Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaadhalin Climax
Oru Kaadhalin Climax
Oru Kaadhalin Climax
Ebook92 pages1 hour

Oru Kaadhalin Climax

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.

இந்தத் தொகுப்புகளில் எனது இருபத்தி ஏழு வருட சிந்தனைச் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன. அந்தந்த சமயங்களில் என்னை பேனா எடுக்க வைத்த ஒரு சம்பவமோ, ஒரு செய்தியோ, ஒரு சிந்தனைப் பொறியோ, ஒரு கோபத் துடிப்போ, ஒரு இயலாமை வெறுப்போ, ஒரு ஆசையோ, ஒரு கற்பனைத் துகளோ உருவம் மாறி சிறுகதைகளாகியிருக்கின்றன. நமது புகைப்பட ஆல்பத்தில் பின்னோக்கிச் செல்ல செல்ல நமக்குள் ஒரு ஆச்சரியம், வியப்பு, சந்தேகம் என்று கலந்து கட்டி உணர்வுகள் அலையடிக்குமே... அதே உணர்வுகளுடன் பல வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை நான் பார்க்கிறேன். எல்லா புகைப்படங்களிலும் கண்கள், மூக்கின் அமைப்பு எப்படி மாறாத அடையாளங்களாக இருக்குமோ, அப்படி எழுத்து நடையின் அடையாளங்கள் மட்டும் அங்கங்கே மாறாமல் இருப்பதையும் உணர்கிறேன்.

நான் ஏன் சிறுகதை எழுதினேன், எழுதுகிறேன் என்று யோசித்தால் முதலில் மனதிற்கு வருகிற பதில் ‘பிடித்திருக்கிறது' என்பதேயாகும். ஐந்தாறு பக்கங்களில் ஒரு விஷயத்தை பளிச்சென்று சொல்ல சிறுகதைதான் மிகச் சிறந்த வடிவமாக இருக்கிறது.

நான் ஒரு மிகச் சிறந்த படிப்பாளி இல்லை. உலக இலக்கியங்களை கரைத்துக் குடித்தவன் இல்லை. பல மொழிகளில் சாதித்த நிறைய எழுத்தாளர்களை எனக்கு பெயரளவில் மட்டுமே பரிச்சயம். எனவே இவரைப் போல இந்த மாதிரி விஷயங்களை சிறுகதையில் சொல்ல வேண்டும் என்றோ... அவரைப் போல இந்த மாதிரி அமைப்பில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்றோ திட்டமிட்டு எழுதிய எழுத்துக்கள் அல்ல என்னுடையவை.

என் குடும்பத்தில் யாரும் பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் கூட எழுதிப் போட்டதில்லை. எழுதத் துவங்கிய காலத்தில் காகிதத்தின் ஒரு பக்கம் மட்டுமே எழுதவேண்டும் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எனக்குத் தெரியாது. பத்திரிகைகளில் சிறுகதைகளோடு ஓவியங்களும் வருவதைப் பார்த்து ஆரம்ப காலத்தில் ஓரிரண்டு சிறுகதைகளோடு உள்ளூர் ஓவியர்களிடம் ஓவியம் வரையச் சொல்லி வாங்கி இணைத்து அனுப்பி அபத்தம் செய்திருக்கிறேன்.

துவக்க காலத்தில் என் படைப்புகளை அடிக்கடி அச்சில் பார்க்கிற அவசரமும் பரபரப்பு ஆசையும் அதிகம் இருந்ததால் என் சிறுகதை முயற்சிகளும் சிறுகதைகளாக வந்திருக்கின்றன. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்கிற முதிர்ச்சியும், தேர்வு மனப்பான்மையும் எழுத எழுத எனக்குள் இயல்பாக இணைந்து கொண்டன. இயல்பாக இணைந்து கொண்டன. எழுதியவற்றில் பல கதைகளை பத்திரிகை ஆசிரியர்களும் வாசகர்களும் பாராட்டிய போதுதான் சிறப்பான கதையின் அம்சம் என்ன என்கிற தெளிவு பிறந்தது. பல கதைகள் பரிசு பெற்றுத் தந்தபோதுதான் அதீதமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. பல கதைகளை வேற்று மொழிகளில் மொழி பெயர்க்க அனுமதி கேட்டு கடிதங்கள் வந்தபோது தான் என் சிறுகதைகளின் தகுதி மேல் எனக்கு மரியாதை பிறந்தது. எனது சிறுகதை ஒன்று ஒரு கல்லூரியில் தமிழ் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்ட செய்தி அறிந்தபோது அந்த அங்கீகாரத்தில் உள்ளம் நெகிழ்ந்தது. சின்னத் திரையில் எனது பல சிறுகதைகள் குறும்படங்களாக வடிவம் பெற்ற போதும் அதே மனநிலைதான்.

