Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasai Thaadi Mani Kuiyile...!
Manasai Thaadi Mani Kuiyile...!
Manasai Thaadi Mani Kuiyile...!
Ebook79 pages32 minutes

Manasai Thaadi Mani Kuiyile...!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580129504859
Manasai Thaadi Mani Kuiyile...!

Read more from Daisy Maran

Related to Manasai Thaadi Mani Kuiyile...!

Related ebooks

Related categories

Reviews for Manasai Thaadi Mani Kuiyile...!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasai Thaadi Mani Kuiyile...! - Daisy Maran

    http://www.pustaka.co.in

    மனசைத்தாடி மணிக்குயிலே...!

    Manasai Thaadi Mani Kuiyile…!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 1

    வெள்ளையாக பூப்பூத்த சின்ன சின்ன முட்செடிகள் இருபுறமும் குவியல் குவியலாக அடர்ந்திருந்தன. புது புது வண்ணங்களில், அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் நாவல்மர கிளைகளில் தாவி குதித்து தூங்கமூச்சி மரங்களை எழுப்பி விளையாடிக் கொண்டிருந்தன. கருவேல முட்புதர்கள் மண்டிக் கிடந்த இடம் வெறும் கட்டாந்தரையாக மாறியிருந்தது. பிளாட் போடுவதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டு இடையிடையே கற்களுக்கு வண்ணம் பூசி நட்டு வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்ம இடம்தான் தாத்தா பெயர் போட்டிருக்கு பாரு! காரை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் பிள்ளைகளிடம் சொன்னார். ஆனாலும் அந்த இடத்தின் அமைப்பு விசித்திரமான ஒரு உணர்ச்சியை உண்டாக்குவதுபோல் உணர்ந்தாள் மதுமதி. ஆழ்மனதில் அவளை அறியாமல் ஒருவித அச்சம் பரவியது. ஊருக்கு வருவதை தவிர்த்திருக்கலாமோ என்றது அவள் மனம்.

    வீட்டு வாசலுக்கு சற்று முன்பாக காரை நிறுத்தி விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றார்கள். பிள்ளைகளும் கணவரும் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் வந்துவிடுவார்கள். ஆனாலும் இந்த முறை வீட்டுக்குள் நுழையும்போதே பிள்ளைகள் மிரள மிரள விழித்தப்படி வந்தது மதுமிதாவுக்கே குழப்பத்தை உண்டு பண்ணியது.

    எப்படி இருக்கீங்க...? நான் மதுமிதா வந்திருக்கேன்

    மாமனாரின் அருகில் சென்று இவள் சொன்னது அவர் மூளையை எட்டவில்லை.

    காதோரம் குனிந்து மீண்டும் சொன்னாள். இப்போது

    அவர் கண்கள் மட்டும் மெல்ல அசைந்தன உதடு பிரிந்து தலையை அசைத்தார். அடையாளம் கண்டுக் கொண்டுவிடார் என்று புரிந்தது. உங்க பேரப்பிள்ளைகளும் எங்ககூட வந்திருக்காங்க என்றாள். அவர் முகத்தில் மெல்லிய ஒளி வட்டம் தெரிந்தது. வாயை மெல்ல அசைத்தார். பேச நினைத்த வார்த்தைகள் நெஞ்சிலிருந்து எழாமல் தொண்டை அடைத்தது போல, எச்சிலை கூட்டி விழுங்கி வாயை திறந்து சகஜமாக பேச முயற்சி செய்தார். முடியாமல் போகவே மீண்டும் சோர்வோடு கண்களை மூடிக்கொண்டார்.

    அவரை தொந்தரவு படுத்தாதே என்று கணவர் தடுக்கவே, பிள்ளைகளை முன்னால் நிறுத்திவிட்டு அமைதியாக பின்னுக்கு நகர்ந்துக் கொண்டாள் மதுமிதா.

    அவள் பார்வை வாசல் பக்கமாக திரும்பியது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை பார்க்கத்தான் அதுவும் இவளை பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது மதுமிதாவுக்கு நன்றாகவே தெரியும். பின்னே இருக்காதா பதினெட்டு வருடத்துக்கு பிறகு அந்த ஊருக்கு வருகிறாளே!

    பார்வையை ஜன்னல் பக்கமாக திருப்பியவளுக்கு, ஜன்னலுக்கு மிக அருகில் தெரிந்த அந்த உருவத்தை பார்த்தவள், ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். இடுக்கிய கண்களும் சுருங்கிய தோலும் உடல் அதிர்வதை பொருட்படுத்தாமல் அவள் பேசிய விதமும் அடிவயற்றில் குளிர்ச்சி பரவி உறைவதுபோல் இருந்தது. அவளை பார்க்க பிடிக்காமல் பார்வையை திருப்பிக் கொண்டாள். பார்க்கவே பயமாக இருந்தது. ஒரு நிமிடம் கண்களை இமைத்த அந்த முகம் மதுமிதாவை நோக்கி நீங்க யாரு...? உங்களை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கேனே...? என்று கேட்டது.

    நான்... நான்... மதுமிதா

    வார்த்தைகள் வெளிவராமல் தொண்டையில் சிக்கிகொண்டன.

    நீ...நீங்களா! என்னை யாருன்னு தெரியுதா? நான்தான் சுமதி ஐயாவோட தங்கச்சிப் பொண்ணு...

    சற்று தாமதமாகத்தான் அவள் சொன்னாள்.

    மதுமிதாவுக்கு அவளை தெரியாமல் இல்லை. நன்றாகவே தெரியும் ஆனால்...?

    அப்போ பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். இப்போ... மத்தவங்களுக்கு கெடுதல் நினைக்க கூடிய கொடிய எண்ணங்களை கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்க முடியும்? எண்ணம் போல் வாழ்க்கை என்பார்களே அது இவளுக்கு முற்றிலும் பொருந்தும்.

    திடீரென்று யாரோ அலறும்

    Enjoying the preview?
    Page 1 of 1