Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Summa Irukkatha Pena
Summa Irukkatha Pena
Summa Irukkatha Pena
Ebook286 pages1 hour

Summa Irukkatha Pena

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன்.

பிறகுதான் என் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு.

- ரா.கி. ரங்கராஜன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580126704486
Summa Irukkatha Pena

Read more from Ra. Ki. Rangarajan

Related to Summa Irukkatha Pena

Related ebooks

Related categories

Reviews for Summa Irukkatha Pena

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Summa Irukkatha Pena - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    சும்மா இருக்காதா பேனா

    Summa Irukkatha Pena

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    முன்னுரை

    1. வாரீர், பிரார்த்தனை செய்வோம்

    2. சுஜாதா

    3. ஒரு ஸிரப் மூடியின் கதை

    4. வீட்டுக்கு ஒரு மருமகள் அவசியம்

    5. தப்பாய்ச் சொன்னால் தலை போகும்!

    6. அதிசயங்களுக்குப் பஞ்சமில்லை

    7. விரல் புராணம்

    8. நடுத் தெருவில் கிடைத்த நல்லுரை

    9. ஒரு கோபமான கடிதம்

    10. அவர் ஒரு பெண்!

    11. பார்ட்டியில் ஒரு பாட்டி

    12. நாய் மனிதனின் தோழன்

    13. மூன்று கட்டை, இரண்டு குச்சி

    14. வழக்கறிஞர் சொன்ன கதைகள்

    15. நேர்மையின் விலை என்ன?

    16. மும்மூர்த்திகளைப் பற்றி மூன்று புத்தகங்கள்

    17. பணக்காரனும் தவளையும்

    18. டயரி எழுதாமலிருப்பது எப்படி?

    19. மறுபடியும் டயரி

    20. அஸ்க்! அஸ்க்!

    21. புள்ளோசை

    22. ஏப்ரல் நாலாம் தேதி

    23. விரல்கள் இருப்பது எதற்கு?

    24. காதுகள் இல்லாத குழந்தை

    25. டிவி ரிப்பேர் பார்த்த சிங்கம்

    26. எங்களூரு பெங்களூரு

    27. நீயும் நீங்களும்

    28. ஒரு ஜூரரின் அனுபவம்

    29. ஒரு ராஜாவின் தலை

    30. லண்டனிலிருந்து வந்தவை

    31. ஒன்றை நினைக்கின்...?

    32. கும்பகோணம் மகாமகம்

    33. பதினைந்து நீதிகள்

    34. அப்படியே ஆகுக!

    35. ப்ளேடு தானம் கூடாது

    36. எந்தக் கிழமையில் நகம் வெட்டலாம்?

    37. அன்னை

    38. சாபங்கள் பலிக்குமா?

    39. ராஜாஜி முதல்வராக இருந்த போது

    40. பயமுள்ள படிப்பு

    41. யேட்டி

    42. தோற்றவரை கௌரவியுங்கள்

    43. காதுகள் சிவந்தது ஏன்?

    44. நித்ரா தேவி பற்றிய பிரச்னைகள்

    45. அரசியலை ஒரு நாளும் வெறுக்க வேண்டாம்

    46. ஜோரதுஸ்டிரா

    47. பாட்டு என்றால் ஓட்டம்

    48. ஸரிகம

    49. அற்பமான, ஆனால் அதிசயமான துணுக்குகள்

    50. யார் மக்கு! யார் புத்திசாலி?

    51. இது எப்படி இருக்கு?

    52. என்னைத் தெரிகிறதா?

    53. பறவைகளுடன் ஒரு போர்

    54. ஏற்பது இகழ்ச்சி

    55. உலகம் ஆச்சரிய மயம்

    56. இது தேர்தல் பருவம்

    57. ரயிலில் ஒரு கதை

    58. இளவரசன் வைத்த போட்டி

    முன்னுரை

    ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன்.

    பிறகுதான் என் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு.

    இவ்வளவும் எழுதுவதற்கு இறைவனின் அருள் முதல் காரணம். இரண்டாவது, இதழின் ஆசிரியரும் அதிபருமான திரு. கே. எஸ். ராமகிருஷ்ணன் இடையறாது கொடுத்து வருகிற ஊக்கம். தெய்வம் அவருக்கு எல்லா நலன்களும் அருள வேண்டுமென்று பிரார்த்திப்பதைத் தவிர வேறெப்படி நன்றி சொல்வேன்?

