Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagalil Thondrum Nilavu
Pagalil Thondrum Nilavu
Pagalil Thondrum Nilavu
Ebook147 pages34 minutes

Pagalil Thondrum Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சக்திவேலுவும், சித்ரகலாவும் காதலர்கள். அவர்கள் காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்ப, இருவரும் ஓடிப் போகத் திட்டமிடுகின்றனர். மதுரையிலிருக்கும் நண்பன் பாண்டியனைச் சந்தித்து அவன் உதவியோடு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் மதுரை வருகிறனர். வரும் வழியில் இருவரும் தனித்தனியே பிரிய நேரிடுகிறது.
அவ்வாறு பிரிந்த சித்ரகலா ஒரு மோசமான கும்பலிடம் சிக்கிச் சீரழிந்து, கிணற்றில் பிணமாக மிதக்கிறாள்.
அந்த விஷயம் தெரிந்து அந்தக் கிணற்றருகே வந்து, தானும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் சக்திவேல்.
போலீஸ் சித்ரகலாவைக் கொன்றவர்களைத் துப்பறிந்து கண்டுபிடிக்க,
இரு ஆவிகளும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களைப் பழி வாங்கும் விதத்தை அழகாக கதையாக்கியுள்ளார் ஆசிரியர்.
காதல், சோகம், திரில்லிங், அமானுஷ்யம், எல்லாம் கலந்த கலவையாய் இக்கதை வாசகர்களை மிகவும் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580130005250
Pagalil Thondrum Nilavu

Read more from Mukil Dinakaran

Related to Pagalil Thondrum Nilavu

Related ebooks

Related categories

Reviews for Pagalil Thondrum Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagalil Thondrum Nilavu - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பகலில் தோன்றும் நிலவு

    Pagalil Thondrum Nilavu

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    கிணற்று சுற்றுச் சுவற்றில் அடர்த்தியாய் வளர்ந்திருந்த அந்த மரத்தின் பருமனான கிளையில் அமர்ந்திருந்த சித்ரகலாவின் ஆன்மா, தொபீர் என்று நீருக்குள் சக்திவேல் விழுவதைப் பார்த்ததும் சந்தோஷமானது.

    வா... சக்தி... உனக்காகத்தான்... எப்படியும் நீ வருவே!ன்னு தெரிஞ்சுதான் இங்கேயே காத்திட்டிருந்தேன் இத்தனை நாளா என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தண்ணீரில் தோன்றி மறைந்த நீர்க்குமிழிகளைப் பார்த்தது.

    அவைகள் மொத்தமாய் அடங்கியதும், அதனுள்ளிருந்து மேலெழும்பி, விர்ரென்று காற்றில் பறந்து வந்து மரக்கிளையில் தன் அருகே அமர்ந்த சக்திவேலுவின் ஆன்மாவைப் பார்த்து, சக்தி... நல்லா இருக்கியா? எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து

    எப்படி... எப்படி சித்ரா நான் நல்லாயிருப்பேன்? நீ இல்லாத உலகத்துல நான் இத்தனை நாள் வாழ்ந்ததே தப்பு! நீ உலகத்தை விட்டே போயிட்டேங்கற விஷயம் தெரிஞ்ச அன்னிக்கே நானும் உன் கூட வந்திருக்கணும்!

    அழாதே சக்தி! அதான் உயிரோட இருக்கும் போது ஒண்ணு சேரலைன்னாலும்... இப்ப செத்த பிறகாவது ஒண்ணு சேர்ந்தோமே? அது போதும் சக்தி!

    உயிரோடிருந்த காலத்தில் இணை பிரியா காதலர்களாய் வாழ்ந்த அந்த இரு ஆன்மாக்களும் தங்கள் பழைய வாழ்க்கையை அசை போட ஆரம்பித்தன.

    1

    இன்னும் இருட்டு விலகாத அதிகாலை நேரம்.

