Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athe Nila Athe Kala
Athe Nila Athe Kala
Athe Nila Athe Kala
Ebook157 pages42 minutes

Athe Nila Athe Kala

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Athe Nila Athe Kala

Read more from Rajeshkumar

Related to Athe Nila Athe Kala

Related ebooks

Related categories

Reviews for Athe Nila Athe Kala

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athe Nila Athe Kala - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    தியேட்டரில் படம் முடிந்து மக்களோடு மக்களாக வெளியே வந்தான் இன்பசாகர். இரண்டரை மணி நேர அந்தத் தமிழ் சினிமா அவனுடைய நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு டன் தலைவலியை நிரப்பி வைத்திருந்தது. நேரம் நள்ளிரவு 12.15.

    ‘சே...! என்ன படம் எடுக்கிறாங்க...! பண்ணையார். ஆலமரம்... பஞ்சாயத்து... மேல் ஜாதி... கீழ் ஜாதி, கண்ணில்லாத அம்மா... நொண்டி அப்பா... வேலை கிடைக்காத அண்ணன், கல்யாணமாகாத தங்கச்சி, வில்லன் மகளையே காதலிக்கிற கதாநாயகன்...!’’

    இன்பசாகர் சலித்துக் கொண்டே கார் பார்க்கிங்கிற்கு வந்தான். அவனுடைய மாருதி ஜென்பனியில் நனைந்து ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல் தெரிந்தது.

    காருக்குள் நுழைந்து ட்ரைவிங் இருக்கைக்கு சாய்ந்து. இக்னீஷியனை கனைக்க வைக்க முயன்ற விநாடி இன்பசாகரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் ‘பிபிர்ர்ர்’ என்றது.

    எடுத்தான்.

    ஹலோ...

    மறுமுனையில் அவனுடைய அப்பா... பார்த்தசாரதி.

    இன்பசாகர்...

    அப்பா...

    இப்போ எங்கே இருக்கே...?

    சினிமா தியேட்டர்ல...

    எந்த தியேட்டர்...?

    "ராகம்...’’

    "சரி... நீ... நேரா... நம்ம ஃபேக்டரிக்கு போ... நானும் ஒரு மணி நேரத்துக்குள்ளே அங்கே வந்துடறேன்.’’

    ஏம்ப்பா...? என்ன விஷயம்...?

    "ஃபேக்டரியில் மறுபடியும் லேபர் ப்ராப்ளம். ரெண்டு கோஷ்டியும் மோதிக்கிற நிலைமை உருவாகியிருக்காம். எஃப்.எம் இப்பத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னார்...’’

    இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு... ஃபேக்டரியை ஒரு ஆறுமாசத்துக்கு இழுத்து மூடினாத்தான் புத்தி வரும். நாளையிலிருந்து லாக் - அவுட் பண்ணிடலாம்பா...

    புரியாம பேசாதே இன்பசாகர்...! ஃபேக்டரியைலாக் அவுட் பண்ணினா கவர்ன்மெண்ட் பிரச்னையில் மூக்கை நுழைச்சுடும்... அதுக்கப்புறம். எல்லா பவர்ஸும் கவர்ன்மெண்ட்க்கு போயிடும்... நீயும் நானும் கைகளைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

    "சரி...! இப்ப என்ன ஸ்டெப் எடுக்கலாம்...?’’

    ‘‘நீ மொதல்ல ஃபேக்டரிக்கு வா...! இந்த செக்கண்ட் ஷோ சினிமா பார்க்கிற வழக்கத்தை நீ என்னிக்குத் தான் விடப்போறியோ...?" பார்த்தசாரதி கோபமாய்ப் பொரிந்துவிட்டு ரிஸீவரை வைத்துவிட இன்பசாகர் செல்ஃபோனை அணைத்துவிட்டு காரின் இக்னீஷியனுக்கு உயிர் கொடுத்தான்.

    பீட்ரூட் நிற மாருதிஜென் நகர்ந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்து சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்த ரோட்டின் விஸ்தாரத்துக்கு வந்தது. வரிசையாய் நின்றிருந்த ஆட்டோக்கள் பயணிகளை விழுங்கி நகர்ந்து கொண்டிருந்தன. ரோட்டோர பானிபூரி ஸ்டால் ஒன்று பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஒரு ஹாஸ்பிட்டலின் எமர்ஜென்ஸி வார்டு மாதிரி இயங்கிக் கொண்டிருந்தது.

    இன்பசாகர் காரை செஷன்ஸ் கோர்ட் வளைவில் திருப்பினான்.

    சாலையின் வளைவில் கொட்டியிருந்த இருட்டில் கரைந்து மறைந்திருந்த ஒருவன் கையை அசைத்தபடி வேக வேகமாய் வந்தான்.

    கார் நின்றது.