    ரா.கி. ரங்கராஜன்

    1. வாரீர், பிரார்த்தனை செய்வோம்

    எல்லா ஜோக்குகளுமே சிரிக்கக் கூடியதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சில ஜோக்குகள் குரூரமாக இருப்பதுண்டு.

    மாமியார்களைப் பற்றிய ஜோக்குகளும் அப்படித்தான். இத்தனைக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளைப் பிரித்தால், தன் மாமியார்களைப் புகழ்ந்து பாராட்டி மருமகள்கள் எழுதும் கட்டுரைகள் நிறைய வருகின்றன. ஆனாலும் மாமியாரைக் கிண்டல் செய்யும் ஜோக்குகள் குறையவில்லை.

    ஒரு சினேகிதர் சொன்னது ரொம்பக் கொடுமை.

    ஒரு பணக்கார அம்மையாருக்கு மூன்று பெண்கள். கல்யாணமாகிக் கணவன்மார்களுடன் நல்லபடி இருக்கிறார்கள். இருந்தாலும், மூன்று மருமகன்களில் யார் உசத்தி என்று அறிய அந்த மாமியாருக்கு ஆசை. மூத்த மகனை ஒரு நாள் வரவழைத்தாள். அவனுடன் பேசிக்கொண்டே ஓர் ஏரிக்கரை ஓரமாகப் போனாள். திடீரென்று கால் வழுக்கிய மாதிரி நடித்து ஏரிக்குள் விழுந்து விட்டாள். 'காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!' என்று அலறியதும், அந்த மாப்பிள்ளை தடாலென ஏரிக்குள் குதித்தான். மாமியாரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

    மறுநாள் காலை அவனுடைய வீட்டு வாசலில் ஒரு விலையுயர்ந்த சொகுசுக் கார் நின்றது. 'அன்புள்ள மாப்பிள்ளைக்கு, ரொம்ப நன்றி. இப்படிக்கு மாமியார்’ என்று ஒரு சீட்டு இருந்தது.

    அடுத்த நாள் இரண்டாவது மாப்பிள்ளையை வரவழைத்து, இதே போல் ஏரிக்குள் தற்செயலாக விழுவது போல் விழுந்து அலறினாள். அவனும் ஏரியில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினான். மறுநாள் இன்னும் விலையுயர்ந்த கார் அவனுடைய வீட்டு வாசலில் நின்றது. 'அன்புள்ள மாப்பிள்ளைக்கு, ரொம்ப நன்றி. இப்படிக்கு மாமியார்' என்று அதில் ஒரு சீட்டு இருந்தது.

    இதே போல் மூன்றாவது மாப்பிள்ளையையும் பரீட்சித்தாள் அந்த மாமியார். ஏரியில் விழுந்து, 'காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’ என்று அலறினாள். அந்த மாப்பிள்ளை லட்சியமே பண்ணவில்லை. மாமியார் கத்தக் கத்த அவன் பாட்டுக்குப் போய்விட்டான். அந்த அம்மையாருக்கு நீந்தத் தெரியாது. ஏரியில் மூழ்கி இறந்தே போய்விட்டாள்.

    அடுத்த நாள் அந்த மூன்றாவது மாப்பிள்ளையின் வீட்டு வாசலில் ஒரு சொகுசுக் கார் நின்றிருந்தது. முந்தின இரண்டு கார்களையும் விட ஒசத்தியானது. அதில், அன்புள்ள மாப்பிள்ளைக்கு, ரொம்ப நன்றி. இப்படிக்கு மாமனார்' என்ற சீட்டு இருந்தது.

    மேற்கண்ட ஜோக்கை சொல்லிவிட்டு இடி இடியென்று சிரித்துக் கொண்டே அந்த நண்பர் போய்விட்டார். வெகு நேரத்துக்கு எனக்கு என்னவோ போலிருந்தது. என் மாமியாரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். ஈ எறும்புக்குத் தீங்கு நினைக்காமல், என் மீது மட்டற்ற பிரியம் வைத்து, இளம் வயதிலேயே காலமாகி விட்டவள். நோயாளியான அவளிடம் என் மாமனார் வைத்திருந்த பரிவுக்கு எல்லையே இல்லை.

