Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madam
Madam
Madam
Ebook395 pages3 hours

Madam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை சொல்லும் கலையில் கை தேர்ந்தவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவருடைய ஆங்கில நாவல்களில் சம்பவங்களும், கேரக்டர்களும், விறுவிறுப்பும், கொள்ளையாக இருக்கும். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் இவர். துரதிருஷ்டவசமாக ஒரு கிரிமினல் குற்றத்தில் சிக்கி, தற்சமயம் பிரிட்டிஷ் சிறையில் இருக்கிறார். Shall We Tell the President என்ற இந்த நாவல் அவருடைய சிறந்த படைப்புக்களில் ஒன்று. அமெரிக்காவில் இதுவரை எந்தப் பெண்ணும் ஜனாதிபதியாக வந்ததில்லை. அப்படி ஒருவர் வந்ததாகவும், பயங்கரவாதிகள் அவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கற்பனை செய்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார்.

1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் ஒரு 'மேடம்' இருந்தபோது இந்தக் கதை தொடராக வந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதை புத்தக வடிவம் பெறுவது மேலும் பொருத்தமே.

- ரா. கி. ரங்கராஜன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580126704409
Madam

Read more from Ra. Ki. Rangarajan

Related to Madam

Related ebooks

Related categories

Reviews for Madam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madam - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    மேடம்

    Madam

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    முன்னுரை

    கதை சொல்லும் கலையில் கை தேர்ந்தவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவருடைய ஆங்கில நாவல்களில் சம்பவங்களும், கேரக்டர்களும், விறுவிறுப்பும், கொள்ளையாக இருக்கும். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் இவர். துரதிருஷ்டவசமாக ஒரு கிரிமினல் குற்றத்தில் சிக்கி, தற்சமயம் பிரிட்டிஷ் சிறையில் இருக்கிறார். Shall We Tell the President என்ற இந்த நாவல் அவருடைய சிறந்த படைப்புக்களில் ஒன்று. அமெரிக்காவில் இதுவரை எந்தப் பெண்ணும் ஜனாதிபதியாக வந்ததில்லை. அப்படி ஒருவர் வந்ததாகவும், பயங்கரவாதிகள் அவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கற்பனை செய்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார்.

    1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் ஒரு 'மேடம்' இருந்தபோது இந்தக் கதை தொடராக வந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதை புத்தக வடிவம் பெறுவது மேலும் பொருத்தமே.

    ரா. கி. ரங்கராஜன்

    1

    ஜனவரி, 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பகல் 12-26...

    ஃப்ளாரென்ட்டினா கேன் என்ற நான்... அமெரிக்க ஜனாதிபதி பதவியை விசுவாசத்துடன் காப்பேன் என்றும்... அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவும் பரிபாலிக்கவும் நீடித்துச் செயலாற்றவும் முழுமூச்சுடன் பாடுபடுவேன் என்றும் கடவுள்மீது ஆணையாக உறுதி கூறுகிறேன்...

    பைபிளின்மீது வைத்த கையை எடுக்காமலே, அருகிலுள்ள கணவனை நோக்கிப் புன்னகை செய்தாள் அமெரிக்காவின் நாற்பத்துமூன்றாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற கேன்.

    அவள் வாழ்க்கையில் ஒரு போராட்டம் முடிந்து, அடுத்த போராட்டம் ஆரம்பமாகிறது. போராட்டங்கள் கேனின் வாழ்க்கையில் சகஜம். கீழ்சபையான காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாவது போராட்டம்... பின்னர் மேல்சபையான செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இரண்டாவது போராட்டம். அதன்பிறகு, முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக வந்தது.

