Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Neram 2 AM
India Neram 2 AM
India Neram 2 AM
Ebook252 pages1 hour

India Neram 2 AM

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
பெண் ஒரு காகிதம்.
சிலருக்கு குப்பை.
சிலருக்குப் பத்திரிகை.
சிலருக்குப் பத்திரம்.
- இது சமீபத்தில் நான் ரசித்த ஒரு கவிதை.
பெண்ணை ஒரு பத்திரிகையாக நினைத்து, புரட்டி விட்டு எறிந்து விடுகிற நோக்கத்தில் கையில் எடுக்கிற ஒரு தொழிலதிபர்
ச்சே, முன்னுரையில் கதைச் சுருக்கம் தருவது தப்பு.
நன்றி சொன்னோமா, விலகினோமா... என்று நகர்ந்து கொள்கிறேன்.
நன்றிகளுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100905269
India Neram 2 AM

Read more from Pattukottai Prabakar

Related to India Neram 2 AM

Related ebooks

Related categories

Reviews for India Neram 2 AM

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Neram 2 AM - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இந்திய நேரம் 2 AM

    India Neram 2 AM

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    பெண் ஒரு காகிதம்.

    சிலருக்கு குப்பை.

    சிலருக்குப் பத்திரிகை.

    சிலருக்குப் பத்திரம்.

    - இது சமீபத்தில் நான் ரசித்த ஒரு கவிதை.

    பெண்ணை ஒரு பத்திரிகையாக நினைத்து, புரட்டி விட்டு எறிந்து விடுகிற நோக்கத்தில் கையில் எடுக்கிற ஒரு தொழிலதிபர்

    ச்சே, முன்னுரையில் கதைச் சுருக்கம் தருவது தப்பு.

    நன்றி சொன்னோமா, விலகினோமா... என்று நகர்ந்து கொள்கிறேன்.

    நன்றிகளுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார் மகேந்திரன். குஷன் பரத்தின ஈஸி சேரில் சாய்ந்திருந்தார். கையில் உயரமான கண்ணாடிக் கோப்பை. வெளிப்புறத்தில் பிடரி சிலிர்த்த கறுப்புக் குதிரைகள் - ஒன்றை ஒன்று முடிவில்லாமல் துரத்திக் கொண்டு. உள் புறத்தில் கால்வாசி இளமஞ்சள் திரவத்தின் மேல் இன்னும் கரைந்து முடியாத ஐஸ் துண்டுகளின் மரணத் தத்தளிப்பு.

    ஷ்யூர். பன்னிரெண்டு மணிக்கெல்லாம் அங்கே இருப்பேன் என்று முடித்தார். எலுமிச்சை பிழியும் கட்டையைப் போல, டெலிபோனை மடக்கி டிஸ்கனெக்ட் செய்து அருகே கண்ணாடி ட்ரே மேல் வைத்தார்.

    கீழேயிருந்து டேபிள் டென்னிஸ் பந்தின் டொக் டொக் என்ற அல்லாடல் சப்தம் கேட்டது. நடு நடுவே பிரேமாவின் சிரிப்புகள். எதிர் வீட்டுப் பையனோடு ஆடிக் கொண்டிருக்கிறாள்.

    மணி பார்த்தார். ரேடியம் பூசிய ஒன்பதரை. இருட்டு சூழ்ந்த ஒன்பதரை -தூங்கும் நேரம். அது வரும் வரை படிக்கும் நேரம், அவசியம் முன்னிட்டு பயணம் செய்யும் நேரம், சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் டி.வி. பார்க்கும் நேரம், முன்பு மிஸ் செய்த படம் இன்றைக்கு கடைசி என்றால் சினிமா நேரம். புதுசாய் கல்யாணத்தில் இணைந்தவர்களுக்கு, எஸ்.எஸ்.எல்.சி புத்தகத்தில் எழுதாத அடையாளங்களைத் தேடும் நேரம் நிச்சயமாக டென்னிஸ் விளையாடும் நேரமல்ல.

