Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa Arugil Vaa
Vaa Arugil Vaa
Vaa Arugil Vaa
Ebook131 pages53 minutes

Vaa Arugil Vaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704217
Vaa Arugil Vaa

Read more from Lakshmi Rajarathnam

Related to Vaa Arugil Vaa

Related ebooks

Related categories

Reviews for Vaa Arugil Vaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa Arugil Vaa - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    வா அருகில் வா

    Vaa Arugil Vaa

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அந்தக் கார் மூச்சை இழுத்துத் தம் கட்டினாற் போல நிதானமாக மலை ஏறியது. அதில் ஓர் இளைஞனும் ஓர் இளைஞியும் இருந்தார்கள். இளைஞனுக்குப் பெண்பால் இளைஞிதானே? யுவன் - யுவதி என்று அந்தக் காலத்தில் சொல்லுவார்கள். இளைஞன் - இளஞி என்று சொல்லலாமே? கட்டிளம் கன்னியைக் கண்டால் காளையர் மனம் அடங்காத முரட்டுக் காளையாகி விடும். ஆனால், இளைஞன் ராஜ் முரடன் இல்லை. ஒரு இளம் பெண்ணை அழைத்துச் செல்கிறோம் என்று நிதானமாகவே ஓட்டினான்.

    அவன் அருகில் உள்ள இளம் பெண் பெயர் பிரேமா. அவன் சென்னையில் கட்டுமானத் தொழில் படிப்பு படிக்கிறான். அவள் கணினி படிப்பு படிக்கிறாள். இவளை விட ராஜ் ஓராண்டு ஸீனியர். கல்லூரி நண்பர்கள். அவர்கள் கார் ஏறும் மலை ஆந்திராவிற்கு தமிழகத்திலிருந்து செல்லும் எல்லையில் இருந்தது. அதற்கு உரியவர் ஜமீன்தார் மகேந்திர பூபதி. அவரின் மகன் ராஜ் மோகன். அவனுக்கு பொறியியல் பட்டப் படிப்பெல்லாம் தேவை இல்லைதான்.

    ஜமீன்தார் பட்டமும் செல்வாக்கும் பெருங்காயம் வைத்த பாண்டம் தான். ஆனால் சொத்தும், பெருங்குடியின் செல்வாக்கும் ஜமீன்தாரின் வழி வழி போக்கைக் குறைக்கவில்லை. மலைச் சரிவுகளில் இருந்த கிராமக் குடிகள் அவரை ஜமீன்தாராகவே கருதி மதிப்பு கொடுத்தனர். ஆங்காங்கே நிலபுலன்கள், பங்களா என்று இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    மகனை உயர் படிப்பு படிக்க சென்னைக்கு அனுப்ப மகேந்திர பூபதிக்கு மனம் இல்லைதான். ஜமீனைப் பிரிந்து மகன் படிக்கப் போக வேண்டுமா? என்ற கேள்வி ஜமீன்தார்க்கு எழத்தான் எழுந்தது. ஜமீன் மாளிகை மலை மேல் இருந்தது. அதன் பக்கத்திலேயே இன்னும் இரண்டு மூன்று கட்டிடங்களைக் கட்ட மகேந்திர பூபதியின் அப்பா பசுபதி நாதர் ஆசைப்பட்டார்.

    பேரனையே அந்தப் படிப்பு படிக்க வைக்கத் தீர்மானித்தார். சுற்று வட்டார கிராமங்களில் கட்டிடங்கள் கட்ட பேரனாலேயே முடியுமே என்று தீர்மானித்தார். ராஜ் மோகன் உற்சாகமான பையன். சும்மா சோற்றைத் தின்று விட்டு சோம்பேறியாக ஜமீனைச் சுற்றி வருவதில் இஷ்டமில்லை. தாத்தாவின் விருப்பத்தை ஏற்றான். நண்பர்கள் மேலே கல்லூரிப் படிப்பை படிக்க, தான் மட்டும் ஜமீன்தாரின் மகன் என்ற பட்டத்துடன் நின்று விடுவதா என்று தோன்று புறப்பட்டு விட்டான்.

    மகேந்திர பூபதி மகனைத் தடுக்கத்தான் பார்த்தார்.

    ஏனப்பா, எங்களைப் பிரிஞ்சு போய் படிக்கத்தான் வேணுமா?

    அப்பா, சொத்து எல்லாம் நிரந்தரம் இல்லே. கல்விதான் நிரந்தரம். உங்க காலம் வேறு. எங்க காலம் வேற. உங்க காலத்துல ஜமீன்தார்னா பெருமை இருந்துச்சு. இப்ப அது இல்ல/ உங்க சொத்துக்கு நீங்க காவல்காரன். சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம், சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்னு பாட்டோட வரிகளை நீங்கதானேப்பா சொல்லுவீங்க"

    ஜமீன்தாரால் பேசத்தான் முடியவில்லை. அப்பா என்னோட அத்தை மகன் ராம்குமார் வேளாண் படிப்பு படிச்சுட்டு புதுமை சாகுபடி எல்லாம் செய்யறான். இயற்கை உரம் தயாரிக்கிறான். கிராமமே செழிப்பாக்கரான்னு நீங்கதானே பெருமை பேசுனீங்க? தின்னுப்புட்டு தின்னுப்புட்டு இந்த மலைக்குன்று மாதிரி உடம்பை வளர்த்துக்கு பிரியப்படலே. என்னை ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்கப்பா."

