Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appalakacheri
Appalakacheri
Appalakacheri
Ebook235 pages2 hours

Appalakacheri

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன் நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.எம்., அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை போன்ற புனைப்பெயர்களிலும் ஏராளமாக எழுதியுள்ளார். தேவன், ஒரு நாடக ஆசிரியரும்கூட; ஸிம்ஹம் என்ற பெயரில் வானொலி நாடகங்கள் இயற்றியிருக்கிறார். தேவன், எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக இருமுறை பதவி வகித்தார். 1957 மே 5 அன்று, தனது 44 - வது வயதில் காலமானார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126604235
Appalakacheri

Read more from Devan

Related to Appalakacheri

Related ebooks

Related categories

Reviews for Appalakacheri

Rating: 2 out of 5 stars
2/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appalakacheri - Devan

    http://www.pustaka.co.in

    அப்பளக்கச்சேரி

    Appalakacheri

    Author:

    தேவன்

    Devan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    எழுத்துலக மாணிக்கம்

    உலக விஷயங்களை ஜனரஞ்சகமாகவும், யதார்த்தமாகவும், கதைப் போக்காகவும் மாற்றி மக்களின் உள்ளங்களில் புகுந்து குதூகலமடையச் செய்தவர்கள் இருவர். ஒருவர் எஸ்.வி.வி., மற்றொருவர் 'தேவன்'. இந்த இரண்டு ஜாம்பவான்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி நம்மை ஆனந்தக் கடலில் மூழ்க வைத்த பெருமை மாபெரும் எழுத்தாளர், தீர்க்கதரிசி, பத்திரிகை மேதை என்றெல்லாம் அழைக்கப்படும் 'கல்கி'யையேச் சாரும். எஸ். வி.வி., தேவன் கதைகளைப் படித்து மகிழ்ச்சியடையும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் 'கல்கி'யை மறக்கக் கூடாது. இவருக்கு இருந்த எண்ணத்தைச் செயலாக்கிய பெருமை, 'ஆனந்த விகடன்' அதிபர் திரு. எஸ். எஸ். வாசன் அவர்களையேச் சாரும்.

    அந்தக் காலம் முதல் ஆனந்த விகடன் தமிழ் இலக்கியத்துக்காகச் செய்த தொண்டு மிகவும் வியந்து பாராட்டுதற்குரியது. இதைப் போன்ற தரமான பத்திரிகையைப் பெற்றதற்குத் தமிழுலகம் மிகவும் பெருமைப்படுகிறது. அதற்குக் காரணம் அதில் வெளிவந்த விஷயங்கள்தான். கதைப் பகுதிகளைத் தேவன், எஸ்.வி.வி. கொத்தமங்கலம் சுப்பு போன்ற பெரும் எழுத்தாளர்களும், இலக்கியப் பகுதிகளை உ.வே.சா. டி.கே.சி., பி.ஸ்ரீ., ராஜாஜி போன்ற இன்னும் பல தரமான எழுத்தாளர்களும் கையாண்டு வந்தனர். இவற்றுக்கு எல்லாம் மகுடம் தரித்தாற் போன்ற பல பெரிய பெரிய ஓவியர்களின் கைவண்ணமும் இடம்பெற்று வந்ததுதான்.

    இந்தக் கதைகளும் 'ஆனந்த விகட’னில் வெளிவந்தது தான்.

    நம்மையெல்லாம் ஆனந்த சாகரத்தில் மூழ்கடிக்கும் 'தேவன்' இன்று உயிரோடு இருந்திருந்தால், ஏறக்குறைய 80 வயது இருக்கும். தன்னுடைய எழுத்துக்கள் எல்லாம் நூல் வடிவில் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் தன்னுடைய எழுத்துக்களை நூல் வடிவில் ஒன்றைக்கூடக் கண்டது இல்லை.

