Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meetchi
Meetchi
Meetchi
Ebook183 pages1 hour

Meetchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபஞ்சத்தின் எல்லா சிருஷ்டியிலும் கதை சொல்லிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சொற்களில் பின்னப்படும் கதைகள் மட்டுமே படைப்பிலக்கியம் அல்ல. இயற்கையின் படைப்பே ஓர் இலக்கிய காவியம். அதன் ஒவ்வோர் அசைவும் உடயிர்த்துடிப்பும், ஓசைகளும், எண்ணற்ற கீதங்கள் இசைப்பவை.

இயற்கையின் சீற்றத்தில், பேரழிவுகளில், எழினில், பல நிற பல மொழி பல கடவுள்கள் கொண்ட மனிதர்களின் மனமாச்சரியங்களில் மனதை உலுக்கும் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன, சொல்லக் காத்திருக்கின்றன. அதைக் கேட்க, புரிந்துகொள்ளக் கூடிய செவிகளிடம் சொல்ல, அவற்றைக் கேட்கும் பொறுமைதான் தேவை நமக்கு, சூட்சுமமும் கரிசனமும் தேவை. பேச முடியாத ஊனம்களும் பார்வையற்ற குருடர்களும், காது கேளாதவர்களும், பேதலித்த மனங்களும், இன யதிர் காலத்தில் புவியின் திசையைப் புரிந்துகொள்ள இயலாத தடுமாற்றத்தில் இருக்கும் பெரிசுகளும் கதைகள் சுமக்கிறார்கள். இறக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். கதாசிரியர்கள் எப்படி இத்தனைக் கதைகள் புனைகிறார்கள் என்பது ஆச்சரியமில்லை. இன்னும் சொல்லப் (வேண்டிய கதைகள் சொல்லப்படாமல் வரிசையில் காத்து நிற்கின்றன என்பதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு கணமும் நூறாயிரம் கதைகள் நம்மைச்சுற்றி காற்றலையில் மிதக்கின்றன. ஒரு பெருமூச்சில், ஒரு சிரிப்பில், ஒரு வார்த்தையில், ஒரு கண்ணசைவில், ஒரு மரணத்தில், புலம்பெயர்ந்த பரிதவிப்பில், காரணமற்ற சமூக நிர்ப்பந்தத்தில் - கதைகள் ஒளிந்து நிற்கின்றன. அவை உன் புலன்களுக்கு வெளிச்சமாகும் போது கதை ஜனிக்கிறது.

அந்த வெளிச்சம் ஓர் ஆன்மிக தரிசனம். மனதை நெகிழவைக்கும் தரிசனம். தூய்மைப்படுத்தும் அனுபவம். இந்தத் தொகுப்பில் இருக்கும் பதினோரு கதைகளும் அப்படிப் பிறந்தவை. பொதுபவாகப் புனை கதைகள் நிஜ வாழ்வின் அனுபவத்தில் எழுதப்படுபவை என்றாலும் நூலிழையான நினைவை ஒட்டி முழுவதுமான கற்பனைக் கதைகள் அநேகம். மிக இலக்கியத் தரம் வாய்ந்த பல கதைகள் அப்பாடப் பிறந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கும் அத்தனைக் கதைகளிலும் பெரும் மாந்தர்கள் (ஒன்றிரண்டு கதைகள் தவிர) அநேகமாக நான் நேரில் சந்தித்தவர்கள். கதைப்பின்னாலும் சம்பவங்களும் அவர்களது நிஜ வாழ்வில் நிகழ்ந்தவை. இல்லையென்றாலும், அவர்கள் உணரும் பரிதவிப்பும் துயரமும் அவர்கள் நிஜமாக அனுபவிப்பது என்று நினைக்கிறேன். அவர்களையெல்லாம் சந்தித்தபின், அவர்களது நினைவு என்னைப் பல நாட்களுக்கு ஆட்டிப்பிடித்தது. மனதின் அந்தகார ஆழத்திற்குச் சென்று வெளிச்சம் காணத் துடித்தது. ஒவ்வொன்றும் வெளியே வரக் காத்திருந்தது. கணினியின் பலகைக்கு முன் அமர்ந்ததும் தாமாக எழுதிக்கொண்டன. யாரும் எந்தப் பத்திரிகையும் கேட்டு எழுதக் காத்திருக்கவில்லை.

