Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hongkong Vizhigal
Hongkong Vizhigal
Hongkong Vizhigal
Ebook115 pages58 minutes

Hongkong Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404210
Hongkong Vizhigal

Read more from Rajesh Kumar

Related to Hongkong Vizhigal

Related ebooks

Related categories

Reviews for Hongkong Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hongkong Vizhigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஹாங்காங் விழிகள்

    Hongkong Vizhigal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ஹீரோ ஹோண்டாவை அண்ணா சாலையின் அகலத்தில் விரட்டிக் கொண்டிருந்தான் சரண். பில்லியனில் ஒட்டிக்கொண்டிருந்தவள் வெண்ணிலா.

    சரண்…

    என்ன?

    என்னால் நம்பமுடியலை…

    எதை?

    இப்போ நாம யார் வீட்டுக்குப் போயிட்டிருக்கோம்?

    ஃபேமஸ் சினி டைரக்டர் ஜெயக்கொடி பங்களாவுக்கு…

    அதைத்தான் நம்பமுடியலை.

    ஏன்?

    ஜெயக்கொடி சாதாரணமான டைரக்டர் கிடையாது. தொடர்ச்சியா ஆறு தடவை தேசியவிருது பெற்ற டைரக்டர். போன வருஷம் பத்மவிபூஷன் பட்டம் வாங்கியவர். பனிரெண்டு சில்வர் ஜூபிளி படங்களைக் கொடுத்தவர். மல்டி மில்லியனர். இப்பேர்ப்பட்டவர் உங்களுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கார். நம்பவே கஷ்டமாயிருக்கு…

    சரண் சிரித்தான்.

    வெள்ளியங்கிரி மலை ஜோஸியர் சொன்னது சரியாப் போச்சு.

    என்ன சொன்னார்…?

    நீ இப்போ பார்த்துட்டிருக்கிற தொழிலை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுட வேண்டாம்… கூடிய சீக்கிரமே அந்தத் தொழில் உன்னை எட்டாத உயரத்துக்குக் கொண்டு போகும். பேரும், புகழும் கிடைக்கும்ன்னு சொன்னார்.

    பணம்…?

    அதுவும் கொட்டுமாம்…

    பார்க்கலாம் பலிக்குதான்னு…

    அதிர்ஷ்டம் இன்னிக்குத்தான் அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருக்கு…

    உங்களையும் என்னையும் அவர் எதுக்காகக் கூப்பிட்டிருப்பார்னு நினைக்கறீங்க சரண்…?

    நம்ம ‘ஸ்கை வ்யூ’ டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்னையை சால்வ் பண்ணிக்கிறதுக்காக உன்னையும் என்னையும் வரச்சொல்லியிருக்கார்…

    பைக் க்ரீன்வேஸ் ரோட்டில் வேகம் குறையாமல் திரும்பியது.

    சரண்…! இப்ப நீங்க சொன்னதும் ஒத்துக்கற மாதிரி இல்லை…

    ஏன்?

    இந்த மெட்ராஸ்ல எத்தனையோ திறமையான டிடெக்டிவ் ஏஜென்ஸீஸ் இருக்கு. நம்ம டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒரு சோட்டா. பிறந்து மூணு மாசமே ஆன ஒரு குழந்தை மாதிரி. அவர்க்கு ஏதாவது பிரச்னைன்னா மூணு மாசக் குழந்தைகிட்டயா வந்து யோசனை கேட்பார்…?

    எப்படியோ… அவரே ஃபோன் பண்ணிப் பேசியிருக்கார்! சரியா ஆறு மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட். இப்போ போயிட்டிருக்கோம். என்ன சொல்லப்போறார்ன்னு பார்ப்போம்…

    இப்ப மணி என்ன…?

    பைவ் ஃபார்ட்டி ஃபைவ்…

    பதினஞ்சு நிமிஷத்துல போயிடலாமா?

    போயிடலாம்…

    க்ரீன்வேஸ் ரோட்டின் போக்குவரத்தில் ஹீரோஹோண்டா ஒரு செலுத்தப்பட்ட அம்பு மாதிரி பாய்ந்து பத்து நிமிஷங்களைக் கரைத்து விட்டு டைரக்டர் ஜெயக்கொடி குடியிருக்கும் ‘ப்ளஸண்ட் கார்டன்ஸ்’ அவென்யூக்குள் நுழைந்தது.