    கோவை காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் சுறுசுறுப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    டீக்கடை பாய்லர்கள் ஆவி விட்டுக் கொண்டிருக்க, அதனருகில் குளிருக்கு இதமாய் நின்று கொண்டு, டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

    வந்து நின்ற வெளியூர் பஸ், பயணிகளை உதிர்த்து விட்டு நகர, இராப் பயணக் களைப்புடன் இறங்கியவர்களில் சிலர் அவசர அவசரமாய் டாய்லெட்டை நோக்கி ஓடினர். சிலர் ஆட்டோக்களை நாடினர். சிலர் தங்களை பிக்அப் செய்ய வந்திருக்கும் முகங்களைத் தேடினர்.

    திருப்பூர்... திருப்பூர்... திருப்பூர் என்று படிகளில் நின்றபடி கண்டக்டர் கத்திக் கொண்டிருக்க, திருப்பூர் செல்லும் அந்த முதல் பஸ் மெதுவாக ஊர்ந்து பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறி, நஞ்சப்பா ரோட்டில் நின்றது.

    அன்று முகூர்த்த நாளாய்ப் போனதில் நிறைய பட்டுச் சேலைப் பெண்களும், வெள்ளை வேட்டி ஆட்களும் பேருந்து நிலையத்திற்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.

    கையில் சூட்கேஸுடன், நெஞ்சில் படபடப்புடன், பஸ் நிலையத்திற்குள் நுழைந்த சக்திவேல், நேரே அந்த இடத்திற்குச் சென்று நின்றான். அவன் பார்வை யாரையோ திகிலுடன் தேடியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல அங்கிருந்து நகர்ந்து வேறொரு இடத்தில் சென்று நின்றான்.

    சரியா... அஞ்சே காலுக்கு வந்திடறேன்னு சொன்னாளே? மணி இப்ப அஞ்சு நாப்பதே ஆயிடுச்சு இன்னும் காணோமே? ஒரு வேளை வந்திட்டு... என்னைக் காணோம்!ன்னு திரும்பிப் போயிட்டாளோ?" யோசனையுடன் நடந்து, முதலில் நின்ற இடத்திற்கே சென்றான்.

    அந்த இரைச்சலிலும் அவன் இதயத் துடிப்பு அவன் காதுகளுக்குக் கேட்டது. கால்கள் ஏனோ நடுங்கின. உதடுகள் வறண்டு கொண்டேயிருக்க, நாவால் அதை ஈரப்படுத்திக் கொண்டேயிருந்தான். கடவுளே... எந்தப் பிரச்சினையும் ஆகாம எங்களைக் காப்பாத்து கடவுளே! அனிச்சையாய் அவன் உதடுகள் வேண்டின.

    நேரம் ஆக ஆக, அவனுக்கு டென்ஷன் ஏறிக் கொண்டே போனது. வர மாட்டாளோ?,... ஏமாத்திடுவாளோ? சேச்சே! ஒரு வருஷம்... ரெண்டு வருஷமா... கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா காதலிச்சிட்டிருக்கோம்! அதிலும் இந்த ஓடிப் போயிடலாம்கற ஐடியாவைக் குடுத்தவளே அவள்தானே? வீட்டுல அவசர அவசரமா கல்யாண ஏற்பாடுகள் பண்ணிட்டிருக்காங்க சக்தி... இனிமேலும் நாம சும்மாயிருந்தா வேறொருத்தான் என் கழுத்துல தாலி கட்டிடுவான்! அதனால... நாம இப்பவே ஓடிப் போயிடறதுதான் சரின்னு படுதுன்னு சொல்லி அவள்தானே என்னையே தூண்டினாள்? அப்படியிருக்கும் போது அவளே எப்படி வராமப் போவா? வருவா... வருவா! தனக்குத்தானே பேசிக் கொண்டு, தவிப்புடன் காத்திருந்தான் சக்திவேல்.

    போவோர் வருவோரெல்லாம் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பது போலிருந்தது அவனுக்கு.

    ச்சே! பேசாம மொபைல் போனை கைல எடுத்திட்டு வந்திருக்கலாம்! இவ சொன்னதைக் கேட்டு அதையுமல்ல வீட்டிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்!

    அப்போது, தூரத்தில் ஒரு மஞ்சள் நிறப் புடவை தெரிய கூர்ந்து பார்த்தான்.