    நாங்களும் விடாப்பிடியாகப் பல ஆண்டுகள் இவற்றை வெளியிட முயற்சித்து வந்தோம். அவற்றின் பலனாகத்தான் இப்போது வரிசையாகத் தேவனுடைய கதைகள் நூல் வடிவில் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர இன்னும் நூற்றுக் கணக்கான கதைகளையும் எழுதியுள்ளார். எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாண்டு இறுதிக்குள் வெளிவந்துவிடும் என நம்புகிறோம்.

    'தேவன்' அவர்களின் நினைவை, எங்கள் மூலம் செயலாக்க வைத்த தேவன் அறக்கொடையைச் சார்ந்த திரு. விஸ்வநாதன் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

    *****

    1

    (அப்பள மகாத்மியம் - வெங்குட்டு விஜயம் - மயிலாப்பூர் திருட்டு - இன்று டிபன் குலாப்ஜான்)

    அன்று அப்பளக் கச்சேரி பார்வதி அம்மாள் வீட்டில் ஆரம்பமாயிற்று. பலகைகள், குழவிகள், அப்பளத்து உருண்டைகள், 'தொட்டுக்க' அரிசி மா, பிரண்டைத் தண்ணீர், விசிறி, கூஜாவில் சால் தீர்த்தம் முதலிய சகலமான உபகரணங்கள் சூழ்ந்திருக்க, 'படக்', 'படக்' என்று குழவிகள் உருண்டு கொண்டிருந்தன.

    பார்வதி அம்மாள் ஓர் அப்பளத்தை மெல்லிசாகப் பலகையில் இழைத்து விட்டு, அதன் ஒரு புறத்தைப் பிடித்துத் தூக்கிப் பலகையில் இப்படியும் அப்படியுமாக இரண்டுத் தட்டுத் தட்டி, பிறகு விரித்தாற்போல் பக்கத்திலிருந்த முறத்தில் போட்டாள். பிறகு எல்லாரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்து, வீட்டிலே கட்டோடு ஒரு அப்பளம் இல்லை. அதற்குத்தான் சட்டென்று இன்று நினைத்துக் கொண்டு மாவைப் பிசைந்தேன். அவருக்கா - காய்கறி இல்லாவிட்டாலும் பாதகம் இல்லை. ஒரு வேளை அப்பளம் இல்லாவிட்டால் ஒரு பிடி சாதம் உள்ளே இறங்காது! என்றாள்.

    அப்பளம் சமய சஞ்சீவி இல்லையோ! ஒரு அவசரத்துக்கு, சட்டுனு ஒரு அப்பளத்தைச் சுட்டு, ஒரு வற்றல் குழம்பை வைத்தால் சாப்பாடாச்சு. எங்காத்திலே ஒரு நாழி அப்பளம் இல்லாமே காலந்தள்ள முடியாது! என்றாள் காமு அம்மாமி.

    ஒரு பண்டிகை, விருந்துன்னா அப்பளம் இல்லா விட்டால் சாப்பாடுதான் சோபிக்குமோ! என்று ஆமோதித்தாள் அம்புஜம்.

    வெள்ளைக்காராளெல்லாம் எவ்வளவோ நாசூக்குப் பட்சணங்களெல்லாம் பண்ணித் தின்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பட்சணம் இந்த அப்பளத்துக்கு ஈடு சொல்ல முடியுமா? என்று சேஷம்மாள் சவால் கூறினாள்.

    உடனே ராஜி, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே, நீங்கள் எப்போ அம்மாமி வெள்ளைக்காரா தின்கிற பட்சணம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டாள்.

    நன்னா இருக்குடி நீ கேட்கிற கேள்வி. தின்னு பார்த்தால்தான் ருசி தெரியுமா? என்று சேஷம்மாள் சொல்லும் போதே, பின்னாலிருந்து வந்த வெங்குட்டு, ஆமாம்! தின்னால் தான் எப்படி இருக்கிறதென்று! என்று ஒரு உருண்டையை வாயில் போட்டுக் கொண்டான்.