    அவென்யூ முழுக்க லட்சங்களால் குளிப்பாட்டப்பட்ட பங்களாக்கள். வாசல்களில் சாயம் போன யூனிஃபார்ம்களில் வாட்ச்மேன்கள். அந்த சாயந்தர நேரத்தில் அவென்யூ நிசப்தமாய் இருந்தது. ஏதோ ஒரு பங்களாவில் நாய் ஒன்று குரைக்கும் சத்தத்தைத் தவிர மற்றபடி கப்சிப்.

    சரண்! இன்னிக்குத்தான் நான் இந்த ஏரியாவுக்குள்ள வர்றேன். என்ன இவ்வளவு சைலண்டா இருக்கு…?

    இது பணக்கார வர்க்க ஏரியா. பங்களாவுக்குள்ள அநாவசியமான கும்பல் இருக்காது. குழாயடி சண்டை கிடையாது. ஒவ்வொரு பங்களாவையும் பார்த்தியா? ஐயாயிரம் சதுர அடி… பத்தாயிரம் சதுரஅடின்னு இருக்கு. இவ்வளவு பெரிய பங்களாவுக்குள்ளே கணவன் ஒரு ரூம்லேயும், மனைவி ஒரு ரூம்லேயும் உட்கார்ந்து அவங்கவங்க வேலைகளைப் பார்த்துட்டிருப்பாங்க… சத்தம் எப்படி வெளியே வரும்… இங்கே வீசற காத்துகூட பணக்காரனுக்குப் பயந்துதான் வீசும்…

    சரி…! டைரக்டர் ஜெயக்கொடியோட பங்களா நெம்பர் எவ்வளவு?

    இருபத்தி மூணு… வெண்ணிலா அந்த விநாடி பார்வைக்குக் கிடைத்த பங்களாவைப் பார்த்தாள்.

    பதினாலு…

    இன்னும் கொஞ்சம் முன்னாடி போகணும்…

    போனார்கள்.

    மரங்கள் அடர்ந்த - சாலையின் வளைவில் அந்த இருபத்தி மூன்றாம் நெம்பர் பங்களா எழுபது சதவீத க்ரானைட் உடம்போடு பரவியிருந்தது.

    காம்பௌண்ட் கேட் முகப்பில் வெள்ளை மார்பில் துண்டு ‘ஜெயக்கொடி’ என்று சொன்ன ஆங்கில எழுத்துக்களைக் காட்டியது.

    சாத்தியிருந்த காம்பௌண்ட் கேட்டுக்கு முன்பாய் நின்று பைக் ஹார்னை சப்திக்க - கேட்டின் மூலையில் இருந்த ஒரு சின்ன சதுரக் கதவு திறந்து வாட்ச்மேனின் மீசை முகம் எட்டிப் பார்த்தது.

    யாரு…?

    டைரக்டரைப் பார்க்கணும்…

    உங்க பேர் சரணா…?

    ஆமா…

    கேட் உடனே கொஞ்சமாய்ப் பின்வாங்கியது.

    உள்ளே போங்க… அய்யா முன்னாடி ரூம்ல உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கார்.

    சரண் பைக்கை உள்ளே செலுத்தினான். முதல் பார்வைக்கே அந்த மிகப்பெரிய ‘லான்’ பச்சை பெயிண்ட்டை லிட்டர் லிட்டராய் கொட்டினாற் போல் கிடைத்தது. போர்டிகோ வரைக்கும் ரோஜாத் தொட்டிகள் ஆர்வோ கலர்களில் பூக்களைக் காட்டின. போர்டிகோவில் ஒரு பென்ஸ் காரும், மாருதி ‘ஜென்’னும் செந்நிற சிவப்பில் தெரிந்தன.

    வெண்ணிலா மெல்ல உதட்டைக் குவித்து விசிலடித்தாள்.

    "வாவ்…! இதென்ன பங்களாவா… இல்லை தேவலோகத்து

    Enjoying the preview?
    Page 1 of 1