Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanathile Pootha Vanna Nila
Vanathile Pootha Vanna Nila
Vanathile Pootha Vanna Nila
Ebook198 pages1 hour

Vanathile Pootha Vanna Nila

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580125804860
Vanathile Pootha Vanna Nila

Read more from Lakshmi Ramanan

Related to Vanathile Pootha Vanna Nila

Related ebooks

Related categories

Reviews for Vanathile Pootha Vanna Nila

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanathile Pootha Vanna Nila - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    வனத்திலே பூத்த வண்ண நிலா

    Vanathile Pootha Vanna Nila

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வானதியின் தந்தை ஜெகதீசன் வன இலாக்காவில் ஒரு உயர் அதிகாரி. அந்த ஊருக்கு அவரை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மாற்றியிருந்தார்கள். தந்தையின் இடமாற்றம் வானதியைப் பாதித்ததில்லை.

    அவள் சென்னையில் பிரபல மகளிர் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி எம்.எஸ்ஸி. விலங்கியல் முடித்து விட்டுத் தன் பெற்றோருடன் இருக்க வந்து சேர்ந்து கொண்டாள்.

    சரணாலயத்தையொட்டி அமைந்திருந்த அந்தத் தனி பங்களாவைச் சுற்றிப் பெரிய தோட்டம். அதில் பல தினுசு மரங்கள். அவற்றின் பெயர்களைத் தன் தந்தையிடம் கேட்டு வானதி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்துப் பார்த்து ஞாபகப் படுத்திக் கொள்ள முயன்றாள். காம்பவுண்ட் சுவரோடு ஒட்டி நின்ற அசோக மரங்கள்.

    சற்றே மேடான பகுதியில் அவர்கள் வீடு இருந்தது. அதன் பின்புறம் அலைபாயும் ஏரி நீர். அதன் சின்னஞ் சிறு அலைகள் முன்னால் ஓடி வந்து விட்டுப் பின் வாங்கிச் செல்லும் அழகை வானதி பார்த்து ரசிப்பாள்.

    சில சமயங்களில் சரணாலயத்திலுள்ள வன விலங்குகள் ஏரி நீரை அருந்த வரும். காட்டெருமை, மான்கள், ஏன் - புலி கூட வருவதுண்டு. வானதி ஒரு விலங்கியல் மாணவி என்கிற முறையில் அருகிலிருந்த சரணாலயத்தைச் சுற்றிப் பார்த்து அதில் வாழும் வன விலங்குகளின் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனிக்க ஆசைப்பட்டாள். அவள் தந்தையோடு போய் வருவதையே அவள் தாய் அனுமதித்ததில்லை.

    ஒரு முறை அம்மா கமலாவுக்குத் தெரியாமல் வானதி, அப்பா சரணாலயத்தின் பராமரிப்பை மேற்பார்வையிடப் போனபோது, ஜீப்பில் ஏறி உட்கார்ந்து விட்டாள். விஷயம் கமலாவுக்குத் தெரிந்தபோது அவள் படபடப்பாகி, பயத்தில் கத்தி, கைகால்கள் சில்லிட்டுப் போய் மயக்கமாகிவிட, ஏக அமர்க்களம் ஆகி விட்டது. அதிலிருந்து தாய் சொல்லைத் தட்டி நடக்க வானதிக்குத் துணிவிருக்கவில்லை. அம்மா... அவள் சாதாரணமாக இருக்கும் போது ரொம்ப நல்லவள். பாசமே வடிவானவள். ஆனால் திடீரென்று வானத்தைக் கவ்விக் கொள்ளும் மேக மூட்டம் போல் அவள் முகம் சோகத்தில் உறைந்து போகும். இரவில் தூங்கும்போதுகூட அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, ஐயோ! என் குழந்தைகளை யாராச்சும் காப்பாத்துங்க. தயவு செய்து காப்பாத்துங்க! என்று அலறி அழுவாள். அப்போது அவள் உடல் நடுங்கும். வியர்வையில் கை கால் சில்லிட்டுப் போகும். அப்பாவின் மீது அம்மாவுக்குத் திடீரென்று கோபம் வந்துவிடும். என் ரெண்டு குழந்தைங்க... இந்தக் காட்டின் பசிக்குப் பலி கொடுத்துட்டுத் தவிச்சுக்கிட்டிருக்கேன். இன்னொருத்தரானால் இந்த வேலையே வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போயிருப்பான். நீங்க கடமைதான் எனக்கு மூச்சுன்னு வசனம் பேசிக்கிட்டிருங்க. உங்களுக்கெல்லாம் கல்யாணம், குழந்தை, குடும்பம் எல்லாம் எதுக்கு? என்று குற்றம் சாட்டுவாள்.