    இன்பசாகர் எட்டிப் பார்த்து கைலி, வெள்ளை சர்ட் அணிந்த அந்த பரட்டைத் தலையனைப் பார்த்துக் கேட்டான்.

    "என்ன தேசிங்கு...?’’

    ‘‘அயிட்டம் ரெடி ஸார்...! டாக்ஸியில் உட்கார வெச்சிருக்கேன். நீங்க அப்படி இருட்டுல போய் வண்டியை ஹால்ட் பண்ணிக்குங்க. அஞ்சே நிமிஷத்துல் அனுப்பி வைக்கிறேன்...’’

    ‘‘இன்னிக்கு வேண்டாம் தேசிங்கு...’’

    "ஏன் ஸார்...?’’

    ‘‘வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு...! செல்ஃபோனை ஆஃப் பண்ண மறந்துட்டேன். அப்பா பிடிச்சுட்டார். ஃபேக்டரியில் ஒரு பிரச்னை. அவசரமா புறப்பட்டு போய்க்கிட்டு இருக்கேன்...’’

    "என்ன ஸார்... இப்படி பண்ணிட்டீங்க...? உங்களுக்காக நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாலக்காடு போய் வெய்யில்ல அலைஞ்சு பார்ட்டியை தேடிக் கண்டுபிடிச்சு கன்வின்ஸ் பண்ணி... பஸ்ல வந்தா பிரச்னைன்னு சொல்லி ஒரு டாக்ஸியை வெச்சுக்கிட்டு...’’

    இன்பசாகர் கையமர்த்தினான்.

    பேசாதே...! பணம் எவ்வளவு செலவு பண்ணியிருக்கே? சொல்லு...!

    "ரெண்டாயிரம்...’’

    ‘‘வாங்கிக்க..." சொன்ன இன்பசாகர் தன் பர்ஸைப் பிரித்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்ட தேசிங்கு முகமெல்லாம் பல்லானான்.

    ‘‘செம பார்ட்டி ஸார்...! மிஸ் பண்றீங்களே...?’’

    ‘‘அடுத்த சண்டே பார்த்துக்கலாம்...’’

    இன்பசாகர் காரை நகர்த்தி சர்க்யூட் ஹவுஸ் ரோட்டில் வேகம் எடுத்தான்."

    ‘செல்ஃபோனை ஆஃப் பண்ணி வைத்து இருக்க வேண்டும்...!’

    ‘அப்பா இப்படி கூப்பிடுவார் என்று யாருக்குத் தெரியும்...?’

    ‘ரெண்டாயிரம் ரூபாய் தண்டம்...!’

    மூளையை ராவிக் கொண்டிருந்த யோசனைகளுடன் காரை விரட்டிக் கொண்டிருந்த இன்பசாகர் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் உணர்வு தட்டவே சட்டென்று திரும்பிப் பார்க்க முயன்றான். பின்பக்கம் இருந்து குரல் கேட்டது.

    ஆண்குரல்.

    ‘‘திரும்பாதே இன்பசாகர்...! காரை அப்படியே ஓட்டிக்கிட்டு இரு...’’ இன்பசாகரின் குரல் திக்கியது.

    யா... யார்... நீ...?

    உனக்கு இது தேவையில்லாத கேள்வி. இப்போதைக்கு உன்னோட வேலை காரை நான் சொன்னபடி ஓட்டணும். அவ்வளவுதான். என் பேச்சை எந்த விநாடி நீ கேட்கலையோ, அதே விநாடி இந்த துப்பாக்கியில் இருக்கிற தோட்டா உன்பின் மண்டையில் பாய்ஞ்சுடும். ரத்தமும் மூளையும் ஒண்ணா வெளியே வந்து விழணும்ன்னு ஆசைப்பட்டா முரண்டு பண்ணு...

    உ... உனக்கு என்ன வேணும்...?

    ‘‘இது வழிப்பறிக் கொள்ளை கிடையாது. எனக்கு வேண்டியது பணம் இல்லை..."

    "பி... பின்னே...?’’

    ‘‘உன்னால எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கு...’’

    ‘‘சொல்லு..."

    "அதைக் கார்ல போகும் போது சொல்ல முடியாது.

    என்னோட இடத்துக்குப் போனதும் சொல்றேன்..."

    எங்கே போகணும்...?

    ‘‘போய்க்கிட்டே இரு... சொல்றேன்...’’

    கார் அவிநாசி ரோட்டின் அகலத்துக்குள் பிரவேசித்தது. நள்ளிரவுச் சாலை துடைத்து வைத்த மாதிரி இருக்க - கார் சீறியது. குளிர் காற்று உள்ளே நுழைந்து அலம்பியது.

    குரல் பேசியது.

    "இவன் எப்படி காருக்குள்ளே வந்தான்னு உனக்கு ஆச்சர்யமாயிருக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1