    வருத்தப்படும் மனசுக்கு ஆறுதலாக வேறு நல்ல பொன்மொழிகளைப் படித்தேன். அதில் சில:

    'ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் ஒலி காதில் விழுந்தால் மனசுக்குள் ஒரு சிறு பிரார்த்தனை செய்யுங்கள். யாரோ ஒருவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிற செயலாகும்.

    பிரார்த்தனை செய். உன் கவலையை கடவுள்படட்டும்.

    முதுகின் மீதுள்ள சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதே. முதுகுக்கு அதிக வலிமை கொடுக்கும்படி பிரார்த்தனை செய்.

    நீ கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் சொல்வதை நீ கேட்பது தியானம்.

    ஆசைப்படுவது பிரார்த்தனையாகாது.

    முக்கியமான இடங்களில் போர் வீரர்களை நிறுத்தி வைத்தபின் தளபதி நிம்மதியாகத் தூங்குகிறான். பிரார்த்தனை செய்வது அப்படிப்பட்டதே.

    கடவுளே, உன்னை நான் மறக்கலாம். என்னை நீ மறக்காதே.

    பிரார்த்தனை என்பது, கிணற்றுச் சகடையில் இரட்டை வாளிகள் வைப்பது போல. ஒன்று கீழே இறங்கி நீரை மொள்ளும்போது மற்றது நீரை நிரப்பிக் கொண்டு மேலே வருகிறது.

    மண்டியிடும்போது மனிதன் உயர்ந்து நிற்கிறான்.

    இது போன்ற பொன்மொழிகளின் கடைசியில், டோரதி ஹோகன் என்ற பெண்மணி தன் தாயைப் பற்றி எழுதிய கவிதையொன்று வந்தது. அது -

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - சின்ன வயதில் நான் இஷ்டப்பட்ட இசைக்கு என் இஷ்டப்படி டான்ஸ் ஆடுவதற்கான தைரியத்தையும் பலத்தையும் எனக்குக் கற்பித்ததற்காக.

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - தெய்வம் படைத்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் அற்புதமானவன் என்றும், வாழ்க்கை என்னும் பயணத்தில் அவரவர்க்குரிய காலடித் தடத்தைப் பதிக்கவே ஒவ்வொருவரும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் எனக்குக் காட்டியதற்காக.

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருப்பாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - காண முடியாததைக் காணவும், செய்ய முடியாததை செய்யவும் எனக்குத் துணிவு கொடுத்ததற்காக.

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருப்பாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - தகுதியில்லாத சமயங்களில் கூட என் மீது நீ நிபந்தனையற்ற அன்பை செலுத்தியதற்காக.

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருப்பாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - குடும்பம், நட்பு, விசுவாசம், அன்பு ஆகியவை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவை என்று எனக்கு உணர்த்தியதற்காக.

    அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருப்பாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் - என்றைக்கு என்னைப் பெற்றெடுத்தாயோ அன்று தொட்டு, உன் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை, தியாகங்களையும், வேதனைகளையும், தனிமைகளையும், கண்ணீர்களையும், விரக்திகளையும் நீ தன்னலமற்றுத் தாங்கிக் கொண்டதற்காக.

    அம்மா! நீ இப்போது உயிருடன் இங்கே இல்லை. நான் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்து, நன்றி அம்மா நன்றி என்கிறேன் - நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நீ விரும்பினாயோ அப்படியே நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காக.

    ஒரு பிரார்த்தனை துணுக்கு:

    தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடத்தும் பாதிரியார் ஒருவரைச் சிறைக்கு வந்து கைதிகளுக்காகப் பிரார்த்தனை நடத்துமாறு அழைத்தார்கள். அவரும் அங்கே போய்க் கைதிகளைக் கூட்டி வைத்துப் பிரார்த்தனை நடத்திவிட்டுத் திரும்பினார்.

    'தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் சிறைக் கூடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?' என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.

    'எதுவுமில்லை. அங்குள்ளவர்கள் தண்டனை பெற்று விட்ட குற்றவாளிகள்,' என்று பதிலளித்தார் பாதிரியார்.