    அட காலாந்தகா! நீ வந்துட்டையா! என்றாள் பாட்டி.

    இத்தனை நாளாய் எங்கே போயிருந்தான் பிள்ளை? என்று கேட்டாள் காமு அம்மாமி.

    பார்வதி ஒரு 'சூள்' கொட்டி, படிக்கிற படிப்புக்கு லீவு விட்டிருந்தாளோல்லியோ - என் தம்பி 'அனுப்பு அனுப்பு' என்று எழுதி இருந்தான். 'பள்ளிக்கூடம் இருக்கிறபோதே லூட்டி' தாங்கப்படல்லையே, லீவு விட்டுட்டால் நம்மால் தாங்காதுன்னு அனுப்பி வைச்சேன் என்றாள்.

    ஏண்டா, பாஸ் பண்ணிட்டியோ? என்று கேட்டாள் அலமு.

    பாட்டி கோபாக்கிராந்தளாய், பாஸ் பண்ணி என்ன? படிப்புக்கே இந்த நாளிலே மதிப்புப் போயிடுத்து. படிச்ச புருஷாளைப் பொம்மனாட்டிகள்கூட மதிக்க மாட்டேன்கிறா என்றாள்.

    ஆமாம். இந்த நாளிலே புருஷாள் செய்யற காரியங்களையெல்லாம் பொம்மனாட்டிகளே செய்கிறார்கள். திருடுவதில்கூட அவர்கள் போட்டி என்றான் வெங்குட்டு.

    பத்திரிகைகளை எழுத்து விடாமல் படித்து விட்டு, எப்போது சமாசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று காத்திருந்து யமுனை, மயிலாப்பூர்த் திருட்டைப் பற்றிக் கேட்டியளோ? என்றாள்.

    ஏன், என்ன சமாசாரம்? எங்கே திருட்டு? என்று கேட்டாள் பாட்டி.

    பாட்டி! நான் சொல்றேன் கேளுங்கோ என்று யமுனை ஆரம்பித்து, மயிலாப்பூரிலே சாயந்திரமாய்ப் போஸ்டு மாஸ்டர் வீட்டிலே ஒரு மோட்டார் வந்து நின்றதாம். ஒரு பொம்மனாட்டியும் புருஷனுமாய் உள்ளே போய்த் தீர்த்தம் கேட்டாளாம். வீட்டுக்கார அம்மா மட்டும் தனியாக இருந்தாளாம். அவள் உள்ளே போனதும் தூணோடு தூண் சேர்த்து வைச்சுக் கட்டி, நகைநட்டெல்லாம் ஒண்ணு விடாமே கழட்டிண்டு, பீரோவையும் குடைந்துவிட்டு, மோட்டாரிலே ஏறிண்டு போயிட்டார்களாம்! என்று முடித்தாள்.

    பாட்டியின் வாய் வரவர அகலமாகத் திறந்து கொண்டே வந்து, வலது கை முகவாய்க்கட்டையை மெதுவாகப் பிடித்தது. ஏண்டி? வந்தவா யாருன்னு தெரியுமாடி? ஏதாவது அடையாளம் தெரியுமா? என்று கேட்டாள்.

    அடையாளமா! அந்தப் பொம்மனாட்டி தலையில் கட்டு கனகாம்பரம் வைத்துக் கொண்டு வந்தாளாம்.

    அவளைப் பார்த்துப் பிடித்து விடுகிறது தானே?

    பட்டணத்திலே கனகாம்பரம் வைத்துக் கொண்டிருக்கிற பொம்மனாட்டிகளைப் பிடிக்கிறதென்று ஆரம்பித்தால், மிச்சம் யார் இருப்பார்கள்?"

    அது சரிதான். அந்தப் பொம்மனாட்டி சற்றுத் தூரம் போனவுடன் அந்தக் கனகாம்பரத்தை எறிந்திருந்தால்? என்றாள் ராஜி.

