Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paaraikkul Panneer Pushpam
Paaraikkul Panneer Pushpam
Paaraikkul Panneer Pushpam
Ebook156 pages1 hour

Paaraikkul Panneer Pushpam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005177
Paaraikkul Panneer Pushpam

Read more from Mukil Dinakaran

Related to Paaraikkul Panneer Pushpam

Related ebooks

Related categories

Reviews for Paaraikkul Panneer Pushpam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paaraikkul Panneer Pushpam - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பாறைக்குள் பன்னீர் புஷ்பம்

    சிறுகதைகள்

    Paaraikkul Panneer Pushpam

    Sirukathaigal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஏம்மா இப்படிப் பண்றீங்க?

    2. தேடி வாங்கிய தீங்கு

    3. நட்புக்கு மரியாதை

    4. விதி செய்வோம்

    5. கனவுச் சாமியார்

    6. அவனா நீ?

    7. நேர் துருவங்கள்!

    8. அதென்ன நாளைக்கு?

    9. காட்சிப் பிழைகள்

    10. இன்னொரு சம்ஹாரம்

    11. பாறைக்குள் பன்னீர் புஷ்பம்

    12. பழிக்குப் பழி

    13. கூர் வாள்

    14. தாய்ப்பால் பிச்சை

    15. எல்லோரும் நல்லவரே!

    16. இவன்தான் மனிதன்

    17. உள்ளத்தில் நல்ல உள்ளம்

    18. ஆட்டுவித்தால் யாரொருவர்

    19. அம்மா என்னும் சைக்காலஜிஸ்ட்

    20. அதிர்ச்சி வைத்தியம்

    1. ஏம்மா இப்படிப் பண்றீங்க?

    பக்கத்து வீட்டுப் பெண் லீலாவுடன் அந்த மலையடிவார சாமியாரைச் சந்திக்க வந்திருந்த கலைவாணி அங்கு போலீஸ் வேலை பார்க்கும் தன் பெரியப்பா மகன் தண்டபாணியைப் பார்த்ததும் ஆடிப் போனாள். அடக் கடவுளே!தண்டபாணி அண்ணன் வேற இங்க வந்திருக்கே... அய்யய்யோ... அது என்னைப் பார்த்துட்டா பெரிய பிரச்சினை ஆயிடுமே... என்ன பண்றது?

    அவன் கண்ணில் படாமல் நழுவி விடலாம் என்கிற எண்ணத்துடன் லீலாவை இழுத்துக் கொண்டு வேக வேகமாக நடந்தவளை தண்டபாணியின் குரல் இழுத்து நிறுத்தியது.

    கலை... ஏய்... கலை! துhரத்திலிருந்தே கத்திக் கொண்டு வந்தவன் அவர்களை நெருங்கியதும் என்ன புள்ளே... இங்க வந்திருக்கே... என்ன விஷயம்? கேட்டவன் முகத்தில் ஏகப்பட்ட சந்தேக கொப்புளங்கள்.

    அது... வந்து... இவதான்... சாமியாரை... லீலாவைக் காட்டியபடி அவள் திக்கித் திணற

    அந்த லீலாவே முன் வந்து விஷயத்தைப் போட்டுடைத்தாள். அது... வேற ஒண்ணுமில்லை... இவ புருஷன்காரன் இவ கிட்ட அன்பா... அணுசரணையா இல்லாம எப்பப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்திட்டே இருக்கானாம்!பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவ முடியாம என்கிட்ட வந்து ஓ... ன்னு ஓப்பாரி வெச்சா!நான்தான் இந்தச் சாமியார்கிட்டச் சொல்லி வசிய மருந்து வாங்கித் தர்றேன்... அதை உம்புருஷனுக்கு தெனமும் சாப்பாட்டுல கலந்து கொடு... ஆள் வசியமாகி... உன் காலடியே கதின்னு கெடப்பான்னு சொல்லிக் கூட்டியாந்தேன்? அது செரி... போலீஸ்காரருக்கு இங்கென்ன ஜோலி? ஏதாச்சும் வசிய மருந்து வாங்கவா? இல்ல பயந்துக்காம இருக்கறதுக்கு தாயத்து வாங்கவா?

    அந்த வம்புக்காரியின் கிண்டல் பேச்சில் கோபத்தின் உச்சிக்குப் போன தண்டபாணி தெரியாமத்தான் கேட்கறேன்... உங்களுக்கெல்லாம் மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா? இல்ல அந்த எடம் வெற்றிடமாவே இருக்கா? கத்தலாய்க் கேட்டான்.

