேரம் பார்த்தவன் அந்த போட்டோவை இரண்டாய், நான்காய், எட்டாய் கிழித்து பக்கத்தில் இருந்த சாக்கடையில் வீசிவிட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.

    நடையில் புயல். முகம் வியர்த்துக் கொட்டியது. இருபது நிமிஷம் நடை போட்டு ரோட்டோர பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தன் ஃபோர்டு ஐகான் காருக்கு வந்தான். கதவுக்கு சாவியைக் கொடுத்து திறக்க முயன்றவன் பின்பக்கம் கேட்ட ஒரு பெண்ணின் குரலால் கலைந்தான்.

    எக்ஸ்க்யூஸ் மீ சார்...

    பிரேம்குமார் திரும்பினான்.

    அந்தப் பெண் நின்றிருந்தாள்.

    சென்ற விநாடி பறித்த ரோஜாவாய் உடம்பு முழுக்க புத்துணர்ச்சி பரவியிருக்க, சுடிதாரில் அந்த இருபது வயது அழகு சிறைப்பட்டிருந்தது. வலது தோளில் பெரிதாய் ஒரு ஹாண்ட்பேக். சதைப்பிடிப்பான உதடுகளில் ஒரு சத்தான புன்னகை.

    குட்மார்னிங் சார்...

    ....

    பிரேம்குமார் இமைக்காமல் அவளையே பார்க்க, அவளது புன்னகையின் பரப்பு பெரிதாகியது.

    பதிலுக்கு ‘குட்மார்னிங்’ சொல்ல மாட்டீங்களா?

    யார் நீ...? உனக்கு என்ன வேணும்?

    சார்... என் பேர் லயா..

    லயா...?

    பேர் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கறீங்களா? இது நானா வெச்சுக்கிட்ட பேர் சார். அப்பா வெச்ச பேர் ராஜலட்சுமி...

    சரி... உனக்கு என்ன வேணும்?

    சார்... நான் ‘சங்கமம்’ பத்திரிகை ரிப்போர்ட்டர். ப்ரீலான்சர். சங்கமம் வார இதழை ரெகுலராப் படிக்கறீங்களா...?

    இல்லை... அதுக்கெல்லாம் நேரமில்லை...

    சார்...! அந்தப் புத்தகத்துல ஒரு பேட்டிக் கட்டுரையை பண்ணிட்டு வர்றேன். கட்டுரைக்குத் தலைப்பு ‘சாதிக்கப் பிறந்த இளைஞர்கள்’. பல்வேறு தொழில்களில் சாதனை செய்த இளைஞர்களை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்துவதுதான் கட்டுரையோட நோக்கம்...

    பிரேம்குமார், லயாவை ஒரு எரிச்சல் பார்வை பார்த்தான்.

    நான் என்ன சாதனை பண்ணிட்டேன்னு என்னைப் பேட்டி எடுக்க வந்திருக்கே...?

    என்ன சார்... இப்படிக் கேட்டுட்டீங்க? பிரேம் பார்மசூடிகல்ஸ்ன்னு மருந்துக் கம்பெனி ஆரம்பிச்சு விலை உயர்ந்த மருந்துகளைக் கூட குறைந்த விலையில் தயார் பண்ணி மருத்துவத் துறையில் புரட்சியை உண்டாக்கியிருக்கீங்க. எய்ட்ஸ், கேன்சர்னு குணப்படுத்த முடியாத நோய்களுக்கு 2004ஆம் வருஷத்துக்குள்ளே மருந்து கண்டுபிடிக்கப் போறதா சொல்லியிருக்கீங்க. இதெல்லாம் சாதனையான விஷயங்கள் இல்லையா சார்?

    இதோ பார்... எனக்குப் பிடிக்காத விஷயம் பேட்டியும், கட்டுரையும்...

    சாரி சார்... உங்களைப் பேட்டி எடுக்கறதுக்காக கடந்த மூணு மாசமா ட்ரை பண்றேன். உங்க வீட்டு ஃபோனை காண்டாக்ட் பண்ணா சரியான பதில் கிடையாது. நேத்திக்கு ராத்திரிதான் ஒரு ஃப்ரண்ட் மூலமாக இந்த ஏரியாவில் நீங்க ‘மார்னிங் வாக்’ போற விஷயம் தெரிஞ்சது. காலை அஞ்சு மணிக்கெல்லாம் ஆஜராயிட்டேன்...

