Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

August 15
August 15
August 15
Ebook198 pages1 hour

August 15

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1947 ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியனவற்றின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் பெரியாரின் சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக வரலாறு குறித்து எஸ்.வி. ராஜதுரை - வ. கீதா எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்', எஸ். வி. ராஜதுரை எழுதிய ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் அவற்றின் துணை நூலாகவும் விளங்குகிறது. பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே பிளவு ஏற்பட்டு, தி.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் தி.மு.க.வை அமைத்ததற்கு பெரியார் - மணியம்மையார் திருமணமே காரணமாயிற்று என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை மறுத்து 'ஆகஸ்ட் 15' குறித்து பெரியாரும் அண்ணாவும் மேற்கொண்ட மாறுபட்ட நிலைபாடுகளே பிளவுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தன என்று கூறுகிறார் எஸ்.வி. ராஜதுரை பெரியாரின் நிலைப்பாடு சுயமரியாதை இயக்க - திராவிடர் கழக அரசியல் கண்ணோட்டத்திற்கு முரண்படாததாகவும் அண்ணாவின் நிலைப்பாடு அதற்கு முரண்பட்டதாகவும் இருந்தது இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகிறது. பெரியாரின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்த பழம்பெரும் சுயமரியாதை இயக்க நீதிக்கட்சி செயல்வீரரும் அச்சமயம் பெரியாரிடமிருந்து விலகி நின்றவருமான 'கேசரி'யின் (ஓ. திருமலைசாமி) நீண்ட கட்டுரை இந்நூலின் மிகச் சிறப்பான பகுதி.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580129704879
August 15

Read more from S. V. Rajadurai

Related to August 15

Related ebooks

Reviews for August 15

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    August 15 - S. V. Rajadurai

    http://www.pustaka.co.in

    ஆகஸ்ட் 15

    August 15

    Author:

    எஸ்.வி.ராஜதுரை

    S. V. Rajadurai

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sv-rajadurai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    குறுக்க விளக்கம்

    பிரிட்டிஷ் - பனியா - பார்ப்பனர் ஒப்பந்தநாள் பெரியார் அறிக்கை

    ஏமாற்றும் திருவிழாவை திராவிடர்கள் கொண்டாட வேண்டாம் பெரியார் அறிக்கை

    ஆகஸ்டு பதினைந்து

    ஆகஸ்டு 15*

    ஆகஸ்ட் 15

    துக்க நாள் - இன்ப நாள்

    பெரியார்

    அண்ணா

    கேசரி

    முன்னுரை

    பொதுவாக 'தேசியம்' என்பது குறித்தும், குறிப்பாக 'இந்திய தேசியம்' குறித்தும் உள்ளார்ந்த ஐயப்பாட்டைப் பெரியார் எப்போதுமே கொண்டிருந்தார் எனலாம். ஐரோப்பியப் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பும் வழியில் இலங்கையில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் அவர் குறிப்பிட்டார்:

    ...கடவுள், மதம், ஜாதீயம், தேசீயம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல... சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்கள் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் இன்னவென்று பார்த்தால் அவை முற்றிலும் பொருளாதார உள் எண்ணத்தையும் அந்நியர் உழைப்பாலேயே வாழ வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்... தேசீயம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாகி விட்டது... ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பல மாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக்கட்டளை என்றும் மதக்கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவைகளாகும்... இந்திய தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களைத் தூண்டி விட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெத்து முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத்தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்திய தேசியத்தால் ஏழை மக்கள், பாமர மக்கள் அடைந்த, அடையப் போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்... (பெசுச, 678-679)

    இந்திய தேசியவாதிகள் - அவர்களில் பலர் 'நல்லெண்ணம்' கொண்டவர்களாக இருந்த போதிலும் - கட்டியமைக்க விரும்பிய 'இந்திய தேசம்', 'இந்திய அரசு' ஆகியவை பார்ப்பன - பனியா நலன்களைப் பாதுகாப்பதுதான் என்பதை சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நாட்களிலிருந்து கூறி வந்தார். 1930 - ஆம் ஆண்டில் அவர் கூறினார்:

    இந்தியா ஒரு நாடு என்று ஆனால் தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாயிருக்கின்றதா? இந்தியா - சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள் காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது? இந்த நிலையிலுள்ள இந்தியா, விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? மற்ற நாட்டார்கள், தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கின்றார்கள். யார், எந்த நாட்டோடு சேர்த்துக் கொள்ளுவதென்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் (குஅ, 1.6.1930: ஈவெராசி, 649).

