Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paartha Vizhi Paartha Padi…
Paartha Vizhi Paartha Padi…
Paartha Vizhi Paartha Padi…
Ebook231 pages1 hour

Paartha Vizhi Paartha Padi…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இனிய நட்புக்கு

வணக்கம். இது வரை சிறுகதை மற்றும் நாவல்களின் மூலமாக மட்டுமே என்னை அறிந்தவர்களுக்கு இந்த கயிலாய யாத்திரைத் தொடரை பெருமையோடு அளிக்க விழைகிறேன். இதனை வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒரு முறையாவது திருக்கயிலாயம் சென்று வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். உங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், எனது மின்னஞ்சல் முகவரியை இங்கு அளித்திருக்கிறேன்.

இதற்கு முன்னுரை எழுதித் தந்ததோடு இல்லாமல், இப்புத்தகத்தின் மேலட்டையை வடிவமைத்து தந்துள்ள என் மகள் வித்யாவுக்கும் எனது அன்பும், நன்றியும் கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்
வித்யா சுப்ரமணியம்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580105704533
Paartha Vizhi Paartha Padi…

Read more from Vidya Subramaniam

Related to Paartha Vizhi Paartha Padi…

Related ebooks

Related categories

Reviews for Paartha Vizhi Paartha Padi…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paartha Vizhi Paartha Padi… - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பார்த்த விழி பார்த்த படி...

    (திருக்கயிலாய யாத்திரை)

    Paartha Vizhi Paartha Padi…

    (Thirukailaya Yathirai)

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திருக்கயிலாய யாத்திரை பகுதி – I

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முடிவுரை

    திருக்கயிலாய யாத்திரை பகுதி – II

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    முடிவுரை

    என்னுரை

    இனிய நட்புக்கு

    வணக்கம். இது வரை சிறுகதை மற்றும் நாவல்களின் மூலமாக மட்டுமே என்னை அறிந்தவர்களுக்கு இந்த கயிலாய யாத்திரைத் தொடரை பெருமையோடு அளிக்க விழைகிறேன். இதனை வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒரு முறையாவது திருக்கயிலாயம் சென்று வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். உங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், எனது மின்னஞ்சல் முகவரியை இங்கு அளித்திருக்கிறேன்.

    இதற்கு முன்னுரை எழுதித் தந்ததோடு இல்லாமல், இப்புத்தகத்தின் மேலட்டையை வடிவமைத்து தந்துள்ள என் மகள் வித்யாவுக்கும் எனது அன்பும், நன்றியும் கூறிக் கொள்கிறேன்.

    அன்புடன்

    வித்யா சுப்ரமணியம்

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகருக்கு.

    பல வருடங்களுக்கு முன் என் அம்மாவுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அதில் என் தாயின் எழுத்துத்திறன், கதைக் கருக்கள் பற்றி மிக அருமையாக விமர்சித்திருந்தவர் கூடவே தங்கள் விரல் பற்றி வளரும் உங்கள் இரண்டு மகள்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் அவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார். அதைப் படித்த போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உள்ளே சின்னதாக கர்வமும் கூட ஏற்பட்டது. அன்று முழுவதும் என் தாயின் விரல்களைப் பற்றிக் கொண்டிருந்தேன்.

    உறவினர், நண்பர்கள் அனைவரிடமும் அந்த கடிதத்தைப் பற்றிக் கூறி பெருமைப்பட்டுக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. அப்பழுக்கில்லாத என் தாயின் அன்பை விரல்களின் மூலம் உணர்ந்திருக்கும் பெருமையில் இன்று என் விரல்களால் பேனா பிடித்து என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ஒரு நல்ல எழுத்தாளராகவும் அன்பான தாயாகவும் இருந்து என்னையும், என் தங்கையையும் பெருமையும், சந்தோஷமும் அடையச் செய்த என் தாய் இன்று எங்கள் முன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இந்த யாத்திரைக் கட்டுரையைப் படிக்கும் போது அது உங்களுக்கும் புரியும். திருக்கயிலாய யாத்திரை என்பது மிகவும் புனிதமான யாத்திரை மட்டுமல்ல கடினமான யாத்திரையும் கூட. ஒரு முறை சென்று வருவதே பெரிய விஷயம் என்பார்கள், ஆனால் என் அம்மா தெய்வ அனுக்கிரகத்தால் இரண்டு முறை வெற்றிகரமாக சென்று வந்திருக்கிறார். இந்த யாத்திரைக்காக என் அம்மா பல வருடங்கள் ஏங்கிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அவர் வேண்டுதலை ஏற்று தான் தெய்வம் இரண்டு வாய்ப்புகளை அளித்துள்ளது போலும். முதல் முறை வெளிபரிக்கிரமா, இரண்டாவது முறை உட்பரிக்கிரமா என்று கயிலாயத்தின் மிக அருகாமை வரை சென்று ஆத்மலிங்க தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போது என் பெருமையும் சந்தோஷமும் கூடுகிறது. இந்த கட்டுரையின் மூலம் அவரோடு நாமும் கயிலாயம் செல்வது போல் உள்ளது.

