Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutram Muthal Kutram Varai
Kutram Muthal Kutram Varai
Kutram Muthal Kutram Varai
Ebook140 pages54 minutes

Kutram Muthal Kutram Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனி ஆளாக நின்று ஒரு பெரிய கள்ள நோட்டுக் கும்பலைப் பிடிக்கிறார் இன்ஸ்பெக்டர் வினாயகம். அதற்காக கலெக்டர் கையால் அவார்டு பெறுகிறார்.

ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அதே கள்ள நோட்டுக் கும்பலின் அதே கள்ள நோட்டு புழக்கத்திற்கு வருகிறது.

தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ் டிபார்ட்மெண்ட் ஸ்பெஷல் ஆபீஸர் சீனிவாசனை நியமிக்கின்றது. சீனிவாசன் ஐந்து வருடங்களுக்கு முன் அந்தக் கள்ள நோட்டைத் தயாரித்தவர்களைத் தேடிப் பிடிக்கிறார். ஆனால், அவர்களில் ஓரிருவர் இறந்திருக்க, உயிரோடிருப்பவரும் நடமாட்டமில்லாது படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார்.

“கரப்பான் பூச்சிகளைக் கூட அழித்து விடலாம்... கள்ள நோட்டை அழிக்க முடியாது போலிருக்கே?” என்று எண்ணிக் கொண்டே தீவிரமாய்த் துப்பு துலக்குகின்றார்.

புது கள்ள நோட்டு கும்பலை அவர் கண்டுபிடிக்கும் விதத்தை அங்குலம் அங்குலமாய் நகர்த்திச் செல்கிறார் நாவலாசிரியர். படிக்கும் வாசகர்களுக்கு ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் கதாசிரியரின் வெற்றி.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004842
Kutram Muthal Kutram Varai

Read more from Mukil Dinakaran

Related to Kutram Muthal Kutram Varai

Related ebooks

Related categories

Reviews for Kutram Muthal Kutram Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kutram Muthal Kutram Varai - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    குற்றம் முதல் குற்றம் வரை

    Kutram Muthal Kutram Varai

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 1

    1992.

    வெப்பக் காற்று வீசும் மே மாத மாலை. மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பின்னால் ஓடி ஒளியத் தயாராயிருந்தான் சூரியன்.

    அந்த வெப்பத்திற்கெல்லாம் சற்றும் அஞ்சாத ரசிகர் கூட்டம் கே.ஜி.தியேட்டர் முன் கால் கடுக்கக் காத்திருந்தது. கட்-அவுட்டில் ஹீரோ ஹீரோயினுடன் கன்னம் உரசிக் கொண்டிருந்தார். தங்கள் காதலியருடன் வந்திருந்த சில ரோமியோக்கள் இன்னும் சிறிது நேரத்தில் அந்த ஹீரோவைப் போல் தாங்களும் செய்யக் காத்திருந்தனர். ஜோடியோடு வராதவர்கள் காற்றில் ஜொள் விட்டுக் கொண்டிருந்தனர்.

    பக்கத்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் மக்களில் பெரும்பாலானோர் முகத்தில் சோகம் தெரிய, சிலர் மட்டும் இயல்பாய் இருந்தனர். பணி முடிந்து செல்லும் நர்ஸுகள் வீட்டில் காத்திருக்கும் கணவனுக்காகவோ, இல்லை குழந்தைக்காகவோ, அதுவுமில்லையென்றால் மாமியாருக்காகவோ அவசர அவசரமாக ஓடினார்கள்.

    செஞ்சிலுவைச் சங்க கட்டிடத்தின் கீழ்த் தளத்திலிருந்த அந்த ஹால் அளவான, நாகரீகமான கூட்டத்தோடு நிறைந்திருந்தது. வெளியே தேனீரும், சமோசாவும் விநியோகிக்கப் படும் இடத்தில் கும்பல் நிறைந்திருந்தது.

    கட்டிடத்தின் எதிரிலிருந்த கோர்ட் வளாகத்திலிருந்து கருப்பு கோட் வக்கீல்கள், உடன் வருபவர்களிடம் உரத்த குரலில் எதையோ சொல்லிக் கொண்டே வந்தனர்.