    ஜூன் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் பொதுக் குழுவில் அவளை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட நிறுத்துவதில் கடுமையான போட்டி இருந்தது. செனட்டர் ரால்ஃப் ப்ருக்ஸை மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே தோற்கடித்து நியமனம் பெற்றாள். நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இன்னும் கடுமையான போட்டியில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தாள். 1,05,000 வோட்டு வித்தியாசத்தில் ஜனாதிபதியாக வெற்றி பெற்றாள். அமெரிக்க சரித்திரத்திலேயே அது மிகவும் குறைந்த வித்தியாசம்…

    பதவிப்பிரமாணம் முடிந்ததும் கரகோசங்கள் ஓய்ந்தன. பீரங்கிக் குண்டு மரியாதை முடியட்டும் என்று கேன் காத்திருந்தாள். பிறகு, தொண்டையைக் கனைத்துக் கொண்டாள், எதிரிலே 50,000 மக்கள். அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடமான கேபிடால் மாளிகைக்கு எதிரில், பிளாசா மைதானத்தில், அவருடைய பேச்சைக் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள். அதற்கு அப்பால் இருபது கோடிப் பேர் டெலிவிஷன் மூலம் அவளுடைய பேச்சைக் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள்.

    ஜனவரி மாதத்தின் பிற்பகுதியாக இருந்த போதிலும் குளிர் மிதமாகவே இருந்தது. அதிகம் பேர் ஓவர்கோட்டோ, போர்வையோ அணிந்துகொள்ளவில்லை.

    துணை ஜனாதிபதி பிராட்லி அவர்களே, பிரதம நீதிபதி அவர்களே, முன்னாள் ஜனாதிபதி கார்ட்டார் அவர்களே, முன்னாள் ஜனாதிபதி ரீகன் அவர்களே, ரெவரெண்ட் க்ளெர்ஜி அவர்களே, எனதருமை குடி மக்களே…

    அவளுடைய இரண்டாவது கணவரான எட்வர்டு அவளை ஏறிட்டு நோக்கினார். தான் எழுதித் தந்திருந்த சில வாக்கியங்களும், வார்த்தைகளும் கேனின் சொற்பொழிவில் நடுநடுவே வந்தபோது தனக்குள்ளே புன்னகை செய்து கொண்டார் அவர்.

    காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கேனுக்கு ஞாபகம் வந்தன.

    அன்று காலை ஆறரை மணிக்கே அவர்களுக்கு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது, முந்தின இரவு இசைநிகழ்ச்சி வெகு நேரம் நடந்ததால் இருவருமே ராத்திரி! சரியாகத் தூங்க முடியவில்லை.

    பதவிப்பிரமாணத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக ஒருமுறை தன்னுடைய சொற்பொழிவைக் கேன் சரிபார்த்துக் கொண்டாள், முக்கியமான வார்த்தைகளின் கீழ் சிவப்பு மையால் அடிக்கோடிட்டுக் கொண்டாள். சிறு திருத்தங்கள் செய்துகொண்டாள்.

    உடைகளைத் தேர்ந்தெடுக்க அதிக நேரம் செலவழிக்க வில்லை. நீலநிற உடை அணிந்துகொண்டாள். முதல் கணவரான ரிச்சர்டு, இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் அவளுக்குக் கொடுத்த சிறிய ப்ரூச்சைக் குத்திக் கொண்டாள்.

    அந்த ப்ருச்சை அணியும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு ரிச்சர்டின் ஞாபகம் வரும்.

    அவள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்குச் சென்றிருந்த சமயம்…

    ரிச்சர்டு விமானத்தில் அங்கே வந்து சேருவதாக ஏற்பாடும் ஆனால், விமான நிலையத்தில் வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்ததால் விமானத்தில் வர முடியவில்லை, ஒரு காரை அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அன்று அவள் ஆற்றிய சொற்பொழிவு. அவளை ஜனாதிபதி பதவிக்குத் தூக்கிவிடக் காரணமாக அமைந்திருந்தது என்று பல பத்திரிகைகள் அவளைப் பாராட்டினர். ஆனால், அந்தச் சொற்பொழிவை ரிச்சர்டு கேட்கவே இல்லை, வரும் வழியில் அவருடைய கார் விபத்துக்குள்ளாகிவிட்டது.