    தன் யாத்திரை குறித்தும், சக யாத்ரிகர்கள் குறித்தும் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரித்திருக்கும் விதம் அனைவரையும் கவரும். வாசகருக்கு, பக்தியின் வேறு சில பரிமாணங்களையும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கவை. திருமதி சுகந்தா காளமேகத்தின் "கானத்திலான பூஜை, பிரதோஷ பிரசாதமாக கேட்பரீஸ், சாக்லேட், திபெத்திய ஓட்டுநர் லாபாவின் ‘கயிலை’ மலையானே போற்றி போற்றி’ இதையெல்லாம் வாசிக்கும் போது தெய்வத்தின் மீதுள்ள பக்தியை அனைவருமே தங்களுக்குரிய வகையில் தூய்மையாக வெளிப் படுத்தியிருக்கும் விதம் கண்டு மனது பிரம்மிப்பிலாழ்த்துகிறது.

    என்னைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும், கயிலை செல்வதற்கு முன்பே இறைவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். கயிலாயத்திலிருந்து வருகிறபோது அந்த இறைமையை தன்னுள் முழுவதுமாக சுமந்து கொண்டு வந்துள்ளார்கள்.

    இந்த யாத்திரையின் பலன் என்று என் அம்மா எதை நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் என்னைக் கேட்டால் அவருக்குக் கிடைத்த நல்ல நட்புகளைப் பற்றிதான் கூறுவேன்.

    திரு. பாலகிருஷ்ணன், திருமதி சுகந்தா, காளமேகம், ஜெயஸ்ரீ, சங்கரன், விங் கமாண்டர் திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி மைதிலி, செண்பகவள்ளி என்று இன்னும் பலர் ஒரு ‘Extended family’ யைப் போல் இன்றும் இறையருளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இவர்கள் அனைவரும் சென்று வந்த பர்வத மலை பயணத்தை படிக்கும்போது உங்களுக்கும் புரியும். இந்த அன்பும் நேசமும் இறையருளும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

    வித்யா சஞ்சய்

    திருக்கயிலாய யாத்திரை பகுதி – I

    1

    ஐந்து வருடங்களுக்கு முன் ‘தேவி’யில் எனது ஆசை முகம் மறந்தாயோ தொடர் வந்து கொண்டிருந்த சமயம் அது. அந்த கதையின் நாயகி வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க நேர்கையில் காதலிலிருந்து மெல்ல மெல்ல விலகி கடவுளை நோக்கிச் செல்கிறாள். இதுதான் நாவலின் கரு. இதன் ஒரு பகுதியாக எனது நாயகி நிருபமா மேற்கொள்ளும் யாத்திரை கயிலாய யாத்திரை. இந்தப் பகுதிகளுக்கு ஒவியர் திரு. மணியம் செல்வம் அவர்கள் வரைந்திருந்த ஓவியங்கள் மிக தத்ரூபமாக அமைந்திருந்ததைக் கண்டதும் எனக்கு சந்தோஷமும் வியப்பும் ஏற்பட்டது. உடனே அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய கையோடு கேட்டேன்.

    இவ்வளவு தத்ரூபமாக எப்படி?

    அது எனக்குள் பதிந்திருக்கிறது. நான் கயிலாயம் சென்று வந்திருக்கிறேன்

    அவர் சொன்னதும் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகள் எழுத்தில் வடிக்க இயலாதவை.

    நீங்கள் போயிருக்கிறீர்களா?

    ம.செ. பதிலுக்கு என்னிடம் கேட்டார்.

    இல்லை

    ஆச்சர்யமாக இருக்கிறது. போகாமலா

    இப்படி எழுதியிருக்கிறீர்கள்?

    புத்தகங்கள் படித்திருக்கிறேன். நிறைய விசிடி பார்த்திருக்கிறேன். அதை வைத்து எழுதினேன்.

    வீட்டுக்கு வாருங்கள். மானஸரோவர் தீர்த்தமும் சிவமூர்த்தமும் தருகிறேன்.