    கமலாவைப் புலம்ப விட்டுவிட்டு, ஜெகதீசன் பேசாமல் இருப்பார். அவளுடைய குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் என்றுமே பதில் இருந்ததில்லை. அவளுடைய பேச்சில் சூடேறத் துவங்கும்போதே அவர் எழுந்து நழுவி விடுவார். அந்த நழுவல் அவரது குற்ற உணர்வின் எதிரொலியோ?

    வானதிக்கு அம்மாவின் நடத்தை ஒரு புரியாத புதிராக இருந்தாலும், அவள் தந்தையையோ அம்மாவையோ விவரங்களைச் சொல்லும்படி கேட்டதில்லை. எரிமலைக்குள் அக்கினிக் குழம்பு அதிக நாள் நீடித்துத் தங்கி இருக்காது. என்றாவது ஒரு நாள்... ஒரு பலவீனமான நேரத்தில் அது வெடித்தே தீரும். அப்போது உண்மை தானே தெரிந்து விட்டுப் போகிறது என்று விட்டுவிட்டாள். வானதியின் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் முடிகிற இடத்தில் சின்னச் சதுர மேடை இருந்தது. அங்கே நிரந்தரமாகவே சில நாற்காலிகள் போட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் உட்கார்ந்து அவள் தன்னைச் சுற்றிலும் கூர்ந்து கவனிப்பாள். மாலை வேளைகளில் கூட்டை வந்தடையும் பறவை இனங்களின் சப்தங்கள்... ஓசைகள் வீடு திரும்பும் தாய்ப்பறவைகளுக்குத் தங்கள் குஞ்சுகளிடம் சொல்ல அப்படி என்னதான் செய்தி இருக்குமோ?

    தங்களுடைய அன்றைய அனுபவங்களைக் குஞ்சுகளிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்ளுமோ? பறவைகளின் மொழி தெரிந்திருந்தால் அந்தச் சப்தங்களைக் கேட்பதில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கும் என்று வானதி நினைத்துக் கொள்ளுவாள்.

    வானதியின் தனிமையைக் கலைக்க இப்போதெல்லாம் அவன் வந்தான்...

    அவன் பெயர் வாசு... என்கிற வாசுதேவன்.

    முதலில் அவள் அவனைச் சந்தித்த விதம் வித்தியாசமானது.

    டவுனுக்குள் இருந்த தகவல் மையத்தில் வனவிலங்கு வாரத்தையொட்டிப் புகைப்படக் கண்காட்சி ஒன்றிருந்தது. விலங்கியல் மாணவி என்பதால் வானதிக்கு அதில் கூடுதல் ஈடுபாடு. அதனால் கண்காட்சிக்குத் தந்தை கிளம்பிய போது கெஞ்சிக் கூத்தாடி (அம்மாவிடம் அனுமதி பெற்று) அவருடன் கிளம்பி விட்டாள்.

    வனவிலங்குகளை வெவ்வேறு கோணங்களில் இதுவரை யாரும் பார்த்திராத விதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. அம்மா யானைக்கு அடியில் நிற்கும் குட்டி. தாய்ப்புலியைச் சீண்டி விளையாடும் குட்டிகள். ஒரே வரிசையில் கொலு வீற்றிருப்பதைப் போல் மரக்கிளை மீது உட்கார்ந்து கொண்டிருக்கும் குரங்குகள்... காட்டுச் சுனையின் நீரைப் புலியின் அருகில் தைரியமாய் நின்று அருந்தும் புள்ளி மான்.

