Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

First Teacher
First Teacher
First Teacher
Ebook83 pages27 minutes

First Teacher

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1924. மத்திய ஆசியா. சோவியத் குடியரசு. அங்கே ஒரு குக்கிராமம். அதில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் நிகழ்கிறது இந்த முதல் காதல். தூய்சன், அல்டினாய் இருவருக்கும் இடையே உருவெடுக்கும் பரிசுத்தமான நட்பின் ஆழம் நேசமாய் பரிணமிக்கிறது. அங்கே நிலவிய சமூக பின்னணியே அவர்களை நெருக்கமாய் கொண்டு வருவதற்கான தேவையாகி விடுகிறது.

அந்த கடமை வீரனின் லட்சியம் மகத்தானது. அவன் பொதுவுடமை இயக்க உட்பொருளின் குறியீடாய் இயங்குகிறான். அவன் மனது தான் பெற்ற அத்தனையையும் இளையதலைமுறையினர் அனைவரும் பெற வேண்டும் என துடிக்கிறது.

அவனே இத்தனை நாள் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கிராமத்து மனிதன் தான். ஆனால் அவன் எண்ணங்களின் பாதைகளில் அயராது பயணிப்பவன். மக்கள் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டதால் அவனுக்கு எழுதப் படிக்க தெரிந்துகொள்கிற வாய்ப்பு வாய்க்கிறது. அதை தன் கிராமத்திற்குள் கொண்டு செல்லும் சாத்வீக யுத்தத்தை நம்பிக்கையோடு கையில் எடுக்கிறான். அவனின் இதயத்திற்கு மிக நெருக்கமான அந்த இளம் ஜீவன் அல்டினாய் அதை தூய்சன் மீதான நேசத்தின் பெயரால் நிறைவேற்றிக்காட்ட படும்பாடு, அவளின் நேசத்தை புடம்போட்டுக் காட்டும் காதல் சாசனங்கள். சிங்கிஸ் ஐக்மத்தாவின் “ஃபஸ்ட் டீச்சர்” திரைக்கதையை தழுவி புதிய மொழி ஆக்கமாய் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நாவலும் அப்படியே.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003742
First Teacher

Read more from Kulashekar T

Related to First Teacher

Related ebooks

Reviews for First Teacher

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    First Teacher - Kulashekar T

    http://www.pustaka.co.in

    ஃபஸ்ட் டீச்சர்

    முதல் காதல்

    First Teacher

    Mudhal Kaadhal

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ஒர் அறிமுகம்

    இவரின் சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மீராவை தன்னை பெறாத தந்தை என்று நினைவு கூறுகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த காலம் சிலிர்ப்பானவை என்கிறார். திரைப்படத்துறையை இவர் தேர்ந்தெடுத்ததும் இவரை கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டதும் கவிஞர் மீரா தான். பிரபல இதழ்களில் ஏழு நாவல் வெளி வந்திருக்கிறது. இவரின் படைப்புகளை அன்னம், சந்தியா, ஆழி, ப்ளாக்ஹோல் மீடியா, வருண் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

    இவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி முக்கியமானவர். தனது முதல் புத்தகம் ஒரு சிநேகிதிக்காக வெளியீட்டில் அறிமுகமான நாளில் இருந்து நினைவின் கடைசித்துளி வரை துளியும் குறையாத நட்போடும், வாஞ்சையோடும் ஆழ்மனதிற்கு நெருக்கமாக இயைந்துகொண்ட மனிதம் அவர் என்கிறார். அதேபோல பூர்ணம் விசுவநாதனின் நட்பும் அபாரமானது என்கிறார். இவரின் வானம்பாடி புத்தகத்தை தனக்கு பிடித்த புத்தகம் என ஒரு கட்டுரையில் பூர்ணம் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கதைகளில் உள்ள உயிர்ப்பு பற்றி சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் துணை இயக்குநராக சேர்த்து விட்டதும் இவர் தான். இந்த மூவரின் நட்பை குலசேகர் தன் வாழ்வின் அர்த்தங்கள் என்கிறார்.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின் வருண் பதிப்பகம் வெளியீட்டில் சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன்" என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.

    இவரது ஒரு சிநேகிதிக்காக தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பேராசிரியர் டாக்டர் முத்தையா அவர்களால் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில் தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.

    புதிய பார்வை - நீலமலை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து,

    Enjoying the preview?
    Page 1 of 1