    பிரேம்குமார் முகம் மாறினான். நான் மார்னிங் வாக் போற விஷயத்தை உன்கிட்டே சொன்ன அந்த ஃப்ரண்ட் யாரு?

    ஏன்... அவ மேல கேஸ் போடப் போறீங்களா?

    பிரேம்குமாரின் முகத்தில் இருந்த கோபம் பட்டென்று காணாமல் போய்விட, உதடுகளில் புன்னகை தொற்றிக் கொண்டது.

    இப்ப உனக்கு என்ன வேணும்?

    பேட்டி...

    பேட்டி எடுக்க உனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?

    ஒரு மணி நேரம் வேணும் சார்... அது உங்க பயோடேட்டாவை ஒப்புவிக்கிற பேட்டி கிடையாது. உங்க திறமைகளை வெளிக் கொணர்கிற பேட்டி. கைவசம் கிட்டத்தட்ட இருபது கேள்விகள் இருக்கு...

    இன்னிக்கு எனக்கு நேரம் இல்லை. பேட்டியை இன்னொரு நாள் வெச்சுக்கலாமா?

    சாரி சார்... நாளை மறுநாள் இந்த ரிப்போர்ட்டர் வேலையை ராஜினாமா பண்ண வேண்டிய கட்டாயம். காரணம், எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. அடுத்த மாசம் பதினாலாம் தேதி கோயமுத்தூர்ல கல்யாணம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற ‘வுட் பி’க்கு என்னோட ரிப்போர்ட்டர் வேலை பிடிக்கலை. அவருக்குப் பிடிக்கலைன்னா ரிசைன் பண்றது தானே முறை? ஸோ... உங்களை எடுக்கப் போற பேட்டிதான் என் கடைசிப் பேட்டியா இருக்கும்...

    லயாவையே சில விநாடிகள் இமைக்காமல் பார்த்து விட்டுக் கேட்டான் பிரேம்குமார்.

    கண்டிப்பா... பேட்டி எடுத்துத்தான் ஆகணுமா?

    ஆமா சார்...

    சரி... கார்ல ஏறு... போறப்ப பேட்டி எடுத்துக்கலாம்...

    தேங்க்யூ சார்... லயா, ஒரு எல்.கே.ஜி. குழந்தையின் சந்தோஷத்தோடு காரின் பின்பக்க கதவைத் திறந்து உட்கார்ந்தாள். பிரேம்குமார் காரை நகர்த்தினான். பிரதான ரோட்டுக்கு வந்து வேகம் எடுத்தான். லயா கேட்டாள்.

    பேட்டியை ஆரம்பிக்கலாமா சார்?

    ம்...

    உங்களை சிலர் முன்கோபின்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மைதானா?

    உண்மைதான்...

    எதுக்காக முன்கோபம்?

    எனக்கு எல்லாமே சரியா நடக்கணும். என் விருப்பத்துக்கு மாறா எந்த விஷயம் நடந்தாலும் எனக்குப் பிடிக்காது. அப்போ கோபத்தை வெளிப்படுத்துவேன். அதை மத்தவங்க முன்கோபம்னு சொல்றாங்க...

    இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழிலகள் இருக்க, ஒரு பார்மசூடிகல் கம்பெனியை ஆரம்பிக்கக் காரணம்...?

    என் அம்மா...

    அம்மாவா...?

