Poruthathu Pothum Vivek
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Poruthathu Pothum Vivek
Related ebooks
Kutramum Katru Mara Rating: 4 out of 5 stars4/5Nilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsManjal Diary Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Thalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Nirangal Iranthana Rating: 2 out of 5 stars2/5Thik… Thik… Thilaka Rating: 5 out of 5 stars5/5Aduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5Vida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsAayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Sindhu Ratham Sindhu Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings01.01.2000, Muthal Nimisham Rating: 5 out of 5 stars5/5Dinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathil Oru Vaanavil Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Bombaykku Pathavathu Mileil... Rating: 1 out of 5 stars1/5Thapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Sheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsLast Bullet Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Vidaikidaikkum Rating: 4 out of 5 stars4/5Iranthu Kidantha Thendral! Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Poruthathu Pothum Vivek
1 rating0 reviews
Book preview
Poruthathu Pothum Vivek - Rajeshkumar
ராஜேஷ்குமார்
விஷ்ணுவின் செல்ஃபோன் இன்-பாக்ஸிலிருந்து:
பாகிஸ்தானில் யாரும் பாதுகாப்பாய் இருக்கமுடியாது (ஒசோமா பின்லேடன் உட்பட). ஆனால் இந்தியாவில் எல்லோருமே பாதுகாப்பாய் இருக்கலாம் (அஜ்மல் கசாப் உட்பட). வாழ்க இந்தியா!
1
விவேக் ஆஹா!
என்றான்.
மூணார் செல்லும் மலைப் பாதையில் கார் ஒரு ஏவுகணையாய் விரைந்து கொண்டிருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரூபலா, விவேக்கின் தோளை இடித்தாள். முகத்தில் லேசாய் கோபம்.
என்ன ஆஹா!
எந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினாலும் கண்ணுக்குள்ளே ஐஸ் வாட்டர் பாய்ஞ்ச மாதிரி இருக்கு.... ரூபி..! இவ்வளவு தேயிலைத் தோட்டங்களை நாம எந்த ஹில் ஸ்டேஷனிலும் பார்க்க முடியாது! பாரேன்...! பச்சை பெயிண்ட் அடிச்ச மாதிரி என்ன ஒரு ரம்யமான நேச்சுரல் போர்ட்ரெய்ட்! பார்த்துட்டே இருக்கலாம். போலிருக்கே!
எனக்கு பிடிக்கலை.
என்ன பிடிக்கலை?
மூணார் வந்ததே பிடிக்கலை... இதுக்குப் பதிலாய் ஒரு ஊட்டியோ கொடைக்கானலோ போயிருக்கலாம்....
வருஷாவருஷம் ஊட்டியோ இல்லைன்னா கொடைக்கானலோதான் போறோம். இந்த தடவை ஒரு மாறுதலாய் இருக்கட்டுமேன்னுதான் ஊட்டியையும் கொடைக்கானலையும் மறந்துட்டு மூணாருக்கு வந்து இருக்கோம்.... என்ஜாய் பண்ணு ரூபி...!
மூணாரில பார்க்க ஒண்ணுமே இல்லைன்னு விஷ்ணு சொன்னான்.
அவன் சொன்னா நீ நம்பிடறதா...? மூணார் எந்த ஸ்டேட்ல இருக்குன்னு கேட்டுப்பாரு... அவன் பதில் சொல்ல முடியாமே முழிப்பான். மூணாரில் பார்க்க எவ்வளவோ இடம் இருக்கு. ராஜ்மலா, எலிபெண்ட் ரெய்ட், மாட்டுப்பட்டி டேம், அப்புறம் நேஷ்னல் பார்க், எக்கோ பாய்ண்ட்.
ஊட்டி மாதிரி பொட்டானிகல் கார்டன் இருக்குமா?
அப்படியெல்லாம் இருக்காது....
கொடைக்கானல் மாதிரி லேக்...?
இதோ பார் ரூபி...! ஒரு ஊர் மாதிரியே இன்னொரு ஊர் இருந்தா அதுல என்ன த்ரில் இருக்கு...? மூணார் சம்திங் டிபரண்ட்... நீ வந்து பாரு... உனக்கே தெரியும்...