    பந்தின் சப்தம் செத்துப் போய் கொஞ்ச நேரம் கழித்து உயிர்பெறும் நேரங்களில் அந்த மௌன இடைவெளிகளில் ஒரு மெலிதான கவலை சூழ்ந்து, விலகிக் கொண்டிருந்தது.

    மகேந்திரன் கடைசி சிப்பை முடித்துக் கொண்டு, வாயில் சிகரெட் செருகிக் கொண்டு புகை மத்தியில் லேசான தள்ளாடலுடன் அறையின் நீளங்களில் உலவி... ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டார்.

    குஜராத், பஞ்சாப், போபால், இலங்கை, அடுத்த வேளை சோறு, மளிகைகாரனுக்கு சொல்லப் போகிற பதில், வயிற்றில் துவங்கியிருக்கும் பெப்டிக் அல்சர் என்று எந்த கவலையும் இல்லாமல், டொக், டொக் என்று கீழே விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்க...

    ஜன்னலுக்கு வெளியே கறுப்பு வெல்வெட் முழுக்க ஒளிப் பொத்தல்கள். நடுவில் ஒய்யாரமாய் சாய்ந்திருந்த கத்தரிக்கப்பட்ட நிலா மேல் டிரான்ஸ்பரண்ட்டாய் ஒரு கிழிந்த மேகத்தின் சரஸம். தென்றலின் ஒரு மாதிரியான ஜோக்குகளுக்குத் திரைச்சீலைகள் ச்சீ என்று சிணுங்கிக் கொண்டிருந்தன. தொலை தூர சாலைகளில் வாகன வெளிச்சங்கள் அலைந்து கொண்டிருந்தன. அருகாமை வொர்க் ஷாப்பில் டங்! டங்! என்று பஸ்சின் டயரைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள். காற்றில் சன்னமாய் வாசனை இருந்தது. அவசரப் பிரசவமாக மலர்ந்து விட்ட சில மல்லிகை மொக்குகள் காற்றுக்குச் சொன்ன ரகசியம் பிரதேசமெங்கும் பரப்பப்பட...

    அன்றைக்கு அவளும் மல்லிகைச்சரம்தான் சூடியிருந்தாள். பச்சைக் கலர் நூலில் நெருக்கி, நெருக்கி டைமன், டைமனாய் கட்டிய நீளமான சரம். அறையெங்கும் உதிர்ந்து போய்... எவ்வளவு நேரமாயிற்று பொறுக்க

    ச்சே! அது எதற்கு இப்போது?

    மகேந்திரன் ஆஷ்ட்ரேயை அணுகி, சிகரெட் மிச்சத்தைப்போட்டு விட்டு அருகே ஆளுயர சிப்பாய் வால் பேப்பரைத் தள்ள.. பாத்ரூம், சென்று இரண்டு முறை சோப்பிட்டு முகம் கழுவினார்.

    அறைக்கு வந்து ட்ரெஸ்சிங் மேஜை வந்து தொங்கின முத்துப் பித்தானை இழுக்க. கண்ணாடியை எதிர்த்து வெளிச்சக் கற்றைகள் அவரை இடவல மாற்றமாகக் காட்டின.

    தலை சீவிக் கொண்டு, கிரீம் தடவி, பவுடர் ஒற்றிக் கொண்டு, மீசை மேல் ஒரு துளி எண்ணெய் தடவிக் கொண்டு, டார்க் கலரில் உடுத்திக் கொண்டு, அலமாரி திறந்து பணம் எடுத்து பர்சில் திணித்துக் கொண்டு, அறையின் ஏ.சி.யை அணைத்து விட்டு வெளியே வந்தார்.

    படிகளில் இறங்க... விளையாட்டு சப்தம் சமீபித்தது.

    ஹாலின் விளிம்பில் இருந்த அவர்களை நோக்கி நடந்து வெளியே நின்று கவனித்தார். அவர்கள் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    பிரேமா இரட்டைப் பின்னல்களை மடக்கிக் கட்டியிருந்தாள். அந்தப் பையன் பிரதீப் குமாருக்கு வெள்ளைச் சட்டை மார்பருகே பிரிந்து உள்ளே வரி வரியாய் வியர்வை இறங்கிக் கொண்டிருந்தது.