    எஸ்... அம்மா சாகும்போது அவங்க வயசு முப்பத்து அஞ்சுதான். அப்போ நான் பத்தாவது படிச்சிட்டிருந்தேன். அப்பா குடும்பத்தை சரியா கவனிக்காததால அம்மா ஏழெட்டு வீடுகளில் வேலை செஞ்சு பணம் சம்பாதிச்சு ஸ்கூல் ஃபீஸ் கட்ட உதவி பண்ணுவாங்க. ராத்திரில சாராயக்கடை வாசலில் இட்லிக்கடை போட்டு வியாபாரம் பண்ணுவாங்க. அம்மா ஓயாமே உழைச்சதின் விளைவு... உடம்பு ஆரோக்கியம் கெட்டுப் போய், அந்தச் சின்ன வயதிலேயே வரக்கூடாத வியாதிகள். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை ஒழுங்கா சாப்பிட்டு வந்திருந்தா அம்மா கண்டிப்பா இன்னிக்கும் உயிரோட இருந்து இருப்பாங்க. மருந்துகளோட விலை அதிகமாயிருந்ததால வாங்கித்தர முடியலை... அம்மா போய்ச் சேர்ந்துட்டா... -பிரேம்குமார் பேசிவிட்டு சில விநாடிகள் மவுனம் சாதிக்க, லயா குறுக்கிட்டாள்.

    சாரி... உங்க ஃப்ளாஷ்பேக் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை...

    மனுஷனோட வாழ்க்கையில் சோகங்களும் சோதனைகளும் வந்தால்தான் அவனால் சாதனைகளைச் செய்ய முடியம்னு தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் சொன்னது உண்மை. அம்மா இறந்த பிறகு என் மனசுக்குள்ளே தினசரி போராட்டம். படிச்சு டிகிரி வாங்கினதும் நல்ல வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிச்சு, சேமிச்சு வெச்சு, பேங்கில் கடன் வாங்கி மருந்துக் கம்பெனியை ஸ்டார்ட் பண்ணணும்னு நினைச்சேன். நினைச்ச மாதிரியே பண்ணேன். ஒரு சாரிடபிள் டிரஸ்ட் எனக்குப் பண்ணின பண உதவியால வெளிநாட்டுக்குப் போய் மருந்தியல் சம்பந்தப்பட்ட படிப்பை முடிச்சேன். விலை உயர்ந்த மருந்துகளையெல்லாம் மலிவு விலையில் தயாரிச்சு அதை ஏழைகளும் வாங்க வழி செய்தேன்...

    ஃபென்டாஸ்டிக் சார்... மருத்துவ உலகில் புரட்சியே பண்ணியிருக்கீங்க...

    என்னைப் பொறுத்தவரை அது புரட்சி கிடையாது. கான்சர்க்கும் எய்ட்ஸ்க்கும் என்னிக்கு மருந்து கண்டுபிடிக்கிறேனோ, அன்னிக்குத்தான் புரட்சி பண்ணதா அர்த்தம்...

    லயா மேற்கொண்டு பேசும் முன்பு கார் நின்றது. பிரேம்குமார், லயாவிடம் திரும்பினான். லயா... அதுதான் என் பங்களா. காம்பவுண்ட் கேட்டிலிருந்து நூறு மீட்டர் தூரம் உள்ளே போகணும். கேட்ல வாட்ச்மேன் கிடையாது. கார் உள்ளே போகணும்னா கேட்டை நீதான் திறக்கணும். இந்தா சாவி...

    சாவியை வாங்கிக் கொண்டு நடந்தாள் லயா. பிரம்மாண்ட கேட்டின் முன்புறம் பெரிய பூட்டு தொங்கியது. பூட்டைத் திறந்த லயா, காம்பவுண்ட் கேட்டைப் பிடித்து பின்னோக்கித் தள்ளினாள். கையில் எதுவோ பிசுபிசுப்பாய் ஒட்டிக் கொண்டது.

    ‘என்ன அது?’

    கை விரல்களை விரித்துப் பார்த்தாள்.

    உலர்ந்தும் உலராத ரத்தம்!

    2

    லயா திடுக்கிட்டுப் போய் தன் கை விரல்களை மீண்டும் பார்த்தாள். விரல்களில் சிவப்பு நூலிழைகளாய் ஒட்டிக் கொண்டிருந்த அது... அது... ரத்தம் தான்!

    மனசுக்குள் பயம் லேசாய் அரும்பிக் கொள்ள, கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டைப் பார்த்தாள். பூட்டிலும் ரத்தம்.

    பிரேம்குமார் காருக்குள் உட்கார்ந்திருந்தபடி தலையை எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.

    என்ன லயா...?

    ஒரு நிமிஷம் இறங்கி வர்றீங்களா...?