ராமேசுவரம் அகதி முகாமில் சந்தித்த தம்பதிகள், எனது தோட்டக்காரர் ராமப்பா, காது கேளா சுப்பம்மா, நகுமோமுவில் உருகும் காமாட்சி, மூளை மூப்புக் கணவனை சமாளிக்கும் ராதா, மொழி புரியாத இந்திய முதியோர் இல்லத்திற்கு வந்து சேரும் அமெரிக்க ஆங்கிலம் பேசும் சங்கரி, வயசு காலத்தில் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று சந்தேகிக்கும் சாவித்ரம்மா, குழந்தை பிறக்காத குற்றத்துக்காக வேதனைப்பட்ட அமுதா - எல்லாரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். அவர்கள் என்னைத் தங்கள் கதைகளை எழுதச் சொல்லவில்லை. ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வகையில் பாதித்தார்கள். அவர்களது கதைகள் என்னளத் துன்புறுத்தின. எந்த வகையிலோ என்னைக் குற்றவாளி ஆக்கின, நான்தான் அவர்களது துன்பங்களுக்குக் காரணம் என்பதுபோல், சகஜீவிகளின் துயரங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் நாம் எல்லாரும் கூட்டாகக் காரணம் என்று படுகிறது. இதன் உணர்தலே நம்மைத் தூய்மைப்படுத்துவதாகத் தோன்றுகிறது. இக்கதைகளை சொற்களில் வடித்து உருவம் கொடுத்த பிறகு ஒரு ஞானஸ்னானம் கிடைத்ததுபோல என் மன உளைச்சல் விடுபட்டது. எழுதப்படும் கதைகளால் கதை மாந்தர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நினைப்பது அபத்தம். ஆனால் கதைகளைப் படிப்பவர் மனதில் அவை சிறிது சலனம் ஏற்படுத்துமானால் என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம்.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403866
Meetchi

Read more from Vaasanthi

Related to Meetchi

Related ebooks

Related categories

Reviews for Meetchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meetchi - Vaasanthi

    http://www.pustaka.co.in

    மீட்சி

    Meetchi

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மீட்சி

    2. வானப் பிரஸ்தம்

    3. நேர்த்திக் கடன்

    4. கேளாச் செவிகள்

    5. மழை

    6. அவளது தேர்வு

    7. வேண்டாத வரம்

    8. மறதி

    9. ஜூவாலை

    10. செஞ்சுருட்டி

    11. தொலைந்து போனவர்கள்

    முன்னுரை

    பிரபஞ்சத்தின் எல்லா சிருஷ்டியிலும் கதை சொல்லிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சொற்களில் பின்னப்படும் கதைகள் மட்டுமே படைப்பிலக்கியம் அல்ல. இயற்கையின் படைப்பே ஓர் இலக்கிய காவியம். அதன் ஒவ்வோர் அசைவும் உடயிர்த்துடிப்பும், ஓசைகளும், எண்ணற்ற கீதங்கள் இசைப்பவை.

    இயற்கையின் சீற்றத்தில், பேரழிவுகளில், எழினில், பல நிற பல மொழி பல கடவுள்கள் கொண்ட மனிதர்களின் மனமாச்சரியங்களில் மனதை உலுக்கும் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன, சொல்லக் காத்திருக்கின்றன. அதைக் கேட்க, புரிந்துகொள்ளக் கூடிய செவிகளிடம் சொல்ல, அவற்றைக் கேட்கும் பொறுமைதான் தேவை நமக்கு, சூட்சுமமும் கரிசனமும் தேவை. பேச முடியாத ஊனம்களும் பார்வையற்ற குருடர்களும், காது கேளாதவர்களும், பேதலித்த மனங்களும், இன யதிர் காலத்தில் புவியின் திசையைப் புரிந்துகொள்ள இயலாத தடுமாற்றத்தில் இருக்கும் பெரிசுகளும் கதைகள் சுமக்கிறார்கள். இறக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். கதாசிரியர்கள் எப்படி இத்தனைக் கதைகள் புனைகிறார்கள் என்பது ஆச்சரியமில்லை. இன்னும் சொல்லப் (வேண்டிய கதைகள் சொல்லப்படாமல் வரிசையில் காத்து நிற்கின்றன என்பதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு கணமும் நூறாயிரம் கதைகள் நம்மைச்சுற்றி காற்றலையில் மிதக்கின்றன. ஒரு பெருமூச்சில், ஒரு சிரிப்பில், ஒரு வார்த்தையில், ஒரு கண்ணசைவில், ஒரு மரணத்தில், புலம்பெயர்ந்த பரிதவிப்பில், காரணமற்ற சமூக நிர்ப்பந்தத்தில் - கதைகள் ஒளிந்து நிற்கின்றன. அவை உன் புலன்களுக்கு வெளிச்சமாகும் போது கதை ஜனிக்கிறது.

