Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poomaalaiye Thol Serava
Poomaalaiye Thol Serava
Poomaalaiye Thol Serava
Ebook184 pages1 hour

Poomaalaiye Thol Serava

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704113
Poomaalaiye Thol Serava

Read more from Lakshmi Rajarathnam

Related to Poomaalaiye Thol Serava

Related ebooks

Related categories

Reviews for Poomaalaiye Thol Serava

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poomaalaiye Thol Serava - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பூமாலையே தோள் சேரவா

    Poomaalaiye Thol Serava

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    மழைத் துளிகள் பன்னீர் துளிகளாய் சுபாஷிணியின் முகத்தில் ஜன்னல் வழியே வர்ஷித்தது. நள்ளிரவு தூக்கத்தில் அது சுகானுபவம். சற்று முன் அடித்த மழைக் காற்றில் ஜன்னலருகே உள்ள மருதாணிப் பூக்களின் மணம் மணத்தது. சற்றுத் தள்ளி இட்ட பந்தலில் மனோரஞ்சிதம் பழுத்து மலர்ந்திருக்க வேண்டும். அதன் வாசனையையும் காற்று கவர்ந்து கொண்டு வந்தது...

    இந்தக் காற்று இருக்கிறதே இது ஒரு கள்ளன். மணத்தைக் கவர்ந்து கொண்டு வந்து காதலர்களிடம் காதலை வளர்த்து விட்டுப் போகும். இதைக் காதல் கள்ளன் என்று சொல்லலாமா? வஞ்சனை துளியும் இல்லாத கள்வன். எந்தெந்த இடத்தில் எந்தெந்த மலர்கள் கிடைத்தாலும் அந்த மலர்களின் மணத்தைக் கவர்ந்து வருவான். தாராளமாகக் கொடுத்து விட்டுப் போவான்.

    பன்னீர் மழைத் தூறலிலும் காற்று வீசிய மலர் மணத்தினாலும் சுபாஷிணிக்குத் தூக்கம் போயிற்று. அவளுக்கு ஏதாவது காதல் உண்டா? எனக் கேட்டால் இல்லை என்று சொல்லலாம். இன்னும் எந்தக் குறிப்பிட்ட ஆடவனும் அவள் மனதைக் களவாட வரவில்லை.

    ஆனால் சினிமாக்களும், கதாநாயகர்களும் அவளுக்குள் ஒரு கனவை விஸ்தீரணம் போடத் தயங்கவில்லை. இன்னும் ஏக்கம் வராத உல்லாசத் தேரோட்டம் அவளை இழுத்துச் செல்லத் தடை போடவில்லை. தென்றலும், மழையும் சதிராட்டம் போட்டன.

    'பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்' என்று எங்கேயாவது பாடலைக் கேட்டாலும் நடையைத் துள்ளல் போட வைத்தது. இது இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடம். இந்த மழையும் மலர்களின் மணமும் அவள் மனத்தோடு ஏதோ ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்யத்தான் செய்தது.

    மழை பலக்கவே ஜன்னல் கதவுகளைச் சாத்த வேண்டியதாயிற்று. அம்மா ஜானகி ஜன்னலைத் திறந்து வைத்துக் கொள்வதற்கே திட்டுவாள். அவள் கட்டிலை ஜன்னலோரம் போட்டுக் கொள்வதற்கே அம்மா சண்டை போடுவாள் தினமும்.

    பழங்காலத்து வீடுடி, உங்க தாத்தா வாங்கிக் கட்டின வீடு. வீட்டைச் சுத்தித் தோட்டம் புதரா மண்டி இருக்கு. போதாக் குறைக்கு மனோ ரஞ்சிதக் கொடிப் பந்தல் வேற. பாம்பு வரும். ஜன்னலைத் திறந்து வச்சுண்டா 'வா வா'னு திருடனை அழைக்கற மாதிரிடி என்று கத்துவாள்.

    எதையோ ஒன்றைத் தேடும் மனத்தினளாக - யாருக்கோ காத்திருக்கும் புரியாத அலைவுகளால் 'இளநெஞ்சே வா.. நீ எங்கே வா' என்று பாடுவது தனக்காகத்தானா! என்றெல்லாம் புல்லரிக்க அனுபவிக்கும் அனுபவம் புதுமை.

    இதெல்லாம் அம்மாவுக்குத் தெரியுமா? இந்த எண்ணங்கள்தான் சொர்க்கம் என்பதாவது புரியுமா? இவைகள் இளமையின் சங்கீதக் கனவுகள். மகிழம் பூவாக மணக்க வைக்கும்.

    அந்த வீட்டில் இள நெஞ்சம் என்று சொல்ல இவள் ஒருத்திதானா? இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள்தானே? ஆனால் பெரியவளின் இள நெஞ்சம் பட்டுப் போன மரம். வரன் தானாக வருகிறது என்று அவசரப்பட்டுக் கொடுத்ததின் பலன். கொடுத்த பின்பு தான் தெரிந்தது. குடிகாரக் கணவன் என்று. அவள்தான் சுபாஷிணியின் பெரியக்கா ரஞ்சனி.