    வானதி புகைப்படங்களைக் கூர்ந்து பார்த்துத் தந்தையிடம் அவற்றைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தபோது.

    குட் ஈவினிங் சார்.

    எதிரே அந்த இளைஞன் நின்றிருந்தான். அவன் உயரமும், புன்னகை முகமும், தோற்றமும் பார்த்த உடனேயே மனதில் பதிவதாக இருந்தது.

    ஹலோ... வாசு! என்று ஜெகதீசன் சொன்னதிலிருந்து அது அவர்களது முதல் சந்திப்பல்ல என்பது தெளிவாகியது.

    புகைப்படங்கள் பிரமாதம்! யார் எடுத்த புகைப்படங்கள்? ஜெகதீசன் புகழ்ந்தார்.

    அடியேன்தான். தாங்க்யூ.

    வாட்! நீயா... கன்கிராட்ஸ். இது என் பெண் வானதி. இத்தனை நேரம் இவைகளை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தாள்.

    அப்படியா? தேங்க்ஸ். வீட்டுக்கு வாங்களேன், இங்கே பக்கத்தில்தான் இருக்கு.

    வேண்டாம் வாசு. இன்னொரு நாள் பார்க்கலாம். அவர் விட்டுப் போன இடத்திலிருந்து புகைப்படங்களைப் பார்க்கத் துவங்கினார்.

    சரணாலயத்தைப் பார்த்துட்டீங்களா மிஸ்?

    என்னை வானதின்னே நீங்க கூப்பிடலாம். எங்கம்மா கொஞ்சம் பயந்த சுபாவும். அதுவும் வனவிலங்குகளைக் கண்டால் அப்செட் ஆகிற டைப்.

    அப்படியா? சார் என்கிட்டே சொல்லவே இல்லையே. நீங்க எப்போது ஃப்ரீயோ சொல்லுங்க. உங்களையும் அம்மாவையும் அழைச்சுக்கிட்டுப் போய் வனவிலங்குகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்போ புரிஞ்சுக்குவாங்க. அவை எத்தனை சாது என்று! அவன் அவர்கள் கிளம்பும் வரையில் கூடவே இருந்தான்.

    வாசு! நீ நம்ம வீட்டுக்கு ஒரு நாள் வாயேன்! ஜெகதீசன் அழைத்தார்.

    ஷ்யூர் சார்.

    அவர்கள் காரில் ஏறி அமர்ந்ததும் கையசைத்து விடை கொடுத்து விட்டுப் போனான்.

    யாரப்பா இவர்...? தெரிஞ்சவரா?

    ஆமாம். இங்கே நடேசன்னு ஒருத்தர். புதைபொருள் இலாக்காவில் வேலை பார்க்கிறார். அவர் பிள்ளை.

    தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவர் மௌனமானார் அதோடு வானதி விட்டு விட்டாள். தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.

    ஜெகதீசன் அலுவல் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.

    நல்ல வேளையா நீ வந்துட்டே வானதி. இல்லாட்டி இங்கே அப்பா டூர் போகிறப்போ தனியாக இந்தப் பங்களாவில் நான் போரடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். இங்கே அடிக்கடி மழை வந்துடும். அதனால் கேபிள் போயிடும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது.

    பாவம் அம்மா. தனிமை கொடுமையானது தான். அதுவும் அம்மாவைப் போன்ற பயந்த குணம் படைத்தவர்களுக்கு அது பெரிய தண்டனைதான்!

    வானதி ஒரு முறை ஷாப்பிங் செய்ய டவுன் பக்கம் போனாள்.

    அங்கே ரெடிமேட் சூடிதார் ரகங்கள், ஜீன்ஸ் மேல் போட்டுக் கொள்ளுகிற ஷார்ட் குர்த்தா வகைகளை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வருகையில் கைப்பையை அங்கேயே விட்டு விட்டது தெரியாமல் நடந்து காருக்கருகில் வருகையில், எக்ஸ்க்யூஸ்மீ! என்ற வண்ணம் அதை எடுத்துக் கொண்டு வானதியைப் போலவே ஒரு இளம் பெண் ஓடி வந்தாள்.