    அந்த வெளிச்சம் ஓர் ஆன்மிக தரிசனம். மனதை நெகிழவைக்கும் தரிசனம். தூய்மைப்படுத்தும் அனுபவம். இந்தத் தொகுப்பில் இருக்கும் பதினோரு கதைகளும் அப்படிப் பிறந்தவை. பொதுபவாகப் புனை கதைகள் நிஜ வாழ்வின் அனுபவத்தில் எழுதப்படுபவை என்றாலும் நூலிழையான நினைவை ஒட்டி முழுவதுமான கற்பனைக் கதைகள் அநேகம். மிக இலக்கியத் தரம் வாய்ந்த பல கதைகள் அப்பாடப் பிறந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கும் அத்தனைக் கதைகளிலும் பெரும் மாந்தர்கள் (ஒன்றிரண்டு கதைகள் தவிர) அநேகமாக நான் நேரில் சந்தித்தவர்கள். கதைப்பின்னாலும் சம்பவங்களும் அவர்களது நிஜ வாழ்வில் நிகழ்ந்தவை. இல்லையென்றாலும், அவர்கள் உணரும் பரிதவிப்பும் துயரமும் அவர்கள் நிஜமாக அனுபவிப்பது என்று நினைக்கிறேன். அவர்களையெல்லாம் சந்தித்தபின், அவர்களது நினைவு என்னைப் பல நாட்களுக்கு ஆட்டிப்பிடித்தது. மனதின் அந்தகார ஆழத்திற்குச் சென்று வெளிச்சம் காணத் துடித்தது. ஒவ்வொன்றும் வெளியே வரக் காத்திருந்தது. கணினியின் பலகைக்கு முன் அமர்ந்ததும் தாமாக எழுதிக்கொண்டன. யாரும் எந்தப் பத்திரிகையும் கேட்டு எழுதக் காத்திருக்கவில்லை.

    ராமேசுவரம் அகதி முகாமில் சந்தித்த தம்பதிகள், எனது தோட்டக்காரர் ராமப்பா, காது கேளா சுப்பம்மா, நகுமோமுவில் உருகும் காமாட்சி, மூளை மூப்புக் கணவனை சமாளிக்கும் ராதா, மொழி புரியாத இந்திய முதியோர் இல்லத்திற்கு வந்து சேரும் அமெரிக்க ஆங்கிலம் பேசும் சங்கரி, வயசு காலத்தில் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று சந்தேகிக்கும் சாவித்ரம்மா, குழந்தை பிறக்காத குற்றத்துக்காக வேதனைப்பட்ட அமுதா - எல்லாரும் எனக்குப் பரிச்சயமானவர்கள்.

    அவர்கள் என்னைத் தங்கள் கதைகளை எழுதச் சொல்லவில்லை. ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வகையில் பாதித்தார்கள். அவர்களது கதைகள் என்னளத் துன்புறுத்தின. எந்த வகையிலோ என்னைக் குற்றவாளி ஆக்கின, நான்தான் அவர்களது துன்பங்களுக்குக் காரணம் என்பதுபோல், சகஜீவிகளின் துயரங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் நாம் எல்லாரும் கூட்டாகக் காரணம் என்று படுகிறது. இதன் உணர்தலே நம்மைத் தூய்மைப்படுத்துவதாகத் தோன்றுகிறது. இக்கதைகளை சொற்களில் வடித்து உருவம் கொடுத்த பிறகு ஒரு ஞானஸ்னானம் கிடைத்ததுபோல என் மன உளைச்சல் விடுபட்டது. எழுதப்படும் கதைகளால் கதை மாந்தர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நினைப்பது அபத்தம். ஆனால் கதைகளைப் படிப்பவர் மனதில் அவை சிறிது சலனம் ஏற்படுத்துமானால் என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம்.

    'மீட்சி' என்ற தலைப்பில் பதினொரு கதைகளை மிக நேர்த்தியாகத் தொகுத்திருக்கும் கவிதா பப்ளிகேஷன் திரு. சொக்கலிங்கத்துக்கும் அங்கு மிக அக்கறையுடன் பணிபுரியும் இலக்கிய ரசனை மிகுந்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. திரு. சொக்கலிங்கத்தின் அசாதாரண உற்சாகமும் நட்புமிகுந்த கரிசனமும் என் எழுத்துக்கு மகத்தான உந்துதலாக உணர்கிறேன், அவருக்கு எனது பிரத்யேக நன்றி,

    வாஸந்தி

    பதிப்புரை

    மீட்சி...