    ஆங்... நீங்கதானே போலீஸ்காரரு? கண்டுபிடிச்சு சொல்லுங்க... கேட்டுக்கறோம்!

    ச்சூ... நீ பேசாதே? என்று அந்த லீலாவைக் கையமர்த்தி விட்டு கலைவாணியின் பக்கம் திரும்பிய தண்டபாணி கலை... நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?

    அவள் இட,வலமாய்த் தலையாட்ட

    புருஷன் பொண்டாட்டிக்குள்ளார நடக்கற விஷயங்களை இப்படியா அக்கம் பக்கத்துப் பொம்பளை கிட்டே எல்லாம் சொல்லுவாங்க? ஆயிரம் இருக்கும் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல... அடிச்சுக்குவாங்க... புடிச்சுவாங்க... அதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு... வசிய மருந்து... அது... இதுன்னு... ச்சை? அப்பப்ப கோவிச்சுக்கறதும்... அப்பப்ப கொஞ்சிக்கறதும்தாம்மா தாம்பத்யம்

    அவசரமாய் இடை புகுந்தாள் அந்த லீலா கோவிச்சுக்கறது மட்டுந்தானிருக்கு அந்த மனுசன்கிட்ட

    நீங்க... ரெண்டு பேருமே ஒரு அடிப்படை விஷயத்தை மறந்துட்டுப் பேசறீங்க!ஏம்மா கலை... உன் புருஷன் மேகநாதன் என்ன சாதாரண ஆளா? அவங்கப்பாவுக்குப் பிறகு அந்தப் பண்ணையம் மொத்தத்தையும் அவன்தான் கவனிச்சுட்டிருக்கான்? எத்தனை ஆளுங்களைக் கட்டி மேய்க்கறான்... தெனமும் எத்தனை பிரச்சினைகளை... சந்திக்கறான்...!அங்கெல்லாம் அவன் தன் கோபத்தைக் காட்ட முடியாது... காட்டவும் கூடாது... அப்படிக் காட்டினா பண்ணையம் நடக்காது... தெனமும் பஞ்சாயத்துதான் நடக்கும்!பேச வேண்டிய இடங்களிலெல்லாம் சாமார்த்தியமா... நாசூக்கா... யார் மனமும் புண் படாதபடி பேசி எல்லாத்தையும் கட்டிக் காக்கற மனுசன் உன்கிட்ட கொஞ்சம் கோபமாப் பேசறான்னா அதுக்குக் காரணம் உன் மேல் வெறுப்பல்ல... உன் மேல் உள்ள உரிமை... உன்னை ஒரு வடிகாலா நெனச்சு இறக்கறான்! அதைப் புரிஞ்சுக்கிட்டு நீ பதிலுக்குக் கோவிச்சுக்காமப் போறதுதாம்மா வாழ்க்கை!

    இரண்டு பெண்களும் பதில் பேச இயலாது தண்டபாணியையே பார்த்துக் கொண்டு நிற்க

    த பாரும்மா... உன்னோட அன்பான பேச்சால... அணுசரனையான நடத்தையால... அரவணைப்பான பணிவிடைகள்னால... சிரிச்ச முகத்தால... புருஷனை வசியம் செய்ய முயற்சி செய்!அதை விட்டுட்டு இப்படி ஒரு ஏமாற்றுக்கார சாமியார்ப்பயல குடுக்கற கண்ட மருந்தை வாங்கிக் குடுத்து கட்டுன புருஷனோட உசுருக்கு உலை வைக்காதே!

    விருட்டென நிமிர்ந்தாள் கலைவாணி தண்டபாணி அண்ணே... என்ன சொல்றீங்க?

    ஆமாம் கலை... நாங்க ஒரு போலீஸ் படையே இங்க வந்திருக்கறது எதுக்குத் தெரியுமா? அந்த போலிச் சாமியாரை அரெஸ்ட் பண்றதுக்குத்தான்!காரணம் தெரிஞ்சா இன்னும் ஆடிப் போயிடுவே... உன்னைய மாதிரியே இவன் குடுத்த வசிய மருந்தை வாங்கிட்டுப் போயி புருஷனுக்குக் குடுத்த பல பொம்பளைக இப்ப ஸ்டேஷன்ல வந்து குமுறிக்கிட்டிருக்காங்க!

    ஏன்? எதுக்கு?

    பின்னே? வசிய மருந்துங்கற போல இவன் குடுத்த அந்த வஸ்து... பக்க விளைவுகளை ஏற்படுத்தினதுல பல புருஷன்மார்கள் ஆஸ்பத்திரில உசுருக்குப் போராடிட்டுக் கெடக்கறாங்க!