    இத்தகைய 'இந்திய தேசத்துக்கு’ எதிராக, தனித் தமிழ்நாடு, திராவிடநாடு எனப் பெரியார் பேசத் தொடங்கியது 1937-ஆம் ஆண்டிலிருந்துதான். 1937 - 39-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் எட்டு மாகாணங்களில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியும், சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அரசாங்கம் புகுத்திய கட்டாய இந்திக் கொள்கையும் எதிர்கால இந்தியாவின் பார்ப்பன - பனியா சக்திகள் நடத்தவிருந்த ஆட்சிக்கான ஒத்திகையாக இருந்தன. அதற்கும் முன்பே, அதாவது 1931-ஆம் ஆண்டில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதற்குப் பின் கராச்சியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டிலே, சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு அளிக்கப்படவுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி அம்மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள், அந்த சுதந்திர இந்தியாவில் சாதிப்பாகுபாடுகளை, மத வேறுபாடுகளை, பார்ப்பனியத்தை பாதுகாக்கப்படுவதற்காக இயற்றப்பட்டவை என்பதை 'தீர்க்கதரிசனத்தோடு’ பெரியாரும் அவரது சுயமரியாதைத் தோழர்களும், அம்மாநாடு நடந்த நாள் முதல் இடைவிடாது எடுத்துரைத்து வந்தனர். அவர்களது கருத்தின் உண்மையை வரலாறு மெய்ப்பித்துக் காட்டி விட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் 25, 26-ஆம் விதிகள் பார்ப்பனியத்தின், சாதியத்தின் காப்பாளர்களாக விளங்குகின்றன.

    இந்திய சுயராஜ்யம், இந்திய தேசம், இந்தியாவின் பொது மொழி என்பன குறித்துக் காங்கிரசார் கூறி வந்த கூற்றுக்குப் பதில் கூறும் வகையில் பெரியார் 1937-இல் கூறினார்:

    ரஷ்யா பொதுவுடைமை தேசம். அங்கு இன்னும் பொதுமொழி இல்லை... இந்தியாவானது அன்னிய ஆட்சிக்கு முன் - இராமர் ஆட்சி என்று சொன்ன காலத்திலும் 56 தேசத்துக்கும் ஒரு சக்ரவர்த்தியாகச் சொல்லப்பட்ட காலத்திலும் பொது மொழி என்று இருந்ததாக ஆதாரமோ சரித்திரமோ ஒன்றும் காணவில்லை. அதற்கடுத்தாற்போல் இந்தியா நம் தாய்நாடு என்று சொல்லுவதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கின்றது? இந்தியா என்கின்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா சென்ற வருடம் பிரிந்து விட்டது. அதற்கு முன் இலங்கை பிரிந்து விட்டது. அதற்கு முன் நேபாளம், பூடான் பிரித்து விட்டன. அதற்கு முன் காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தானம்) பிரிந்து விட்டன. இப்படியே எவ்வளவோ பிரிந்தும் எவ்வளவோ சேர்ந்தும் இருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது...? மாகாண சுதந்திரம் கொடுத்து மாகாணத்துக்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய்த் தன் தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு அய்ரோப்பா தேசத்தைப் போல் மொழிவாரியாகத் தனித் தனி நாடாய்ப் பிரிந்து கொண்டபின் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்.

    அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டை தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய் நாடென்பார்களா?

    ஆகவே, தாய்நாட்டவர்கள் திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூற வேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவையும் எப்போதும் ஒரு குடையின்கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது, 'பாரத நாடு' என்பதையும் நாம் எல்லாம் 'பரதர்கள்' என்பதையும் கூட நான் ஒப்புக் கொள்ள முடியாது.

    இந்தி மொழி தமிழ்நாட்டில் மட்டுமின்றி பம்பாய், வங்காள மாநிலங்களிலும் கூட முன்பு இருந்ததில்லை என்றும் ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போதும் ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தும்போதும் தான் அன்னியமொழி புகுத்தப்பட்டு வருகிறது. அந்த முறையிலே இன்று இந்தியைத் தமிழ்நாட்டில் புகுத்தப் பார்ப்பது, தமிழனல்லாத அன்னிய வகுப்பான் இன்று தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்டதனாலேயே ஒழிய வேறில்லை என்றும் கூறிய பெரியார், மொழி அடிப்படையில் மட்டுமின்றி மத அடிப்படையிலும் கூட இந்தியாவை ஒரு தேசம் என்றழைக்க முடியாது என்றார்:

    இந்தியா ஒரு நேஷனா? அதற்கு மொழி எது? மதம் எது? இந்து மதத்தால் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால்... இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் பவுத்தருக்கும் பார்சிகளுக்கும் இந்தியா நேஷனாகுமா...? மொழியைக் கொண்டு நேஷன் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு அய்ந்து நேஷன் ஆகிவிடாதா?