    பிரேம்குமார் குழப்ப முகத்தோடு... இறங்கி லயாவை நோக்கி வேக நடையில் வந்தான்.

    எனிதிங் ராங்க்...?

    எஸ்! சம்திங் ராங்க்...!

    என்ன?

    என்னோட கையைப் பார்த்தீங்களா...? லயா கை விரல்களைப் பிரித்துக் காட்டினாள். பிரேம்குமார் பார்த்து விட்டு தன் இரண்டு புருவங்களையும் ஒரே உயரத்துக்கு உயர்த்தினான்.

    ரத்தம் மாதிரி தெரியுது...

    ரத்தம் தான் சார்...

    எப்படி...? கேட் திறக்கும் போது கையில் ஏதாவது அடி பட்டுடுச்சா...?

    இது அடிபட்டு வந்த ரத்தம் கிடையாது மிஸ்டர் பிரேம்குமார்...

    பின்னே...?

    கேட்டில் ஒட்டிக்கிட்டு இருந்த ரத்தம். கேட்டையும் பூட்டையும் பாருங்க...

    பிரேம்குமார் பார்த்து விட்டு கண நேரத்தில் முகம் மாறினான். தன் இடது கை முஷ்டியை தன் வலது உள்ளங்கையில் கோபமாய் ஓங்கி குத்திக் கொண்டான்.

    மறுபடியம் வந்து வேணும்னே பண்ணிட்டுப் போயிருக்காங்க... போலீசுக்கு கம்ப்ளென்ட் கொடுத்துட வேண்டியதுதான்... கத்தியவன் சட்டைப் பைக்குள் இடம் பிடித்திருந்த செல்போனை எடுத்து எண்களைத் தட்டி விட்டு அரை நிமிஷ நேரம் பொறுமையிழந்து காத்திருந்து விட்டுப் பிறகு வேகமாய் பேச ஆரம்பித்தான்.

    பி-2 போலீஸ் ஸ்டேஷன்...?

    ....

    இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி ப்ளீஸ்...

    ....

    நான் பிரேம்குமார் பேசறேன். எஸ்... எஸ்... பிரேம் பார்மசூடிகல்ஸ் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பிரேம்குமார்தான். மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி! இப்போ ஓரலா கம்ப்ளைன்ட் கொடுத்தா நீங்க நடவடிக்கை எடுப்பீங்களா...?

    .....

    தேங்க்யூ... ஈஸ்வரமூர்த்தி! கம்ப்ளைய்ன்ட் இதுதான்... என்னோட பங்களாவுக்குப் பின்பக்கம் ஒரு நாடோடிக் கூட்டம் வந்து டென்ட் போட்டுக்கிட்டு கடந்த ஒருமாத காலமா குடித்தனம் பண்ணிட்டிருக்காங்க... ராத்திரி நேரங்கள்ல அவங்க முயல் வேட்டையாடறதும், பிடிச்ச முயல்களை அப்பவே கொன்னு சமைச்சு சாப்பிடறதுமா ஏக கலாட்டா. ‘ஏன் இப்படி கலாட்டா பண்றீங்க’ன்னு கேட்டேன். அந்த கோபத்தை மனசுல வெச்சுக்கிட்டு அந்த நாடோடிக் கும்பல் ரெண்டு நாளா தாங்கள் அடிச்ச முயல்களோட ரத்தத்தை பங்களா கேட்ல பூசி வெச்சுடறாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் வாக்கிங் போயிட்டு வந்தபோது கேட்ல முயல் ரத்தமும் அதனோட தோலும் இருந்தது. வேலைக்காரங்களை விட்டுக் கழுவச் சொன்னேன். வார்ன் பண்ணினேன். பட், இன்னிக்கும் கேட்ல ரத்தம் இருக்கு. இனி இந்த விவகாரத்துக்கு நீங்க வந்தாதான் பிரச்சினை தீரும் போலிருக்கு...

    .....

    தேங்க்யூ... ஈஸ்வரமூர்த்தி... செல்லோனில் பேசிவிட்டு அதை மறுபடியும் சட்டைப் பைக்குக் கொடுத்த பிரேம்குமார், காருக்குப் போய் மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து வந்தான்.