மூணார் போகணும்ன்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?
போனவாரம் டூரிஸம் வெப்சைட் ஒண்ணைப் பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு போட்டோகிராபியையும் பார்க்க பார்க்க எனக்குள்ளே பிரமிப்பு. ‘அடடா... இப்படியொரு இடத்தை இன்னமும் பார்க்காமே இருக்கோமே’ன்னு மனசுக்குள்ளே ஒரே உறுத்தல். உன்னைக் கேட்காமலேயே ‘ஆன் லைன்’ல ரூம் புக் பண்ணிட்டேன்.
நாம எந்த ஹோட்டல்ல தங்கப் போறோம்?
ஹோட்டல் டீப் ப்ளு ஸ்கை... த்ரீ ஸ்டார் ஹோட்டல். ஸ்பைன் ட்ரீ ஃபாரஸ்ட்டுக்குள்ளே இருக்கு.... ப்யூட்டிஃபுல் ஸ்பாட்...
போய்ப் பார்த்தாத்தானே தெரியும்?
பார்க்கத்தானே போறே?
விவேக் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய செல்ஃபோன் அழைத்தது.
எடுத்து யார்ன்னு பாரு ரூபி..?
விவேக்கின் சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து - அழைப்பது யார் என்று பார்த்தாள் ரூபலா.
விஷ்ணு.
என்னங்க.... கூப்பிடறது யார் தெரியுமா...? தென்னாட்டு ரோமியோ.
என்னான்னு கேளு...
ரூபலா செல்ஃபோனை காதுக்கு ஒற்றினாள். சொல்லு விஷ்ணு...! உன்னோட பாஸ் காரை ஓட்டிகிட்டு இருக்கார். என்ன விஷயம்?
மேடம்... மூணார் போய் சேர்ந்துட்டீங்களா?
போய்கிட்டே இருக்கோம்.....
காட்ரோடு எப்படியிருக்கு மேடம்?
உன்னோட பாஸ்தான் ரசிச்சுட்டே வர்றார். எனக்கு சகிக்கலை.... க்ளைமேட்டும் அவ்வளவு ப்ளஸண்டா இல்லை. வெய்யில் மெட்ராஸ் மாதிரி இருக்கு.... ராத்திரியில் தான் குளிர் இருக்குமாம். கொடுமையாய் இருக்கு.... நீ சொன்னது சரிதான்!
நான்தான் மொதலிலேயே சொன்னேனே மேடம் மூணார் உங்களுக்கு பிடிக்காதுன்னு! நீங்கதான் கேட்கலை. பாஸ்கூட பிடிவாதமாய் புறப்பட்டு வந்துட்டீங்க. வழியில யானையை பார்த்தீங்களா மேடம்?
ஒரு பூனையைக்கூட பார்க்கலை. யானையைப் பார்க்கணும்ன்னா ஏன் மூணார்க்கு வர்றாங்கன்னு தெரியலை. ஏதாவது ஒரு ஜூவுக்கு போனாலே போதுமே!
ரொம்பவும் கோபமாய் இருக்கீங்க போலிருக்கு மேடம்!
பின்னே என்ன...? நான் எதிர்பார்த்த மூணார் வேற. இப்போ பார்த்துகிட்டு இருக்கிற மூணார் வேற.
மேடம்...! மூணார் போற வழிதான் இப்படியிருக்கும். மேலே போய்ப் பாருங்க.... குலுமணாலி மாதிரி இருக்கும்
போய்ப்பார்த்தாத்தானே அந்த லட்சணம் தெரியும்? சரி இப்ப எதுக்காக நீ போன் பண்ணினே?
பாஸ் கிட்டே கொஞ்சம் பேசணும் மேடம்.
என்ன பேசணும்?
ஸாரி மேடம். இது டிபார்ட்மெண்ட் மேட்டர். வெளியே யார்க்கும் தெரியக்கூடாது... தெரிஞ்சா மன்மோகன் சிங்குக்கு கோபம் வந்துடும்.