    செய்தி அறிந்து கேன், ஆஸ்பத்திரியை அடைந்தபோது அவர் இறந்துபோயிருந்தார்.

    உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்த பதவிக்கு அவள் இன்று வந்திருக்கிறாள். இருந்தும் என்ன? எவ்வளவு சக்தி இருந்தாலும் ரிச்சர்டைத் திரும்பக் கொண்டுவர முடியாது.

    கேன் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக்கொண்டாள், அவள் மனசில் நம்பிக்கை நிறைந்திருந்தது.

    ஜனாதிபதி பார்க்கின் திடீரென்று இறந்ததால் துணை ஜனாதிபதியான அவள்தான் இரண்டு வருட காலமாக ஜனாதிபதியாக இருந்து வருகிறாள். பார்க்கின் காலமான போது அவள் தன்னுடைய பழைய சிநேகிதர் எட்வார்டுடன் கால்ஃப் ஆடிக்கொண்டிருந்தாள். பிற்பாடு அந்த எட்வர்டுதான் அவளுடைய இரண்டாவது கணவராக ஆனார்.

    அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது தலைக்கு மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுப் பறந்தன. ஒரு ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதும் அதன் காப்டன் பாய்ந்து - வெளியே குதித்து அவளை நோக்கி ஓடி வந்து சல்யூட் அடித்து விட்டு, மேடம் ஜனாதிபதி அவர்களே! ஜனாதிபதி பார்க்கின் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

    எனவே, வெள்ளை மாளிகையில் நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் இருப்பது என்பது அமெரிக்க மக்களுக்கு இந்த இரண்டு வருடங்களாகப் பழக்கமாகிவிட்ட சமாசாரம் தான். பிறகு தேர்தல் நடந்து, நாட்டின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக மிகப்பெரிய அரசியல் பதவிக்கு அவள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். அதுவும் அவளுடைய சொந்தத் தகுதியினாலேயே…

    படுக்கையின் அருகே உள்ள ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள் கேன். பொடாமாக் ஆற்றின் தெளிந்த, பரந்த நீர்ப்பரப்பு அந்த விடிகாலை சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னியது.

    படுக்கையறையை விட்டு வெளியே வந்தவள். நேரே டைனிங் அறைக்குச் சென்றாள். அங்கே அவளுடைய குழந்தைகள் வில்லியத்துடனும் அன்னாபெல்லுடனும் அவள் கணவர் எட்வர்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். மூவரையும் கேன் முத்தமிட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி, சாப்பிட உட்கார்ந்தாள்.

    கடந்த காலத்தைப் பற்றி அவர்கள் சிறிது பேசிக் கொண்டார்கள். எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தார்கள். மணி எட்டு அடித்தது. அவள் எழுந்துகொண்டு அலுவலக அறைக்குச் சென்றாள். அவளுடைய பிரதம செயலாளரான ஜேனெட் வெளியே தாழ்வாரத்தில் அவளுக்காகக் காத்திருந்தாள்.

    குட்மார்னிங், மேடம் பிரசிடெண்ட்...

    குட் மார்னிங் ஜேனெட், எல்லாம் சரியாக இருக்கிறது அல்லவா? என்று புன்னகை செய்தாள் கேன்.

    அப்படித்தான் நினைக்கிறேன் மேடம்…

    நல்லது. வழக்மான வேலைக்களை கவனி. என்னைப் பற்றிக் கவலைப்படாதே. முதல் வேலை என்ன?

    842 தந்திகள் வந்திருக்கின்றன. 2,412 கடிதங்கள் வந்திருக்கின்றன.

    அவற்றுக்குப் பிற்பாடு பதில் எழுதிக்கொள்ளலாம். முதலில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்குப் பதில் போடுவது நல்லது. பன்னிரண்டு மணிக்குள் பதில்களைத் தயார் பண்ணி வை.

    சரி, மேடம்...

