Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoorigai Erigindra Poothu…!
Thoorigai Erigindra Poothu…!
Thoorigai Erigindra Poothu…!
Ebook153 pages57 minutes

Thoorigai Erigindra Poothu…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுந்தரவடிவேலுவும், அவர் மனைவி புவனேஸ்வரியும் அந்தக் கிராமத்திற்கு நன்மைகளையே நினைக்கும் மூத்த தம்பதியினர். அந்த கிராமத்தில் சினிமா கொட்டகை இல்லாத காரணத்தால் அவ்வூர் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமத்திற்குச் சென்று சினிமா பார்த்து வர, மக்களின் அக்குறையைத் தீர்க்க படாத பாடு பட்டு அவ்வூருக்கு ஒரு சினிமா கொட்டகை கொண்டு வருகிறார் சுந்தரவடிவேலு. மேலும் அந்தக் கொட்டகையில் நல்ல நல்ல படங்களைப் போட்டு அவ்வூர் மக்களை நன்மக்களாகவே வைத்திருக்கின்றார். ஆனால். அவருக்குப் பிறகு வந்த அவரது மகன், மோசமான...தரமற்ற...ஆபாச படங்களைப் போட்டு மக்களின் மனதைக் கெடுக்க, சுந்தரவடிவேலுவின் மனைவியான புவனேஸ்வரி ஒரு அதிரடியான முடிவெடுத்து அந்தப் பிரச்சினையை முடிக்கிறார்.

சமூக அக்கறையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையில் பல வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்க பதித்து, வாசக நெஞ்சங்களை செம்மைப்படுத்துகிறார் ஆசிரியர்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004821
Thoorigai Erigindra Poothu…!

Read more from Mukil Dinakaran

Related to Thoorigai Erigindra Poothu…!

Related ebooks

Related categories

Reviews for Thoorigai Erigindra Poothu…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoorigai Erigindra Poothu…! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    தூரிகை எரிகின்ற போது...!

    Thoorigai Erigindra Poothu…!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 1

    நெற்றி நிறைய திருநீர்ப்பட்டை மற்றும் சந்தன, குங்குமத் தீற்றல்களோடு, வாயில் அஸ்வ த்வஜாய வித்மஹே... பாஸ ஹஸ்தாய தீமஹி... தந்தோ சூர்ய... ப்ரசோதயாத் என்று சூரிய பகவான் காயத்ரியை முணுமுணுத்துக் கொண்டு, தெய்வீக மணம் கமழ, எதிரே வந்த தர்மலிங்க குருக்களைப் பார்த்ததும்,

    என்ன குருக்களய்யா...? காலங்கார்த்தாலேயே எங்கேயோ கிளம்பிட்டீர் போலிருக்கு எண்ணைக்கடை வரதன் கல... கல வென்று மலர்ந்த முகத்துடன் கேட்டார்.

    ஆமாம் ஓய்...! நம்ம அப்பத்தாவைத்தான் போய்ப் பார்த்திட்டு வரலாம்னு... என்று குருக்கள் இழுக்க,

    என்ன சமாச்சாரம்... திடீர்ன்னு?

    என்ன ஓய் இப்படிக் கேட்குறீரு...? நம்ம அப்பத்தாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம சுகவீனமாய் படுத்திட்டிருக்காம்... அதான் ஒரு எட்டு போய்ப் பார்த்திட்டு வந்துடுவோம்!னு போய்க்கிட்டிருக்கேன்...! அது செரி... நீரு போய்ப் பார்த்திட்டு வந்துட்டீரோ? குருக்கள் கேட்க,

    எப்படி சாமி...? அப்பத்தா உடம்புக்கு சுகமில்லாமப் படுத்திருக்குன்னே இப்ப நீரு சொல்லித்தானே எனக்கே தெரியும்...? தெரிஞ்சிருந்தா உடனே போய்ப் பார்த்திட்டு வந்திருப்பேனே? எண்ணைக்கடை வரதன் அங்கலாய்க்க,

    சரி... அதனாலென்னா...? இப்பத் தெரிஞ்சிடுச்சல்ல...? வாரும் என்னோட... ரெண்டு பேருமாய்ப் போய்ப் பார்த்திட்டு வருவோம்!