    இப்படி அவர் சொன்னதும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். உடனே அவர் வீட்டுக்குப் போனேன். ஒரு பாட்டிலில் இரண்டு டேபிள் ஸ்பூன் தீர்த்தமும் கரு நிறத்தில் ஒரு சிவமூர்த்தமும் கொடுத்தார். அந்த மூர்த்தம் என் உள்ளங்கைக்கு வந்த போது காலோடு தலை ஒரு சிலிப்பு பரவியது. மனசு ஆனந்தக் கூத்தாடியது. விலை மதிப்பேயில்லாத ஒரு பொக்கிஷம் கிடைத்து விட்டாற் போல். அதை ஒரு கண்ணாடி கிண்ணத்திற்குள் வைத்து தினமும் பூ வைத்து விட்டுத்தான் மறு வேலை.

    கயிலாயத்தைப் பற்றி திரு. மணியம் செல்வம் நிறைய சொன்னார். நீங்களும் கண்டிப்பாக போவீர்கள் பாருங்கள் என்றார்.

    நானா...? நான் திகைத்தேன். போவதைப் பற்றி அது வரை நான் சிந்தித்து கூடப் பார்த்ததில்லை. அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பது என் எண்ணம். நான் சொல்வது உடல் சக்தியை அல்ல. பணத்தை என் குடும்ப சூழலில் ஒரு லட்ச ரூபாய் செலவழித்துக் கொண்டு செல்வதென்பது எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத வியஷம். ஆனாலும் கூட அந்த ஆசை எனக்குள் விதையாக உள்ளே விழுந்து விட்டது. என் கல்லூரி பருவத்தில் குமுதத்திலோ, விகடனிலோ சரியாய் நினைவில்லை. மானஸரோவரைப் பற்றி திருமதி வாணி ஜெயராம் தன் பேட்டியில் கூறியிருந்ததைப் படித்திருக்கிறேன். அதன் அழகையும் அமைதியையும் அவர் விவரித்திருந்த விதத்தில் நான் ஏக்கப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். நமக்கெல்லாம் எங்கே அதற்கெல்லாம் போகும் கொடுப்பினை இருக்கப் போகிறது என்று தோன்றும். அப்போதெல்லாம் எனக்குள் அடிக்கடி ஒரு கனவு வரும். பனி சூழ்ந்த மலைகளின் நடுவில் நான் செல்வது போலவும் ஏதோ ஒரு சிகரத்தின் அடியில் நின்று சிலிர்த்து வியப்பது போலவும். அது என்ன இடம் என்று கூட நான் யோசித்ததில்லை. ஏதோ கனவு என்று விட்டு விடுவேன். ஆசை முகம் மறந்தாயோ? எழுதுவதற்காக கயிலாய விசிடி பார்த்த போது எனக்கு ஏற்கனவே அது பரிச்சயமான இடம் போல் தோன்றியது. என் கனவுகளில் நான் கண்ட இடம் தான் வி. சி. டி. யில் நான் பார்த்தது. இந்த அனுபவம் இறைமை எனக்குக் கொடுத்த வரம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல.

    அந்த மூர்த்தத்திற்கு பூ வைக்கும் போதெல்லாம் வேண்டிக் கொள்வேன்.

    எப்போது எனக்கு கயிலாய தரிசனம் கிடைக்கும்?

    நாளாக நாளாக எப்போது என்ற வார்த்தை போய் எனக்கு வேண்டும் எனக்கு வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தேன். விசிடி பார்ப்பதற்கு முன் கனவில் கண்ட இடம், பார்த்த பின் நான் கனவு காணும் இடமாயிற்று.

    ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து முழு ஆண்டுகள் பூ வைத்து அந்த கயிலாயபதியிடம் கெஞ்சியிருக்கிறேன். கொஞ்சியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். எனக்குத் தெரியும். அவனைக் காண நான் மட்டும் முடிவு செய்தால் போதாது. அவனருளால் மட்டுமே அவனைக் காண முடியுமென்று. அந்த அருளுக்காகத்தான் நான் கெஞ்சியதும் அழுத்தும்.

    18.1.2006 அன்று காலையில் பூஜையிலிருந்த சிவமூர்த்தத்தின் மீதிருந்த நிர்மால்யத்தை எடுத்து புதிய பூவைத்த க்ஷணம் அருகிலிருந்த தொலைபேசி அடித்தது.

    உடனே எடுத்தேன். எதிர்முனையில் என் சின்ன அக்காவின் கணவர்தான் பேசியது. என் இயற்பெயரை சொல்லி அழைத்தார்.

    உஷா கைலாஷ் யாத்திரை வரயா? அடுத்த வினாடி.

