Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthamitta Soppanangal
Muthamitta Soppanangal
Muthamitta Soppanangal
Ebook96 pages28 minutes

Muthamitta Soppanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Muthamitta Soppanangal

Read more from Geetharani

Related to Muthamitta Soppanangal

Related ebooks

Related categories

Reviews for Muthamitta Soppanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthamitta Soppanangal - Geetharani

    12

    1

    மும்பை.

    விடியலின் மென்மையை லேசான சாம்பல் பூச்சுடன் கிழக்கின் அடிவானத்தில் வெள்ளரிப்பழக் கீற்றாய் ஒளிரும் பிறைச்சந்திரன் விளம்பிற்று. சதீஷ் உறக்கம் கலைந்து எப்பொழுதோ எழுந்து விட்டிருந்தான். ஆனால், படுக்கையை விட்டு ஏனோ எழுந்திருக்க மனம் வரவில்லை. நேற்றைய மாலைப் பொழுதில் ஆரம்பித்து நடு இரவுவரை நடந்த தர்க்க சம்பவத்தின் நிகழ்வுகளின் தாக்கம் தன்னால் நினைவில் ஓடலாயிற்று.

    ம்ஹும்... நிகழ்ந்ததை, நிகழ்ந்துவிட்டதை நினைப்பதினால் என்ன லாபம்? நினைப்பது என்பது நிகழ்காலத்தின் வரப்பிரசாதமான காலத்தை கருணைக் கொலை செய்வது போலாகும். அடுத்தகட்டத்தை யோசித்துச் செயலாற்ற வேண்டுமெனில் மனத்திலிருந்து மொத்தமாய் தூக்கி வீச வேண்டும். கண்ணாடித் திரை போன்று மனத்திரை பளிச்சென்று வெறும் நிகழ்வுகளின் உள்வாங்கியாய் இருக்கும் வரைதான் வாழ்வில் ஜெயிக்க முடியும். ஸ்திரத்தன்மையாய் செயலாற்ற இயலும்!

    சதீஷ் படுக்கையை விட்டெழுந்தான். அருகில் உறக்கத்தின் ஆலிங்கணத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆனந்தியை ஏனோ எழுப்ப மனம் வரவில்லை.

    ஏன் எழுப்ப வேண்டும், எழுப்பினால் நிச்சயம் நேற்றைய சம்பவத்தின் எதிரொலியாய் ஏதாவது ஒன்றைச் சந்திக்க வேண்டும். நேரத்தை வீணே தெரிந்து வீணடிப்பது என்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று.

    இடது பக்கவாட்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு பால்கனிக்கு வந்து நின்றான்.

    பாந்த்ராவின் இளங்காலைப் பொழுது தூரத்தே ‘ஹோ’வென ஆர்ப்பரிக்கும் சமுத்திரச் சூழல். ‘சில்’லென்ற கடற்காற்றின் உப்பு படிமானம் மேனி தொட்டுத் தழுவ எலும்புவரை குளிரின் தாக்கம் ஊடுருவிற்று. பற்கள் தன்னாலேயே கிட்டித்தன.

    ‘ஸ்ஸ்ஹி...’ என்று மார்பிற்கு இடையே குறுக்குவாட்டில் கையை கட்டிக் கொண்டவனாய் ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கிப் பார்வையை வீசினான். குளிரின் இதமும், இளங்காலைப் பொழுதின் ரம்மியமும் இதயத்தை சட்டென்று லேசாக்கின. தூரத்தே ‘ஜாகிங்’ மற்றும் ‘வாக்கிங்’ பயிற்சிக்காக என்று வசதிமிக்க மும்பை தனவான்களின் கார்கள் ஒருசில முகாமிட்டிருந்தன. அதைத் தவிர, ‘ஹோலி’ இன மீனவப் பெண்களின் ஒரு சில முகங்கள். தூரத்தே நங்கூரம் பாய்ச்சி நிற்கும் துறைமுகக் கப்பலிலிருந்து ‘பா... ங்க்க்’ என்ற ஷைரன் ஒலி. காலை சரியாய் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது என்கின்ற அறிவிப்பு. அடுத்த கட்ட பணியாளர்களை வரவேற்கும் அழைப்பொலி போன்றும் அது அதிர்ந்தொலித்தது.

    இந்த இதமான சூழ்நிலையைப் பார்த்தே சதீஷிற்கு பல நாட்கள் ஆகிவிட்டிருந்தது. எங்கே... நேரம் கிடைக்கிறது?