    கணவனுடன் எத்தனையோ சண்டை போட்டுப் பார்த்தாள். கையில் ஐந்து வயசு பையன் சுந்தர். அப்பா தலை தலையா போட்டுக் கொண்டார். அப்பா ஒரு வைதீகர்தான். தர்ப்பப் புல்லை எடுத்து மந்திரம் சொன்னால் கான மழை தான். வேத வித்தகர். மந்திரங்களை குறைத்து. சொல்லாத புண்ணியவான்க...

    அதனால் மாதம் பூராவும் வேலை இருக்கும். ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சாப்பாட்டுக்கும், துணிக்கும் பஞ்சமில்லை. தினமும் நாலு இலைகள் சாப்பாட்டுக்கு அதிகம்தான் விழும்.

    வைதீஸ்வரா, நீ வந்தால்தான் காரியம் நடக்கும். பெரிய இடம். சம்பாவனை தாராளமா கிடைக்கும் என்ற அழைப்பைத் தட்ட முடியாது.

    எங்கேன்னா போகணும்? என்று மனைவி ஜானகி கேட்பாள்.

    திருச்சிக்குப் பக்கத்துல சிறுகமணியிலே.

    போய்த்தான் தீரணுமா? என்ற மனைவியைப் பார்த்துச் சிரிக்கத்தான் சிரிப்பார்.

    தினமும் வெள்ளையும் சொள்ளையுமாப் போய் ஆபீஸ்ல உட்கார்றவாளை இப்படிக் கேட்க முடியுமா! எனக்கு இது தொழில்டி ஜானா என்பார்.

    அவருக்குக் கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. வீட்டிலேயே பத்து சிறுவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்து வந்தார். அவர்களில் யாராவது ஒருத்தன் தப்பச்சொன்னாப் போதும். சிரிப்பு மறைய வேற யார் கிட்டயாவது பாடம் கேட்கிறியா கேசவா?" என்று கேட்பார்.

    இல்ல மாமா.

    வேற யார்கிட்டயாவது சொல்லிக்கிறியோனு பார்த்தேன். மந்திர உச்சரிப்பு சரியில்லேன்னா என்ன நடக்கும் தெரியுமா?

    தெரியாது மாமா.

    "இப்பத் தெரிஞ்சுக்கோ. இந்த சம்பவம் கந்தபுராணத்துல வரது. நாரதர் ஒரு பெரிய யாகம் செய்ய ஏற்பாடு பண்ணினார். மந்திரங்களைச் சொல்றப்ப கொஞ்சம் தப்புத் தப்பா யாரோ உச்சரிச்சுட்டா. அவ்வளவுதான். முரட்டு ஆடு ஒண்ணு யாக குண்டத்திலேர்ந்து வெளியே வந்தது. அதை யாராலேயும் சமாளிக்க முடியல்ல. மூணு லோகத்திலேயும் சுத்தி வந்தது. அனைவரும் பயந்து நடுங்கினா.

    கடைசியில எல்லாரும் கந்த பெருமானைச் சரணடைந்தா கந்த பெருமான் கருணைக் கடல் அல்லவா! ஆட்டை அடக்கக் கிளம்பினார். அவருடைய தம்பி வீரபாகு அண்ணா, நீங்க போறதாவது.. நான் எதுக்கு இருக்கேன்? நான் போறேண்ணா" என்று போனார். ஊஹும்... அவராலேயும் முடியல்ல. கடைசியில கந்த பெருமான் போய் ஆட்டை அடக்கி அதை தன் வாகனமாக ஆக்கிண்டார். ஆடு மௌட்டிகம். அதாவது மக்குத்தனமான முரட்டுத்தனம். அந்த ஆட்டை அடக்கினதுனாலே அவருக்கு 'அஜன்' என்று ஒரு பெயர் வந்தது.

    அஜன்னா ஆடு. ஆட்டை வாகனமாகக் கொண்டவன் அஜன். இப்பப் புரிஞ்சுதா? மந்திரத்தை மட்டும் தப்பா சொல்லக் கூடாது என்று கதை சொல்லி திருத்தி விடுவார்.

    அவர் தாம் சொல்லுவதுடன் நிறுத்திக் கொள்ள மாட்டார். மாணவர்களின் வேத அறிவு எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்றும் துழாவிப் பார்ப்பார்.

    இப்படி ஒரு சம்பவம் புராணத்தை ஒட்டி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

    ஒரு சமயம் இப்படிக் கேட்டபொழுது ஒரு மாணவன் எழுந்து நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன். சரியானு பாருங்கோ என்றான்.

    சொல்லுப்பா?

    இராமாயணத்தில் கும்பகர்ணன் ஆறு மாசம் தூங்குவான். ஆறு மாசம் தூங்காமல் இருப்பான் என்பது தெரியும். இது அவன் அப்படி ஆவதற்கு முன்னால் ஏற்பட்ட சம்பவம் என்று சொன்னபொழுது சொல்லு.. சொல்லு என்று ஊக்குவித்தார்.