    அவர் உள்ளே நுழைவதைக் கண்டு ஆட்டத்தை நிறுத்தினார்கள்.

    குட் ஈவினிங் சார் என்றான்.

    டைம் டு ஸே குட் நைட் யங்மேன்...

    எங்களுக்குள்ளே ஒரு பந்தயம் வச்சிக்கிட்டு இந்த பெஸ்ட் ஆஃப் த்ரீ விளையாடறோம். இந்த கேம் டிசைடிங் கேம். இதை முடிச்சுட்டு... அவ்வளவு தான் என்றாள் பிரேமா.

    நாளைக்கு ஏன் இதை கண்ட்டினியு பண்ணக்கூடாது பிரேமா?

    "பண்ணலாம். ஆனா ஸ்பிரிட் போய்டும்... ப்ளீஸ் டாட். பத்து நிமிஷத்திலே முடிஞ்சிடும். உக்காந்து பாருங்களேன், ப்ளீஸ்... பிரதீப் யார் சர்வ் பண்ணணும்?'

    இந்த கேமோட முடிச்சுட்டு படுக்கப் போய்டு. ஓக்கே?

    ஓக்கே டாட். உட்காருங்களேன்...

    நான் ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்.

    பொய். கிளப்புக்குப் போறீங்க.

    சிரித்துவிட்டு அவள் தோளில் தட்டி விட்டு, விளையாடு என்று நகர்ந்தார். ஹாலுக்கு வந்ததும், அவர் உத்தரவுக்குக் காத்திருந்தான் வேலைக்காரன்.

    வெளில எந்த வண்டி நிக்கிது?

    ராமையா வாசல்ல தான் நிக்கிறான். காரேஜ்லேர்ந்து பெரிய வண்டி எடுத்து வரச் சொல்லட்டுமாங்கய்யா?

    வேணாம். சின்ன வண்டி போதும்.

    வெளியே வந்தார். குரோட்டன்சுக்குப் பக்கத்தில் காலை தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த ராமையா ஓடி வர...

    வேணாம். நீ குவாட்டர்சுக்குப் போலாம். நானே ஓட்டிக்கிறேன். என்று வெள்ளை பிரிமியர் பத்மினியைத் திறந்து, அமர்ந்து, உசுப்பினார். இமைகளை உதறியது தொங்கும் பொம்மை.

    புறப்பட்டு, தயாராய் வாட்ச்மேன் திறந்திருந்த கேட்டில் வெளியேறி சாலையைத் தொட்டு நிதானமாய் ஓட்ட ஆரம்பித்தார். ரியர்வியு மிர்ரரில் ஹெல்மெட் அணிந்த மோட்டார் சைக்கிள்காரன் தூரத்தில் தெரிய... திடீரென்று அவனை ஓவர்டேக் செய்ய விடக்கூடாது என்று ஒரு காரணமற்ற ஆவேசம்! ஆக்ஸிலேட்டரை அழுத்தினார்.

    கிளப்பின் வெளியே கார்கள் பாதி ராத்திரியில் எழுப்பப்படும் வரை தூங்கலாம் என்கிற உத்தேசத்துடன் நின்றன. இடம் பார்த்து நிறுத்தினார். கதவுகளை உயர்த்தி, பூட்டிக்கொண்டு, ஒரு புது சிகரெட்டைப் பொசுக்கி விரலில் வைத்துக் கொண்டு உள்ளே நடந்தார்.

    நுரையீரல்கள் நிகோடின் உறிஞ்சிக் கொண்டு துப்பிய சக்கைப் புகைகள் தலைக்கு மேல் உலவ, வட்டமாக மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த அவர்கள் அவசரமாக 'ஹலோ மகேந்திரன்' சொல்லி கார்டுகளில் ஆழ்ந்தார்கள்.

    ஸ்டீஃபனுக்கு அருகே காலி நாற்காலியில் அமர்ந்து கொண்டு, முதல் கேமா? என்று அருகில் இருந்த ஸ்கோர் பேப்பரை இழுத்துப் பார்த்தார்.