ரூபலா தன் கையில் இருந்த செல்போனை விவேக்கிடம் நீட்டினாள். ஏதோ டிபார்ட்மெண்ட் மேட்டராம்.
விவேக் காரை மலைப்பாதையின் ஓரம் ஒரு தேயிலைத் தோட்டத்துக்குப் பக்கத்தில் நிறுத்தினான்; பேசினான்.
சொல்லு விஷ்ணு!
என்ன பாஸ்...! மேடம் சூடாய் இருக்காங்க போலிருக்கு.
மேலே போனதும் சூடு ஆறிடும்... நீ விஷயத்துக்கு வா. ஏபிசிடி படிச்சியா...?
படிச்சேன் பாஸ்.
ஏதாவது புரியுதா?
புரியலையே...
நான் வர்றதுக்குள்ளே ஒழுங்கா படிச்சு வைய்யி.
படிக்கிறதுக்கு ரொம்பவும் கஷ்டமாய் இருக்கு பாஸ்.
கஷ்டம்தான்... வேற வழியில்லை. அந்த நாலு எழுத்தைப் படிச்சாத்தான் மத்த எழுத்துக்களையும் படிக்க முடியும்.
ட்ரை பண்றேன் பாஸ்
மறுமுனையில் விஷ்ணு செல்ஃபோனை அணைத்துவிட - விவேக் தன் செல்ஃபோனையும் மௌனமாக்கினான்.
ரூபலா முறைத்தாள்.
விஷ்ணு எப்போ எல்.கே.ஜி.யில் சேர்ந்தான்?
டென்ஷன் ஆகாதே ரூபி.... இது டிபார்ட்மெண்ட் மேட்டர்.
டிபார்ட்மெண்ட் சம்பந்தமான எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இருக்கக்கூடாதுன்னுதானே நீங்களும் நானும் மூணார் புறப்பட்டு வந்தோம்.
ஆமா....
இப்ப எதுக்கு அந்த வால் இல்லாத ஜந்து உங்களுக்கு ஃபோன் பண்ணி டிபார்ட்மெண்ட் மேட்டர் பத்தி பேசணும்...?
அது ஒரு இம்பார்ட்டண்ட் மேட்டர் ரூபி...
அதை அந்த ஜந்துவே ஹேண்டில் பண்ணட்டும்.நாம மூணாரிலிருந்து திரும்பி சென்னை போகிற வரைக்கும் உங்க செல்போனும் சரி, என்னோட செல்போனும் சரி ‘ஸ்விட்ச் ஆஃப்’பில்தான் இருக்கும். கொண்டாங்க போனை.
ரூபலா விவேக்கிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டாள்.
ரூபி... ப்ளீஸ்.
நோ... இன்னும் ஒரு வார காலத்துக்கு உங்க செல்ஃபோன் ஊமை. என்னோட செல்போன் மௌன விரதம்.
ரூபி! ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது எனக்கு பர்மிஷன் கொடு.
ஒரு நிமிஷம் கூட தரமாட்டேன். மூணாரில் இருக்கப் போகிற ஏழு நாட்களும் நீங்க என்கிட்டே மட்டும்தான் பேசணும். சிரிக்கணும்.
விஷ்ணு தவிச்சு போயிடுவான்.
அவனாவது.... தவிச்சு போறதாவது...? பிபாசா பாசுவையும் மல்லிகா ஷெராவத்தையும் ‘ஹாட் வெப்சைட்’ல பார்த்து பார்த்து புண்ணியத்தை தேடிக்குவான்... நீங்க மொதல்ல காரை எடுங்க. மூணார் போய் சேர்ந்ததும் மொதல்ல சூடாய் ஒரு கப் காப்பி சாப்பிடணும்.
விவேக் புன்னகைத்தான்.
ரூபி! உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம்.
என்ன...?
"நாம இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே மூணார் போய் ஹோட்டல் சேர்ந்துடுவோம். ஹோட்டலுக்குப் போன அடுத்த நிமிஷமே நீ என்னோட செல்போனை எனக்குத்