Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanamal Pona Aakayam
Kanamal Pona Aakayam
Kanamal Pona Aakayam
Ebook295 pages1 hour

Kanamal Pona Aakayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kanamal Pona Aakayam

Read more from Rajeshkumar

Related to Kanamal Pona Aakayam

Related ebooks

Related categories

Reviews for Kanamal Pona Aakayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanamal Pona Aakayam - Rajeshkumar

    25

    1

    அழகான அந்திவான நிறத்தில் இருந்த ரம்யா ஆறடி உயரத்தில் அம்சமாய் இருந்த கணவன் கோபிநாத்தை செல்லமாய் கோபித்துக் கொண்டாள். இடம் படுக்கை அறை. நேரம் 10 .40 மணி. அறைக்குள் மெலிதான பச்சை நிற ஜீரோ வாட்ஸ் விளக்கின் கசியல்.

    என்னங்க? என்னோட பர்த்டேயை சிம்பிளா கொண்டாடினா போதாதா...? பணத்தை எதுக்காக அநாவசியமா செலவழிக்கணும்?

    ஐஸ்க்ரீம் உடம்போடு தளதளத்த ரம்யாவை — வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டே கோபிநாத் புன்னகைத்தான்.

    என்னோட அழகான பொண்டாட்டியோட இருபத்தி மூணாவது பிறந்தநாளை அமர்க்களமா கொண்டாடணும்னு எனக்கு ஆசை இருக்காதா...? நம்ம கல்யாணம் முடிந்ததுமே வர்ற முதல் பிறந்தநாள் இது. ஹோட்டல் 'மௌரியா'வில் பர்த்டே பார்ட்டியை அரேஞ்ச் பண்ணப் போறேன்.

    ரொம்ப செலவாகுமே?

    கேட்டுப் பார்த்தேன்.

    எவ்வளவு சார்ஜ்?

    பர் ஹெட் ஹண்ட்ரேட் ரூபீஸ்.

    எவ்வளவு பேர்களை கூப்பிடப் போறோம்?

    சுமார் நூறு பேர்.

    அய்யோடா... பத்தாயிரம் ருபாய் பணால்.

    ஆகட்டும்! ரம்யாவின் 'மெத்' கன்னத்தை செல்லமாய்த் தட்டினான் கோபிநாத்.

    சரி... யார் யாரை கூப்பிடப் போறீங்க?

    நம்ம கம்பெனி கீ போஸ்ட்களில் மொத்தம் பத்து பேர் இருக்காங்க. அவங்களை தம்பதி சமேதரா இன்வைட் பண்றோம்.

    ஓகே. அப்புறம்?

    உன்னோட லேடீஸ் கிளப் பட்டாளம்.

    தென்?

    என்னோட இன்னர் சர்க்கிள் ஃபிரண்ட்ஸ்.

    நூறு பேர்க்கு மேல தாண்டும் போலிருக்கே...?

    மொதல்ல லிஸ்ட்டைப் போடுவோம்... அப்புறம் சென்ஸார் பண்ணுவோம். முக்கியமான நூறு பேரை பொறுக்குவோம்...

    என்னங்க... — கோபிநாத்தின் வெற்று மார்பு முடிகளை தன் நெயில்பாலிஷ் பூசப்பட்ட நீளமான விரல்களால் கோதிக்கொண்டே கூப்பிட்டாள் ரம்யா.

    சொல்லு...

    நா... ஒண்ணு கேட்டா கோபிச்சுக்க மாட்டிங்களே?

    மாட்டேன்... சொல்லு...

    எம்மேல எப்பவும்... இதே மாதிரியான பிரியத்தோடுதான் இருப்பீங்களா?

    டோண்ட் பி ரப்பீஷ் ... நீ அறுபது வயசு கிழவியானாலும் சரி... நான் உம்மேல வச்சிருக்கிற பிரியம் என்னைக்குமே குறையாது. மாறாது.

    பார்க்கலாமா?

    லாம்... சொல்லிக்கொண்டே ரம்யாவின் தோள்களை பற்றி தன் பக்கமாய் அவளை இழுக்க முயன்றான் கோபிநாத்.

    அதே விநாடி —

    பக்கத்து டீபாயின் மேலிருந்த டெலிபோன் தன் தொண்டையைத் திறந்து கதற ஆரம்பித்தது. ரம்யா புரண்டு படுத்து கையை நீட்டி ரிஸீவரை எடுத்தாள். காது மடலை உரச விட்டாள்.

    ஹலோ...

    .....