    இன்றைய தேதியைப் போட்டு எழுது. அதுதான் அவர்களுக்குச் சந்தோஷமாய் இருக்கும். சுடிதங்கள் தயாரானதும் ஒவ்வொன்றிலும் நானே கையெழுத்துப் போடுகிறேன்.

    சரி மேடம். உங்களுடைய இன்றைய நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். காலை பதினோரு மணிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் ரீசனுடனும் கார்ட்டருடனும் காப்பி அருந்துகிறீர்கள். பிறகு பதவியேற்பு விழாவுக்காக நாடாளுமன்ற மாளிகைக்குக் காரில் புறப்பட வேண்டும், பதவியேற்பு முடிந்து செனட்டில் பகல் உணவு அருந்துகிறீர்கள், அதற்கு முன்னால் வெள்ளை மாளிகையின் முன்னே அணிவகுப்பைப் பார்வையிட வேண்டும். ஜேனெட் அவள் கையில் நிகழ்ச்சி நிரல் காகிதத்தைக் கொடுத்தாள்.

    பதினைந்து வருடங்களுக்கு முன்பு கேன் கீழ்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவளுடைய உதவியாளர்களில் ஒருவராகச் சேர்ந்தவள் ஜேனெட். அன்று முதல் இன்றுவரை அது போல நிகழ்ச்சி நிரலைக் குறித்துக் கொடுப்பது அவளுடைய வழக்கம். மணிக்கு மணி என்ன வேலைகள் இருக்கின்றன என்பது அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

    கேன் காகிதத்தைப் பார்த்தாள். நிகழ்ச்சிகள் வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்தன.

    எட்வர்டு வெளியில் வந்தார். அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார். எப்போதும்போல் அந்தப் புன்னகையில் அன்பும் மதிப்பும் வெளிப்பட்டன.

    முதல் கணவர் ரிச்சர்டு காலமானதிலிருந்து விதவையாகவே இருந்து வந்த கேன், அன்று கால்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜனாதிபதி பார்க்கின் காலமான செய்தி வந்த அந்த நிமிடம், எட்வர்டை மணப்பதென்று ஏதோ ஒரு உள்ளுணர்வில் முடிவு செய்தாள். அந்த முடிவைப்பற்றி இன்றுவரை அவள் வருத்தப்பட்டதே கிடையாது. தன்னுடைய முதல் கணவர் ரிச்சர்டும் இந்த முடியை ஆமோதிப்பார் என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.

    பதினொரு மணி வரை வேலைகள் பார்க்கிறேன் என்று எட்வர்டிடம் சொல்ல... அவரும் தலை அசைத்துவிட்டு அன்றைய வேலைகளுக்குத் தயார் செய்து கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.

    பதவியேற்பப் பார்ப்பதற்காகவும், அவளை வாழ்த்துவதற்காகவும் முக்கியமான பிரமுகர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே குழுமிக் கொண்டிருந்தரர்கள்.

    ஜனாதிபதியின் பாதுகாப்புக்கான ரகசிய போலீசின் தலைவரான ஸ்டூவர்ட், மழை பெய்து இந்தக் கூட்டம் கலைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று தன்னுடைய உதவியாளரிடம் தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான நாட்களில் இதுவும் ஒன்று. இங்கு வந்திருப்பவர்களில் மிகப் பெரும்பாலான பேர் யோக்கியர்கள்தான். அவர்களால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பது உண்மைதான். இருந்தாலும், என்னவோ தெரியவில்லை, இந்தமாதிரி சமயங்களில் எனக்கு உதறல் ஏற்படுகிறது என்றார் ஸ்டூவர்ட்.

    ஜனாதிபதி புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகச் செல்லும் பைலட்கார்கள், வெள்ளை மாளிகையிலிருந்து செல்லும் பாதையை மிகக் கூமையாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தன. சாலையில் கொடிகளை ஆட்டிக்கொண்டு கும்பல் கும்பலாக நிற்கும் மக்களை ரகசியப் போலீஸ் ஆட்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு அப்போது எதுவும் தெரியாது.