    அதைக் கேட்டதும் எண்ணைக்கடை வரதன் நிதானமாய் யோசிக்க,

    ஏன் ஓய்...? வேற ஏதாவது அவசர சோலியாய்ப் போய்க்கிட்டிருக்கீரோ? குருக்கள் மேலும், கீழுமாய்த் தலையை ஆட்டியபடியே கேட்க,

    ம்... வாஸ்தவம்தான் வேற வேலையாய்த்தான் போய்க்கிட்டிருக்கேன்...! ஆனா... அது ஒண்ணும் அத்தனை அவசரமில்லை... இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு வேணும்னாலும் பார்த்துக்கலாம்...! ஆனா... அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லை!ங்கற தகவலை காதுல கேட்டதுக்கப்புறமும் எப்படி சாமி நிதானமாய் இருக்க முடியும்...? அதனால... வாரும் ரெண்டு பேருமாவே போவோம்! தன் திசையை மாற்றிக் கொண்டு, குருக்களுடன் நடக்க ஆரம்பித்தார் எண்ணைக்கடை வரதன்.

    நடக்க, நடக்க பேசிக் கொண்டே வந்தார் கோவில் குருக்கள் தர்மலிங்கம்.

    ஓய்... நான் இப்ப அப்பத்தாவைப் பார்க்கப் போறது... அவங்க சுகவீனத்துக்காக மட்டுமல்ல...! இந்த ஊரோட சுகவீனத்துக்காகவும்தான்...! பூடகமாய்ப் சொன்னார்.

    என்ன குருக்களய்யா... என்னமோ புதிர் போடுறீரு...! கோவிலுக்குப் பண்ண வேண்டிய பூஜை காரியம் ஏதாவது விட்டுப் போச்சா...? அதனால ஊருக்கு ஏதாச்சும் கேடு வந்திடுச்சா? வரதன் லேசான அச்சத்துடன் கேட்க,

    ஊருக்குக் கேடுதான் வந்திடுச்சு...! ஆனா அது பூஜை செய்யாததினால் அல்ல...! இந்த ஊருல ஒரு மனுஷன் தேவையில்லாத பூஜைகளை செய்யறதினால! சொல்லி விட்டு வரதன் முகத்தையே கூர்ந்து பார்த்தார் குருக்கள்.

    முகத்தைச் சுளித்த வரதன், புரியலையே...! நீங்க யாரைப் பத்திப் பேசறீங்க?

    அப்பத்தாவோட அருமை மகன் சக்திவேலுவைப் பத்தித்தான் பேசறேன்! சொல்லும் போதே குருக்களின் முகத்தில் ஒரு வெறுப்புத் தோன்றியது. அவனை நினைத்தாலே தன்னுடைய ஆச்சாரங்களுக்கு அபச்சாரம் ஏற்பட்டு விடுமோ? என்பது போலிருந்தது அவரது பேச்சுத் தொணி.

    அய்யய்ய... அவனா...? அவன் லேசுப்பட்ட ஆளில்லை சாமி...! உலகத்துல என்னென்ன ஆகாத பழக்கங்கள் உண்டோ...? அத்தனையும் அவனுக்கு அத்துப்படி...! மரியாதை தெரியாத பயல், வயது வித்தியாசம் பார்க்காமல் யாராயிருந்தாலும் ஒரு நொடில தூக்கியெறிஞ்சு பேசிடுவான்...! மீறி யாராச்சும் எதிர் வாதம் பேசினா அவ்வளவுதான்... அவங்க கதி அதோ கதிதான்... ஆளை வெச்சு அடித்துக் தூக்கிடுவான்...! ஒரு தடவை எனக்கும் அவனுக்குமே ஒரு சின்ன பஞ்சாயத்து ஆயிடுச்சு...! எங்கியோ... ஏதோ ஒரு எண்ணை ஆலைல போய்... கொறைஞ்ச ரேட்டுக்கு கலப்பட எண்ணையை வாங்கிட்டு வந்து... அதை என்னோட கடைல வெச்சு... அதிக வெலைக்கு வித்துத் தரச் சொன்னான்...! நான் ஆகாது! ன்னுட்டேன்! ஆரம்பத்துல மிரட்டிப் பார்த்தான் நான் பணியலை... அப்புறம் கெஞ்சிப் பார்த்தான்! அதுக்கும் நான் மசியலை...! அத்தோட போனவன்தான் அதுக்கப்புறம் என் திசைக்கே வரலை!

    அடப்பாவி... கடைசில உங்க வரைக்கும் வந்துட்டானா அவன்...? ஓய் உங்களுக்கு அவனைப் பத்தித் தெரிஞ்சது அவ்வளவுதான்... இன்னும் நெறைய இருக்கு அவனோட கேடு கெட்ட சரக்குகள்...! சொன்னா நம்ம வாய்தான் நாறிப் போகும்...! மனுஷனுக்கு பணத்தாசை ஜாஸ்தி... எனக்கு காசு வந்தாப் போதும்... எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன? ... என்கிற மாதிரி ஆளு அவன்...! இதுல குடி... கூத்தியான்னு... ஏக ஷோக்கு இருக்காம்! குருக்கள் அந்த கடைசி வரியை மட்டும் சன்னக் குரலில் சொன்னார்.

