Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

The Apartment
The Apartment
The Apartment
Ebook118 pages37 minutes

The Apartment

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு எளிமையான காதல் கதை. பில்லி வைல்டர் திரைக்கதையை மையமாக கொண்டு எழுதப்பட்டிருக்கிற நாவல். இதில் வரும் இரு முக்கிய கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியான தேடலோடு பயணிப்பவர்கள் தான். ஆனால் வெவ்வேறு திசையில். அவன் பாக்ஸ்டர் என்கிற படி. அவள் ஃப்ரான் கூபர்லிக் என்கிற ஸ்கூபி.

அவன் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அட்ஜஸ்மெண்ட் என்கிற பெயரில் சகிப்புத்தன்மையின் உச்சம் கடந்தவன். அவன் அப்படி சூழ்நிலைகளால் ஆக்கப்பட்டு அதுவாகவே ஆகிப்போனவன். ஆனால் அவன் தனக்குத் தானே தனிமையில் தங்களின் சுயநலங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறவர்களை தன் புலம்பல்களின் மூலம் வெற்றிகொண்டு விட்டதாய் கற்பனையில் மனதை தேற்றிக்கொள்பவன்.

ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் “காம்டாமீட்டர்” நேரம்காலம் மறந்து தட்டிக்கொண்டிருக்கும் ஒரு எளிய ஜீவன். மற்றவர்கள் பாசையில் இளிச்சவாயன். அவள் அதே அலுவலகத்தில் லிஃப்ட் ஆபரேட்டர். இவளின் பிரச்னை என்னவென்றால் வயதுக்கு வராத காலத்திலிருந்தே யாரை பார்த்தாலும் காதல் வயப்பட்டுவிடுவாள். ஆனால் ஒவ்வொருவரோடும் பழகிப் பார்த்தபின் அவர்கள் யாரும் தன் காதலை காதலிக்கவில்லை. தன் பொலிவை மட்டுமே காதலித்திருக்கிறார்கள் என்பதை உணர நேரும். அவள் துடிதுடிப்பாள். இருந்தாலும் அவள் காதலின் தேடலை மட்டும் கைவிடுவதில்லை. அவள் வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் தேடல்கள் கசப்பாகவே இருந்தது. அவனும்அவளும் வெவ்வேறு தளங்களில் தங்களின் காதலை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்காகவே ஏங்கினார்கள். தவித்தார்கள். ஆனால் வேறுவேறு இடங்களில் தேடினார்கள்.

அவன் அவளை மனதிற்குள் நேசித்தான். அது அவளுக்கு புரிவதில்லை. அவனும் வாய்விட்டு எப்போதும் சொல்வதில்லை. அது தான் அவன். தயக்கம்..தயக்கம். சராசரி மத்தியதர வர்க்கத்தின் தாழ்வுமனப்பான்மையின் குறியீடாய் அவன். காலம்காலமான வாழ்வியல் போராட்டம் அவனை தொடர்ந்து வந்திருந்ததில் அந்த சகிப்புத்தன்மை இயல்பான விசயமாக அவனுள் ஆக்கப்பட்டுவிட்டிருந்தது.

சொல்லமுடியாததால் அவனுடைய காதலின் தேடல் நிறைவடையாமல் நீடித்தபடி இருந்தது. அவளுடைய காதலின் தேடல் நிறைவுப்புள்ளியை எட்டமுடியாமல் நீண்டுகொண்டேயிருந்தது.

இருவருமே காதலின் தேடலில் வெவ்வேறு கோணங்களில் களைப்புற்றும் சளையாமல் தேடிக்கொண்டேயிருந்தார்கள் என்கிற விசயம் ஒரு புள்ளியில் அவர்களால் உணரப்படுகிற நேரமும் வந்தது.

அந்த புள்ளியில் அவன் அவளாகிறாள். அவள் அவனாகிறான். அவர்கள் அவர்களாகிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஆஸ்கர் விருது தட்டிச்சென்ற திரைக்கதை இது. அதன் நாவல் வடிவம் இதோ உங்கள் பார்வைக்கு முன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003758
The Apartment

Read more from Kulashekar T

Related to The Apartment

Related ebooks

Reviews for The Apartment

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    The Apartment - Kulashekar T

    http://www.pustaka.co.in

    தி அபார்ட்மெண்ட்

    ஒரு குடைக்குள் உலகம்

    The Apartment

    Oru Kudaikkul Ulagam

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    ஒர் அறிமுகம்

    இவரின் சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மீராவை தன்னை பெறாத தந்தை என்று நினைவு கூறுகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த காலம் சிலிர்ப்பானவை என்கிறார். திரைப்படத்துறையை இவர் தேர்ந்தெடுத்ததும் இவரை கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டதும் கவிஞர் மீரா தான். பிரபல இதழ்களில் ஏழு நாவல் வெளி வந்திருக்கிறது. இவரின் படைப்புகளை அன்னம், சந்தியா, ஆழி, ப்ளாக்ஹோல் மீடியா, வருண் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

    இவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி முக்கியமானவர். தனது முதல் புத்தகம் ஒரு சிநேகிதிக்காக வெளியீட்டில் அறிமுகமான நாளில் இருந்து நினைவின் கடைசித்துளி வரை துளியும் குறையாத நட்போடும், வாஞ்சையோடும் ஆழ்மனதிற்கு நெருக்கமாக இயைந்துகொண்ட மனிதம் அவர் என்கிறார். அதேபோல பூர்ணம் விசுவநாதனின் நட்பும் அபாரமானது என்கிறார். இவரின் வானம்பாடி புத்தகத்தை தனக்கு பிடித்த புத்தகம் என ஒரு கட்டுரையில் பூர்ணம் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கதைகளில் உள்ள உயிர்ப்பு பற்றி சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் துணை இயக்குநராக சேர்த்து விட்டதும் இவர் தான். இந்த மூவரின் நட்பை குலசேகர் தன் வாழ்வின் அர்த்தங்கள் என்கிறார்.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின் வருண் பதிப்பகம் வெளியீட்டில் சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன்" என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.

    இவரது ஒரு சிநேகிதிக்காக தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பேராசிரியர் டாக்டர் முத்தையா அவர்களால் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில் தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.

    புதிய பார்வை - நீலமலை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கே இருந்த காலங்களில் உலக திரைப்படங்கள் மற்றும் இலக்கிய பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும் கொண்டிருந்தவர், பின் திட்டமிட்டபடி திரைப்படத்துறைக்கு வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதழியலில் முதுகலை பட்டயப்படிப்பும் அஞ்சல் வழியில் படித்திருக்கிறார்.

    விளம்பரப் படம், டெலிஃபில்ம், நெடுந்தொடர்களில் திரைக்கதை, வசனம் மற்றும் எபிசோட் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் கவிஞர் லீனாமணிமேகலையோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார். குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சிக்காக பல துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் நேர்காணலை இயக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் எழுதி இயக்கிய நீ+நீ=நாம் என்கிற குறும்படம் வேந்தர் தொலைக்காட்சியில் தேர்வாகியிருக்கிறது.

    இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணி புரிந்திருக்கிறார். இயக்குநர் பார்த்திபனோடு கதை விவாதம் மற்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1