Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhana Sirpam
Santhana Sirpam
Santhana Sirpam
Ebook161 pages1 hour

Santhana Sirpam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580115704870
Santhana Sirpam

Read more from Lakshmi Rajarathnam

Related to Santhana Sirpam

Related ebooks

Related categories

Reviews for Santhana Sirpam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhana Sirpam - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    சந்தனச் சிற்பம்

    Santhana Sirpam

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மஞ்சு மூட்டம் கவிழ்ந்து வந்து கொண்டிருந்தது. மெல்லத் தலையை நீட்டிய சூரியனை மஞ்சுப் பொதிகள் அணைத்துச் சுகம் கண்டன. சிலீரென்று குளிர் உடலைக் குலுக்கியது. கழுத்தும் தோளோடு அசைந்தது குளிர் தாங்காமல்.

    திஸ் ஈஸ் பிரெஞ்ச் சீஸன் இன் கொடைக்கானல், ஹனி என்றான் கண்ணன்.

    தலையைச் சுற்றிக் கட்டிய ஸ்கார்பில், முகம் மட்டும் நிலவாக ஒளிர்ந்தது. முன்னுச்சி முடிகள் நெற்றியில் படர்ந்து, கண்கள் வண்டுகளாகச் சுழன்றன. கை விரல்கள் விறைத்துப் போயின. நெற்றியில் படரும் கேச அழகை அவன் பார்த்தவாறே கூறினான்.

    ‘ராதா! இவள்தான் எத்தனை அழகு, அவன் வியப்பு அடங்கவில்லை. இந்த அழகில் மயங்கித்தானே அவன் அவளை மணந்து கொண்டான். அழகு தான் அவளுடைய மூலதனம். அவனுக்குத் தந்த காணிக்கை, அதைச் சமர்ப்பணமாக ஏற்றுக் கொண்டு தன்னுடையவள் என்ற பெருமை. முன்னால் கட்டிக் கொண்ட கரத்தை எடுக்கக் கூடாத இதம். அவளது கயல் கண்கள் நதியில் நீந்தும் கயல்களாகப் பாய்ந்து தரையில் பதிந்தன.’

    இன்னும் கூட என்னிடம் வெட்கமா, ராதா? அந்தக் கண்களின் நாணம் அவனுக்கு வேடிக்கையாகக் கூட இருந்தது. குறும்பாகச் சிரித்த அவன், அவள் எதிர்பார்க்காத பொழுது தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டான்.

    குளிருக்கு இதமாக, குளிர் தெரியாமல் இருக்கிறதல்லவா?

    குளிர் காற்று தொட்டு விளையாடி பால் பளிங்குக் கன்னங்கள் அவன் நெஞ்சில் பதிந்து குங்குமமாகச் சிவந்து போயின. அந்தச் சிவப்பில் நாணத்தின் ஆசை நிறைவு பூரணத் திருப்தியை வெளிப்படுத்தியது. இந்த அன்பு என்றும் நிலைக்குமா?

    பெண்மைக்கே உரிய பேராசை, சந்தேகம். இதை அறியாத கண்ணன், முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி, என்னைப் பாரேன். நான் இத்தனை பேசுகிறேனே. என்னைப் பற்றி ஏதாவது நீ சொல்ல வேண்டாமா? என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்? தெரிந்து கொள்ள எனக்கு ஆசையாக இருக்காதா?

    முகத்தை நிமிர்த்தி கண்களால் அவனைப் பார்த்தாள் ராதா. நீங்கள் எனக்குக் கிடைத்த புதையல் என்றாள்.

    நெஞ்சில் பதிந்த முகத்தை இன்னும் அழுத்திக் கொண்டான். அவள் கண்களை மூடிக் கொண்டாள். நீ வாயால் பேசவே வேண்டாம். உன் கண்களே பேசி விடுகின்றன.

    மூடிய இமைகளில் தன் இதழைப் பதித்தான். தாமரையா, சந்தனமா, மல்லிகையா, சண்பகமா-உணர இயலாத மணம் கமழ்ந்தது. இது அவள் உடலின் மணம், இதில் அவன் மயங்கித் தான் போகிறான். கண்ணிமையோ மென் பஞ்சை முகர்வது போல் சுகம் தருகிறது. இந்த மணத்தை, மென்மையை அவள் எங்கே பெற்றாள்?

    காட்டுச் செடிகளின் மணத்தைக் காற்று அவர்கள் மேல் வாரித் தெளித்துச் சென்றது. நாணலாக வளைந்தாள் அவள். எதிரே வருபவரைக் கூர்ந்து பார்க்கும் அளவுக்கு இருள் திரை இறங்கிக் கொண்டு வந்தது. ‘வாக்கிங்’ போய் வரும் பொழுது தான் நேரம் போவது தெரியாமல் இந்த இளம் புது மணத் தம்பதியின் உல்லாச சரஸமும் நடந்து கொண்டிருந்தது.