    2

    ஜனாதிபதியாகக் கேன் கேபிடால் மாளிகைக்குச் சென்று பதவியேற்கவிருந்த தினம்.

    மணி 10.59. காவலாள் முன்வந்து வெள்ளை மாளிகையின் வாசல் கதவைத் திறந்தான். வெளியே கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தார்கள்.

    ஜனாதிபதியும் அவள் கணவரும் அவர்களை நோக்கிக் கையை வீசினார்கள். அந்தக் கூட்ட்டத்தில் ஐம்பது பேர் மட்டும் தங்களைப் பார்க்காமல் மற்றவர்களைக் கண்காணித்தபடி இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் ரகசியப் போலீஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்

    மணி 11. வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலில் இரண்டு கறுப்பு லிமஸின் கார்கள் ஓசையின்றி வந்து நின்றன, அவற்றிலிருந்து இறங்கிய இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் கடற்படை கார்டுகள் அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடித்து வரவேற்றார்கள். போர்ட்டிகோவுக்கு இறங்கி வந்து அவர்களை வரவேற்றாள் ஜனாதிபதி கேன், பிறகு அவர்களைத் தானே லைப்ரரிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே எட்வர்டு, வில்லியம், அன்னாபெல் மூவருடனும் அவர்கள் காப்பி அருந்தவதாக ஏற்பாடு.

    ஜனாதிபதிகளில் ஒருவர் தன்னுடைய மனைவியின் சமையலைப்பற்றிப் பரிகாசமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். கேன் நாசூக்காகச் சிரித்தாள், இந்தச் சம்பிரதாயச் சடங்குகள் எல்லாம் சீக்கிரமாகவே முடிந்து விட்டால் தேவலையென்று இருந்தது அவளுக்கு. ஆனால், இந்த இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் ஒருமுறை வரச் சந்தர்ப்பம் கிடைத்ததில் சந்தோஷப்படுகிறார்கள் என்று புரிந்தது. எனவே, அவர்கள் பேச்சை உற்றுக் கவனிப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். இருபது வருடங்களாக அரசியலில் இருந்ததால் இப்படி முகமூடி மாட்டிக்கொள்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது.

    மேடம் பிரசிடெண்ட் என்று யாரோ அழைத்தார்கள், அந்த வார்த்தையக் கேட்டவுடனேயே தலைநிமிர்ந்துவிடக் கூடாது என்று சிறிது சமாளித்துக்கொண்டாள்.

    அவளை அழைத்தவர் அவருடைய பத்திரிகைப் பிரிவு செயலாளர்தான், மணி பன்னிரண்டு அடித்து ஒரு நிமிடம் ஆகிறது என்று அவர் சொன்னதும் கேன் எழுந்து கொண்டாள். முன்னாள் ஜனாதிபதிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் வெள்ளை மாளிகையின் வாசல்புறத்துக்கு அழைத்துச் சென்றாள். கடற்படை வாத்திய இசை முழங்கியது. இரு முன்னாள் ஜனாதிபதிகளும் முதல் காரில் புறப்பட பின்னால் மற்ற கார்களின் அணிவகுப்புத் தொடங்கியது. ஐந்தாவது காரில் கேனும் அவளது கணவரும் இருந்தார்கள். துணை ஜனாதிபதியும் அவருடைய மனைவியும் அடுத்த காரில் வந்தார்கள்.

    எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ரகசிய போலீஸ் தலைவரான ஸ்டூவர்ட் மறுபடியும் ஒருமுறை கவனித்தார்.

    ஐம்பதாக இருந்த அவரது ஆட்கள் இப்போது நூறாகப் பெருகி விட்டார்கள், மதியத்துக்குள் உள்ளூர் போலீஸாரும் மத்தியப் புலனாய்வுத்துறை ஆட்களும் வந்து சேர்ந்து விடுவார்கள்.