இந்த மொழிமாற்றம், பரிசுகள், வடிவமாற்றம் என்கிற பிற்கால அங்கீகாரங்களை குறி வைத்து அதற்காக மெனக்கெட்டு எந்த ஒரு சிறுகதையையும் நான் எழுதவில்லை என்பதே உண்மை. எனக்கு சரியென்று பட்ட கருத்தை எனக்கு இயல்பாக வந்த வடிவத்தில் எழுதி வந்தபோது நான் மனதில் வைத்துக் கொண்ட ஒரே ஒரு விஷயம்... தெளிவு மட்டுமே. என் கதைகள் சாதாரண வாசகர்களுக்கும் எளிமையாக புரிய வேண்டும் என்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்குள் இருந்து வந்தது, வருகிறது. இந்தத் தொகுப்புகளில் சிறப்பான கதைகள் என்று பலரால் அங்கீகரிக்கப்பட்ட கதைகளோடு, என் முயற்சி, பயிற்சி கதைகளும் கலந்து கட்டிதான் இடம் பெற்றிருக்கின்றன. ஆங்காங்கே அவை இடறினால், நெருடினால் மன்னிக்க.

இந்த சமயத்தில் நான் நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டிய நபர்களில் முதலில் என் பெற்றோர். வர்த்தக வம்சத்தில் பிறந்த என்னை கலைத் துறையில் அவர்கள் முழு மனதோடு ஊக்குவிக்காமல் போயிருந்தால் இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்திருக்காது. இந்தக் கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதேப் போல் எனக்கு அமைந்த நல்ல நண்பர்களும், 'உனக்கு வேற வேலை இல்லையா?' என்று சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஊக்குவித்தார்கள்.

- பட்டுக்கோட்டை பிரபாகர்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100904499
Oru Kaadhalin Climax

Read more from Pattukottai Prabakar

Related to Oru Kaadhalin Climax

Related ebooks

Related categories

Reviews for Oru Kaadhalin Climax

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaadhalin Climax - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஒரு காதலின் க்ளைமாக்ஸ்

    சிறுகதைகள்

    Oru Kaadhalin Climax

    Short Stories

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு ரசிகனின் ரசிகை!

    2. நாணல்

    3. பெண்கள் பெண்கள்தான்!

    4. கறுப்பு மெயில்

    5. ஒரு கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலிக்குஞ்சு கீச் கீச்சென்று கத்துகிறது

    6. அதே உத்தி!

    7. ஒரு பூ தேங்கி, தயங்கி

    8. காதலித்தேன் காதலிக்கிறேன் காதலிப்பேன்

    9. சூட்கேஸ்! சூட்கேஸ்!

    10. ஒரு காதலின் க்ளைமாக்ஸ்

    1. ஒரு ரசிகனின் ரசிகை!

    அவனுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை. ஆனால் தினமும் வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பி வர நேரமாகும்.

    மேட்டுத் தெருவில் நடந்து, ஆற்றுப் பாலம் ஏறி, இறங்கி ஊருக்கு ரொம்பத் தள்ளி வந்து அந்தச் சாலையோரப் புளியமரத்தடியில் அமர்வான்.

    வயல்களின் பச்சையை ரசிப்பான்.

    மணலில் முக்கோணம் போடுவான்.

    மரத்தின் குருவிகள் என்ன பேசிக்கொள்ளும் என்று யோசிப்பான்.

    மாலை வானம் ஏன் வெட்கப்பட்டுச் சிவக்கிறது என்று சந்திப்பான்.

    மழை வந்தால், மக்கள் ஏன் கதவுகளை, ஜன்னல்களைச் சாத்துகிறார்கள் என்று கோபிப்பான். மழை பெய்யும்போது வீட்டைவிட்டு வெளியே வந்து கைகளை மடக்கிக் கட்டிக் கொண்டு மழையில் சிலிர்க்க நனைவான்.

    அவன் கவிதை எழுதுவான்.

    'கவிதை எழுத

    காகிதம் எடுத்தேன்

    கடைக்குட்டி

    கப்பல் கேட்டான்

    கவிதை கப்பலானது

    கப்பல் மூழ்கிப் போனது'

    அவன் கவிதைகள் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்காத இலக்கியப் பத்திரிகைகளில் வரும். நிறையவே வரும்.

    ஊரெல்லாம் அவனைப் பாராட்டும்.

    வீட்டுக்குள்ளே வெடிப்பாள் தாய்.