    வந்த பேர்வழி பொம்மனாட்டியாகவே இல்லாமல், ஆண் பிள்ளை பெண் வேஷம் போட்டுக் கொண்டிருந்தால்? என்றான் வெங்குட்டு.

    காலமே துஷ்காலம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பொம்மனாட்டிகள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அவ்வளவுதான் நான் சொல்லுவேன் என்றாள் பாட்டி.

    நம்ம ஜயலட்சுமி இருக்காளே, ரொம்ப ஜாக்கிரதைக்காரி. அவாத்து வாசல்லே ஒரு புருஷனும், கனகாம்பரம் வைத்துக் கொண்டு ஒரு பொம்மனாட்டியும் மோட்டார் காரில் வந்தார்களாம். உடனே அவள் கதவைச் சாத்திக் கொண்டு திறக்கவே மாட்டேன்னுட்டாளாம். அப்புறம் பார்த்தால் வந்தவர்கள் அவள் அத்தானும் அத்தாமன்னியும் தானாம்! என்று சொல்லிப் பேபி சிரித்தாள்.

    இந்த மாதிரி நடக்கிறதுக்கெல்லாம் காரணம் இந்த சினிமாக்கள்தான். சினிமாவிலே வேஷம் போட்டுக் கொண்டு வராப்பலே வந்து திருடினாலும் சரி, இல்லை, சினிமாப் பார்க்கப் போயிருக்கிற போது வீட்டைக் கொள்ளை அடித்தாலும் சரி - திருடன் பாடு வேட்டைதான் என்று முடிவு கூறினாள் சேஷம்மாள்.

    நீங்கள் பேசி முடிவு கட்டினதெல்லாம் சரிதான். இன்று பேப்பர் பார்த்தீர்களா? அந்த சமாசாரம் பூராவும் பொய் என்று வெளியாகி விட்டதே! பழைய சமாசாரத்தை வைத்துக் கொட்டிக் கொட்டி அளப்பானேன்? என்றான் வெங்குட்டு.

    மெத்தப் படிச்சவனே! உனக்கு வேறே வேலை இல்லையா? இன்னும் உனக்குப் பாடங்கள் ஆரம்பிக்க வில்லையா?

    அதுக்குள்ளே எப்படி ஆரம்பிப்பார்கள்? வாத்தியார்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு என்னத்துக்கு வரா, தெரியுமா? மத்தியான வேளையிலே, நல்ல ஜாங்கிரி - குலாப்ஜான்...

    சட்டென்று எழுந்தாள் ராஜி.

    என்னடி அவசரம்? உன் ஆம்படையான் ஆறு மணிக்குத் தானே வருவான்? என்று ஏக குரலில் எல்லாரும் கேட்டார்கள்.

    அது சரிதான். ஆனால் 'குலாப்ஜான்' பண்ணி வைக்கச் சொல்லிவிட்டுப் போனார். நல்ல வேளையாய் நினைவு வந்தது. முன்னாலேயே ஊறப் போட்டு வைத்தால்தான் நன்றாயிருக்கும்.

    ஏண்டி! உனக்குச் செய்யத் தெரியுமா? என் ஆத்துக்காரர் ஒரு நாள் ஓட்டலிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தார். ரொம்ப நன்னாயிருந்தது. சொல்லேன், நானும் பண்ணிப் பார்க்கிறேன் என்றாள் பேபி.