    2. சுஜாதா

    நாரத கான சபாவுக்குப் பல தடவைகள் போயிருக்கிறேன், சங்கீதக் கச்சேரிகளைக் கேட்பதற்காக. அரை ஹால்தான் நிரம்பியிருக்கும். பெரிய கச்சேரியானால் முக்கால் ஹால். (பிரதான ஹாலை சொல்கிறேன். மினி ஹாலை அல்ல). ஆனால் அன்றைக்கு மாதிரி ஹால் நிறைந்து வழிந்து கண்டது கிடையாது.

    ஒரு தமிழ் எழுத்தாளரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அது. சுஜாதாவின் சகல திறமைகளையும் அறிந்தவன் என்ற போதிலும் அப்படியொரு பிரம்மாண்டமான வாசகர் வட்டத்தை அவர் பெற்றிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

    சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் ஆகிய துறைகளில் ஆரம்பித்து, சினிமாத் துறையில் தடம் பதித்து, அறிவியல் துறையில் வானளாவச் சாதித்தவர். கம்யூட்டருக்குக் கணினி என்று பெயர் சூட்டியவர் அவர்தான்.

    சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் 'சசி காத்திருக்கிறாள்' என்ற ஒரு சிறுகதையில் அவருடைய மிக மிகப் புதுமையான நடையில் மயங்கிய நான், வலுவான அழகான கிளைகளுடன் ஒரு மகா விருட்சமாக அவர் விசுவரூபம் எடுத்த போது அவருக்கு தாசனாகி விட்டேன். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு அவருக்கு தாசன்கள் இன்று இருக்கிறார்கள்.

    ஆங்கில நாவல்களில் மூழ்கிப் போயிருந்த இளைஞர்களைத் தமிழின் பக்கம் திருப்பியதும், ஸயன்ஸ் என்ற பஞ்சாங்க சொல்லில் கிணற்றுத் தவளைகளாக வாழ்ந்து வந்த பேராசிரியர்களுக்கு அறிவியல் என்ற ஒரு புது உலகத்தைத் திறந்து காட்டியதும் சுஜாதாவின் மகத்தான சாதனை.

    திரைப்படங்களில் கண்ணால் பார்க்கும் காட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டுமே தவிர, வளவளவென்ற வசனங்களுக்கு வேலையில்லை என்று சொல்லி, ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்தவரும் அவரே.

    நான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் ஒரு வகை பக்தியும் வைத்திருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் என்னை என் தகுதி(?)களுக்கு மேலாகப் பல முறைகள் பாராட்டியதுதான் ஆச்சரியம்.

    'பட்டாம்பூச்சி' என்ற என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலுக்கு முன்னுரை எழுதித் தரும்படி அவரைக் கேட்டேன். எழுதி அனுப்பினார். புத்தகத்தைப் பற்றி எழுதியதைக் காட்டிலும் என்னைப் புகழ்ந்திருந்தது அதிகமாக இருந்தது. எனக்கே கூச்சமாக இருந்ததால் அதை நீக்கிவிடப் போகிறேன் என்று குமுதம் ஆசிரியர் எஸ். ஏ.பி.யிடம் சொன்னதும், 'அப்படி என்ன எழுதியிருக்கிறார்? படியுங்கள்' என்றார். படித்துக் காட்டினேன். 'மனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். அப்படியே இருக்கட்டும்' என்று அவர் சொல்லவே எதையும் நீக்கவில்லை.

