Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantha Kaala Thendral
Vasantha Kaala Thendral
Vasantha Kaala Thendral
Ebook116 pages1 hour

Vasantha Kaala Thendral

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Vasantha Kaala Thendral

Read more from Geetharani

Related to Vasantha Kaala Thendral

Related ebooks

Related categories

Reviews for Vasantha Kaala Thendral

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantha Kaala Thendral - Geetharani

    10

    1

    தன்னைச் சந்திப்பதற்காக அவன் கல்லூரிக்கே வந்து நிற்பான் என்று பிரபா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    வெட்கத்தில் சட்டென்று முகம் சிவந்து போனது. சக மாணவிகளின் கிண்டலும், கேலியும் அவளை இன்பமான ஓர் அவஸ்தைக்குள்ளாக்கியது.

    யாருடி... உன்னைத் தேடி வந்திருக்கிறது...?

    பிரபாவின் பக்கத்து பெஞ்ச் கோமதி சோடா புட்டிக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வினவினாள்.

    அதுவா... நான் சொல்றேன்டி... வந்திருக்கிறவர் வேற யாருமில்லை. பிரபாவின் பிருதிவிராஜன். குதிரைத் தட்டுப்பாடு காரணமாக சுசூகியில் வந்திருக்கிறார்...

    பிரபாவின் தெருவில் வசிக்கும் சித்ரா அபிநயித்துச் சீண்டினாள்.

    ச்சீ... சும்மாயிருங்கடி...

    நீ கவலையேபடாதே பிரபா... வீட்ல நான் நிச்சயம் சொல்லமாட்டேன்...

    ம்ஹ்... குடுத்து வெச்சவ. இந்த லென்ஸ் பேபி கிளாஸ்லேயிருந்து இன்னைக்குத் தப்பிச்சுட்டா...

    பல்லவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘லென்ஸ் பேபி’ என்று விளிக்கப்படும் அந்தத் தமிழ் ஆசான் நரைத்த வெள்ளிக் கம்பிகளுடன் போட்டி போடும் தும்பைப் பூ மல் வேட்டி ஜிப்பா அதற்கு மேட்சாய் விபூதிக் கீற்று கமகமக்கத் தமிழ் இலக்கணப் புத்தகத்தைக் கையில் இடுக்கியபடி வந்து நின்றார்.

    வகுப்பறையின் சலசலப்பு சட்டென்று காணாது போனது.

    சார்... எக்ஸ்க்யூஸ்மி...

    பிரபா தயக்கமாய் அவர் முன் சென்று நின்றாள்.

    என்னம்மா... பிரபா... நேற்று நடத்திய கலிங்கத்துப் பரணியில் ஏதேனும் சந்தேகமா?

    சித்ராவிற்கும், சோடாபுட்டி கோமதிக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

    ம்ஹ்... பெரிய தமிழ்ப் புலின்னு நினைப்பு. எதிர்ப்படறவங்க அத்தனை பேரும் கலிங்கத்துப் பரணி, திருமுருகாற்றுப்படை, கலித்தொகையிலதான் சந்தேகம் கேட்பாங்கன்னு கனவு கண்டுகிட்டே உள்ளே நுழைஞ்சிடுத்து போல...

    சித்ரா சொல்ல, கோமதிக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

    பெஞ்சிற்குக் கீழே குனிந்து கொண்டாள்.

    அங்கே என்ன... சலசலப்பு...

    கண்ணாடியைச் சரி செய்தவராய் வகுப்பை ஏறிட்டார்.

    இந்தச் சோடாபுட்டியை மாட்டிண்டுட்டா லோகமே பளிச்சுன்னு தெரிஞ்சுடுமா... இதுல அடிக்கடி தூக்கி விட்டுக்கறது. தடவித் தடவி சாக்பீஸ் தேடும் கொஞ்ச நேரத்துல...

    சித்ரா மேலும் கமெண்ட் அடிக்க, கோமதி குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததில் சோடாபுட்டி நழுவிச் சுடிதாரில் விழுந்ததோ தப்பித்தாள்.

    என் ரிலேட்டிவ் பார்க்க வந்திருக்கிறாராம்...

    பிரபா மெல்லிய குரலில் சொன்னாள்.

    அப்படியா... சென்று சீக்கிரம் திரும்பி வா...

    தூய தமிழில் விடை கொடுத்துவிட்டுக் கடமை வீரனாய் இலக்கணப் புத்தகத்தைப் பிரித்தார்.

    உயிர்... பிரின் உக்குறள் மெய் விட்டோடும்... இது இலக்கணம். எப்படின்றதை விளக்கமாகக் கவனிப்போம்...

    தமிழ் ஆசான் பாடத்தைத் துவக்கிய அதே நேரத்தில், பிரபா பயம் வெட்கம், சந்தேகம், படபடப்பு எல்லாம் ஒருங்கே ஆட்கொள்ள, அவன் எங்கே நிற்கிறான் என்பதை விழிகளால் தேடியவாறே கல்லூரி நுழைவாயிலுக்கு வந்து நின்றாள்.

    ஹலோ... குட்மார்னிங்... இனிமையான குரல் வெகு அருகில் ஒலிக்கப் பிரபா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    பெண் பார்க்க என்று சென்ற வாரம் வந்திருந்தபோது ஓரக் கண்ணால் பார்த்ததைவிட இப்பொழுது நேரில் அழகாகத் தெரிந்தான்.