    "கும்பகர்ணனுக்கு அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசை. சிவபெருமானைக் குறித்துத் தவமிருந்தான். கடுமையான தவம். சிவபெருமான் அவன் முன் வந்தார்.

    உன் தவத்தை மெச்சினோம் என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

    இவனுக்கு நிரந்தரமா இருக்கணும்னு ஆசை. அதை 'நித்யத்துவமா இருக்கணும்னு கேட்க நினைச்சு நாக்கு குழறி நித்ரத்வமா இருக்கணும்னு கேட்டுட்டான். நித்ரத்வம்னா தூங்கிண்டே இருக்கணும்னு கேட்டுட்டான். பகவானும் கொடுத்துட்டார். தான் கேட்டது தப்புனு தெரிஞ்சுது.

    என்ன பண்ணினான் கும்பகர்ணன்? குறுக்குக் கேள்வி கேட்பார் வைதீஸ்வரன்.

    சிவபெருமானே, நான் நித்யத்துவம்னு கேட்க நினைச்சு நித்ரத்வம்னு கேட்டுட்டேன். வரத்த மாத்தித் தரணும்னு கேட்டான். பகவானே கொடுத்த வரத்தை மாத்தித் தர முடியாது. வேணும்னா ஆறு மாசம் தூங்கு. ஆறு மாசம் விழிச்சுண்டு இருன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார்.

    வைதீஸ்வரன் அவன் மழலையாய் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போனார்.

    டேய் பயலே, உனக்கு உபன்யாசகரா வர்ற தகுதி இருக்குடா. ஞானத்தை வளர்த்துக்கணும்டா பயலே என்றார்.

    சொன்னதுடன் சும்மா இல்லை. வேதம் படிக்கும் பையன்கள் வேஷ்டிதான் அணிந்து வருவார்கள். பள்ளிக்கூடம் போகும்பொழுது யூனிஃபார்ம் போட்டுக் கொள்வார்கள்.

    வைதீஸ்வரன் பையனுக்கு சரிகை வேட்டியும் பத்து ரூபாய் பணமும் வைத்துக் கௌரவித்தார். இது வேத சபையின் மரியாதை.

    சின்னப் பையனின் அறிவைச் சோதித்த வைதீஸ்வரனுக்கு தனக்கு வரப் போகும் மருமகனை சோதித்துப் பார்க்கத் தெரியவில்லை.

    2

    குடித்து விட்டு லாரியில் அடிபட்டு மருமகன் கீர்த்திவாசன் இறந்த பின்பு மகளை தன் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார். ரஞ்சனியின் புகுந்த வீட்டினர் நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை. பொறுப்பற்ற ரெண்டுங்கெட்டான் குடும்பம்.

    அடித்துப் போட்ட லாரிக் கம்பெனி ஓனர் கோர்ட் அது இது என்று போகாமல் ஐந்து லட்சத்தைக் கொடுத்துச் சமாதான ஒப்பந்தம் பண்ணிக் கொண்டு விட்டான். ரஞ்சனியின் மாமனார் அதை வாங்கி தன் கடைசிப் பெண் கல்யாணத்துக்கு ஆகும் என்று வங்கியில் போட்டுக் கொண்டார்.

    வைதீஸ்வரன் ரஞ்சனியைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தபொழுது வெறும் கையுடன் அனுப்பத் தயாரானார்கள்.

    நஷ்ட ஈடு வந்ததுல ரஞ்சனிக்கு ஏதும் இல்லையா? என்று மெல்லத் தூண்டில் போட்டார் வைதீஸ்வரன்.

    ஈஸிச்சேரில் சாய்ந்து வெற்றிலையை சுகமாக மென்று கொண்டிருந்தார் சுகவனம், ரஞ்சனியின் மாமனார்.

    என்ன சொல்றேள்?

    நஷ்ட ஈடு பணம் ரஞ்சனிக்கும் ஏதாவது தரணும். குழந்தை சுந்தர் இருக்கான். வளர்த்து ஆளாக்கணும்.

    நீங்க தானே அழைச்சுண்டு போறேள். வளர்த்து ஆளாக்குங்கோ. யார் வேண்டாம்னு சொல்றா? நாங்க அவளைப் போனு சொல்லலே. நீங்கதான் கூட்டிண்டு போறேள். பாரத்தை சுமக்கப் போறேள். ரொம்ப சந்தோஷம் என்று கரங்களைக் குவித்தார் சுகவனம்.

    பெயருக்கு ஏற்ற சுகஜீவனன். சுகஜீவனம் என்றே பெயரை வைத்திருக்கலாம். இதுவரை அவர் எந்த வேலைக்கும் போனதா தெரியவில்லை. பிதுர்ரார்ஜித சொத்து அவர் இருக்கும் வீடு. அதைத் தவிர இரண்டு வீடு இருக்கிறது. அவைகளையும் அவர் வாடகைக்கு விட்டிருக்கிறார். இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள். மூத்தவன்தான் ரஞ்சனியின் கணவன்.

    கை நிறைய

    Enjoying the preview?
    Page 1 of 1