    எண்ணிக்கை ஐந்நூறாகப் பெருகிவிடும். அதுதவிர, கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் ஆட்கள் வேறு இருப்பார்களோ என்று ஸ்டுவர்ட் நினைத்தார். இருப்போமா மாட்டோமா என்று அவர்கள் அவருக்குத் தெரிவிக்கவில்லை. சட்டத்தில் அவர்களைக் கண்டுபிடிப்பதும் கஷ்டமான காரியம்.

    கார்கள் கேபிடால் மாளிகையை நோக்கிச் செல்ல, வழியெங்கும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்வது கேட்டது. காரில், எட்வர்டு சகஜமாகப் பேசியவாறு இருந்தார். ஆனால், கேனின் எண்ணங்கள் வேறு இடத்தில் இருந்தன.

    பென்ஸில்வேனியா அவென்யூவில் வரிசையாக நிற்கும் மக்களைப் பார்த்து இயந்திரத்தனமாகக் கைகளை வீசிக்கொடிண்ருந்தாள். ஆனால் அவள் நினைப்பெல்லாம் பதவியேற்புக்குப் பின்னர் தான் ஆற்ற வேண்டிய சொற்பொழிவையே அசை போட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு இடமாகக் கடந்து செல்லச் செல்ல பதினைந்து வருடத்தில் இந்த இடங்கள் எவ்வளவு மாறிவிட்டன என்று எண்ணிக் கொண்டாள்.

    அமெரிக்க நாடாளுமன்றமான கேபிடால் மாளிகையை அடைந்ததும் எட்வர்டு அவளுடைய நினைவை மாற்றினார். கடவுள் இருக்கிறார். கவலைப்படாதே... என்ன? என்றார்.

    அவள் புன்னகை செய்தபடி, அவருடைய பகையை ஒருமுறை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

    காரிலிருந்து இறங்கி, கேபிடால் கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் நுழைந்தாள். எட்வர்டு ஒரு நிமிடம் பின்தங்கி டிரைவருக்கு நன்றி கூறிவிட்டு மனைவியைப் பின்தொடர்ந்தார். மற்றவர்களும் காரிலிருந்து இறங்கினார்கள், ரகசியப் போலீஸார் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அழைத்துச் சென்றார்கள்.

    அரங்கத்தில் நுழைந்து மேடையை அடைந்ததும் முன்னாள் ஜனாதிபதிகளும் கேனும் கைகுலுக்கிக் கொண்டார்கள். இந்தச் சம்பிரதாயம் இன்று பல முறை நடக்கும். மன்றத்தில் நிறைந்திருந்த மக்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

    பதவிப் பிரமாணம் முடிந்தது.

    ஜனாதிபதி கேன் உரை நிகழ்த்தத் தொடங்கினாள். அவள் பேச்சு ஏற்கெனவே எட்வர்டுக்குத் தெரியும். சில பகுதிகள் அவர் மனசைத் தொடுவனவாக இருந்தன, இருந்தாலும் கூட்டத்தினரை அவளுடைய பேச்சுக் கவருமோ, கவராதோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தார்.

    அலை அலையாக இடி முழக்கம் போல் எழுந்த காரகோஷங்கள் அவருடைய ஐயத்தை நீக்கின, 'பரவாயில்லை… கேனின் வசிய சக்தி பலமாகவே இருக்கிறது' என்று சந்தோஷப் பட்டுக் கொண்டார்.

    பேச்சின் இறுதியில், "நாட்டின் சட்ட ஒழுங்கு நிலைமையைச் சீர்செய்வதுதான் என்னுடைய முதல் வேலை என்று நான் கருதுகிறேன். லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கிகள் விற்கப்படுவதைத் தடை செய்யும் மசோதா ஒன்றைக் காங்கிரஸில் கொண்டுவருவதாக இருக்கிறேன் என்று கேன் குறிப்பிட்டாள், இம்முறை ஏனோ அவ்வளவு உற்சாகமாகக் கைதட்டல் வரவில்லை.