    மொதல்ல கையை வாஷ் பண்ணிக்க...

    லயா, பாட்டிலை வாங்கி தன் கை விரல்களில் படிந்திருந்த ரத்தத்தைக் கழுவிக் கொண்டே பிரேம்குமாரை ஒரு புன்னகையோடு பார்த்தாள்.

    இது முயல் ரத்தம் தானா...? நான் பயந்தே போயிட்டேன் சார். அந்த நாடோடிக் கும்பல் எங்கே தங்கியிருக்கு?

    பங்களாவுக்குப் பின்பக்கம்...! பகல் முழுவதும் டென்டுக்குள்ளேயே பசுமாடு மாதிரி படுத்துக் கிடப்பாங்க. ராத்திரி பத்து மணியாயிட்டா போதும். நீள நீளமா குத்தீட்டிகளை எடுத்துக்கிட்டு முயல் வேட்டைக்கு கிளம்பிடு வானுங்க. பத்து பதினைந்து முயல்களாவது மாட்டிக்கும்...

    இந்த விஷயத்தை நீங்க முன்னாடியே போலீசுக்கு கொண்டு போயிருக்கணும் சார்...

    ஏதோ நாடோடிக் கும்பல்... கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போயிடுவாங்கன்னு நினைச்சேன். இப்படி பெர்மனன்டா தங்கிட்டு அட்டூழியம் பண்ணுவாங்கன்னு நினைக்கலை... இந்தக் காலத்துல இரக்கப்படறது கூட தப்பு போலிருக்கு...

    சரியாச் சொன்னீங்க சார்...

    பிரேம்குமார் கேட்டை அகலத் திறந்து வைத்து விட்டு லயாவைப் பார்த்தான்.

    உள்ளே போலாமா? இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வர்றதா சொல்லியிருக்கார். அதுக்குள்ளே நீ பேட்டியை முடிச்சுக்கிட்டு போயிடலாம்...

    தாங்க்யூ சார்...

    இருவரும் காரை நோக்கி நடந்தார்கள்.

    கார் அந்த அகலமான போர்டிகோவுக்குள் போய் நின்று தன் மெல்லிய இன்ஜின் உறுமலை நிறுத்திக் கொண்டது. பிரேம்குமார் கீழே இறங்க, அவனைத் தொடர்ந்து இறங்கிய லயா, பங்களாவின் பரப்பளவைப் பார்த்து மூச்சடைத்துப் போய் சுவாசிக்கத் திணறினாள்.

    ‘இதென்ன வீடா... இல்லை அரண்மனையா?’

    அவளுடைய வியப்பை ரசித்தான் பிரேம்குமார்.

    என்ன லயா! வீட்டைப் பார்த்தா பிரமிப்பா இருக்கா?

    அதே...!

    இது ஒருகாலத்துல ஜமீன்தார்க்கு சொந்தமான பங்களாவா இருந்தது. அதை அப்படியே விலைக்கு வாங்கி ரெனவேஷன் பண்ணியிருக்கேன்...

    இருவரும் போர்டிகோ படிகளில் ஏறினார்கள். லயா தன்னுடைய பார்வையைச் சுழற்றினாள். எல்லாத் திசைகளிலும் டன் கணக்கில் நிசப்தம். மரங்களின் கிளைகள் கூட யாருடைய கட்டளைக்கோ அடிபணிந்து நடந்து கொள்கிற தினுசில் அசைந்தது.

    ச... சார்...

    என்ன லயா?

    வேலைக்காரங்க யாரும்...

    இல்லையேன்னு பார்க்கறியா...? இங்கே வேலைக்கு யாரும் எட்டு மணிக்கு முன்னே வர மாட்டாங்க. சாயந்தரம் ஆறு மணிக்குப் பின்னாடி இருக்க மாட்டாங்க. வேலைக்காரர்களை வீட்டோட தங்க வெச்சுக்கறதுல எனக்கு உடன்பாடு கிடையாது. ட்யூட்டி முடிஞ்ச பின்னாடி அவங்க வீட்ல இருக்கக் கூடாது. இதுதான் என்னோட பாலிசி...