    விடுதியின் முன்பு இருந்த திறந்த வெளியில் அவன் அமர்ந்துவிட்டான். பனி படர்ந்த திரை மறைவில் இவர்களைக் காண வெட்கிய சந்திரன் கண்ணாமூச்சி ஆடினான். ராதையின் கரத்தைப் பற்றிக் கீழே தள்ளிய கண்ணன் கலகலவென்று நகைத்தான்.

    இதென்ன விளையாட்டு? புல்லெல்லாம் சில்லென்று இருக்கிறது? என்று சிணுங்கினாள் அவள்.

    சந்திரன் தன் மென் திரையை விலக்கி இப்பொழுது கண்ட பொழுது கண்ணன் ராதையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான். அவனுக்கே நாணம் வந்தாற் போல மீண்டும் முகத்திரை போட்டுக் கொண்டான். புசுபுசுத்த மழைத்துளிகள் பன்னீர் தெளிப்பாக-நிலவின் சிரிப்பலையாக அவர்கள் மேல் விழுந்தன.

    அப்பொழுதும் கண்ணன் அவளை நகர விடவில்லை. யாரோ ஒருவர் இவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டுப் போனார். ‘சரியான பைத்தியங்கள்' என்று நினைத்தாரோ என்னவோ? அல்லது இரகசியமாக வந்த காதலர்கள் என்று நினைத்திருப்பாரோ? திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போனார்.

    எழுந்திருங்கள்; வெட்கமாக இல்லை? யாரோ பார்த்துக் கொண்டே போகிறார். சீச்சி...

    என்ன சீ? நான் என்ன ஊரான் பெண்டாட்டியையா கொஞ்சுகிறேன்? என் மனைவியைத்தானே கொஞ்சுகிறேன். அந்த மனிதர் இந்த மாதிரி தன் மனைவியைக் கொஞ்ச முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டு போவார்.

    எதற்கெடுத்தாலும் பேசி விடுகிறீர்கள். நீங்கள் தான் கண்டீர்கள் என்று நொடித்தாள் ராதா. அவளது கொழு கொழுத்த மாம்பழக் கன்னத்தைப் பிடித்துத் திருகி இழுத்தான்.

    யூ ஆர் வெரி ஸ்வீட், ஹனி என்று கரங்களைக் கோத்து மாலையாக்கி தன் மேல் இழுத்தான். அவனது முகத்தின் மேலே விழுந்தாள்.

    பன்னீர் தெளிக்கப் பனி பெய்யுமே... படுக்கப் பசும்புல் பாய் போடுமே... அவன் பாடினான். அவள் காதைப் பொத்திக் கொண்டாள்.

    ஏன் ராதா! நான் பாடுவது நன்றாக இல்லை?

    ஏன் இல்லை? எனக்கு நன்றாக இருக்கிறது. ஆனால் விடுதியில் உள்ளவர்கள் காலி செய்து விடப் போகிறார்கள் என்றுதான் பயமாக இருக்கிறது. அடுத்தது, இதைப் பாடியவர் கேட்டால் நிச்சயம் தூக்குப் போட்டுக் கொள்வார். பிறகு போலீஸ் கேஸ் என்று வம்பு சமாசாரம்.

    அவன் முகம் சிறுத்து விட்டது. என்ன ஹனி, நான் அவ்வளவு மோசமாகவா பாடுகிறேன்?

    அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவளுக்கு. சேச்சே. சும்மாச் சொன்னேன். வேடிக்கையாக சொன்னதற்கே முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே? கலகலவென்று நகைத்த அவள் சிரிப்பு எங்கிலும் ஒலித்தது. அவன் சிரித்து அடங்கிய பின்னர் அந்த ஒலியும் அடங்கி விட்டது.

    இரவின் தணப்பு. கனமான பச்சைக் கம்பளி கொடுத்த வெதுவெதுப்பு, கண்ணனின் அன்பின் வேகத்திற்கு ஈடு கொடுத்த அயர்ச்சி, அவனுடைய அணைப்பில் கண்ணயர்ந்த பொழுது நேரமே தெரியவில்லை. அவள் கண் விழித்த பொழுது நன்றாக வெளிச்சம் வந்திருந்தது. பரபரப்புடன் போர்வையை நகர்த்திக் கொண்டு எழுந்தாள்.