    ரெண்டாவது கேம். இந்த ஆட்டம் முடிஞ்சதும் ஜாய்ன் பண்ணலாம். எழுபத்தெட்டு தான் ஹையஸ்ட் பாய்ண்ட் என்றவர் தலையை நிமிர்த்தவில்லை.

    எவ்வளவு பாய்ண்ட்?

    டூட்வெண்ட்டி

    பேஸ்?

    ஒன் தவுஸண்ட்.

    ஜாய்ன் பண்றேன். யாருக்கும் அப்ஜெக்ஷன் இல்லையே?

    யாருக்கும் இல்லை. அந்த ஆட்டம் முடிவதற்காக, ஆழமாக புகையை உள்ளே வாங்கிக் கொண்டு மகேந்திரன் –

    காத்திருந்தார்.

    ***

    காத்திருந்தான்.

    அடிக்கடி நகம் கடித்துக் கொண்டான். மிகதூரத்தில் அந்த பஸ் ஸ்டாப் இருந்தது. தங்கள் ஏரியாவுக்கான கடைசி பஸ்சிற்காக சிலர் அங்கே தவம் செய்து கொண்டிருக்க... அருகே அந்த காபி ஹோட்டலில் கழுவித் தள்ளின அழுக்குத் தண்ணீர் நுரைத்துக் கொண்டு அவன் பக்கமாக ஓடி வர விலகிக் கொண்டான். ஏக சத்தத்துடன் மர நாற்காலிகளை மேஜைகளின் மேல் தலைகீழாய் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் வாடகை சைக்கிள் கம்பெனிக்காரன் ஒவ்வொரு வண்டியாய்த் தூக்கி இத்தனூண்டு கடைக்குள் வரிசையாக வைத்துக் கொண்டே வந்தான். நீண்ட இடைவெளி விட்டு சாலையில் ஆட்டோக்கள் கடந்தன. ஒரு காலி ஆட்டோ தயக்கமாய் இவனை நெருங்க... வேணாம் என்றதும் விருட் என்று கியர் மாற்றி பெட்ரோல் வாசனையை நிரப்பி விட்டு மறைந்தது.

    எதிரே அடக்கமாக உடைந்த கிளாஸ்கள் குத்தின. காம்பௌண்ட்டுக்கு உள்ளே நிறைய இடத்தில் புல் மட்டும் வளர்த்து வைத்திருக்க... மையமாய் நின்ற புராதனக் கட்டிடத்தில் தெரிந்த ஜன்னல் எல்லாம் வெளிச்சமாய் இருக்க... அந்தக் கட்டிடத்திலிருந்து வெளிப்பட்டு வெளியே வரப்போகிற நபருக்காக...

    அவன் காத்திருந்தான்.

    ஒரு ஓட்டை ரிக்ஷா ஏகப்பட்ட முனகலுடன் அவனைச் சமீபித்தது. ரிக்ஷாக்காரன் புஜத்தில், பிளாட்பாரத்தில் எவனோ ரெண்டு ரூபாய்க்குத் தலையில் கட்டிய தாயத்தும், மண்டையில் கர்சீப்பும் கட்டியிருக்க...

    சார் வர்றிங்களா? என்றான்.

    வரலை.

    ரிக்ஷாவிலிருந்து இறங்கி மிகவும் நெருங்கி, நீங்க எப்படி அபிப்பிராயப்பட்டாலும் அப்படி கிடைக்கும். கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லாம் உண்டு. முந்தா நாளு வயசுக்கு வந்து நேத்து தொழிலுக்கு வந்த புதுசு வேணும்னாலும் - அழைச்சுட்டுப் போறேன். எல்லா இடமும் அத்துப்படி. ஏறிக் குந்து.

    எனக்கு எதுவும் வேணாம். போய்யா.

    நிசமாவா? பார்த்து, புடிச்சா காசு தரலாம் தம்பி.

    இப்போ நீ போகப்போறியா இல்லையா?

    போறேன். நீ எதுக்குய்யா இங்கே நிக்கறே? இது பஸ் ஸ்டாப் கூட இல்லையே...