    செஞ்சிலுவைச் சங்க கட்டிடத்தின் தரைத் தளத்திலிருந்த ஹாலினுள்ளே, கோட் மற்றும் டை அணிந்திருந்த மாவட்டக் கலெக்டர் மேடையின் மத்தியில் சீஃப் கெஸ்டாக அமர்ந்திருக்க, இடதுபுறம் மாவட்டக் காவல்துறை ஆணையரும், வலதுபுறம் ஸ்பெஷல் ஆபீஸர் சர்மாவும் அமர்ந்திருந்தனர். பெரிய மீசைக்காரரான காவல்துறை ஆணையர், மீசையே இல்லாமல் மொழு... மொழு... வென்றிருந்த ஸ்பெஷல் ஆபீஸருடன் அமர்ந்திருந்தது மிகவும் வித்தியாசமாயிருந்தது.

    கீழே முதல் வரிசையில், பர்ஃப்யூமும் ஃபாரின் சரக்கும் கலந்த வாடையுடன், சில கரை வேட்டிகள் தங்கள் ஜால்ராக்களுடன் உட்கார்ந்திருக்க, ஹாலின் கடைசிப் பகுதியில் மீடியாக்காரர்கள் தங்கள் காமிராக்களுடன் தயாராயிருந்தனர். அதிலிருந்த ஒன்றிரண்டு பெண் ரிப்போர்ட்டர்கள் துரு... துருவென்று எதையோ கிறுக்கிக் கொண்டேயிருந்தனர்.

    வெளியே நிலவிக் கொண்டிருந்த வெப்பக் காற்றிற்கு நேர் மாறாக உள்ளே விரவியிருந்த ஏ.சி.காற்று அந்த ஹாலை ஊட்டியாக்கியிருந்தது.

    அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜீவானந்தம் மைக் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவரது கட்டைக் குரலும், காதோர நரையும், தடித்த மீசையும் அவர் ஒரு நேர்மையான... கறாரான அதிகாரி என்பதைச் சொல்லாமல் சொல்லின. அவரது தாறுமாறான போலீஸ் அடியை விட, கர்ண கடூரமான கட்டைக் குரல் மிரட்டலுக்குத்தான் வீரியம் அதிகமாம். சில குற்றவாளிகள் அவரது மிரட்டலிலேயே உண்மையை ஒப்புக் கொண்டுள்ளதை டிபார்ட்மெண்ட் இன்று வரை பேசிக் கொண்டிருக்கின்றது. தன் காட்டுக் கத்தலால் சில குற்றவாளிகளை சிறுநீர் கழியவும் வைத்திருக்கிறார்.

    ஒரு மாதம்... இரண்டு மாதமல்ல... கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே நமது டிபார்ட்மெண்டின் கண்களுக்கு மண்ணைத் தூவி விட்டு, சரளமாக கள்ள நோட்டுத் தொழில் புரிந்து கொண்டிருந்த கும்பலை... தனி ஒரு ஆளாகச் சென்று, கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம்... நம் காவல்துறைக்குக் கிடைத்த மாபெரும் சொத்து என்றே சொல்லலாம்...! இவரைப் போன்ற தீரம் மிக்க சின்சியர் ஆபீஸர்ஸ் இருப்பதால்தான் நம் தமிழ்நாடு காவல் துறை ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது என்ற பெயரைப் பெற்று... அந்தப் பெயரை இன்று வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது! சொல்லி விட்டு அவர் நிறுத்த,

    கூட்டத்தின் நாசூக்கான கைதட்டல், மேடைக்குக் கீழே முன் வரிசையில், வி.ஐ.பி.என்று எழுதப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் வினாயகத்தின் முகத்தில் லேசான புன்னகையை வரச் செய்தது. அந்த உத்தியோகத்தில் இருந்து கொண்டு ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காதவராய் அவர் இருப்பதால் டிபார்ட்மெண்டிலேயே பலருக்கு அவர் மீது மரியாதை. சிலருக்கு அவர் மீது கடுப்பு.