    லைன்ல இருங்க. அவரை பேசச் சொல்றேன். — சொல்லிவிட்டு ரிஸீவரை கோபிநாத்திடம் நீட்டினாள் ரம்யா.

    போன்ல யார் ரம்யா?

    உங்க கம்பெனி எப்.எம். உங்ககிட்டே என்னமோ அவசரமா பேசணுமாம்...

    ரிஸீவரை எரிச்சலோடு வாங்கி காதுக்குக் கொடுத்தான் கோபிநாத்.

    ஹலோ?

    ஸார்... நான் எப்.எம். பேசறேன்.

    சொல்லுங்க...

    பாம்பேலிருந்து ஜீவன்லால் டெலக்ஸ் வந்தது ஸார்...

    என்ன விஷயம்?

    ராமெட்டிரீயல்ஸ் வர்ற வாரத்திலிருந்து ஹண்ட்ரெட் பர்சென்ட் ரெய்ஸ் ஆகப் போகிறதாம். தேவையான ஆர்டருக்கு டெலக்ஸ் குடுக்கச் சொன்னாங்க.

    இதையெல்லாம் எதுக்காக என்கிட்டே போன் பண்ணிச் சொல்றீங்க? பர்ச்சேஸ் மானேஜர்னு ஒருத்தர் எதுக்காக நம்ம கம்பெனியில் இருக்கார்..? அவர்க்கு போன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே...?

    அவர் வீட்டுக்கு போன் பண்ணி பார்த்தேன் ஸார்... அவர் வீட்லே இல்லை...

    அவர் வீட்ல இல்லைன்னா உடனே எனக்கு போன் பண்ணிடறதா? ராத்திரி நேரங்கள்ல ஆபீஸ் விஷயமா என்கூட டெலிபோனிலோ, நேரிலோ தொடர்பு கொள்ளக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?

    ஸாரி... ஸார்...

    வாட் நான்சென்ஸ் ஸாரி...! ரிஸீவரை ஏகப்பட்ட எரிச்சலோடு சாத்தினான் கோபிநாத். கோபத்தில் முகம் குங்குமமாய் ஜ்வலித்தது.

    ரம்யா புன்னகைத்தாள். அடேங்கப்பா... என்ன கோபம்...? எப்.எம். ஆபீஸ் விஷயத்தைத்தானே பேசினார். அவரோட சொந்த விஷயத்தையா பேசினார்...?

    எதுவா இருந்தா என்ன? மனுஷனுக்கு தூங்கப் போற நேரத்திலாவது நிம்மதி வேண்டாம்...? பொண்டாட்டியை கொஞ்சப் போற நேரத்துல போன் கால் வந்தா... எரிச்சல் வருமா வராதா? இனிமே ரிஸீவரை எடுத்து கீழே வெச்சுடப் போறேன்...

    உங்களுக்கு பொண்டாட்டி பக்தி முக்திப்போச்சு...

    இருக்கட்டுமே லைட்டை அணைத்த கையோடு — ரம்யாவையும் அனைத்துக் கொண்டு படுக்கையில் உருண்டான் கோபிநாத். ரம்யா அவனோடு இழைந்து கொண்டே கேட்டாள். சரி... பர்த்டே ப்ரோக்ராம் எப்படி...?

    பர்த்டேக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு... நாளைக்கு கார்டு பிரிண்ட் பண்ணத் தர்றேன். ரெண்டு நாள்ல டிஸ்ட்ரிபியூஷனை முடிச்சிடலாம்...

    எனக்கு பர்த்டே பிரசன்டேஷன் என்ன தரப் போறீங்க?

    உனக்கு என்ன வேணும்?

    எது கேட்டாலும் வாங்கி குடுப்பீங்களா?

    ம்...

    கட்டாயம் வாங்கி குடுப்பீங்களா?

    ம்...

    எனக்கு பதினாலு மாடி எல்.ஐ.சி. கட்டிடம் வேணும். வாங்கித் தர்றீங்களா?

    "ப்பூ... அவ்வளவுதானா... நாளைக்கே வீட்டு புரோக்கர் யாரையாவது எல்.ஐ.சி. சேர்மன்கிட்டே அனுப்பி விலை கேட்டுட்டு வரச் சொல்றேன் கோபிநாத் சிரிக்காமல் சொல்ல — ரம்யா தலையணையை வயிற்றுக்கு கட்டிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

    ஹோட்டல் மௌரியா. இரவு எட்டு மணி.

    காம்பௌண்ட் சுவர் எதிரே கலர் கொடிகள் தாழப் பறந்து கொண்டிருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங் பூராவும் மாறுதல்கள், டால்பின்கள், டாட்ஸன்கள், இரண்டாயிரம் ஸ்டாண்டர்டுகள்.