    11 சிறுகதைகள் கொண்ட எழுச்சிமிக்க சிறுகதைத் தொகுதி,

    பல்வேறு சூழலில் கதாசிரியர் சந்தித்த நபர்களின் வாழ்க்கைச் சூழலைக் கதைக்களனாக அமைத்துக்கொண்டு எழுதப்பட்ட கதைகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன.

    'அவளது தேர்வு', ‘நேர்த்திக்கடன்', 'மழை' போன்ற கதைகள் ஆசிரியரின் ஆழமான சமுதாய பிரக்ஞைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    பத்திரிகையாளரும், சிறந்த எழுத்தாளரும், பாசமிகு சகோதரியுமான திருமதி வாஸந்தி அவர்களின் இச்சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதில் கவிதா பப்ளிகேஷன் பெருமிதம் கொள்கிறது. ஆசிரியருக்கு எனது மனங்கனிந்த நன்றி. வாசகப் பெருமக்கள் இச்சிறுகதைத் தொகுதியைப் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

    நன்றி.

    அன்புடன்,

    சேது. சொக்கலிங்கம்

    1. மீட்சி

    அவளுக்கு பீதியில் உடல் உறைந்து போயிற்று. கால்கள் கற் தூண்கள்போல் அசைக்க முடியாததாய் நிலைக்குத்தி நின்றன. எதிரே மாபெரும் ராட்சதர்கள் கையை அகல விரித்து நின்றிருந்தார்கள். ராட்சதர்கள் புராணக்கதைகளில் வருபவர்கள் என்று நினைத்திருந்தாள். இல்லை. நிஜமானவர்கள். இதோ, அவள் எதிரே நிற்கிறார்கள். அவளைச் சுற்றியிருந்த கும்மிருட்டில் அதிகக் கருமையோடு பூதகணங்களாய் தெரிந்தார்கள். அவளுக்கு வியர்த்துப் போயிற்று. சற்று நேரத்தில் அவள் அந்த விரித்தக் கரங்களால் நொறுக்கப் படலாம். கரை சேருவதற்குமுள் உயிர் போகும். நெஞ்சு படபடத்து வெறும் கூடாகப் பலகையாகிப் போன மார்பை விட்டு விண்டு வெளியே தெறித்துவிடும் போல இருந்தது. உள்ளே பறை அடிக்கும் ஓசை எதிரில் நிற்பவர்களுக்குக் கேட்டுவிடும் என்று பயமேற்பட்டது. மண்டியிட்டுவிடலாம் போல கால்கள் வெல வெலத்தன்.

    என்னைக் கொன்னுபோடுங்கோ... ஓரேப் போடாப் போட்டுத் தொலையுங்கோ... தினம் தினம் சாக இயலாது...

    சாக உனக்கு பயம். எங்களுக்குத் தெரியும்.

    பயம்தான். கன பயம். நெஞ்சு நடுங்குகிறது. கையும் காலும் நடுாக்குகிறது.

    கண் எதிரே சாவை தினமும் பார்த்தவளுக்கு பயம்! வேடிக்கைதான்.

    வேடிக்கை இல்லே. விதி. தலைவிதி.

    தலையை மடேர் மடேரென்று அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இரண்டு கைகளிலும் இரண்டு பைகள் இருந்தன.

    உனக்கு பயத்திலிருந்து விடுதலை வேணுமா?

    வேணும் வேணும் என்று தலை தன்னிச்சையாக அசைந்தது.

    அவளை நோக்கி அவர்கள் வந்தார்கள். மதர்த்த நடை, அவளை ஒரே எட்டில் விழுங்க வருவது போல. வராதீங்க! வெடவெடத்த கால்களுக்கு நடுவே சூடாக சிறுநீர் இறங்கிற்று. அவளுக்கு அவமானமாக இருந்தது. எத்தனைக் கேவலமாகிப்போனது இந்த உடல் என்று துக்கமேற்பட்டது.

