Kaagitha Marangal
By Pa. Vijay
()
About this ebook
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது
Read more from Pa. Vijay
Aranmanai Ragasiyam Part -2 Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsKaarsilambu Osaiyile Part-2 Rating: 5 out of 5 stars5/5Puligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5Kaadhal@Kaadhaligal.com Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Ragasiyam Part -1 Rating: 4 out of 5 stars4/5Udaintha Nilakkal Part 2 Rating: 5 out of 5 stars5/518 Vayasule Rating: 3 out of 5 stars3/5Bachelor Arai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Kalvettugal Rating: 2 out of 5 stars2/5Silmishiye… Rating: 4 out of 5 stars4/5Intha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Innum Enna Thozha Rating: 1 out of 5 stars1/5Vaanavil Poonga Rating: 5 out of 5 stars5/5Udaintha Nilakkal Part 3 Rating: 5 out of 5 stars5/5Iravulaavigal Rating: 0 out of 5 stars0 ratingsManjal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Nee Chaos Theory Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Thedi Vanambaadigal Rating: 0 out of 5 stars0 ratingsIcekatti Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsKaarsilambu Osaiyile Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMothu... Munneru... Rating: 0 out of 5 stars0 ratingsPa. Vijay Oru Paarvai Rating: 5 out of 5 stars5/5Apple Mathiri Unnai Appadiye Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsIthazhiyal Kalloori - Muthalaji Pirivu Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaagitha Marangal
Related ebooks
Oru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaalum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsMuzhangu Sangu Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsIranduadukku Aagayam Rating: 0 out of 5 stars0 ratingsJakartavil 100 Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsThenum Thinaimaavum Rating: 0 out of 5 stars0 ratingsUdaimul Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsManasai Vittra Vekkam Rating: 0 out of 5 stars0 ratingsChutti Poonaiyum Kutti Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsShrijovin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsHaiku Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsBodhi Maram Rating: 0 out of 5 stars0 ratingsAvar Peyar Pazhani Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsThoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMalarukku Thendral Pagaiyanal… Rating: 0 out of 5 stars0 ratingsSundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsநின்னையே ரதியென்று... Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Vidhai Cholam Rating: 0 out of 5 stars0 ratingsPillai Paattu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kaagitha Marangal
0 ratings0 reviews
Book preview
Kaagitha Marangal - Pa. Vijay
http://www.pustaka.co.in
காகித மரங்கள்
Kaagitha Marangal
Author:
பா. விஜய்
Pa. Vijay
For more books
http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
செல்
இந்தியப் பொங்கல்
தீபாவளி அழைப்பிதழ்
பொங்கல்
தமிழ்ப் புத்தாண்டு
குறுங்கவிதை
அடுக்குமாடி பொங்கல்
விவசாயிகளுக்கு ஒரு விண்ணப்பம்
வல்லரசு
அன்புள்ள தியாகி அய்யா…!
தேசியக் கொடி
நம்பிக்கை தானே நீ...!
அன்னை அஞ்சுகமே உன்னைப் பாடுகிறேன்
சல்யூட்
உலகக் கால்பந்து போட்டி
ஆயிரம் ஆண்டு முன்னே...!
தினம் தினம் தீபாவளி
எய்ட்ஸ்
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
தாஜ்மஹால்
தமிழ் மாற்றம்
நாகரீகத் தமிழச்சியே!
போகி நெருப்பும் பொங்கல் நெருப்பும்
கணிப்பொறித் தமிழா
விஞ்ஞானம் – விவசாயம்
கர்வத்தோடு கொண்டாடுவோம்
நகரத்துப் பொங்கல்
இது ஆயுத காகிதம்
பொங்கல் சபதம்
தொலைக்காட்சித் தோழிகளே!
இந்த சுதந்திரம் தான்!
ஏ...! சுதந்திரதேவி…
ஒரு சிறுவனும் தேசியக் கொடியும்
செவாலியரும் ஐம்முடிச்சோழனும்
செஞ்சோலை சோகம்
கலைஞரதிகாரம்
இலக்கியத்தின் ஜனாதிபதியும் இந்திய ஜனாதிபதியும்
செல்
கையடக்கப் பேசி
கீங்கீங் என்றது!
ஒளியூட்டித் திறந்ததும்
தகவல் பெட்டி விரிந்தது!
சுதந்திரதின வாழ்த்துக்கள் என
செல்போனில் முளைத்தது
குறுந்தகவல்! (எஸ்.எம்.எஸ்)
இன்னொரு குறுந்தகவல்
தேசியக்கொடி காட்டி
மார்தட்டிக் கொண்டது!
மற்றொரு குறுந்தகவலோ
சல்யூட் செய்யும்படி
சபதம் போட்டது!
அடுத்து வந்த தகவலோ
"இந்தியனாய் இரு...
இந்தியரோடு இரு..." என்றும்
பலருக்கு பார்வர்ட் செய்யுமாறும்
பணித்தது!
ஒருசிலரோ
வேறொருவர் அனுப்பிய தகவலில்
தங்கள் பெயரைச் சேர்த்தனுப்பி
தாய்நாட்டுப்பற்று காத்தனர்!
வேறுபலரோ
ஜனகனமன கீதத்தை
ரிங்டோனாய் தள்ளினர்.
குறுந்தகவல்கள்
கூடைகூடையாய் பிதுங்கின
செல்லிடப் பேசிகளில்...!
செல்போனில் இருந்து
செல்போனுக்கு பறிமாறப்படும்
தகவல் மட்டுமல்ல சுதந்திரதினம்...
செல்லில் இருந்து
சிந்தைவரை ஏறவேண்டிய
உணர்ச்சி இது!
உணவை தொழில்நுட்பம் பாதுகாக்கும்!
உணர்வை உள்ளம்தான் பத்திரமாக்கும்!
இளையபாரதம்
சுதந்திரதின வாழ்த்துக்களை
இதயத்தில் இருந்து சொல்லட்டும்!
இந்தியப் பொங்கல்
காஷ்மீர் என்னும்
வன்முறை மண்ணில்
பொங்க வேண்டியது...
ஒரு யுகத்திற்கு தேவையான
அமைதிப் பொங்கல்...!