    பொது விஷயங்களில் வகுப்பு, மத விஷயங்கள் புகுத்தப்படக் கூடாது என்ற வாதத்திற்குப் பதில் சொல்லிய பெரியார், ஒருபுறம் இந்து மதத்துக்காக உயிர் வாழ்கிறேன், எனது மூச்சே இந்து மதம், நானே இந்து மதமாய் இருக்கிறேன் என காந்தியும், தாங்கள் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் முஸ்லீம்கள், பிறகுதான் இந்தியர்கள் என்று அலிசகோதரர்களும் ஜின்னாவும் கூற, மற்றொருபுறம் மதத்தையும் மதங்களுக்கான ஆதாரங்களையும் மதப்பழக்க வழக்கங்களையும் பாதுகாப்பதாக உறுதி கொடுத்துவிட்டே காங்கிரஸ் தலைமைப் பதவியில் நேரு இருந்ததையும் சுட்டிக் காட்டினார். பார்ப்பனியத்தை நிலைநிறுத்தவே இந்தி புகுத்தப்படுகிறது என்றும் பொது மொழி என்ற வகையில் ஒரு மொழிக்குரிய பயன்பாடு கூட இந்தியில் இல்லை என்றும் கூறினார்:

    ... ஒரு பொதுமொழி தெரிந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போதுமானதாகுமா? மொழி எதற்காக வேண்டும். பேசுவதற்கு மாத்திரம்தானா? புதிதாக ஒரு மொழியைத் தெரிந்தெடுப்பதனால் அந்த மொழி பழையது என்றோ வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தெரிந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேசமக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்குப் பயன்படுமா? முற்போக்குக்கும் நாகரிகத்துக்கும் பயன்படுமா? சீர்திருத்தத்திற்கு ஏற்றதா...! தோழர் இராஜகோபாலாச்சாரியாரும் அவரது சகாக்களும் ‘இந்தி மூலம் துளஸிதாஸ் இராமாயணம் படிக்கலாம், சமஸ்கிருதம் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம்; இந்து மத சாஸ்திரம் உணரலாம்' என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆகவே இந்தி மூலம் மோட்சத்துக்குப் போவதற்கு அனுகூலமாக... காரணங்கள் சொல்கிறார்களே ஒழிய, இந்த உலக வாழ்க்கைக்கு ஆன காரியம் ஏதும் இந்தியில் இருப்பதாகச் சொல்லவே இல்லை.

    இந்தியாவில் ஆங்கிலம் வகித்த வரலாற்றுப் பாத்திரம் பற்றிப் பெரியார் கூறினார்:

    ஆங்கிலம் நம்மில் சராசரி 100க்கு ஒருவர் இருவரே படித்திருக்கலாம் என்றாலும் - அது 35 கோடி மக்களையும் நடத்துகிறது. இந்த நாட்டு மனிதன் இன்று அடைந்துள்ள மேல்நிலைக்கு ஆங்கிலமே காரணம்... நேஷன், தாய்நாடு, சுயராஜ்யம், பொது மொழி என்ற உணர்ச்சியை - எண்ணத்தை ஆங்கில மொழியே உணர்த்தியது. அரசனுக்குக் குடிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், அரசனே கடவுள் என்றும் கருதி இருந்த 'இந்தி இந்தியனை' - அரசன் குடிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசன் குடிகளின் சேவகன் என்றும் 'இங்கிலீஸ் இந்தியா' தான் கற்றுக் கொடுத்தது. உலகப் பொதுமொழியாக ஆங்கிலம் தான் கருதப்படுகிறது. அது அதிக மக்களால் பேசப்படுகிறது.

    இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலக சம்பந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம்... கூப்பிடு தூரத்தில் இருக்கப் போகிறது. இந்திக்கு ஆகட்டும் - வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும் கூட வேலை இருக்காது... இந்தியா 'கிராம ராஜ்யமாக' ஆகும் என்று தோழர் கே.பி. பிள்ளை கருதுகிறபோது இந்தியா ரஷ்யா ஆகும் என்று ஏன் நான் கருதக்கூடாது? ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் அதிகத் தூரமில்லை - 250 மைல்கள் தாம் வகுப்பும் மதமும் வெகு அற்பமானவை என்று உண்மையிலேயே இந்தியர்கள் கருதக்கூடிய நாள் வந்தால், அன்றே இந்தியா ரஷ்யா ஆகிவிடும். அது கூடாது என்பதற்கு ஆகச் செய்யப்படும் சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்தி முயற்சி என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

    தமிழ்நாடு ஒரு தனி நேஷனாக இருந்தது; இன்றும் இருக்கிறது; அதுதான் திராவிடம். அதனுடைய நாகரீகம், ஆச்சார அனுஷ்டானம் வேறு வங்காளம், பம்பாய் வேறு. ஆங்கில ஆட்சியால்தான் ஆங்கில மொழியால்தான் ஒன்றுக்கொன்று நேசபாவமான

    Enjoying the preview?
    Page 1 of 1