    வெரி இன்ட்ரஸ்டிங் கேரக்டர் சார் நீங்க... உங்க பேட்டி எங்களுடைய ‘சங்கமம்’ பத்திரிகையில் பப்ளிஷ் ஆனால் வெளியே ஒரு நல்ல ‘டாக்’ இருக்கும்...

    கான்ஃபரன்ஸ் ஹால் மாதிரியிருந்த அந்தப் பெரிய வரவேற்பறைக்குள் நுழைந்தார்கள். சென்ட்ரலைஸ்ட் ஏ.சி.யில் உறைந்து போயிருந்தது வரவேற்பறை. லயாவின் ஜாக்கெட் கவர் செய்யாத முதுகுப் பரப்பில் ஒரு குளிர் கோடு போட்டது. சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த கருநீல சோபாக்கள் நேர்த்தியான ‘அப்போல்சரி’ யில் கண்களைப் பறித்தன.

    இங்கே பார்க்கிற ஒவ்வொண்ணும் அழகாயிருக்கு சார்...

    அந்த அழகுக்குப் பின்னாடி இன்னமும் கொஞ்சம் உத்துப் பாரு லயா. என்னோட உழைப்புத் தெரியும்...

    சார்...! இங்கேயே உட்கார்ந்து பேட்டியை ஆரம்பிக்கலாமா?

    கொஞ்சம் பொறு லயா! நான் என்னைக் கொஞ்சம் ‘ரெப்ரஷ்’ பண்ணிக்க வேண்டாமா? ஒரு பதினைஞ்சு நிமிஷம்... ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன்...

    ஓ.கே... சார்... டேக் யுவர் வோன் டயம்... ஐ வில் வெயிட் ஃபார் யூ...

    தேங்க்யூ சொல்லி நகர்ந்த பிரேம்குமார் சட்டென்று நின்றான். காபி சாப்பிடறியா லயா...?

    காபியா...! எப்படி...? வேலைக்காரங்க எட்டு மணிக்குத்தானே வருவாங்க?

    இங்கே வர்றவங்களுக்கு வேலைக்காரங்க காபி தர மாட்டாங்க. அதோ... -சுவரில் ஃபிக்ஸ் செய்து வைத்திருந்த ஒரு பெரிய காபி மேக்கரைக் காட்டினான். பட்டனைத் தட்டி விட்டுட்டு டிஸ்போசல் டம்ளரை நாசிலுக்குக் கீழே காட்டினா போதும். கூர்க் காபிக் கொட்டையில் தயாரான ஃபில்டர் காபி கிடைக்கும். காபியை டேஸ்ட் பண்ணிக்கிட்டு இரு... வந்துடறேன்... பிரேம்குமார் சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறிப் போக, லயா காபி மேக்கரை நோக்கி மெல்ல நடை போட்டாள். டிஸ்போசபிள் அட்டை டம்ளர் ஒன்றை எடுத்துக் கொண்டு பட்டனைத் தட்ட முயன்ற விநாடி...

    அவள் தோளில் மாட்டியிருந்த கைப்பைக் குள்ளிருந்து செல்போன் முனகியது. எடுத்து டிஸ்ப்ளேயில் நம்பர் பார்த்து விட்டு கண்களை மலர்த்தினாள். உதடுகள் புன்சிரிப்பில் பிளந்தது.

    ஹாய் மஹா...

    மஹா...?

    லயாவின் காதலன். முழுப் பெயர் மகாதேவன். சமீபத்தில்தான் சி.ஏ. முடித்து டிகிரி வாங்கிய கையோடு எக்சைஸ் டிபார்ட்மென்டில் வேலை யையும் வாங்கி விட்டவன்.

    மகாதேவன் செல்லின் மறுமுனையில் சிரித்தான்.

    என்ன லயா... வழக்கத்துக்கு விரோதமா செல்லை ஆன் பண்ணி வெச்சிருக்கே..? செல்லை ஆஃப் பண்ணி வெச்சுட்டு எட்டு மணி வரைக்கும் தூங்கறவளாச்சே நீ...? இவ்வளவு அதிகாலையில் உன்னோட ‘ஹாய்’ குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு...?

    சரி! என்ன விஷயம்?