    உள்ளே அபிநயா கான்பரன்ஸ்' ஹால் வாசலில் கோபிநாத் ஃபுல்சூட்டிலும், ரம்யா பட்டுபுடவையிலும் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

    வாங்க ராமகிருஷ்ணன் வாங்க... நீங்க மட்டும் வர்றீங்க... உங்கள் ஒய்ஃபை கூட்டிட்டு வரலையா...? கோபிநாத் கேட்க, அந்த ஐம்பது வயது ராமகிருஷ்ணன் கடைவாயில் கட்டியிருந்த தங்கப்பல் தெரிய சிரித்தார்.

    அவ எதுக்கு அனாவசியமாய் கோபிநாத்? கழுதைக்குப் ப்ளட்பிரஷர் . நாலடி சேர்ந்த மாதிரி நடக்க முடியாது. அப்படியே சமாளிச்சு நடந்து வந்தாலும் — கழுதைக்கு சுகர் கம்ப்ளையண்ட்... துளி இனிப்பு வாயில வெக்கமுடியாது. எதுக்கும் உபயோகமில்லாத அந்தக் கழுதையை எதுக்காக கூட்டிட்டு வரணும்?

    வாஸ்தவந்தான்... உள்ளே போங்க.

    'பார்ட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம்?"

    சரியா எட்டரை மணிக்கு...

    வெஜ்ஜா... நான்வெஜ்ஜா...?

    ரெண்டுமே இருக்கு...

    குட்.' ராமகிருஷ்ணன் உள்ளே போனார். கோபிநாத் ரம்யாவிடம் திரும்பினான். ரம்யா...! நீ வர்றவங்களை வரவேற்று உள்ளே அனுப்பிவை. நான் பஃப்பே பார்ட்டி ஏற்பாடுகளை பார்த்துட்டு வர்றேன். ஐஸ்க்ரீம்ல ரெண்டு அயிட்டம் கொண்டு வரச் சொல்லியிருந்தேன்..."

    ஏற்பாடுகளை கவனிச்சுட்டு வாங்க... நான் இங்கேயே இருக்கேன்.

    ரம்யா சொல்ல —

    கோபிநாத் நகர்ந்தான்.

    வாங்க மிஸஸ் லலிதா அசோகன்... ஒரு கூடை கொண்டைக்காரியையும் — அவளுடைய கெச்சலான புருஷனையும் வரவேற்று உள்ளே அனுப்பி விட்டு, முகத்தில் அரும்பின வியர்வையில் ரோஸ் பூச்சு அழிந்து விடாமலிருக்க, கையிலிருந்த கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டு நின்றாள். அதே வினாடி,அம்மா...

    குரல் கேட்டுத் திரும்பினாள். ஒரு பேரர் நின்றிருந்தான்.

    என்ன...?

    உங்களை கேட்டு போன் வந்திருக்குமா...

    என்னைக் கேட்டா...?

    ஆமாம்மா...

    போன் எங்கேயிருக்கு?

    ரிஸப்ஷன்ல...

    வர்றேன்... போ, அவனை அனுப்பிவிட்டு ஹாலில் கோபிநாத்தை தேடினாள். அவன் பஃப்பே பார்ட்டி அயிட்டம்களில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்க — ரம்யா தனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கூப்பிட்டாள்.

    மிஸஸ் சாருமதி... சாருமதி...

    அந்த சாருமதி அவளை ஏறிட்டாள். என்ன ரம்யா...?

    ரம்யா சொன்னாள். எனக்கு போன் வந்திருக்காம்... நான் போயிட்டு வந்துடறேன். என்னோட ஹஸ்பெண்ட் வந்து கேட்டார்னா சொல்லிடு...

    ஷ்யூர்... ஷ்யூர் ... நீ போய்ட்டு வா... சாருமதி தலையை ஆட்ட, ரம்யா புடவைத் தலைப்பை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு — லிப்டை நோக்கி வேகமாய் போனாள்.

    பத்து நிமிஷம் கழித்து வரவேற்பு வாசலுக்கு வந்த கோபிநாத், ரம்யாவைக் காணாமல் முகத்தில் குழப்பம் காட்டினான். யாருடனோ பேசிக்கொண்டிருந்த சாருமதி குரல் கொடுத்தாள்.

    மிஸ்டர் கோபிநாத்... யுவர் ஒய்ப் ஹேஸ் கான் டூ அட்டெண்ட் த போன்... உங்ககிட்டே சொல்லச் சொன்னாள்.