    பிரமாத வித்தையில்லை. நல்ல பாலாய், தண்ணீர் சேர்க்காமல் நாலு கிண்ணம் பாலை அடுப்பில் வைத்து, அரைக் கிண்ணமாகக் காய்ச்சு. பத்து ஏலக்காயைப் பொடி பண்ணி, ஒரு கிண்ணம் மைதா மாவோடு கலந்து, காய்ச்சின பாலில் போட்டு நன்னாப் பிசை. மிருதுவாய், ரொட்டிக்குப் பிசைந்த மாவு மாதிரியிருக்கும். அதில் சக்கரமாய்ப் பில்லை தட்டி வைத்துக் கொள். ஒரு ஆழாக்கு நெய்யை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இந்தப் பில்லைகளை இரண்டு இரண்டாய்ப் போட்டு, பழுப்பு நிறம் வருகிற வரைக்கும் வைத்திருந்து, எடுத்து, நெய்யை வடியவை. கும்பாச்சியாய் ஒரு கிண்ணம் சர்க்கரை எடுத்து, இளம்பாகாய்க் காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு, இந்தப் பில்லைகளை ஊறப் போடு, நன்றாய் நாலு மணி ஊறின அப்புறம் எடுத்துச் சாப்பிட்டால்...

    உஸ்... ஹ்...! உஸ்ஹா...! நாக்கில் ஜலம் ஊறுகிறதே! இதற்கு இப்போது ஒரு அப்பளத்து உருண்டையாவது தின்னால் தான் சரிப்பட்டு வரும்! என்று வெங்குட்டு ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு வெளியேறினான். அத்துடன் அன்று கச்சேரி முடிந்தது.

    *****

    2

    பகல் பதினொரு மணி. கோபால சாஸ்திரிகளகத்து அம்மாக்குட்டி கோடியகத்துக் காமு அம்மாமியிடம் வந்து அம்மாமி! எங்காத்திலே அப்பளாக் கலியாணம் நடக்கிறது. பதினொன்றரை மணிக்கு முகூர்த்தம். காப்பி சாப்பிட, வெற்றிலை போட்டுக் கொள்ள எல்லாவற்றுக்கும் அங்கேயே வந்துவிடச் சொன்னாள். மாட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டுவரச் சொன்னாள் என்றாள். காமு அம்மாமி, அதற்கென்ன! இதோ வருகிறேன் என்று சொல்லி, தன் பேரக் குழந்தைகளைச் சீக்கிரம் சாப்பிடும்படி துரிதப்படுத்தி நடுநடுவே மாட்டுப் பெண்ணுக்கும் உத்தரவு கொடுத்தாள்; இலையை எடுத்து எச்சலிட்டு விட்டுப் பேசாமல் போய்ப் படுத்துக் கொள்ளாதே! இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை; அம்பியும் வீட்டிலிருக்கிறானேயென்று அவனோடு பேசிக் கொண்டு நிற்காதே. பாத்திரங்களைக் கையோடு காத்தாயியிடம் தேய்க்கப் போட்டுவிட்டு, சட்டென்று வா. மூணு மணிக்கு நான் வந்து காப்பி போட்டுக் கொடுக்கிறேன் அவருக்கு... அடே குழந்தைகளா! நாங்கள்தான் வீட்டில் இல்லையே என்று 'லூட்டி' அடிக்காதேயுங்கோ!

    அம்மாமி பறக்கப் பறக்கப் பேரனுக்கு ரசத்தையும், பேத்திக்கு மோரையும் வார்த்தாள்.

    பாட்டி! எனக்கு மோர் குத்தாமே ரசம் விட்டூட்டியே! என்று கத்தினான் பேரன்.

    வாசலில் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஓசிப் பொடி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ரங்கு மாமா, ஏன் இப்போ என்ன அவசரம் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு இலையைக் கூடப் பார்த்துப் பரிமாற முடியாமல்! என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

    "எல்லாம் சரியாய்த்தான் பரிமாறியிருக்கிறது! உங்கள் பேரக் குழந்தைகளெல்லாம் படுத்தலுக்கு உங்களைக் கொண்டிருக்கு. நானென்ன செய்யட்டும்? ரிஜிஸ்திரார் ஆத்திலே கல்யாணத்துக்கு அப்பளம் இடுகிறார்கள். 'சற்றே வாயேன் கூடமாட' என்று அந்த அம்மாமி சொல்லி அனுப்பினாள். நாம் நாலு

    Enjoying the preview?
    Page 1 of 1