    வெள்ளையாய் முல்லைப் பூ போன்ற பற்களுக்கு இணையாக வொய்ட் அண்ட் வொயிட் பேண்ட், சர்ட்டில் மிக நேர்த்தியாகத் தெரிந்தான்.

    ஸாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். என்னை நீங்க எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க இல்லே...

    கலகலப்பாய்ச் சிரிப்பை உதிர்த்தான் ராஜா எனும் ராஜேந்திரன்.

    பிரபாவின் இதயத் துடிப்பின் ஓசை காதுகளுக்கே கேட்பது போலிருந்தது. இயல்பு நிலையில்லாத தடுமாற்றமும், படபடப்பும் அவளை நொடியில் ஆட்கொண்டன. கைகளில் ஈரம் பிசுபிசுப்பது போலொரு உணர்வு.

    நான்... உங்களோட கொஞ்சம் தனியாப் பேசணும்னு நினைக்கிறேன்.

    ஆ... ஆங்... பிரபா மிடறு விழுங்கினாள்.

    நடக்கிறப்பவே தூங்கற வியாதி எதுவும் இருக்கா உங்களுக்கு? கலகலப்பான சிரிப்பை உதிர்த்தான்.

    பிரபாவின் முகம் வெட்கத்தால் சிவந்து போனது.

    உங்களுக்கு வெளியே வர விருப்பமில்லைன்னா நான் வற்புறுத்தலை. இப்படியே திரும்பிப் போயிடறேன்...

    அ... அப்படி எதுவும் இல்லை... வீட்ல தெரிஞ்சா...

    ஸோ வாட், வீட்ல தெரிஞ்சா என் வருங்காலக் கணவர் வந்திருந்தார். அவர் கூப்பிட்டார். நான் போனேன்னு தைரியமா சொல்லுங்க பிரபா. ஓ... உங்களுக்கா பேசத் தெரியாது. போன திங்கட்கிழமை பஸ்ல கண்டக்டரைச் சில்லரை தராததுக்கு என்னமா புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கினீங்க...

    இதை அவன் சொன்னதும் பிரபாவின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே... வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படியே திரும்பி வகுப்பறைக்கு ஓடிப் போய்விடலாமா என்றிருந்தது.

    ஸாரி... பிரபா... ஜஸ்ட் ஃபார் எ ஜோக். நீங்க பயந்து நடுங்கும்படியா நான் தப்பா சொல்லியிருந்தா ஒன்ஸ் அகெய்ன் ஐ ஸே ஸாரி...

    ஐயையோ... அப்படி எதுவும் இல்லை... பிரபாவின் விழிகள் படபடத்தன. அவனை நேருக்கு நேர் பார்க்க நாணம் கலந்த படபடப்பு.

    ராஜேந்திரன் பைக்கை உசுப்பிக்கொண்டு அவளருகே வந்து நின்றான்.

    ம்... உட்காருங்க பிரபா...

    வ... வண்டியிலேயா... பிரபா தயக்கமாய் வினவினாள்.

    இந்த உச்சி வெயில்லே பாதயாத்திரை போக முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. ஐ ஹாவ் நோ அப்ஜெக்ஷன்...

    பிரபா பட்டும் படாமலும் பில்லியனில் தொற்றிக் கொண்டாள்.

    அவன் மீதிருந்து கமழ்ந்த செண்ட்டின் நறுமணமும், ஆண்மையின் அண்மையும், தனக்குக் கணவனாக வரப் போகிறவன் என்கிற எண்ணமும் மனதை ஆட்கொள்ளப் புதுவித உல்லாச உணர்வும், சந்தோசமும் முகத்தில் பொங்கி நின்றன.

    பைக்கின் வேகத்திற்கு முடிக் கற்றைகள் சிலும்பி ஹேர் கிளிப்பிலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் சுதந்திரமாய்ப் பறந்தன. பைக் அண்ணா சமாதிக்கு முன்பாக நின்றது.

    பூங்கா போன்றிருந்த பகுதியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.

    ம்... ஒரு நிமிஷம்... என்று எழுந்த ராஜேந்திரன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு என்னவோ எடுத்தான்.

    நம் முதல் சந்திப்பு இனிமையா ஆரம்பமாகட்டும்... டேக் திஸ் சாக்லேட்... என்று அவன் அவளின் முகத்திற்கு எதிரே கைகளை விரித்தான்.

    டெய்ரி மில்க் சாக்லேட்கள் ஜிகினா காகிதத்தில் தகதகப்பாய் மின்னின.

    நானென்ன... குழந்தையா...?

    அப்பாடா... வாயைத் திறந்து பேசிட்டீங்களே, பிரபா... நான் குடை கொண்டு வரலையேன்னு தோணுது...

    ஏன்... திடீர்னு எதுக்குக் குடை...

    மழை வந்தாலும் பிடிச்சுட்டுப் பேசிட்டு இருக்கலாமேன்னுதான்...

    பிரபா இறுக்கமான மன உணர்வு தளர்ந்து போனவளாய்ச் சிநேக பாவமாய்ப் புன்னகை பூத்தாள்.

    "சரியான

    Enjoying the preview?
    Page 1 of 1