    எஸ்...?

    உங்கள் ஹாண்ட் பேக் கடையில் நின்னு போச்சு. திறந்து எல்லாம் இருக்கான்னு பார்த்துடுங்க.

    ரொம்ப தேங்க்ஸ்... உங்கள் பெயர்?

    சம்யுக்தா... சரியா இருக்கான்னு பாருங்க.

    எல்லாம் சரியாக இருக்கும்... உங்க வேலையை விட்டுட்டு இதைக் கொடுக்க ஓடி வந்திருக்கீங்க... நான் ரொம்ப அப்ரிஸியேட் பண்ணறேன். தேங்க்யூ... என்னை நீன்னே சொல்லலாம். என் பெயர் வானதி, எனக்கு மரியாதை எல்லாம் தேவை இல்லை சம்யுக்தா.

    நைஸ் டு மீட் யூ.

    நேரம் இருக்கும்போது வீட்டுக்கு வாயேன். பேச ஆள் கிடைக்காதான்னு திண்டாடிக்கிட்டிருக்கேன்.

    ஷ்யூர். வரேன்.

    வானதி விலாசத்தையும் மொபைல் எண்ணையும் எழுதிக் கொடுத்தாள்.

    இரண்டு நாட்களிலேயே வானதியைப் பார்க்க வந்து சம்யுக்தா அவளை ஆச்சரியப்பட வைத்தாள்.

    அந்த ஊரிலிருந்த பெண்களுக்கான கல்லூரியில் சம்யுக்தா லெக்சரர் வேலை பார்த்தது தெரிந்தது.

    நீயும்தான் போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சிருக்கே. என் காலேஜில் நீ ஏன் லெக்சரராகச் சேரக்கூடாது? உனக்கும் பொழுது உபயோகமாகப் போகும். சம்பளப் பணம் பாக்கெட் மணி மாதிரி இருக்கும்! சம்யுக்தா சொன்னதைக் கேட்டபோது வானதிக்கு ஆசையாகத்தான் இருந்தது.

    ஆனால் அம்மா கமலா ஒப்புக் கொள்ளவில்லை.

    சம்யுக்தாவின் வீட்டுக்கு மகளை அனுப்புவதற்கே அவளுக்குத் தயக்கம்தான். ஏகமாகக் கேள்விகள் கேட்டு வானதியைத் திணற அடிப்பாள். அவற்றிற்குப் பதில் சொல்லியே களைத்துப் போய்த் தான் போக வேண்டாம் என்று அவள் முடிவு செய்ததும் உண்டு. எனவே நண்பிகள் தொலைபேசியில் தான் பேசிக் கொள்வார்கள்!

    'அம்மா ஏன் இப்படிப் பயப்படுகிறாள்? தன் பயந்த குணத்தினால் மற்றவர்களையும் தொல்லைக்கு ஆளாக்குகிறாள். தான் படிப்பை முடித்துக் கொண்டு இங்கே வந்ததே தவறோ?' என்றெல்லாம் வானதி யோசித்தாள்.

    இதற்கு மத்தியில் ஜெகதீசனுக்கு அலுவல் விஷயமாகத் தில்லிக்குச் செல்ல வேண்டி வந்தது.

    வானதியின் தோழி சம்யுக்தாவின் பிறந்த நாளன்று விருந்துக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்தாள்.

    சீக்கிரம் வந்துடறேம்மா ப்ளீஸ்! என்று மகள் கெஞ்சவும் கமலாவால் மறுக்க முடியவில்லை.

    சரி... ரொம்ப நேரமாக்கி என்னைக் கவலைப்பட வெச்சுடாதே. போயிட்டுச் சீக்கிரம் வா.

    அம்மாவின் அனுமதி கிடைத்ததும் வானதி குஷியாகித் துள்ளலுடன் கிளம்பினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1