    நான் வருகிறேன் என்றேன் அந்த வார்த்தையை சொல்ல நான் யோசிக்கவேயில்லை. ஏனெனில் சொல்ல வைத்ததே அவன் தானே.

    போனை வைத்து விட்டு உடனே அருகிலிருந்த கயிலாய புகைப்படத்தை ஒரு பார்வை பார்த்தேன், அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. அது ஆனந்தக் கண்ணீர்.

    ஒரு வழியாக உன் மனம் இளகியதா? நன்றி பகவானே நன்றி.

    இதற்குத்தானே இத்தனை காலம் காத்திருந்தேன்.

    அன்றே பாஸ்போர்ட் வாங்க என் அலுவலகத்தில் தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தேன். பிறகு பாஸ்போர்ட் அது கிடைத்த பிறகு விடுப்புக்கான அனுமதி மூன்று வரியில் இதை எழுதி விட்டாலும் இந்த மூன்றும் சுலபத்தில் கிடைத்து விடவில்லை. எவ்வளவோ அலைச்சல், எத்தனையோ பேரின் உதவியோடுதான் ஒவ்வொன்றாகக் கிடைத்தது.

    இதற்கு நடுவில் ஜனவரி மாதம் தொடங்கி வரிசையாய் பல மீட்டிங் நடந்தது இது தொடர்பாக. இந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை. உடல் அளவிலும் மனதளவிலும் நம்மை தயார் செய்து கொள்ள இவை மிகவும் உதவியாக இருக்கிறது. தவிர சக யாத்ரிகர்களோடு அறிமுகம் நட்பு என அங்கேயே மற்றவர்களோடு நல்ல உறவு துவங்கி விடுகிறது."

    மொத்தம் அறுபத்தி இரண்டு பேர் கொண்ட எங்கள் குழுவின் ஆர்கனைசர் திரு. அனந்த பத்மனாபன் இந்திய வழியிலும், நேபாள வழியிலுமாக ஐந்து முறை கயிலாயம் சென்று வந்தவர். நூற்றுக்கணக்கானவர்களுக்கு கயிலாய தரிசனம் செய்து வைத்தவர்.

    இந்திய வழியில் கயிலாய யாத்திரை செல்ல மிகுந்த அதிர்ஷ்டமும், தேக ஆரோக்கியமும் அவசியம். அதற்கேற்ப யாத்திரையும் கடினமாக இருக்கும். அதோடு ஒப்பிடுகையில் நேபாள வழியில் மிக சொகுசான பயண அனுபவம் கிடைக்கும் கயிலாயத்தின் அடிவாரம் என்று சொல்லப்படும் டார்ச்சேன் வரை ஜீப்பில் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

    நான் வடநாட்டுப் பக்கம் எந்த யாத்திரையும் சென்றதில்லை. அப்படிப்பட்டவளுக்கு ஜாக்பாட் அடித்தாற்போல் எடுத்த எடுப்பிலேயே ராஜயாத்திரை எனச் சொல்லப்படும் கயிலாய யாத்திரை செல்லும் யோகம் கிடைத்தது என்றால் அதற்கு காரணம் எனது ஐந்து வருட பிரார்த்தனை. என் நச்சரிப்பு தாங்காமல் அந்த சிவன் மனமிரங்கியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

    இந்த யாத்திரைக்காக நான் பலவிதங்களில் என்னை தயார் செய்து கொண்டேன். தினசரி காலையில் ஒரு மணி நேரம் எளிய யோகப் பயிற்சிகள், மாலையில் அலுவலகத்திலிருந்து கடற்கரை வழியே வீடு வரை வேகமான நடைப்பயிற்சி. சில நேரம் மணலில் இறங்கியும் நடப்பதுண்டு. முடிந்தவரை மாடிப்படி ஏறி இறங்குவது. லிப்ட் உபயோகிப்பதில்லை. இவையெல்லாம் செய்தால் தான் கயிலாயம் செல்ல முடியுமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்ல மாட்டேன். எங்கள் குழுவில் நிறைய பேர் மேற்படி எதுவும் செய்யாமல் தான் எங்களோடு வந்தார்கள். கயிலாய பரிக்கிரமாவை தொண்ணூறு சதவிகிதம் நடந்தே முடித்தார்கள் பாஸிடிவ் எண்ணமும். நம்மால் முடியும் என்ற ஆன்ம பலமும் இருப்பவர்களுக்கு எதுவும் கடினமில்லை. எங்கள் குழுவில் நிறைய பேர் ஆன்ம பலத்தோடு இருந்தார்கள். அதே நேரம் மேற்படி பயிற்சிகள் செய்வது நமக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என்பது என் அனுபவத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1