    உருப்பட மாட்டேடா நீ! பத்தும், பதினைஞ்சும் வருது. இதை வச்சு பங்களா கட்டு. பெருசா எழுதறானாம் கவிதை! சினிமாவுக்குப் போஸ்டர் ஒட்டறவன் உனக்கு அதிகமாச் சம்பாதிக்கிறான்.

    லாப, நஷ்டக் கணக்குப் பார்த்து நான் எழுதலைம்மா. என் எண்ணங்களை எழுத்திலே வெடிக்கிறேன். வடிக்கிறேன். இந்தத் தொகை கூட வரலைன்னாலும் நான் எழுதுவேன்ம்மா என்று, சொல்ல நினைப்பான். சொல்ல மாட்டான்.

    பொதுவாக அவன் பேசுவது குறைவு.

    அமைதியாய் ரசத்தில் காரமில்லா விட்டாலும், மோருக்கு உப்புப் பத்தாவிட்டாலும் விக்கினால், தண்ணீர் கேட்காமலும் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவான்.

    பக்கத்து வீட்டுக்காரர் இவனிடம் எப்போதாவது பல்பொடி தீந்துடிச்சி கொஞ்சம் தாங்க. நாளைக்குத் தர்றேன் என்பார்.

    என் கவிதைகள் படிச்சிருக்கீங்களா? என்பான் கொடுத்துக் கொண்டு.

    அட! போங்க தம்பி. உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க.

    அதன் பிறகு இவன் பற்பொடி தருவதில்லை.

    இளங்கோ அவன் பெயர், பி.ஏ. லிட்ரசர் முடித்து வழக்கமான இளைஞர்கள் போல் பயோ-டேட்டா எழுதி, போஸ்டல் ஆர்டர் இணைத்து, ஸ்டாம்ப் ஒட்டி...

    அக்னாலெட்ஜ்மெண்ட் கார்ட் கூட வருவதில்லை.

    எந்தப் பரீட்சையில் என்ன கேட்பார்கள் எந்த இண்டர்வ்யூவிலே என்ன கேட்பார்கள் என்பது துல்லியமாக அவனுக்குத் தெரியும்.

    அவனுக்கு விடை தெரியாத ஒரே கேள்வி...

    எப்போ வேலை வரும்.

    இளங்கோவுக்கு எல்லோர் மீதும் வெறுப்பு. யாருமே அவனைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருப்பதில் கோபம். அவன் உணர்ச்சிகளை மதிக்கத் தவறுவதற்காக வேகம்.

    அவனை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றவன் ராகவன்.

    இளங்கோ, நீ மற்றவங்க கிட்டேர்ந்து நிறைய மாறுபடறே. ஐ லைக் இட் இயற்கையை ரசிக்கிறே. எல்லாராலேயும் ரசிக்க முடியாது. வித்தியாசமாக நினைச்சுப் பார்க்க முடியாது. நினைச்சுப் பார்க்கிறதை வெளிப்படுத்த முடியாது. உன் கவிதைகள் சிம்ப்லி சூபர்ப்.

    தாங்க்ய ராகவன். என்னை என்க்ரேஜ் பண்ணிப் பேசிய ஒரே ஜீவன் நீதான்.

    அதன்பின் அவர்கள் இருவரும் தினம் காலை விடியல் பொழுதில் பேசிக்கொண்டே நடப்பார்கள். ரசிப்பார்கள்.

    மகிழ்ச்சியோ, துக்கமோ அதிக நாட்கள் நிலைத்தால் ஆண்டவனுக்குப் பிடிப்பதில்லை.

    அன்று ராகவன் சைக்கிளில் பக்கத்தூர் சென்று, திரும்பி வரும்போது விசிலடித்துக் கொண்டே ஓட்டி எதிரே வந்த லாரியில் மோதி...

    இளங்கோ சத்தமாய் அழுதான்.

    'இனி யாரிடம் நான் பேசுவேன் ராகவ்? என் ரசனைகளைப் பகிர்ந்து கொள்வேன்? யாரால் புரிந்து கொள்ள முடியும்? உன் ஒருவனால்தானே வழியும் முன் கண்களைத் துடைக்க இயலும்?’

    மறுபடி தன் பழைய தனிமை உலகத்துக்குச் சென்று விட்டான் இளங்கோ.

    அந்த நாள் அவனுக்கு நல்ல செய்தி கொண்டு வந்தது.

    உடைத்து பிரித்த கடிதத்தில், உருப்படாதவன் என்ற பட்டத்தைத் துடைக்கும் உத்தியோகம் வந்திருந்தது.

    பெங்களூர், தனியார் நிறுவனம், கிளார்க், 550 ரூபாய் சம்பளம். இரண்டு தினங்களில் சேர வேண்டும்.

    இளங்கோ

    Enjoying the preview?
    Page 1 of 1