    சிறகு முளைத்த பறவையாகி விட்டான் ராஜ்மோகன். கூட்டை விட்டுப் பறந்து போக பறவை துடிப்பது புரிந்தது மகேந்திரபூபதிக்கு அனுப்ப தயாராகி விட்டார். கார் வசதியோடு ஹாஸ்டலில் ஏ.ஸி அறையில் தங்கச் செய்தார். ராஜ்மோகன் படிக்கச் சேர்ந்த கல்லூரியும் பசுபதி நாதரின் பால்ய சிநேகிதரின் கல்லூரியாகவே அமைந்தது.

    அது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக அமைந்தது ஜமீன்தாரின் குடும்பத்திற்கு. அங்குதான் பிரேமாவின் நட்பு ராஜ்மோகனுக்குக் கிடைத்தது. இன்னும் நட்பாகவே தொடருகிறது. கபடு அற்ற இளகிய நட்பை கல்லூரி வளாகம் பூராவும் அறிந்த ஒன்று.

    டேய் ராஜ் எங்கே? என்று ஒருவன் தேடினால் பிரேமா எங்கேனு பார். ராஜ் அங்கே இருப்பான் என்பார்கள் மற்றவர்கள்.

    நட்பை புனிதமாகக் கருதினாலும் இன்னும் இருவரின் மனக் கபாடங்களும் காதல் என்ற அந்த இனிய சோலையில் நுழையவில்லை. நீ பாதி நான் பாதி என்று டூயட் பாடவில்லை. கல்லூரியில் எப்படி அவர்களுக்கு நட்பு ஏற்பட்டது என்பது அவர்களுக்கே தெரியாத விஷயம். நட்புக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு போலும், மெல்ல மெல்லவே இறுகியது.

    அவன் வாயிலிருந்து பிரேம் என்ற சொல்லே அடிக்கடி வெளிப்பட அவள் வாயிலிருந்து ராஜ் என்ற சொல்லே துள்ளிக் குதிக்கும். இருவரும் மதிய நேரம் காண்டீனில் சாப்பிட வருவார்கள். அப்பொழுது ஏற்பட்ட பழக்கமாகவும் இருக்கலாம். இருவருமே தங்கள் நட்பைப் பொக்கிஷமாக நினைத்து பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்தார்கள். அந்த நட்பு கண்ணாடிப் பாத்திரத்திற்கு ஒப்பானதாக இருந்தது. பேச்சில் நயமும் இதமும் பின்னப்பட்ட கதம்ப சரமாக இருந்தது.

    பிரேமா பேரழகிதான். தற்காலப் பெண்கள் அணியும் பேண்ட், ஷர்ட் என்றெல்லாம் உடம்பை இறுக வைத்து அணிய மாட்டாள். தலையை விரித்துப் போட மாட்டாள். புடவை உடுத்துவாள். சுரிதார் அணிந்து துப்பட்டாவை மேல் விரிப்பாக போடுவாள். புடவை உடுத்தினாலும் சிலை ஒன்றிற்கு புடவையைப் பார்த்துப் பார்த்துக் கட்டினாற் போல மடிப்புக் கலையாமல் அணிவாள்.

    இயற்கை மனிதர்களுக்கு நிறையவே கற்றுக் கொடுக்கிறது. நாம்தான் கற்பதில்லை. ஆதி மனிதன் இயற்கையிடமிருந்துதான் நிறையக் கற்றுக் கொண்டான் என்பதை மறந்து விட்டோம். இயற்கை கொடுத்த அறிவை கூர்தீட்ட மறந்து மழுங்க வைத்து விட்டோம். ஆடையின்றி பிறந்த நாம் ஆடையை அணிய எங்கிருந்து கற்றோர் ஆதி மனிதனுக்கு உண்ண உடுத்த என்று இயற்கை கொடுத்த சீதனம் அது. துப்பட்டாவை கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் போல போட மாட்டாள்.

    வெள்ளிக் கிழமைகளில் தலைக்குக் குளித்து நீண்ட முடியை காயாத மயிற் கற்றைகளால் நடுவில் கிளிப் போட்டு மூடிக் கற்றையை இணைத்து ரப்பர் பேண்ட் போடுவாள்.

    இதுவும் தனி அழகுதான். அவளுடைய அழகை ராஜ் விமர்சித்தது இல்லை. மான் போல் மருண்ட கண்கள். அதில் பாலில் மிதப்பது போல் மிதக்கும் திராட்சை விழிகள். கோவைக் கனி இதழ்கள் என்றெல்லாம் விமர்சனம் பண்ணியதே இல்லை. பார்வையில் பரவசம் காட்டியதும் இல்லை.

    ஜமீன்தார் பரம்பரை என்பதால் ஒரு ராஜ கம்பீரமும், ரோஜா பூத்தது போன்ற களையும், தீவிரமான பார்வையும் மிடுக்கான யானை நடையும் அவனிடம் உண்டு. அதிகார குணம் இருந்தாலும் அதில் அன்பு உண்டு. அந்த அன்பு பிரேமாவையும் கவர்ந்து இழுத்திருக்கலாம். ராஜ்க்கென்றே சில நண்பர்கள் இருந்தார்கள். ராஜின் அன்புக்குள் கட்டுப்பட்டவர்கள். ராஜ்- பிரேமின் இறுக்கமான நட்பு நண்பர்கள் வட்டாரத்தில் பிரசித்தம்.

    பிரேமா கல்லூரியின் ஆரம்ப

    Enjoying the preview?
    Page 1 of 1