Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kattikarumbe Kanna!
Kattikarumbe Kanna!
Kattikarumbe Kanna!
Ebook72 pages20 minutes

Kattikarumbe Kanna!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிடிவாதம் பிடித்த மதுமிதா - உயிருக்குயிராய் நேசித்த ரஞ்சித்தை விட்டு விலகி... வேறொருவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிக்கிறாள்.

மதுமிதா மீது உயிரையே வைத்திருக்கும் ரஞ்சித் தவியாய் தவிக்கிறான். உயிர் உருக... இதயம் கரைய கண்கள் கலங்க... வேதனையில் விம்மும் ரஞ்சித்.

தன் உண்மை காதலை மதுமிதாவிற்கு புரிய வைத்தானா?

நேசம் கொண்ட நெஞ்சங்கள் சேர்ந்ததா?

'கட்டிக் கரும்பே கண்ணா' விடை சொல்லும்.

- இந்திரா நந்தன்

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130704920
Kattikarumbe Kanna!

Read more from Indira Nandhan

Related to Kattikarumbe Kanna!

Related ebooks

Related categories

Reviews for Kattikarumbe Kanna!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kattikarumbe Kanna! - Indira Nandhan

    http://www.pustaka.co.in

    கட்டிக்கரும்பே கண்ணா!

    Kattikarumbe Kanna!

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 1

    தொலைபேசி சிணுங்கிக் கொண்டேயிருந்தது.

    'எடுக்கலாமா? வேண்டாமா?'

    தன்னுடைய அறையைவிட்டு வெளியே வந்தாள் மதுமிதா. 'அவன்தான். அவனேதான். இந்த அதிகாலை வேளையில் பேசுவது அவனாகத்தான் இருக்கும்' ரஞ்சித்தின் ஞாபகம் வந்ததுமே நிலவை சூழ்ந்த கருமேகத்தைப்போல அவளுடை முகத்தை இறுக்கம் கவ்வியது.

    அவனுடைய முகத்திலேயே விழிக்க கூடாது.

    அவனுடைய குரலையே கேட்ககூடாது.

    அதற்காகத்தான் தன்னுடைய செல்போஃனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருந்தாள்.

    எதற்காக தொல்லை பண்ணுகிறான்?

    செல்போனுக்கு முயற்சி செய்திருப்பான். தொடர்பு கிடைத்திருக்காது.

    அதனால்தான் வீட்டு தொலைபேசிக்கு முயற்சி பண்ணுகிறான்.

    'இனி பேச என்ன இருக்கிறது. பழக என்ன இருக்கிறது. அதான் எல்லாமே முடிந்துவிட்டதே. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாகும் வரை நான் உன்னுடைய முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேனே, மானம் ரோஷம் உள்ளவனாக இருந்தால் மறுபடியும் பேச நினைப்பானா?

    வெட்கம் கெட்டவன்.

    தன்னை மாதிரியே என்னையும் நினைத்துவிட்டான்'

    மதுமிதாவின் இதயம் அலைகடலாக கொந்தளித்தது.

    இரண்டு தடவை மணியடித்து ஓய்ந்த பிறகு மூன்றாவது தடவையாக மணியடிக்க தொடங்கியது தொலைபேசி.

    ஏய் மது! போன் அடிக்கறது காதுல விழலையாடி?.

    அடுக்களையில் இருந்தபடியே கத்தினாள் கனகம்.

    மணி அடிக்கறது உன்காதுலயும் விழுதுதானே? வேணுமின்னா நீ எடுத்துபேசு மதுமிதா டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் போய் நின்றுக்கொண்டு, சீப்பை எடுத்து தலையை வாரத்தொடங்கினாள்.

    வரவர உனக்கு திமிரு அதிகமாயிடுச்சு!

    கனகம் முணுமுணுத்தபடியே அடுக்களையைவிட்டு வெளியே வந்து, ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு தொலைபேசியின் ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.

    அலோ யாரு பேசறது?

    அத்தே நா ரஞ்சித் பேசறேன்.

    அடடே! ரஞ்சித்தா எப்படிப்பா இருக்கே?

    வருத்தமா இருக்கேன்?

    ஏம்ப்பா

    உங்கப்பொண்ணு செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருக்கா

    ஏன், ரெண்டுபேருக்கும் ஏதாவது சண்டையா?

    என்னைப் பார்த்தா சண்டைப் போடறவன் மாதிரியா இருக்கு. உங்கப் பொண்ணுதான் சண்டைப்போடறா?

    நா இப்ப என்ன செய்யணும்?

    சமாதானப்படுத்தி என் கூட பேச சொல்லுங்க.

    நா சொன்னா கேட்கற கழுதையா அவ. பேசலைன்னா விட்ரு ரஞ்சித், எத்தனை நாளைக்குத்தான் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கப்போறான்னு பார்த்துடலாம்

    என்னால தாங்கமுடியாது அத்தே. மதுவோட நா பேசியே ஆகணும். அவளைக் கூப்பிடுங்களேனு மறுமுனையிலிருந்து அழாதக் குறையாய் கெஞ்சினான் ரஞ்சித்.

    கனகத்தின் ஒண்ணுவிட்ட அண்ணன் மகன்தான் ரஞ்சித்.

    Enjoying the preview?
    Page 1 of 1