    பதினெட்டு... பத்தொன்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளம் யுவதி, திகிலடித்த முகத்துடன் ஒரு கையில் ஒரு லெதர் பேக்கை தூக்கிக் கொண்டு, வேகமாய் நடப்பதற்கு வாகாய் இன்னொரு கையால் புடவையைச் சற்றுத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அவனை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள்.

    சக்திவேலுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன், அவன் அருகில் வந்ததும், ஏன் சித்ரகலா இவ்வளவு நேரம்? நான் நெருப்பு மேலே நிற்கிற மாதிரி நின்னுக்கிட்டிருக்கேன் இங்கே! என்றான்.

    அது செரி... ஒரு பொண்ணு... இந்த அதிகாலை நேரத்துல... யாரு கண்ணிலும் படாம... கைல ஒரு பேக்கையும் தூக்கிட்டு வர்றது அவ்வளவு சாதாரண விஷயமா? ச்சே... எவ்வளவு சிரமப்பட்டு... உசுரைக் கைல பிடிச்சிட்டு வர்றேன் தெரியுமா? நெஞ்சில் கையை வைத்து, வேகமாய் மூச்சு விட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே சொன்னாள்.

    மொபைல் இருந்தாலாவது அதுல கூப்பிட்டுக் கேட்டிருப்பேன்! நீதான் அதையும் எடுத்திட்டு வர வேண்டாம்ன்னு சொல்லிட்டியே?

    அய்யோ... உங்களுக்கு விஷயமே தெரியாதா? நாம மொபைலைக் கைல வெச்சிருந்தா... அதுவே நாம போற வழியை... இருக்கற இடத்தை எல்லாம் காட்டிக் குடுத்திடுமாம்! அதான் வேண்டாம்னுட்டேன்! தெளிவாய்ப் பேசினாள் அந்த சித்ரகலா.

    சரி... சரி... பேசிட்டேயிருந்தா பொழுது பொல... பொலன்னு விடிஞ்சிடும்... அப்புறம் நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது கண்ணுல பட்டுடுவோம்... வா... வா... சீக்கிரம் போயி பஸ்ஸுல ஏறிக்குவோம்! சொல்லியபடியே சக்திவேல் முன்னே நடக்க,

    மிரள... மிரள விழித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.

    மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் தளத்தை அடைந்ததும், அதோ அந்த பஸ் கிளம்பத் தயாரா இருக்கு! வா... வா! என்ற சக்திவேல் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அந்த பஸ்ஸை நோக்கி ஓடினான்.

    படியில் நின்றிருந்த கண்டக்டர் கீழிறங்கி இவர்களுக்கு வழிவிட, இருவரும் அவசரமாய் உள்ளே நுழைந்தனர்.

    அவர்களுக்காகவே இருவர் அமரும் இருக்கை காலியாயிருக்க, அவள் தாவிச் சென்று ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு சிரித்தாள்.

    பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லாதது அவர்களுக்கு ஒருவித திருப்தியை அளித்தது.

    இருந்தாலும் லேசான அச்சம் உறுத்த, தெரிந்தவர்கள் யாராவது பஸ்ஸினுள் இருக்கிறார்களா? என்பதை நிதானமாய்ப் பார்வையை நகர்த்திப் பார்த்தான். அப்பாடா... தெரிஞ்ச மூஞ்சி எதுவும் இல்லை!

    மெல்ல ஊர்ந்த பஸ், பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டைத் தொட்டதும் வேகம் பிடிக்க ஆரம்பித்த்து.

    டிக்கெட்... டிக்கெட் என்று முணுமுணுத்தபடியே ஒவ்வொரு இருக்கையின் அருகிலும் சென்று டிக்கெட் வினியோகம் செய்து கொண்டே வந்தார் கண்டக்டர்.

    இவர்களருகில் வந்ததும், ரெண்டு... மதுரை சொல்லியபடி பணத்தை நீட்டினான் சக்திவேல்.

    டிக்கெட்டையும், மீதிப் பணத்தையும் அவன் கையில் திணித்து விட்டு கண்டக்டர் நகர்ந்ததும், டிக்கெட்டை சட்டைப் பாக்கெட்டில் வைத்தான் சக்திவேல்.

    "ஏங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1