Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azim Premji
Azim Premji
Azim Premji
Ebook235 pages1 hour

Azim Premji

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580105004780
Azim Premji

Read more from N. Chokkan

Related to Azim Premji

Related ebooks

Reviews for Azim Premji

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azim Premji - N. Chokkan

    http://www.pustaka.co.in

    அஜிம் ப்ரேம்ஜி

    Azim Premji

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பனங்காய்

    2. எண்ணெய் வியாபாரம்

    3. சிக்கல் நீக்கு படலம்

    4. திரட்டு

    5. உள்ளூர்ப் புரட்சி

    6. உலகெங்கும் மைசூர் பா

    7. நம்மால் முடியும் தம்பி

    8. மூன்றாம் முனை

    9. தொடரும் பந்தயம்

    10. கற்க கசடற

    11. ஓய்வெடுக்க நேரமில்லை

    பின்னிணைப்பு 1

    பின்னிணைப்பு 2

    பின்னிணைப்பு 3

    பின்னிணைப்பு 4

    1. பனங்காய்

    1966 ஆகஸ்ட் 11.

    அந்த இளைஞர் ஏதோ ஒரு தேர்வுக்கு மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்கா குறைச்சல். கோடைக்காலத் தேர்வு, குளிர்காலத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முக்காலாண்டுத் தேர்வு, இதையெல்லாம் தாண்டிக் கடந்துவிட்டால், செமஸ்டர் தேர்வு பிரம்மாஸ்திரங்கள்.

    இப்படி அடிக்கடி பரீட்சை வைக்கிறார்களே என்று அலட்சியமாக இருந்துவிடமுடியாது. மாணவர்களின் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்கிற கல்வி நிறுவனம் அது. உலகெங்கிலுமிருந்து திறமைசாலி மாணவர்கள் உச்ச நிலைக்குப் போராடுகிறார்கள். இதனால், ஒவ்வொரு தேர்வும் இழுபறிதான்.

    அஜிமுக்குத் தன்னுடைய திறமை, தகுதிபற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. தனது வகுப்பிலிருந்த மாணவர்களை மானசீகமாக ஐந்து அடுக்குகளாகப் பிரித்துவைத்திருந்தார் அவர் மிக நன்றாகப் படிக்கிறவர்களில் தொடங்கி, கடைசி பெஞ்ச் அப்பாவிகள், படுபாவிகள்வரை.

    இந்த ஐந்து அடுக்குகளில், தான் எப்போதும் முதலாவது அடுக்கில் இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டிருந்தார் ப்ரேம்ஜி. முதல் மார்க், இரண்டாவது மார்க் வாங்காவிட்டால்கூட பரவாயில்லை, சுமார் நிலைக்கு இறங்கிவிடக்கூடாது. அவ்வளவுதான்.

    எஞ்சினியரிங் படிப்போடு வாழ்க்கைப் பாடங்களையும் பல்வேறு கலாசாரங்களையும் சேர்த்துச் சொல்லிக்கொடுத்த அந்தச் சூழல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்நேரமும் புத்தகங்களோடு போராடிக்கொண்டிருக்காமல், விளையாட்டு, படிப்பு, ஆராய்ச்சி மனோபாவம், பிஸினஸ் ஞானம் எனத் தன்னுடைய மாணவர்கள் எல்லோரையும் சகலகலா வல்லவர்களாக வளர ஊக்குவித்தது ஸ்டான்ஃபோர்ட்.

    இதனால்தான், ஸ்டான்ஃபோர்டிலிருந்து வெளியே வந்து, வெற்றிகரமான பிஸினஸ் புள்ளிகளாகத் திகழ்ந்தவர்கள் ஏராளம். அமெரிக்காவில்மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு நாட்டிலும் முக்கியமான தொழிலதிபர்களைப் பட்டியலிட்டால், அதில் ஸ்டான்ஃபோர்ட் மாணவர்கள் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.

    வியாபாரமும் தொழில்துறையும் பரம்பரையாக அஜிம் ப்ரேம்ஜியின் ரத்தத்தில் கலந்திருந்தது. ஆனால், அந்த மாணவப் பருவத்தில் அவர் அதைப்பற்றியெல்லாம் நினைக்கக்கூட இல்லை. இப்போதைக்கு, ஒழுங்காகப் படித்து பாஸ் செய்யவேண்டும். அது போதாதா? யதேஷ்டம்!