    ஓ... அப்படின்னா எனக்குத் தெரியாத பல விஷயங்கள் ஊருக்குள்ளே இருக்குங்கறீங்க?" எண்ணைக்கடைக்காரர் விடாமல் கேட்க,

    பின்னே...? கடந்த ஆறேழு மாசமா அப்பத்தா ஒடம்பு சௌகரியப் படாமப் போனதுக்கப்புறம்... நிர்வாகம் மொத்தமும் இந்தப் பய கைக்கு அல்ல போயிடுச்சு...? காடு... கழனி, தோட்டம்... தொறவு, ரைஸ் மில்லு... டெண்ட்டுக் கொட்டாயி...! ன்னு எல்லா இடத்திலேயும் இவன் ராஜாங்கம்தானே...? கங்காணி மாதிரி இருந்துக்கிட்டு... அங்க இவன் பண்ற அம்பு... அக்கிரமங்கள் சொல்லி மாளாது...! அதுகளையெல்லாம் அப்பத்தாகிட்ட சொல்லத்தான் இப்ப அங்க போறேன்...! எத்தனை நாளைக்குத்தான் சகிச்சுக்க முடியும்?

    ஆஹா... நரிக்கு நாட்டாமை குடுத்தா கெடைக்கு ரெண்டு வெள்ளாடு கேட்குமாம்!’ன்னு சொல்லுவாங்க...! அது உண்மைதான் போலிருக்கு!" வரதன் வாய் மீது கை வைத்து அங்கலாய்த்தபடி சொன்னார்.

    சரி... சரி... அப்பத்தா வீடு வந்திடுச்சு...! கொஞ்சம் பேச்சை நிறுத்திக்குவோம்...! மீதிய திரும்பிப் போகும் போது பேசிக்குவோம்!

    அப்போது குருக்களின் மனம் தான் தினமும் பூஜை செய்யும் அந்த தெய்வத்தை ரகசியமாய் வேண்டிக் கொண்டது. எம்பெருமானே... அந்த சக்திவேலுப்பய இந்த நேரத்துல வீட்டுல இருக்கக்கூடாது!

    சில நேரங்களில் மனிதர்களின் வேண்டுகோள் ஏனோ தெய்வங்களின் காதுகளுக்கு எட்டுவதேயில்லை.

    யாரைப் பற்றி அப்பத்தாவிடம் புகார் சொல்ல குருக்கள் வந்தாரோ... அவரே அவர் எதிர் கொண்டு வரவேற்க, ஒரு கணம் அரண்டு போனார் தர்மலிங்க குருக்கள். பாவிப்பயல் இங்கதான் இருக்கானா...? நான் பாட்டுக்கு இவன் இருக்கும் போதே அப்பத்தாவிடம் இவனைப் பற்றிச் சொல்லை போய், அப்பத்தாவும் சட்டுன்னு அவனைக் கூப்பிட்டு நேருக்கு நேர் விசாரிக்க ஆரம்பிச்சிட்டா... ஒரே ரசாபாசமாகிவிடுமே...? என்ன பண்றது...? பிற்பாடு அவன் இதை மனசுல வெச்சுக்கிட்டு... என்னை உண்டு... இல்லைன்னு ஆக்கிடுவானே...? சரி... அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்தோம்... அந்த வேலையை மட்டும் பார்த்துக்கிட்டுத் திரும்பிட வேண்டியதுதான்!

    என்ன கோயில் மணியும்... எண்ணைக்கடையும் ஒண்ணா வர்றீங்க...? ஏதாவது நன்கொடையா? சக்திவேலுவின் குரலில் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என எல்லா எள்ளல்களும் கலந்திருந்தன.

    பளீரென்ற வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டையில், கழுத்தில் புலிப்பல் பொருத்தப்பட்ட ஒரு கெட்டியான தங்கச் சங்கிலியைத் தொங்க விட்டுக் கொண்டு, கடா மீசையை முறுக்கியபடி, சிவந்த விழிகளை உருட்டிய சக்திவேலுவைப் பார்க்கவே அச்சமாயிருந்தது கோவில் குருக்களுக்கு. ஹூம்... இவன் தோற்றமே சாட்சி இவனொரு அயோக்கியன் என்பதற்கு! சத்தமில்லாமல் வாய் முணுமுணுத்தது.

    ஹி... ஹி... அது... வந்து... அப்பத்தாவுக்கு உடம்பு சுகமில்லைன்னு கேள்விப்பட்டோம்... அதான்... பார்த்திட்டுப் போகலாம்ன்னு வந்தோம்! எண்ணைக்கடை வரதன் தட்டுத்

    Enjoying the preview?
    Page 1 of 1