    இன்னிக்கு மத்தியானம் நீ ஃப்ரீயா?

    ஃப்ரீதான்

    அப்படீன்னா இன்னிக்கு மத்தியானம் ரெசிடென்சிக்குப் போய் லஞ்ச் சாப்பிடறோம்...

    என்ன திடீர்னு...?

    நான் வேலைக்குச் சேர்ந்ததுக்காக நீதான் ட்ரீட் கேட்டியே... இன்னிக்கு ட்ரீட் தர்றேன். வந்து கொட்டிக்க...

    ஃபர்ஸ்ட் மன்த் சாலரி வாங்கியதும் ட்ரீட் வெச்சுக்கலாமே... அதுக்குள்ளே என்ன மகா?

    அன்னிக்கும் வெச்சுக்கலாம். அது ரெண்டாவது ட்ரீட்!

    கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டபடி செலவு பண்ண ஆரம்பிச்சுட்டே! உனக்கு ஒரு கடிவாளம் போட்டு வைக்கணும்...

    நீ இன்னிக்கு லஞ்ச் சாப்பிட வரப்போறியா இல்லையா?

    வர்றேன்... வர்றேன்...

    எத்தனை மணிக்கு மீட் பண்றோம்?

    நீயே சொல்லு...

    சரியா பனிரெண்டரை மணி...

    ஓ.கே... ரெசிடென்சி ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருப்பேன். லேட் பண்ணாம வந்துடு...

    நான் சரியா பனிரெண்டு முப்பதுக்கு ரிசப்ஷன்ல இருப்பேன். நீ லேட் பண்ணாம வா... ரெட்டைக் குழந்தை பெத்த நடிகையைப் பேட்டி எடுக்கப் போனதாக அந்த நேரத்துக்கு காரணம் சொன்னாலும் சொல்லுவ! மொதல்ல இந்த ரிப்போர்ட்டர் வேலையை நீ விடணும்...

    வேண்டாம் மகா. நீ கூட சி.ஏ. படிச்சது எனக்குப் பிடிக்கலை. அதுக்காக நான் உன்னைக் காதலிக்காமே இருந்துட்டேனா என்ன...?

    சரி... சரி... சண்டை வேண்டாம். இப்ப நீ எங்கிருந்து பேசிட்டிருக்கே...?

    வீட்டிலிருந்து தான்...

    நான் நம்பலை

    ஏன்?

    நீ வீட்டிலிருந்து பேசிட்டிருந்தின்னா இந்நேரத்துக்குள்ளே ரெண்டு மூணு எலக்ட்ரிக் ட்ரெய்ன் ஓடற சத்தமாவது கேட்டிருக்கும். பட், இதுவரைக்கும் ஒரு சத்தத்தையும் காணோமே...?

    மகா! நிஜமாவே உனக்கு மகா மூளைதான். நான் வீட்ல இருந்து பேசலைங்கறதை கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே.... இந்தா... பிடி துரோணாச்சாரியார் விருது...

    சாவகாசமா வாங்கிக்கறேன்...! மொதல்ல நீ எங்கிருந்து பேசறேன்னு சொல்லு...

    சொல்லட்டுமா...?

    சொல்லு...

    சொர்க்கத்திலிருந்து...

    புரியலையே...

    பனிரெண்டரை மணிக்கு வந்து உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே எல்லாத்தையும் சொல்றேன். இப்ப ஆளை விடு. காபி சாப்பிடணும்... சொல்லி செல்போனை அணைத்து தன் கைப்பைக்குள் போட்டு ஜிப்பை இழுத்து மூடினாள் லயா.

    மாடிப்படிகளில் ஏறி மேலே சென்ற பிரேம்குமார் வராந்தாவுக்குள் இருந்த லிஃப்டுக்குள் நுழைந்து ஒரு பட்டனைத் தொட்டான். அது விர்ரென்று பத்தே விநாடிகளில் மேலேறி நான்காவது மாடிக்குக் கொண்டு போயிற்று. வராந்தாவில் வெளிப்பட்டவன் வேகமாய் நடந்து ஒரு அறைக்கு முன்பாய் நின்றான். கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான்.

    அறுபது

    Enjoying the preview?
    Page 1 of 1