    இன்னும் சில மாதங்கள்தான், ஒருவழியாக எல்லாப் பரீட்சைக் கண்டங்களையும் தாண்டிவிட்டால், அமெரிக்காவிலேயே ஏதேனும் ஒரு நல்ல நிறுவனமாகப் பார்த்து வேலைக்குச் சேர்ந்துகொள்ளலாம், அந்த அனுபவத்தையும் சேர்த்துக்கொண்டு, ஓரிரு ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியா திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார் அவர்.

    அஜிம் ப்ரேம்ஜியின் திட்டங்கள், கனவுகள் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளுவதுபோல், அன்றைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியாவிலிருந்து, அதுவும் அவசர அழைப்பு என்றார்கள். பதற்றத்தோடு ஓடினார் ப்ரேம்ஜி.

    உள்நாட்டில் தந்திகளைப்போலவே, வெளிநாட்டில் அவசரத் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டுகிற செய்திகளையே தாங்கி வருகின்றன பம்பாயில் அஜிம் ப்ரேம்ஜியின் தந்தை முஹம்மத் ஹுஸைன் ஹஷம் ப்ரேம்ஜி (Mohammed Hussain Hasham Premji) மாரடைப்பால் இறந்துவிட்டார்.

    'மொஹம்மத் சேத்' என்று எல்லோராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட ஹஷம் ப்ரேம்ஜிக்கு, அப்போது வயது ஐம்பத்தொன்றுதான். சற்றும் எதிர்பாராத ஒரு மாரடைப்பு, அகால மரணம்.

    தொலைபேசியில் இந்தத் தகவலை அஜிமுக்குச் சொன்ன அவரது தாய் குல்பனு (Gulbanoo), அவர் உடனடியாக இந்தியாவுக்குக் கிளம்பி வரவேண்டும் என்றார். படிப்பு, பரீட்சையையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இப்போது அவசரமான குடும்பக் கடமைகள் காத்திருக்கின்றன.

    தந்தையின் திடீர் மரணச் செய்தி தந்த அதிர்ச்சியை ஜீரணிக்கமுடியாத அஜிம் ப்ரேம்ஜி, எப்படி இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் என்று அவருக்கே தெரியவில்லை. எல்லாம் எங்கோ ஒரு கனவில் நடக்கிறாற்போலிருந்தது, சட்டென்று கனவு கலைந்து எழுந்து உட்கார்ந்துவிடமாட்டோமா என்று தவித்தார் அவர்.

    ஆனால், அத்தனை சோகத்தின் நடுவிலும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் அவர் மிகத் தெளிவாக இருந்தார் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, குடும்ப விவகாரங்களையெல்லாம் நேர் செய்தபிறகு, மீண்டும் ஸ்டான்ஃபோர்டுக்குத் திரும்பி எஞ்சினியரிங் பட்டம் பெற்றுவிடவேண்டும். இல்லையென்றால், இத்தனை காலம் கஷ்டப்பட்டுப் படித்ததெல்லாம் வீணாகப் போய்விடும்.

    அஜிம் ப்ரேம்ஜி ஸ்டான்ஃபோர்டில் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தது அவருடைய தந்தை ஹஷம் ப்ரேம்ஜிதான். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காகவேனும், அஜிம் எஞ்சினியராவது மிக அவசியம்.

    இப்படியொரு பதற்றமான சூழலில், பலவிதமான கலவை நினைவுகளுடன் இந்தியாவுக்குக் கிளம்பினார் அஜிம் ப்ரேம்ஜி. அப்போது அவருக்குத் தெரிந்திராத விஷயங்கள் இரண்டு.

    ஒன்று, தந்தை ஹஷம் ப்ரேம்ஜி விருப்பப்படி அஜிம் ஸ்டான்ஃபோர்ட் பட்டதாரியாவதற்கு, அவர் இன்னும் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் காத்திருக்கவேண்டியிருக்கும்!

    அடுத்து, அதைவிட முக்கியமான விஷயம் அந்த விநாடியில், இந்தியாவில் அஜிம் ப்ரேம்ஜிக்காகக் காத்திருந்த பொறுப்புகளும் சவால்களும் அவர் முன்பு எப்போதும் கற்பனையில்கூட நினைத்திராத அளவு பிரம்மாண்டமானவை.

    பழமொழியாகச் சொல்வதென்றால், குருவி தலையில் பனங்காய்தான். இருபத்தொரு வயதுக் குருவி, அதுவும், படிப்பு, அனுபவம் என எதிலும் முழுமையில்லாத குருவி, என்ன செய்யப்போகிறது?

