Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Miss Violet
Miss Violet
Miss Violet
Ebook79 pages36 minutes

Miss Violet

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpa Thangadurai, an exceptional Tamil novelist, Written over 1000+ Novels and 300+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
Miss Violet

Related to Miss Violet

Related ebooks

Related categories

Reviews for Miss Violet

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Miss Violet - Pushpa Thangadurai

    9

    1

    ஒரு தென்னிந்திய நகரத்தின் வெளிப்புறத்தில் பெரிய ஏரி. ஏரிக்கு அருகில் பல காலனிகள்.

    காலனிகள் ஒன்றில் ஒரு நாள் மாலை நேரம். பிள்ளைகள் கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    விளையாட்டு திடீரென்று தடைப்பட்டது. ‘கப்’பென்று ஒரு துர் நெடி எங்கிருந்தோ வீசியது. அது போன்ற நெடியை அதுவரை அவர்கள் அனுபவித்ததில்லை. எங்கிருந்து வருகிறது இந்த நெடி?

    சுற்றிப் பார்த்தபோது எதுவும் தெரியவில்லை.

    "அதோ பாருடா!’’ என்றான் ஒரு பையன் ஒரு திசையைக் காட்டி!

    ரோஸ் என்று ஒரு காலனி நாய் அங்கே நின்று கொண்டிருந்தது. காலனி முழுதுக்கும் சொந்தமான நாய். வாயில் அது எதையோ கவ்விக் கொண்டிருந்தது. அதிலிருந்து தான் அந்தத் துர் நெடி வந்து கொண்டிருந்தது.

    ரோஸின் பக்கம் எல்லோரும் ஓடினார்கள். அதன் வாயில் இருப்பது ஒரு மாமிசத்துண்டு போல் தோன்றியது. அருகில் போனதும் அவர்கள் யாவரும் துள்ளினார்கள். பயந்து போய் ஒரே ஓட்டம் பிடித்தார்கள்.

    ஒரு மனித உடலின் கால் ஒன்றை அந்த நாய் தூக்கி வந்திருந்தது.

    காலனிக்குள் ஓடிய பையன்கள் ஒரே கூப்பாடு போட்டார்கள். தெரிந்தவர்களிடம் எல்லாம் போய்ச் சொன்னார்கள். வீட்டுக்காரர்களை எல்லாம் காபரா படுத்தி விட்டார்கள்.

    காலனி வாசிகளில் ஒருவர் டாக்டர். அவருக்கு விஷயம் எட்டியது. எல்லோரையும் போல் விஷயத்தைக் கேட்டு விட்டு, அவர் சும்மா இருக்கவில்லை. எழுந்து வெளியே போனார். மைதானத்தில் இருந்த ரோஸின் அருகில் போனார். மூக்கை கர்ச்சீப்பால் மூடிக் கொண்டு அதன் வாயிலிருந்த காலைக் கண்ணோட்டம் விட்டார். அது நன்றாக அழுகியிருந்தது. விஷயத்தைப் போலீசுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. போன் செய்து தெரிவித்தார்.

    அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் போலீஸ் வேன் துப்பறியும் நாய்களோடு வந்திறங்கியது. போலீஸ்காரர்கள் உடனே செயல்பட்டார்கள். நாய்கள் மோப்பம் பிடித்துக் கொண்டே ஏரிக்கரைப் பக்கம் சென்றன.

    ஏரிக்கரை அருகில் கழிநீர் செல்லும் ஒரு கால்வாய். அதன் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அடியில் நுழைந்து நாய்கள் நின்று விட்டன.

    போலீசாரால் பாலத்தின் கீழே இறங்க முடியவில்லை, அந்த அளவுக்குத் துர்நாற்றம் வீசியது.

    எனினும் பொருட்படுத்தாமல் இறங்கிப் பார்த்தபோது முதலில் அவர்களுக்குத் தென்பட்டது துண்டிக்கப்பட்ட மற்றொரு கால்!

    கால்கள் இரண்டும் கிடைத்தவுடன் போலீசார் உடலின் மற்ற உறுப்புக்களைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்தார்கள்.

    ஒரு அழகான ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தின் எட்டாவது பெண் தான் மிஸ் வயலட். அவளுடைய தந்தை இறந்து விட்டிருந்தார். தாய் ஒரு நர்ஸ்! அவளது கண்காணிப்பில் வளர்ந்து வந்த வயலட் அழகுள்ள கன்னியாக மாறியிருந்தாள்.

    பதினான்காம் வயதிலேயே அவளுக்கு ஒரு அபார மலர்ச்சி! கொழிக்கும் உறுப்புக்களை மறைப்பதற்கு அவள் ப்ராக் கஷ்டப்பட்டது. மெல்லிசான பிஞ்சு உதடுகள் வெல்வெட் துண்டம் போல் யாரையும் கவர்ந்து இழுத்தன.

    சுற்று வட்டாரம் முழுவதும் அவளைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியது. அவள் சிரித்தது, பேசியது எல்லாமே பலருக்குத் தினமும் பெரும் செய்திகளாக விளங்கின.

    தாயார் மிஸஸ் ராபர்ட்டின் கண்காணிப்பைவிட வயலட் தனக்குள்ளேயே வளர்த்துக் கொண்ட சட்ட திட்டம் மிக அதிகம்.

    தன் இனத்து மற்ற பெண்களைப் போல் பிறரிடம் சுதந்திரமாகப் பேச மாட்டாள். கூட்டங்களில் சேர மாட்டாள். டான்சுகளுக்குப் போக மாட்டாள்.

    அந்த வட்டார இளைஞர்கள் எல்லோரும் அவளை எவ்விதமாவது கவர்ந்துவிடத் துடித்தார்கள். ஆனால் வயலட் தனது வெளி உறவுகளை எல்லாம் இரண்டொரு வார்த்தைகளிலோ, புன்னகையிலோ முடித்துக் கொண்டாள். அதற்கு மேல் - யாருக்கும் இடம் கொடுக்கவில்லை.

    ஒன்றல்ல, இரண்டல்ல! ஏழு வருடங்கள் அவள் இந்த விதத்திலேயே இருந்து விட்டாள்!

    வயலட் ஒரு தொழிற்சாலைத் தலைமையகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்தாள். அங்கே பல இந்தியர்கள் அவளை வட்டமிட்டார்கள் மானேஜர் கூட நாசூக்காகச் சில வார்த்தைகள் விட்டுப் பார்த்தார். ஆங்கிலோ இந்தியப் பெண் ஆதலால் எளிதில் படிந்து விடுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் யாருக்கும் மசியவில்லை.

    வயலட்டுக்குத் தனது அழகு நன்றாகத் தெரிந்திருந்தது. அதன் வெவ்வேறு திசைப் பரிணமிப்புகளைக் காட்டுவதற்காக விதவிதமான டிரஸ் செய்வாள்.

    பிறருக்கு அவைகளைக் காட்டிக் கொள்வதில் உள்ளூர ஒரு விருப்பமும் இருந்தது. அவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு யாராவது பெரிய அந்தஸ்து உள்ள ஆபீசரோ, பணக்காரரோ தன்னை மணக்க முன் வர வேண்டும் என்று அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1