Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saadhal Samrajyam
Saadhal Samrajyam
Saadhal Samrajyam
Ebook101 pages47 minutes

Saadhal Samrajyam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404282
Saadhal Samrajyam

Read more from Rajesh Kumar

Related to Saadhal Samrajyam

Related ebooks

Related categories

Reviews for Saadhal Samrajyam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saadhal Samrajyam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சாதல் சாம்ராஜ்யம்

    saadhal Samrajyam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஹேப்பி நியூ இயர் - சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த கோகல்நாத் - விவேக்கும் ரூபலாவும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த்ததுக் கொண்டிருந்ததைக் கண்டு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு தானும் உட்கார்ந்தார்.

    வாங்க... அங்கிள்... விஷ் யூ... த ஸேம்... - ரூபலா சொல்ல, விவேக் எழுந்து நின்று - புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி - கோகுல் நாத்தின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

    என்ன விவேக் ஏதோ புஸ்தகத்தை படிச்சிட்டிருந்த மாதிரி இருந்தது? என்ன புஸ்தகம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    தாராளமா... - இடது கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைக் காட்டினான் விவேக். கோகுல்நாத் அந்த இளஞ்சிவப்பு அட்டையின் மேல் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை சிரமப் பட்டு படித்தார்.

    சைவ சித்தாந்த சுத்த திருக்கணித பஞ்சாங்கம்...

    கோகுல்நாத்தின் உதடுகளில் ஒரு கேலி புன்னகை தொற்றிக் கொண்டது. என்ன விவேக் பஞ்சாங்கத்தை படிச்சிட்டிருக்கீங்க?

    பஞ்சாங்கம்னு கேலி பேசாதீங்க கோகுல் நாத். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு காலக் கண்ணாடி. போன வருஷ பஞ்சாங்கத்தை ஏதேச்சையா புரட்டிப் பார்த்துட்டிருந்தேன். இந்த வருஷத்தில் - ராஜாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் கொலைகள் நிகழும். லஞ்சம் களவு அதிகமாகும். சட்டம் காவல்துறையினர்க்கு அலைச்சலை உண்டாக்கும். நயவஞ்சகம் பெருகும் - அப்படீன்னு போடப்பட்டிருந்தது. போன வருஷம் பூராவும் நாம அலைச்சல்பட்ட கதைதான் உங்களுக்குத் தெரியுமே! அதான் இந்த வருஷத்தின் பஞ்சாங்கத்தை புரட்டி எப்படியிருக்குன்னு பார்த்துட்டிருக்கேன்...

    எப்படியிருக்கு?

    படிக்கட்டுமா?

    ம்...

    இவ்வருஷம் சூரியனுக்கு மூன்று ஆதி பத்தியங்களும், குருவுக்கு இரண்டு ஆதி பத்தியங்களும், அசுப கிரஹமாகிய சனிக்கு இரண்டு ஆதிபத்தியங்களும், அங்காரகனுக்கு ஒரு ஆதிபத்தியமும் ஏற்பட்டு இருப்பதால் - லோக ஜனங்களுக்கு நன்மை உண்டாகும். ஸதாசாரம் விருத்தியாகும். நல்ல மழை பெய்து நீர்வளம் பெருகும். ஸ்தீரிஜன முன்னேற்றமாகும். தானய உற்பத்தி பெருகும். வாத பித்த ரோகம் குறையும். ஆனால் ஆறுக்கும் ஒன்பதுக்கும் அதிபதியான குரு புதனுடன் பரிவர்த்தனை பெற்று - சனியுடன் கூட மூன்றில் நிற்கிறார். அதனால், அரசுக்கு சோதனைகள் பல நேரிடும். தேச உபத்ரவம், அக்னி பயம். ப்ரஜா நாசம், பிறர் கொலை, தற்கொலை மிகும். மேலும் சூரியன் அங்காரகனோடு சேர்ந்து...

    கோகுல்நாத்துக்கு கொட்டாவி பிறிக் கொண்டு வந்தது.

    ரூபலா சிரித்தாள்.

    அங்கிள் ஒரு தலயணை கொண்டு வந்து தரட்டுமா?

    விவேக் நிமிர்ந்தான்.

    என்ன பஞ்சாங்கம்ன்னா அவ்வளவு கேலியா இருக்கா? எவ்வளவு விஞ்ஞானப் பூர்வமா எழுதி வெச்சிருக்காங்க தெரியுமா?

    அப்போ பஞ்சாங்கப்படி... இந்த வருஷமும், பிறர் கொலை, தற்கொலை அதிகம் இருக்கும்ன்னு சொல்ல வர்றீங்க.

    ஆமாம்...

    சரி... அதுக்காக என்னப் பண்ணப் போறதா உத்தேசம்?

    இந்த வருஷம் பூராவும் ஒரு லாங் லீவ் போட்டுட்டு... வீட்ல ஹாய்யா படுத்துக்கிட்டு... சன் மியூசிக் டி.வி.யில ஒலியும் ஒளியும் பார்த்துக்கிட்டு... ஓவ்வொரு சண்டேயும் பிக்னிக் ஸ்பாட் போய்கிட்டு...

    டெலிபோன் அலறியது.

    மூன்று பேரும் திரும்பினார்கள்.

    விவேக் டெலிபோனை பயமாய் பார்த்தான். சிவன், இயேசு, அல்லாவை நினைத்துக் கொண்டான். கடவுளே! ராங் நெம்பரா இருக்கணும்.

    ரூபலா டெலிபோனை நோக்கிப்போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ

    ...

    ஆமா... இருக்கார்...

    ...

    ஒரு நிமிஷம் ரிஸீவரின் வாயைப் பொத்தி விவேக்கிடம் நீட்டினாள் ரூபலா. போன் உங்களுக்குத்தான் என் பிராண நாதரே!

    போன்லே யாரு?

    டி.ஐ.ஜி. தீனதயாளன்...

    போச்சு... ஜனவரி ஒண்ணாம் தேதி அன்னிக்கே... கேஸ் வந்தாச்சு... வலது கையை உதறிக் கொண்டே - ரிஸீவரை வாங்கினான் விவேக்.

    ஹலோ!

    மிஸ்டர் விவேக்!

    நான்தான் ஸார்...

    விஷ் யூ... ஏ... ஹேப்பி... நியூ இயர்...

    தாங்க்யூ. ஸேம் டூ யூ... ஸார்...

    "உங்களுக்கு புது வருஷ வாழ்த்துச் சொல்லத் தான் போன் பண்ணினேன், சாயந்தரம் க்ரைம்

    Enjoying the preview?
    Page 1 of 1