    அவள் கண்களை மூடிக்கொண்டாள். தலையில் ஒரே போடாக சம்மட்டி அடி விழும் என்று அவள் காத்திருந்தாள். அல்லது குண்டு வெடிக்கலாம். ஒரே குண்டு போதும் சருகாய் போன உடலுக்கு. அப்பளம் நொறுங்குவதுபோல வெறும் கைகளால் கூட நொறுங்கிவிடும். ஒரு யுகக் காலம் கழிவது போல் இருந்தது. அவள் காத்திருந்தாள். இறப்பதற்கு முன், வாழ்ந்த வாழ்வு சித்திரம்போல் மனக்கண்ணில் ஓடும் என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறாள். அது இயல்பாக சாவு வரும்போது, வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த திருப்தியுடன் இலை உதிரும் வேளைக்குக் காத்துப் படுத்திருக்கும் போது. இப்போது கதையே வேறு. சாகக்கூடாத வயதில் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உறைந்த வேளையில், திடீரென்று சாவு தாக்கிவிட்டுப் போகும் போது சித்திரத்துக்கும் ஓவியத்துக்கும் நேரமேது? திகைப்பதற்குக் கூட நேரமில்லை. தவிர கந்தலாகிப் போன வாழ்வின் சித்திரத்தைப் பார்த்துதான் என்ன ஆகப்போகிறது? கழுத்தில் சுருக்கு விழும் நேரத்தை எதிர் நோக்கியே கழிந்த பயந்தாங்கொள்ளி வாழ்வு. பிறந்ததிலிருந்து பயம் தன்னைத் துரத்துவதாக அவள் நினைத்துக் கொண்டாள். தாயின் மார்பில் பால் உறிஞ்சிய வேளையிலிருந்து. திடீரென்று மார்புக்காம்பு அவள் வாயிலிருந்து விலகிய தருணங்கள் அவளுக்கு ஆச்சரியமாக நினைவு இருந்தது. அவளை மார்புடன் அணைத்தபடி ஓடிய அம்மாவின் இதயம் அடித்துக்கொண்ட ஒலிகூட துல்லியமாக ஞாபகம் இருந்தது. கண்ணை மூடினால் ஓட்டம்தான். நினைவுக்கு வரும். தூக்கத்தில் எழுப்பப்பட்டு கண்ணைத் திறக்காமலே ஓடியதும் உண்டு. இலக்கில்லாத ஓட்டம். ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிட்டது போலிருந்தது. பயம் இப்போது துரத்தவில்லை. அங்கமாகிப் போனது. பயமற்ற வாழ்வை இனி வாழ்வதுகூட சாத்தியமில்லை.

    எங்கே ஓடணும் என்று விளங்காத போது எந்த எதிர்பார்ப்பில் என்னைப் பெற்றாய் என்று அம்மாவைக் கேட்கவேண்டும் என்று மனசு பதைக்கிறது. சில சமயங்களில் கோபம் முட்டுகிறது. புணர்ச்சியின் கணநேர சுகத்தில் நீ வித்திட்ட பாவியானேன் நான் என்று அம்மாவை உலுக்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் காணாமல் போய்விட்ட அம்மாவிடம் எப்படிக் கேட்பது?

    ஓடவேண்டியிருக்கிறது. எதற்கு எங்கே என்று விளங்காமலே, என்னவோ ஒரு குரல் பிடரியைப் பிடித்துத் தள்ளுவது போல தள்ளுகிறது. ஓடு! ஓடு! அவளுக்கு அழுகை வந்தது. ஆண்டவா, முடியவில்லை. உடம்பிலேயும் மனசிலேயும் திராணி இல்லே, இரத்தத்தோடு சம்பந்தப்பட்டதாக நினைத்த மொழி கூட மறந்து போச்சு. என்னென்னவோ சொற்கள். இதுவரை உச்சரிக்காத வார்த்தைகள் கலந்துவிட்டன. அது ஒரு கலப்படம், நான் ஆகிவிட்ட மாதிரி. நாடு இருந்தால் தான் மொழி இருக்கும் என்று யாரோ சொன்னார்கள். உண்மைதான். என் மொழி செத்துப்போச்சு, நான் சாவதற்கு முன், ஏனென்றால் நாட்டைத் துறந்த பிறகு, நானும் சாகக் கிடக்கும் போது அது எங்கே நிற்கும்?

    அவளின் பரிதவிப்பு எதிரில் நிற்கும் ராட்சசர்களுக்குப் புரிந்ததாக அவள் நினைத்தாள். அவளுக்கு யோசிப்பதற்கு நேரம் கொடுப்பதுபோல அவர்கள் குத்திட்டு அமர்ந்து பீடி புகைக்கிறார்கள்.குணா பீடி புகைக்கும் போது கண்களை மூடிக்கொள்வான். சொற்ப நேரத்துக்கு தன்னையும் தனது சூழலையும் மறக்கமுனைந்தவன் போல. அது சாத்தியமென்றால் எனக்கும் ஒரு பீடி கொடு என்று அவனைக் கேட்கவேண்டும் போல் இருக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1