    கேன் தலையை நிமிர்த்தி, இது அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்யும் சகாப்தமாக இருக்கட்டும். நோயை எதிர்த்து யுத்தம், இன வேற்றுமைகளை எதிர்த்து யுத்தம் என்று கூறிவிட்டு அமர்ந்தாள். அவையினர் அனைவரும் ஒரே சமயத்தில் எழுந்து கைதட்டினார்கள்.

    சரியாகப் பதினாலு நிமிடங்களில் அவள் பேச்சு முடிந்துவிட்டது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பெற்றவளாக, தன் இருக்கைக்குத் திரும்பி நடந்தாள் கேன். மேடையில் வீற்றிருந்த பிரமுகர்களைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு நேரே தன் கணவரிடம் சென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு, அவர் கையைக் கோத்துக் கொண்டாள். கட்டிடத்தின் தலைமை அதிகாரி வழிகாட்ட மேடையிலிருந்து இறங்கி விறுவிறுவென்று நடந்தாள்.

    ரகசிய போலீஸ் தலைவரான ஸ்டூவர்டுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. குறித்தது குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் அவருக்கு. இன்று எதுவுமே சரியாக இல்லை. பகல் விருந்துக்கு நிச்சயமாக, முப்பது நிமிடங்கள் தாமதமாகப் போகிறது.

    எல்லாம் சரிவர நடந்தாக வேண்டுமே என்று கவலை நிமிடத்துக்கு நிமிடம் அவருக்கு அதிகப்பட்டுக் கொண்டிருந்தது.

    ஒருவழியாக விருந்து முடிந்து மரியாதை அணிவகுப்பு ஆரம்பமாயிற்று. மாநிலம் மாநிலமாக அலங்கார வண்டிகள் ஊர்வலம் போயின. கேனின் பூர்விக நாடான போலந்தின் கலாச்சாரத்தைச் காட்டும் சில அலங்கார வாகனங்களும் சென்றன.

    ‘வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பம் நம்முடையது. அப்படியிருந்தும் தேசத்தின் மிகப்பெரிய பதவியை மக்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். எந்த நாட்டில் இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை இருக்க முடியும்!’ என்று பெருமையுடன் எண்ணிக்கொண்டாள் கேன்.

    மூன்று மணி நேரம் அணிவகுப்பு நடந்து முடிந்தது. அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி ஜேனெட்டிடம் சில குறிப்புகள் தந்தபின் நேரே வெள்ளை மாளிகைக்குத் திரும்பினாள் கேன். தன் அறைக்குள் நுழைந்து அந்தப் பிரம்மாண்டமான மெத்தை வைத்த தேக்கு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். விழிகளால் அறையச் சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்.

    எல்லாம் அவள் விரும்பிய வண்ணமே இருந்தன. பின்புறம் ரிச்சர்டும் வில்லியமும் விளையாடும் புகைப்படம், மேஜை மீது ஒரு பேப்பர் வெயிட் அதில் பெர்னாட்ஷாவின் பொன்மொழி. 'சில மனிதர்கள் சில விசயங்களைப் பார்த்து, ஏன் அப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். நான் இல்லவே இல்லாத விஷயங்களைப் பார்த்து ஏன் அப்படி இல்லை என்று கேட்கிறேன்.’ இந்தப் பொன்மொழி கேணின் மகள் அன்னாபெல்லுக்கு மிகவும் பிடிக்கும். அதை அடிக்கடிச் சொல்வாள்.

    அவளுடைய இடதுபுறம் ஜனாதிபதிக்கான கொடியும் வலதுபுறம் அமெரிக்க தேசத்துக் கொடியும் இருந்தன. மேஜையின் நடுவே பேப்பர் மேஷில் செய்த வார்சா நகரத்து ஓட்டல் கட்டிடம் இருந்தது. அது வில்லியம் பதினாலு வயதாக இருந்தபோது செய்தது.