    2. எண்ணெய் வியாபாரம்

    மஹாராஷ்டிர மாநிலத்தின் உள் பகுதியில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர் அது. பெரும்பாலான அடிப்படை வசதிகளே மிகச் சமீபத்தில்தான் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிற, இந்தியாவின் எத்தனையோ 'பெயர் தெரியாத' கிராமங்களில் அதுவும் ஒன்று.

    மும்பையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில், போரி நதிக் கரையில் இருக்கும் அமல்னெர் (Amalner) என்ற அந்த கிராமத்தின் பெயரை, அநேகமாக நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். ஒருவேளை ஏதேனும் காரணத்துக்காக நாம் அங்கே செல்ல நினைத்தாலும்கூட, சட்டென்று கிளம்பிவிடமுடியாது. காரணம், ரயில், பஸ், விமானம், கப்பல், கள்ளத் தோணி போன்ற போக்குவரத்து வசதிகள் இன்னும் அமல்னெரை முழுசாகச் சென்றடையவில்லை.

    எப்படியோ கஷ்டப்பட்டு மாட்டு வண்டியிலோ, கால்நடையாகவோ அமல்னெருக்குச் சென்று சேர்ந்தவர்களும்கூட, அப்படியொன்றும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போய்விடமாட்டார்கள். ஏனெனில், வெள்ளந்தியான சராசரி மனிதர்கள், பழக்க வழக்கங்கள், நிதானமான வாழ்க்கை முறையைக் கொண்ட 'சாதாரணமான' கிராமமாகதான் இப்போதும் தென்படுகிறது அமல்னெர்.

    நாற்பதுகளின் மத்தியில், தனக்கென்று சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைக்க விரும்பிய M H (முஹம்மத் ஹுஸைன் ஹஷம்) ப்ரேம்ஜி, இதற்கான இடம் தேடிப் பல பகுதிகளைப் பார்வையிட்டிருக்கிறார். ஆனால், கடைசியில் அவர் ஏன் அமல்னெரைத் தேர்ந்தெடுத்தார் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

    அமல்னெரில் M H ப்ரேம்ஜி அமைக்க எண்ணியிருந்த அந்தப் புதிய தொழிற்சாலையில், வனஸ்பதி / தாவர எண்ணெய் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார் அவர். சிறிய தொழிற்சாலைதான். சுற்றியுள்ள விவசாயிகளின் விளைபொருள்களை வாங்கி, வனஸ்பதி தயாரித்து, மஹாராஷ்டிராவிலும், முடிந்தால் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் விற்பனை செய்வதாக யோசனை.

    இதற்காக, 1945ம் ஆண்டு இறுதியில் (டிசம்பர் 29) 'Western India Vegetable Products Limited' * (இந்தப் பெயர்தான், பின்னாள்களில் 'விப்ரோ' (Wipro) என சுருக்கப்பட்டது.) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார் M H ப்ரேம்ஜி. பம்பாயில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அமல்னெரில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.

    ஷியா முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த ப்ரேம்ஜி குடும்பம், தனது முந்தைய தலைமுறைகளில் பர்மாவிலிருந்து குஜராத் வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்தான். ஆரம்ப காலத்தில் அவர்கள் அரிசி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

    அஜிம் ப்ரேம்ஜியின் தாத்தா, இந்தியாவின் முக்கியமான, மிகப் பெரிய அரிசி விற்பனையாளர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய மகன் M H ப்ரேம்ஜி, தந்தைக்கு உதவியாக, குடும்ப வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்தார்.

    1945ம் ஆண்டு, அப்போது இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் தேசியமயக் கொள்கைகளால், சிறிய, பெரிய அரிசி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதனால், M H ப்ரேம்ஜி வேறு தொழிலில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் தேர்ந்தெடுத்ததுதான் தாவர எண்ணெய் உற்பத்தி. அந்த ஆண்டு இறுதியில், M H ப்ரேம்ஜி இதற்கான தனது புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்த வருடம் (1946) அமல்னெரில் அவரது தொழிற்சாலை மும்முரமாகத் தயாராகிவிட்டது.

    இங்கே உற்பத்தியாகும் தனது தாவர எண்ணெய்த் தயாரிப்புகளை, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்திய மாநிலங்களில்மட்டுமே விற்பனை செய்ய எண்ணியிருந்தார் ப்ரேம்ஜி. இதனால்தான், 'மேற்கு இந்திய தாவரப் பொருள்கள் நிறுவனம்' என்ற அர்த்தத்தில் 'Western India Vegetable Products Limited' எனத் தனது நிறுவனத்துக்குப் பெயர் சூட்டினார்.