    அதுவும், இந்த மும்பை நகரத்தில்...? மனிதனின் இதயத் துடிப்பு போன்று பொருளாதாரத்தில், ஜன நெருக்கடியில் என்று விரிந்தும் பல்கியும் கிளைத்துவிட்ட பெருநகரத்தில் மூச்சுவிடத்தான் நேரம் ஏது? தொழில்களின் தோற்று வாயாய் செழித்து நிற்கும் மும்பை நகரத்தின் வாழ்வு சதீஷிற்கு ஆரம்பத்தில் நீச்சல் தெரிந்திராத சிறுவனை கிணற்றுக்குள் தூக்கி வீசினாற் போன்றுதான் பெரும் தத்தளிப்பை உண்டு பண்ணிற்று. நீரில் மூழ்கினவன் மூச்சினைத் தக்க வைத்துக் கொள்ள உந்துதலுடன் போராடி மேலேற தவிப்பானே அது போலத்தான் ஒரு வருடமும் ஓடிற்று.

    உந்துதலுடனும், உயிர்பிழைத்தேயாக வேண்டும் என்று உள்ளார்ந்த வேகத்துடனும், சதீஷ் வெறித்தனமாய்தான் தன் அறிவைப் பயன்படுத்தி உழைத்தான் இரவு பகலாக... அவனின் தனித்திறமை, ஆர்வம், அயராத முயற்சி, பொறியியலின் கட்டிடவியல் துறையில் அவனின் தனித்த வல்லமை எல்லாம் கண்டு மும்பையின் பிரதான கன்ஸ்ட்ரக்ஷனின் தலைமைப் பொறியாளரான ‘ஜிந்தாலால்’ அவனைத் தத்தெடுத்துக் கொண்டதுதான் காலம் அவனுக்கு வழங்கிய அரிய வாய்ப்பு.

    சதீஷின் வரைபட நுணுக்கம், வரைபடத்தின் செயலாக்கத்தில் அவன் காட்டுகின்ற தனிக்கவனம், சொன்னாற் போன்று குறித்த கால அவகாசத்தில் வேலையைச் செவ்வனே முடித்து தரும் அவனின் நிர்வாகத்திறன் எல்லாமுமாய் சேர்ந்து மும்பையில் அடியெடுத்து வைத்த குறைந்தபட்ச கால கட்டத்திலேயே லாலின் தயவினால் சதீஷ் அறிந்து கொள்ளப்படக்கூடிய பொறியியல் வல்லுநராகி விட்டிருந்தான்.

    ஆனால்...

    ஆனந்தி... அவன் நேசித்த ஆனந்தி, அவனை மட்டுமே அதிகம் நேசித்த காரணத்தினால் உறவுகளின் பகைமையை கல்யாணப் பரிசாக தேடிக் கொண்ட ஆனந்தி... இன்று ஏன் இப்படி மாறிப் போனாள்?

    எதிர் எதிர் வீடுகளின் பால்ய பருவத்து நட்பு. பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் இணை பிரியாதிருந்த ஊடலுடனான சிநேகிதம் வேறு வேறு கல்லூரிகளில் கல்விப் பயணத்தை தொடர்ந்த போதுதான் காதலாக அரும்பிற்று.

    இந்தக் காதலை அடைகாத்து தவியாய் தவித்து பெண்மையின் நாணம் தாண்டி, ‘நான் உன்னோடு வாழ்க்கைப் பயணத்தில் உடன் வரத் தயார். ஏற்றுக் கொள்வாயா...?’ என்று எண்ணி நான்கே வார்த்தைகளில் ஒரு சிறிய மடல் முதன் முதலாக ஆனந்தியிடம் இருந்துதான் காதல் கணையாய் சதீஷிற்கு பாய்ந்தது.

    ‘இதற்காகத்தானடி கண்மணி இத்தனை நாளும் நான் காத்திருந்தேன்...’ என்ற பதில் கடிதம் அவனின் இதயத்தை அவளுக்கு விளம்பிற்று.

    வாழ்வின் சந்தோஷ கணம் இதுவன்றி வேறில்லை என்று இரு ஜோடி விழிகளும் காதல் பரிமாற்ற பரிபாஷைகள் மட்டுமே சுமந்து ஐந்தாண்டு காலம் மொத்தமாய் கழித்து,

    இரு வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள், பொறாமைக் குமுறல்கள் எல்லாம் பொறுமையாய்ச் சந்தித்து திருமண வாழ்வில் தம்பதிகளாய் இணைந்து தாங்கள் தவழ்ந்து விளையாடின காரைக்குடி பூமியின் தாய் மண்ணின் நேசம் துறந்து மும்பையின் பெருநகரவாசிகளாக மாறி முழுசாய் நான்காண்டுகள் ஓடிவிட்ட பின்னர்...

    ஆனந்திக்கும், சதீஷிற்கும் முதன்முறையாக பிணக்கு. அதுவும் சாதாரண பிணக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1