    கணப்பில் கனல் எரிந்துகொண்டிருந்தது. தலைக்கு மேலே ஆபிரகாம் லிங்கனின் ஓவியம் புதிய ஜனாதிபதியை முறைத்தாற்போல் பார்த்துக்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே விஸ்தாரமான புல்வெளிகள்!

    ஜனாதிபதி கேன் புன்னகை செய்துகொண்டாள்.

    மேஜை மீது இருந்த அலுவலகக் காகிதங்களைப் பார்த்தாள், அவளுடைய அமைச்சரவையில் இடம்பெற இருந்தவர்களின் பெயர்ப்பட்டியல் இருந்தது. முப்பதுக்கு மேற்பட்ட நியமனங்கள். ஒவ்வொரு காகிதத்திலும் கேன் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டாள். கடைசிக் காகிதம் ஜேனெட்டைத் தன்னுடைய பிரதம செயலாளராக நியமிப்பதாகும். எல்லாக் காகிதங்களையும் உடனடியாகக் கீழ்சபையின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கும்படிக் கொடுத்தாள்.

    அவளுடைய பிரஸ் செக்ரெட்டரியாக இருக்கும் பெண்மணி எல்லாக் காகிதங்களையும் பெற்றுக் கொண்டு நன்றி. மேடம் பிரசிடெண்ட் என்றாள், பிறகு, உடனடியாக என்ன பிரச்னையைப் பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள்? என்று கேட்டாள்.

    கேன் சொன்னாள்: எது மிகப்பெரிய பிரச்னையோ அதை முதலில் எடுத்துக்கொள் என்று லிங்கன் சொல்லியிருக்கிறார். ஆகவே துப்பாக்கிக் கட்டுப்பாடு மசோதாவை எடுத்துக்கொள்வோம்.

    அதைக் கேட்டதும் பிரஸ் செக்ரெட்டரியின் உடம்பு ஒருமுறை நடுங்கியது.

    துப்பாக்கிக் கட்டுப்பாடு மசோதாவை எதிர்த்து நாட்டின் கீழ்சபையிலும் மேல்சபையிலும் எவ்வளவு கடுமையான போராட்டம் நடக்கப்போகிறதென்று அவளுக்கு அப்போதே தெரிந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வது என்பது மறுக்க முடியாத பிறப்புரிமை என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் கருதும்போது இந்த ஜனாதிபதியின் காரணம் எங்கே நிறைவேறப்போகிறது? ஆபிரகாம் லிங்கனுக்கு நேர்ந்தமாதிரி கேனுக்கும்…

    நினைக்கையிலேயே அந்தப் பிரஸ் செக்ரெட்டரியின் உடம்பு நடுங்கியது.

    3

    இரண்டு வருடம் கழித்து மார்ச்சு 3 ஆம் தேதி... செவ்வாய்க்கிழமை மாலை 5.45.

    வாஷிங்டன் நகரம்.

    மத்தியப் புலனாய்வுத்துறையின் கிளையான, வாஷிங்டன் ஃபீல்டு ஆபீஸ்.

    அதன் தலைமை அதிகாரியான ஸ்டேம்ஸ் சீக்கிரமே வீடு திரும்ப நினைத்தார்.

    காலை ஏழு மணியிலிருந்து அவருக்கு வேலை சரியாக இருந்தது. இப்போதே மணி ஐந்தே முக்கால் ஆகிவிட்டது. பகல் உணவைச் சாப்பிட்டோமா என்பதே அவருக்கு நினைவில்லை. ஏற்கெனவே இரவுச் சாப்பாட்டுக்கு அவர் ஒழுங்காக வருவதில்லை என்று அவர் மனைவி நார்மா முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். அப்படியே வந்தாலும் இரவு வெகுநேரமாகிவிடுவதால் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கடைசியாக ஒழுங்காக, முழுசாகச் சாப்பிட்டது எப்போது என்று நினைத்துப் பார்த்தார்,

    Enjoying the preview?
    Page 1 of 1