    சற்று சோம்பலான மன நிலையில் ஜன்னல் காட்டனை விலக்கி விட்டு நின்ற பொழுது உலகமே இன்பமாகத் தோன்றியது. ‘இந்த இன்பம் இப்படியே நிலைக்குமா?’ கொடைக்கானலின் வெண் பனிப்போர்வை ஆதவனை அனுமதிக்க மறுத்துப் படர்ந்திருந்தது. மரக் கிளைகளைத் தட்டிக் கொண்டு போயின மஞ்சு மூட்டைகள்.

    தேர்ந்த ஓவியனின் கவனம் மிக்க கை வண்ணம் மிளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஆதவனின் மஞ்சள் கதிர்கள், பனி மூட்டங்களைப் பிளந்து கொண்டு வெளி வரத் துடித்தன. ராதா இதைப் பார்த்துக் கொண்டே நின்றாள். கண்ணன் இன்னும் எழுந்திருக்கவில்லை.

    அவள் குளிக்கப் போனாள். இவ்வளவு நிறைவிலேயும் அவள் மனத்தின் ஒரு மூலையில் ஏக்கத்தின் கோடுகள் நெளிந்து கொண்டிருந்தன. இவருடைய அன்பு என்றுமே நிலைக்குமா? உள்மனம் போடும் கூச்சல் பொங்கும் புதுச்சுவையில் ஏற்பட்ட மன நெகிழ்ச்சியால் ஏற்பட்ட மனக் கசிவுதான் என்பது புரியவில்லை.

    உணர்ச்சிகளின் உச்ச நிலை கண்களில் இறங்க, நெஞ்சம் பூரிக்க இரவு கண்ணனிடமே கேட்டாள். இந்த அன்பு எனக்கு என்றுமே சொந்தமாக இருக்குமா?

    சீ... பைத்தியம்! நாம் என்ன வெற்றுக் காதலர்களா? அக்னியை சாட்சி வைத்து மந்திரங்களைக் கூறி உன்னை மணந்திருக்கிறேன். இதில் இன்னும் என்ன சந்தேகம்? பெண் மனமே மிகவும் பலகீனமானது. இன்னும் என்னென்ன சந்தேகங்கள் என்று அவளை நெருங்கித் தழுவிக் கொண்டான்.

    அவள் குளித்து விட்டு வந்த பொழுது காப்பி வந்திருந்தது. காப்பி கொண்டு வந்தவன், கதவைத் தட்டியதால் கண்ணன் எழுந்து கதவைத் திறந்து காப்பியை வாங்கி வைத்திருந்தான். அவளைக் கண்டதும், டியர், டேக் காப்பி ஃபஸ்ட் என்றான்.

    புடவையைக் கட்டிக் கொண்டு வருகிறேன்.

    இந்தக் குளிரில் காப்பி ஐஸ் ஆகிவிடும் என்றான் கேலியுடன்.

    உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்ட டவலுடன் அவள் காப்பியைப் பருகினாள். ஏன் ராதா, குளிக்கப் போகும் முன் என்னை அழைத்திருக்கக் கூடாது? நானும் வந்திருப்பேனே! என்றான் கண்களில் வேட்கை மின்ன.

    ம்... தொடக்கூடாது. சீக்கிரம் போய் நீங்க குளித்து விட்டு வாருங்கள். குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போலாம் என்றாள் கொஞ்சலாக.

    நான் தொட்டால் பிறகு கோயிலுக்குப் போகக் கூடாதோ?

    அவன் முகத்தைச் சுளித்தான். ஏன் ராதா, கோயிலுக்குப் போகத்தான் வேண்டுமா? நம் ஊரில் எத்தனை கோயில்கள் இல்லை? இங்கே வரும்பொழுதுகூட கீழே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனோமே! ஏன், திருப்பரங்குன்றம் போகவில்லையா!

    வாடிய பூவாக முகம் சுருங்கியது. எல்லா வேலைகளையும் தினம் செய்வதில்லையா? இங்கே குறிஞ்சியாண்டவர் கோயில் ரொம்ப சக்தி வாய்ந்ததாகும்.

    நீ என்ன வேண்டிக் கொள்ளப் போகிறாய்?

    அவள் முகம் குங்குமமாகச் சிவந்தது. சரி, முதலில் கோயிலுக்குப் போவோம். உன் ஆசையைக் கெடுப்பானேன்? ஆனால் என்ன வேண்டிக் கொள்ளப் போகிறாய் என்று சொல்ல மாட்டாயா?

    உங்களைப் போலவே – அழகாக - சிவப்பாக...

    "ஓ... என்னை எதிர்க்க ஒரு பையனைக் கட்சி கட்டப் போகிறாயா? நான் சோடை போகலாமா? என் பங்கிற்கு ஒரு பெண் வேண்டும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1