    அய்யோ! வாயைப் பெரிதாகத் திறந்து உள்ளங்கையால் அதை அடைத்தபடி கூவினாள் கலைவாணி.

    போங்கம்மா... போங்க!வசிய மருந்து உங்ககிட்டயே இருக்கு... அதைக் குடுத்து புருஷனை வசியம் பண்ணப் பாருங்க... போங்க... போங்க!

    உடன் வந்த பக்கத்து வீட்டு லீலாவை அப்படியே கழற்றி விட்டு விட்டு புருஷனைக் காண வீடு நோக்கி ஓடினாள் கலைவாணி.

    2. தேடி வாங்கிய தீங்கு

    சார்

    குனிந்து ஏதோ ஃபைலில் மூழ்கியிருந்த ஜென்ரல் மேனேஜர் சசிதரன் தலையைத் தூக்கிப் பார்த்து, புருவ உயர்த்தலில் என்ன? என்று கேட்டார்.

    உங்களைப் பார்க்க யாரோ ஒருத்தர் வந்திருக்கார்... ரூமுக்கு வெளியே வெய்ட் பண்ணிட்டிருக்கார் ப்யூன் ரங்கசாமி பவ்யமாக சொன்னான்.

    யார்ன்னு கேட்க வேண்டியதுதானே ஜி.எம். தன் வழக்கமான பாணியில் கடுகடுப்பாய்க் கேட்டார்.

    கேட்டேன் சார்... ஏதோ பர்ஸனல் மேட்டராம்... உங்ககிட்டதான் பேசணுமாம்.

    ப்ச் என்றபடி எதிர் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, சரி... வரச் சொல்லு என்றார்.

    வந்தவனுக்கு சுமார் இருபத்தொன்பது வயதிருக்கும். நல்ல சிவப்பு நிறத்தில், வெட... வெட வென்று உயரமாயிருந்தான். பால் மணம் மாறாத முகத்தில் பளபளக்கும் சேவிங் பச்சை. சின்ன அழகு நற்க் மீசை, பெண்களுக்குரியன போன்ற செந்நிற உதடுகள்.

    ஸாரி... ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் சார்... என் பேர் சிவா... சிவக்குமார்! ஆர்.எஸ்.புரம் பிராஞ்ச்... ஸ்டேட் பாங்க்ல ஒர்க் பண்ணறேன்! போன வாரம் ஹிண்டுல மேட்ரிமொனியல் பகுதியிலே மணப்பெண் தேவைன்னு விளம்பரம் குடுத்திருந்தேன்! அதுல நளினிங்கற ஒரு பெண்ணோட அப்ளிகேஷனை நான் செலக்ட் பண்ணியிருக்கேன்!அந்தப் பெண் உங்க ஆபீஸ்ல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல ஒர்க் பண்ணறாங்க பேசும் பொது அவன் முக பாவமும், அழகான வாயசைப்பும், நாசூக்கான வார்த்தைப் பிரயோகங்களும் அவன் மேல் ஜி.எம்.சசிதரனுக்கு ஒரு வித அபிப்ராயத்தை ஏற்படுத்த,

    சொல்லுங்க சார்... நான் என்ன ஹெல்ப் பண்ணனும் உங்களுக்கு கேட்டார்.

    அந்தப் பெண் பற்றிய விபரங்களை உங்க மாதிரியான ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கற பெரிய மனிதர் மூலமாத் தெரிஞ்சுக்கிட்டு... அதுக்குப் பிறகு முடிவெடுக்கலாம்ன்னு இங்க வந்திருக்கேன்... நீங்க என்னைத் தொந்தரவா நினைக்கலேன்னா... அந்தப் பெண் பற்றிய உங்க ஒப்பீனியனைச் சொல்லலாம்!

    மெலிதாய்ச் சிரித்த ஜி.எம்.சசிதரன் காலிங் பெல்லை அழுத்தி ப்யூனை வரவழைத்து இரண்டு காபி ஆர்டர் செய்தார்.

    காபி வருவதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேக வேகமாய்ப் பேசினார். அவர் பேசி முடிக்கையில் அந்த சிவாவிற்கு முகம் வெளிறிப் போயிருந்தது. ஆபீஸில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் ஒரு காதல் காவியம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்கிற உண்மையை ஒரு ஜென்ரல் மேனேஜர் வாயால் கேட்டுத் தெரிந்து கொண்டபின் அவன் முகத்தில் என்ன... தவக்களையா வரும்?

    ஒ.கே.சார்... எனக்காக உங்க நேரத்தை செலவழித்து ஒரு மாபெரும் சரிவிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி சார் சொல்லி

    Enjoying the preview?
    Page 1 of 1