    பின்னர், தாவரங்களோடு நேரடிச் சம்பந்தமில்லாத மற்ற சில பொருள்களையும் இந்த நிறுவனம் தயாரிக்க / விற்கத் தொடங்கியபோது, அதன் பெயரில் இருந்த 'வெஜிடபிள்' வெட்டப்பட்டது. 'Western India Products Limited' என்று பெயர் சுருங்கியது.

    M H ப்ரேம்ஜிக்குப்பிறகு இந்நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவரது மகன் அஜிம் ப்ரேம்ஜிக்கு, இந்தப் பெயர் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நிறுவனத்தின் பெயரையே இப்படி நீட்டி முழக்கி நாவல் எழுதிக்கொண்டிருந்தால், பெரும்பான்மை மக்கள் மனத்தில் இதனைப் 'பளிச்'சென்று பதியச் செய்வது சிரமம் என எண்ணினார்.

    ஆகவே, 'வெஸ்டர்ன்'லிருந்து W, இந்தியாவிலிருந்து I, 'ப்ராடக்ட்ஸ்'ன் முதல் மூன்று எழுத்துகளான PRO இவற்றை இணைத்து, WIPRO விப்ரோ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டினார் அஜிம் ப்ரேம்ஜி. அதன்பிறகு, இந்தப் பெயரை இந்தியாமுழுவதும், அதற்கு வெளியிலும்கூட கொண்டுசெல்வது சுலபமாக இருந்தது.

    'விப்ரோ' என்கிற பெயர், 1977ல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும், அஜிம் ப்ரேம்ஜியின் தந்தை M H ப்ரேம்ஜி சூட்டிய நீளப் பெயரின் சுருக்கம்தான் அது என்பதால், ஆரம்பத்திலிருந்தே நாம் அந்தப் பெயரைப் பயன்படுத்துவது அநாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கும்.

    ஆக, 1945ம் ஆண்டு இறுதியில் 'விப்ரோ' தொடங்கப்பட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி மார்ச் மாதங்களில், பொது நிறுவனமாகிவிட்டது.

    இந்திய பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட ஆரம்ப கால நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்று. தலா நூறு ரூபாய் மதிப்பில் மொத்தம் பதினேழாயிரம் விப்ரோ பங்குகள் வெளியிடப்பட்டன. இதில் கிட்டத்தட்ட பாதிப் பங்குகள் விப்ரோவின் அப்போதைய இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டது. மீதப் பங்குகளில் பொதுமக்கள் முதலீடு செய்தார்கள்.

    பொதுமக்கள் என்றால், பெரும்பாலும் அமல்னெரில் வாழ்ந்த ஏழைபாழைகள்தான். அவர்களுக்கு நூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. ஆனாலும், அவர்களில் பலர் விப்ரோவில் முதலீடு செய்தார்கள். அதற்கு ஓர் உணர்வுபூர்வமான காரணம் இருந்தது.

    விப்ரோ நிறுவனர் M H ப்ரேம்ஜி, உள்ளூர் விவசாயிகளுடைய விளைபொருள்களைத் தன்னுடைய தொழிற்சாலைக்கு மூலப் பொருள்களாக நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டார். இதுதவிர, ஊரில் பலருக்கு அவருடைய தொழிற்சாலையில் வேலை வாய்ப்பும் கிடைத்தது. சிறு வியாபாரிகள் அதன் தயாரிப்புகளை வாங்கி விற்றுப் பயனடைந்தார்கள்.

    இப்படிப் பல விதங்களில் தங்களுடைய கிராமத்துக்கு உதவிய ப்ரேம்ஜியை, அவர்கள் மிகவும் மதித்தார்கள். 'மொஹம்மத் சேத்' என்று பாசத்தோடு அழைத்து மரியாதை காட்டினார்கள்.

    விப்ரோ பொது நிறுவனமானபோது, அமல்னெரில் பெரும்பாலானோருக்குப் பங்குச் சந்தை என்றால் உப்பா, புளிப்பா, காரமா என்றுகூட தெரியாது. ஆனால், மொஹம்மத் சேது நல்ல மனிதர், நம் ஊருக்கு நிறைய நல்லது செய்திருக்கிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1