    எந்த விஷயத்தில் சந்தேகம் நேரிட்டாலும் அவரைக் கேட்க நான் தயங்கியது கிடையாது. 'நான் கிருஷ்ணதேவராயன்' என்ற சரித்திர தொடர்கதையை ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய போது அவரிடம் யோசனை கேட்டேன். 'கிருஷ்ணதேவராயரைத் தங்களவர் என்று தெலுங்கர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். கன்னடியர்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். நீங்கள் அவரைத் தெலுங்கர் என்று வைத்தே எழுதுங்கள்,' என்றார் சுஜாதா. கிருஷ்ணதேவராயன் தன் கதையைத் தானே சொல்வதாக எழுதியிருந்தேன். அதில் உள்ள சிரமங்களை சொன்னார். பிறகு 'கிருஷ்ணதேவராயன் ஒரு மாமன்னன் என்று எழுதுவதோடு, அவன் ஒரு மனிதன் என்பதையும் காட்டுங்கள். 'அவனுக்கு முதுகு அரித்தது, சொரிந்து கொண்டான்' என்று எழுதுங்கள்,' என்றார். அதைப் பல இடங்களில் ஞாபகப்படுத்திக் கொண்டேன். ஓரிடத்தில் சிம்மாசனம் வசதியாக இல்லை என்று கிருஷ்ணதேவராயன் சலித்துக் கொண்டதாகக் கூட எழுதினேன். 'நான் கிருஷ்ணதேவராயன்' புத்தகமாக வெளிவந்தபோது மிகவும் பாராட்டி, கதையில் இருந்த நுணுக்கங்களை சுட்டிக் காட்டி முன்னுரை தந்தார்.

    'நாலு மூலை' கட்டுரைகள் புத்தகமாக வந்த போது அவருக்கு ஒரு பிரதியை அனுப்பினேன். அன்று இரவே போனில் என்னைக் கூப்பிட்டு மூச்சு விடாமல் புகழ்ந்தார். ஆனந்த விகடனிலும் அதைப் பற்றி எழுதினார். அதில், 'வாரா வாரம் எழுதிக் கொண்டு வரும் அருமையான கட்டுரைகளின் தொகுப்பு. Disciplined, Beautiful Writting' என்று தொடங்கி, 'நான் ரா.கி.ர.வின் எழுத்தின் ரசிகன். எழுபது எண்பதுகளில் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்து 'ராட்சஸன்யா நீ’ என்று அவர் பாராட்டும்போது, அதில் துளிக்கூடப் பொறாமை இருக்காது. காரணம், அவரே ஒரு சக ராட்சஸர். அவர் எல்லா வகை எழுத்துக்களையும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். சரித்திரக் கதை, சாகசக் கதை, த்ரில்லர், காதல் கதை, நகைச்சுவை, நாடகம், நையாண்டிக் கதை என ஒரு பத்திரிகையின் வாராவார அவசரத்துக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், கெடுவுக்கு சமரசம் செய்யாமல் பல புதுமைகள் செய்திருக்கிறார். எஸ்.ஏ.பி. உபாசகர். இவருடைய பரந்த அனுபவமும், கூர்மையான பார்வையும், நகைச்சுவை உணர்வும் பளிச்சென்ற உரைநடையும் ஒத்துழைக்க, இப்போது ஓய்வில் அவசரமின்றி இவர் எழுதும் அத்தனை கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, தன் அண்ணா ஆர். கே. பார்த்தசாரதியைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையை என் சிறந்த கட்டுரைகள் தொகுதியில் சேர்த்துவிட்டேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    எதற்காக வேண்டுமானாலும் அவரைக் கூப்பிடுவேன். சந்தேகம் கேட்பேன். ஒரு முறை, டிவியில் ஒரு சங்கீத நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சிறிய சல்லடை போன்ற வாத்தியத்தை மடியில் வைத்துக் கொண்டு ஒரு குச்சியால் தட்டிக் கொண்டிருந்தார் ஒரு வித்வான். இரவு பத்து மணி இருக்கும் அப்போது. டெலிபோன் போட்டு, அது என்னவென்று சுஜாதாவைக் கேட்டேன். 'நானும் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது சந்தூர் என்ற வாத்தியம்,' என்றவர், அந்த வாத்தியத்தின் சிறப்பையும் அதை இசைத்துக் கொண்டிருந்தவர் பண்டிட் சிவக்குமார் சர்மா என்பவர் என்றும் கூறி, அவருடைய பெருமையையும் சொன்னார்.

    இன்னொரு சமயம், ஆனந்த விகடனில் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள். அந்தப் புகைப்படத்துக்கேற்ற வர்ணனையை இரண்டு வரிகளில் எழுதும்படி பல எழுத்தாளர்களைப் பணித்தார்கள். எனக்கும் ஒரு படம் வந்தது. அதில் ஒரு நீண்ட பாதையில் காலடிகள் மட்டுமே இருந்தன. எனக்கு லாங்ஃபெலோ எழுதிய கவிதையொன்று

    Enjoying the preview?
    Page 1 of 1