En Priya Preethikku
()
About this ebook
ஆத்மார்த்த அன்போடு அநாதை ஆசிரமம் நடத்தி வரும் இளம்பெண் மீது, அளவு கடந்த காதல்கொள்கிறான், கதாநாயகன். அவனது அன்பில் பூரித்துப் போகிறாள் கதாநாயகி.
இவர்கள் இருவரின் காதலைப் பிரிக்க... ஆதரவற்றோர் ஆசிரமத்தை பலிகடாவாக்க காய் நகர்த்துகிறார் பெண்ணின் தந்தை.
'காதலா... சேவையா?' என்ற போராட்டத்தில் இளம்ஜோடி அதிரடி முடிவு எடுக்க... அது எதிர்பாராத திருப்பத்தை உருவாக்குகிறது.
இந்த நாவல் நிச்சயம் உங்களைக் கவரும். படியுங்கள்...
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Arjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Naankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5
Related to En Priya Preethikku
Related ebooks
Pencil Meesai Rating: 5 out of 5 stars5/5En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsPuthir Thottam Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Iravugal Kanavukkaga... Rating: 5 out of 5 stars5/5Mannikka Mudiyatha Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVellaikodi Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Panthaya Paavai Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5Mannikkavum Veru Vazhi Illai Rating: 5 out of 5 stars5/5Kolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Bharath Style Rating: 0 out of 5 stars0 ratingsNaankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Oru Raja Raniyidam Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malare... Rajakumari Rating: 0 out of 5 stars0 ratingsThats All Your Honour... Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Thudippu Rating: 5 out of 5 stars5/5Thuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Wellington Vibareetham Rating: 5 out of 5 stars5/5Suseelavukku Oru Salute Rating: 0 out of 5 stars0 ratingsWhisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalargal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5
Reviews for En Priya Preethikku
0 ratings0 reviews
Book preview
En Priya Preethikku - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
என் பிரிய பிரீத்திக்கு
En Priya Preethikku
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
முன்னுரை
ஆத்மார்த்த அன்போடு அநாதை ஆசிரமம் நடத்தி வரும் இளம்பெண் மீது, அளவு கடந்த காதல்கொள்கிறான், கதாநாயகன். அவனது அன்பில் பூரித்துப் போகிறாள் கதாநாயகி.
இவர்கள் இருவரின் காதலைப் பிரிக்க... ஆதரவற்றோர் ஆசிரமத்தை பலிகடாவாக்க காய் நகர்த்துகிறார் பெண்ணின் தந்தை.
'காதலா... சேவையா?' என்ற போராட்டத்தில் இளம்ஜோடி அதிரடி முடிவு எடுக்க... அது எதிர்பாராத திருப்பத்தை உருவாக்குகிறது.
இந்த நாவல் நிச்சயம் உங்களைக் கவரும். படியுங்கள்... உங்கள் விமர்சனங்களை அனுப்புங்கள்.
இப்படிக்கு,
பட்டுக்கோட்டை பிரபாகர்
1
ஊட்டியின் மலர்க் கண்காட்சியில் விதவிதமான பூக்களைப் பார்க்கும்போது உள்ளத்தில் உற்சாகம் பீய்ச்சியடிக்கும்.
மெனக்கெட்டு, செலவழித்து ஊட்டிக்குப் போகாமல்...அதே உற்சாகத்தை அடைய ஒரு வழி இருக்கிறது. அது...
என் பிரீத்தியை ஒரு முறைப் பார்த்தாலே போதும்!
'என்' என்று சொல்லிவிட்டதால்… கண்ணியமாய் பாருங்கள்.
பிரீத்தி ஓர் உலக அழகி இல்லை. ஜொலிக்கிற சினிமா நட்சத்திரம் இல்லை. அவளைப் பார்க்கும்போது, 'வாவ்! வாட் எ பியூட்டி!' என்று நிச்சயமாக எண்ணத் தோன்றாது. 'இவளைப் பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி என்னைத் தொற்றிக்கொள்கிறதே...' என்று கண்டிப்பாகத் தோன்றும்.
அவள் ஒரு உற்சாகப் பூச்செண்டு. உத்வேக நீரூற்று. புன்னகைப் பெட்டகம். ஆவேசப்புதுப்புனல். அரவணைக்கும் பூந்தென்றல். அதிகாலைத் தூய்மை. சில்லிட வைக்கும் அருவி. கன்னம் கிள்ளத் தூண்டும் புதுக் குழந்தை. இன்னும்கூட சொல்ல ஆசை. திகட்டிவிடும்!
இத்தனை அடைமொழிகளும் அவள் என்னவள்... என் இனியவள் என்பதால் அல்ல! அவளோடு பழகிப் பார்க்கும் எவருக்கும் அவளின் நட்புக்கான ஏக்கம் ஏற்படும்.