    அடுத்து நமது சிறப்பு விருந்தினரான, மாவட்ட ஆட்சியர், சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் அவர்களுக்கு பதக்கம் அணிவிப்பார். நிகழ்ச்சித் தொகுப்பாளினி லிப்ஸ்டிக் உதட்டால் அழகான குரலில் தெளிவாகச் சொல்ல,

    தன் இருக்கையிலிருந்து விருட்டென எழுந்து, வேக வேகமாய் நடந்து, மேடையேறிய சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம், தன் நெஞ்சை நிமிர்த்தி அந்தப் பதக்கத்தை குத்திக் கொண்டார். அதை அவர் தன் நெஞ்சில் வாங்கிய அந்த விநாடியில் அவர் முகத்தில் தெரிந்த பெருமிதத்தை பல சீனியர் ஆபீஸர்கள் பெருமையோடு கண்டு களித்தனர். சிலர் பொறாமையுடன் முகம் சுளித்தனர்.

    வீடியோக் காமிராக்கள் அந்தக் காட்சியை அப்பட்டமாய் விழுங்கிக் கொள்ள, ஸ்டில் காமிராக்கள் ஃப்ளாஷ் அடித்து சுருட்டின.

    கைதட்டல் நீண்ட நேரம் ஒலித்தது.

    அந்த விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற டீ பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தபடி மாவட்டக் கலெக்டர் புறப்பட்டுச் செல்ல, டீ பார்ட்டி துவங்கியது.

    பார்ட்டியின் போது பல காவல்துறை அதிகாரிகள் வந்து வினாயகத்துடன் கை குலுக்கி, கன்கிராஜுலேஷன்ஸ் சொல்ல, பெருமிதத்தில் மிதந்தாள் அவர் மனைவி கற்பகம்.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்லுவாங்க...! அது மாதிரி உங்க கணவர் பின்னால் நீங்களா?" என்று போலீஸ் கமிஷனர் கற்பகத்தைப் புன்னகையுடன் கேட்க,

    அழகாய் வெட்கப்பட்டுச் சிரித்தவளுக்கு நாற்பத்தி இரண்டு வயது என்றால், சொன்னவனைப் பைத்தியம் என்பார்கள், அல்லது அவனுக்கு நிச்சயம் தர்ம அடி கொடுப்பார்கள். பியூட்டி பார்லர் தீண்டாத நிஜ எழில். சுய பராமரிப்பில் விளைந்த சுந்தர வதனம்.

    அப்போது அவர்கள் அருகில் வந்து நின்ற ஜீன்ஸ் அணிந்திருந்த அந்த இருபது வயது இளைஞனை மீட்... மை சன் அபிஷேக்! என்று சொல்லி எல்லோருக்கும் அந்த நாற்பத்தி இரண்டு வயதுப் பெண்மணி அறிமுகம் செய்து வைக்க,

    வாட்...? உங்க பையனா? வாயைப் பிளந்தனர் சிலர்.

    உங்களுக்கு இவ்வளவு பெரிய பையனா...? ஆக்சுவலா உங்களையும் உங்க மகனையும் பார்த்தா அக்கா... தம்பி மாதிரிதான் இருக்கீங்க...! அம்மா... மகன்!ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! கமிஷனர் வாய் விட்டுச் சொல்லியே விட்டார். அந்த நேரத்தில் அவர் மனதினுள் வந்து போன அவருடைய சீக்காளி மனைவியின் சப்பிப் போன முகமும், வற்றல் தேகமும், வழக்கம் போல் அவருக்குள் ஒரு சோகத்தை ஏற்படுத்த, அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்தார். மனம் அழுதது அவருக்கு மட்டுமே தெரியும்.

    வினாயகத்திற்கும் அப்போதைக்கு அது பெருமையாகத்தான் இருந்தது.

    பார்ட்டி முடியும் போது, இரவு பத்தே கால் ஆகிவிட்டது. எல்லோருக்கும் குட் நைட் சொல்லி விட்டு, வெளியே வந்த வினாயகம், சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1