    ரம்யாவுக்கு டெலிபோனா? யாராக இருக்கும்?"

    ஆச்சர்யப்பட்டுக் கொண்டே, வந்தவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான் கோபிநாத்.

    நிமிஷங்கள் நழுவியது. நேரம் 8.15 .

    8.20 .

    8.25 .

    'டெலிபோனில் இவ்வளவு நேரமா பேசிக் கொண்டிருக்கிறாள் ரம்யா...?'

    கோபிநாத்த் மனசுக்குள் லேசாய் கோபம் கனன்றது. நேரம் எட்டரையைத் தொட்டபோது, பொறுமையை இழந்து லிப்டை நோக்கிப் போனான். லிப்டில் ஊஞ்சலாடி இரண்டு ஃப்ளோர்களைக் கடந்து ரிசப்ஷன் ஹாலைத் தொட்டான். பார்வையைத் துரத்தினான்.

    ரிசப்ஷன் கௌண்டரில் ரம்யாவைக் காணோம்.வேகமாய் கௌண்டரை நெருங்கி டை அணிந்த லெட்ஜ்ரைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை கேட்டான்.

    என்னோட ஒய்ப் மிஸஸ் ரம்யா போன் அட்டெண்ட் பண்ண வந்தாளா?

    அவன் வரலையே! என்றான்.

    2

    கோபிநாத் லேசாய் வியர்த்தான். கண்களில் சின்னதாய் ஒரு திடுக்கிடல் காண்பித்து, மறுபடியும் அந்த ரிசப்ஷனிஸ்ட் இளைஞனிடம் கேட்டான்.

    அரை மணி நேரத்துக்கு முந்தியே என்னோட மிஸஸ் போன் பண்ண வந்தாளே...?

    ஸாரி டு சே திஸ் ஸார்... உங்க மிஸஸைக் கேட்டு ஒரு போன்கால் வந்தது உண்மை. இண்டர்காம் சர்வீஸில் கொஞ்சம் ஃபால்ட் இருந்ததினாலே பேரரை அனுப்பி... அவங்களை கூட்டிட்டு வரச் சொன்னோம்... அவங்களும் வரலை, போன்காலும் கட்டாயிடுச்சு...

    எந்த பேரரை அனுப்பினீங்க?

    ஒன்மினிட் என்று பார்வையை உயர்த்தி அந்த ரிசப்ஷன் ஹாலை பார்வையிட்ட இளைஞன், கொஞ்சம் தொலைவில் ஒரு கண்ணாடி ஷோகேஸ் அருகே நின்றிருந்த பேரரை கையசைத்துக் கூப்பிட்டான். பேரர் வேக வேகமாய் வந்து — கௌண்டரை நெருங்க, அந்த இளைஞன் கேட்டான். மாதவா! மிஸஸ் ரம்யாவுக்கு போன் வந்த விபரத்தைச் சொன்னது நீதானே...?

    ஆமா... ஸார்...

    அவங்க என்ன சொன்னாங்க?

    வர்றேன், போன்னு சொன்னாங்க...வந்துட்டேன்...

    ரம்யா போன் பண்ண வந்ததை நீ பார்த்தியா?

    'பார்க்கலை ஸார்."

    ரிசப்ஷனிஸ்ட் கோபிநாத்தை ஏறிட்டான்.

    உங்க மிஸஸ் டாய்லெட்டுக்கு போயிருக்கலாம்... வெயிட் பண்ணிப் பாருங்க ஸார்... நத்திங் டு வொர் ரி ...

    கோபிநாத் மறுபடியும் பார்ட்டி நடக்கிற ஹாலுக்கு வந்தான். ஹாலில் பரவியிருந்த கும்பலுக்கு மத்தியில் ரம்யாவைத் தேடினான்.

    அவளைக் காணோம்!

    எங்கே போனாள்?

    என்ன மிஸ்டர் கோபிநாத்...? பார்ட்டியை எப்போ ஆரம்பிக்கப் போறதா உத்தேசம்? — கும்பலில் யாரோ கிண்டலாய்க் கேட்டார்கள்.

    எக்ஸ்க்யூஸ்மி... ரம்யாவை காணோம்... அவளைத்தான் தேடிட்டிருக்கேன்...

    எ... என்னது ரம்யவைக் காணோமா?

    கும்பலில் சலசலப்பு பரவ, சாருமதி கோபிநாத்தை நெருங்கினாள். "ரம்யாதான் போன் பண்ணப்

    Enjoying the preview?
    Page 1 of 1