பிரீத்தியை நான் நேசித்தது அவளின் புற அழகுக்காக அல்ல... உள்ளே சுடர்விடும் அழகான உள்ளத்துக்காக! யோசித்தால் அழகு என்பது அதுதான் என்பது புரியும். எனக்குப் புரிந்தது. -
பிரீத்தியை நான் முதன்முதலில் சந்தித்தபோது...
கொஞ்சம் இருங்கள்... நான் யார்?
பாருங்கள்... அவளைப் பற்றிப் பேசத் தொடங்கியதும், என்னையே மறந்துவிட்டேன். சுருக்கமாக ஒரு அறிமுகம். பிறகு பிரீத்தி.
மதனகோபால். இருபத்தி ஏழு வயது இளைஞன். திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இலஞ்சி என்றொரு கிராமம். இப்போது அங்கே அம்மாவும், அண்ணனும் இருக்கிறார்கள், சொந்தமாக கல் வீடு. 'பம்புசெட்' போட்டு விவசாயம். அறுபத்து இரண்டு வயதிலும், அம்மா உழைக்க சலிப்பதில்லை. ஒரு ஆள் குறைந்தால் இறங்கி நாற்று நடுவாள். கதிர் அறுப்பாள்.
அப்பாவுக்கு தன் இரண்டு பையன்களில் ஒருவன் டாக்டராக வேண்டும் என்று ஆசை. பள்ளி இறுதி வகுப்போடு அண்ணன் படிப்பை முடித்துக்கொண்டு, நீயாச்சும் நல்லாப் படி! நீ என்னைக்கு டாக்டர் ஆகறியோ... அன்னைக்குத்தான் அப்பாவோட ஆத்மா சாந்தியடையும்
என்றார்.
இன்றைய தேதி வரை அப்பாவின் ஆத்மா சாந்தியடையாமல்தான் அலைந்துகொண்டிருக்க வேண்டும்.
டாக்டர் 'சீட்' வாங்க போராடியதில், சில பல ஆயிரங்கள் வீணானதுதான் மிச்சம். அப்புறம் நான் படித்தது 'பி.எஸ்சி. சைக்காலஜி'. அதை முடித்துவிட்டு, கிராமத்தில் பொருந்தாமல் போனேன். நேரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை.
நான்தான் விவசாயத்தைப் பார்த்துக்கறேனே... நீ எதாச்சும் தொழில் செய்யேண்டா! எவ்வளவு முதல் வேணும்ன்னு சொல்லு. ஏற்பாடு பண்ணித் தர்றேன்
என்றார் அண்ணன்.
எனக்கு 'பிரிண்டிங் லைன்'ல ஆர்வம் இருக்குண்ணா
என்றேன்.
கல்யாணத்துக்குப் பத்திரிகை அடிச்சிக் கொடுக்கற அச்சாபீசா?
அந்த மாதிரி இல்ல... சென்னையில கொஞ்சம் பெரிய திட்டத்துல 'ஆஃப்செட் பிரெஸ்' வைக்கணும்ன்னு ஆசைப்படுறேன்.
சென்னையிலேயா?
என்றாள் அம்மா.
என்னம்மா மலைக்கிறே! ராத்திரி ரெயிலேறிப் படுத்தா காலையில் சென்னை வந்துடும். வெளிநாட்டுக்காப் போறேங்கிறான்? நம்ம குடும்பத்துல ஒருத்தன் தொழில்ல இருக்கட்டுமே?
என்று ஊக்கப்படுத்தினார் அண்ணன்.
மதன், உனக்கு எவ்வளவுப்பா பணம் வேணும்?
என்றார்.
சென்னையில் என் நண்பன் வேதகிரின்னு இருக்கான். அவன் 'ஆஃப்செட் பிரெஸ்'ல உபயோகிக்கிற 'பிரிண்டிங் இங்க்
தயாரிச்சு வித்துக்கிட்டிருக்கான். அவனுக்கு இந்த 'லைன்' முழுக்கத் தெரியும், எனக்கு எல்லா உதவியும் செஞ் சுத் தர்றேன்னு சொல்லி இருக்கான். பூராத் தொகையும், கைலேருந்து போட வேண்டியதில்லை. 'பேங்க்'ல 'லோன்' போட்டுக்கலாம்" என்றேன்.
சென்னையில் வேதகிரியின் உதவியுடன் எல்லாம் அமைத்து ராயப்பேட்டையில் அம்மா பெயரில் 'பர்வதம் ஆஃப்செட் பிரிண்ட்டர்ஸ்' என்று தொடங்கி, நான்கு வருடங்களாயிற்று.
வாடகைக் கட்டிடம்! அலுவலக அறை, 'மெஷின் ரூம்' தவிர மாடியில் குளியலறை வசதியுடன் நான் தங்கும் அறை. 'எக்ஸ்டென்ஷன்' வசதியுடன்