    நன் ஆஃப் யுவர் பிஸ்னெஸ்.

    ஓகோ. நீயும் இதே பிஸ்னெஸ்தானா?

    ராஸ்கல்! உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போடா.

    அந்த 'போடா'வில் அவன் பின் வாங்கினான். ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு பத்தடி சென்று கடும் பச்சையில் தமிழைத் தோய்த்துத் துப்பி விட்டுப் போனான்.

    அவன் மறுபடி நகம் கடித்தான். மறுபடி எதிர்பக்கம் பார்த்தான். கொஞ்ச தூரம் நடந்து ஒரு விளக்கு எரியாத கம்பத்துக்கு அருகில், சிமெண்ட் குப்பைத் தொட்டியின் பின்புறத்தில், சாலையின் இரண்டு கோடிகளையும் ஒரு தரம் பார்த்துக் கொண்டு ஜிப் இறக்கி... காய்ந்த இலைகளில் பட்டு சப்தம் வந்தது.

    மறுபடி பழைய இடத்திற்கு வந்து நிழலோடு ஐக்கியமாகி நின்று கொண்டு எதிரே பார்த்தான். வாட்சைப் பார்த்தான். ஒரு முறை பாண்ட்டின் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

    மறுபடி எதிரே பார்த்தான்.

    ???

    மறுபடி எதிரே பார்த்தார்.

    ஸ்ட்ரைட் ஃபைட். எதிரியிடம் இன்னும் நிசசயமாக ரம்மி இல்லை என்று யூகித்தார் மகேந்திரன். அவன் டிஸ்கார்ட் செய்த கார்டுகளை ஒரு தரம் பாாத்து விட்டு அதில் தன்னிடம் இருந்த டெட் கார்டை இறக்கினார்.

    சபாஷ் என்றார்கள், சுற்றிலும் வேடிக்கை பார்த்தவர்கள்.

    ஆனால் கட்டிலிருந்து அவன் எடுத்துக்கொண்ட கார்டு ரம்மியாகி, ஏற்கனவே ரம்மி அண்ட் ஷுட் பொசிஸனில் இருந்த அவன் தயாராய் வைத்திருந்த குப்பைக்கார்டை உருவி மடக்கி 'டிக்" என்ற போதும்

    சபாஷ் என்றார்கள்.

    மகேந்திரனின் பதிமூன்று கார்டுகளும் இந்த உடனடி மரண அடிக்குத் தயாராய் இல்லாததால்... ரம்மி, ஒரு வேஸ்ட் ஜோக்கர் நீங்களாக நாற்பத்தி ஐந்து பாய்ண்ட் எகிற... அது ஸ்கோர் எல்லையைத் தாண்டி நிற்க...

    மகேந்திரன் வாஸ் நாக்ட் அவுட்

    கர்சீப் எடுத்து முகத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு, பர்சிலிருந்து பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை உருவி எடுத்துக் கொடுத்து விட்டு எழுந்து கொண்டார்.

    என்னங்க மகேந்திரன் எழுந்திரிச்சிட்டிங்க? இருங்க. இன்னொரு கேம் போட்டுடலாம். மணி பன்னெண்டு கூட ஆகலையே...

    இல்லை குப்தா. நான் போறேன்.

    மகேந்திரன் கிளப்பின் உள் பகுதிக்கு நடந்து டாய்லெட் சென்று திரும்பி, வாட்டர் கூலரில் மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தார். வெளியேறி எல்லோருக்கும் பொதுவாக நல்ல ராத்திரிக்கு வாழ்த்தி விட்டு, கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார்.

    புல்வெளி நடுவில் கம்பம் நட்டு ஒரு சோகையான அறுபது வாட்ஸ் பல்ப் கண்ணாடிக் கோட்டைக்குள்ளிருந்து வீரியம் இல்லாத வெளிச்சம் அனுப்ப... அதில் தன் காரைத் தேடி… கதவின் கைப்பிடியில் கை வைக்க... பனி இறங்கி ஜில்லென்றது.

    உள்ளே அமர்ந்து, கதவுகளின் கண்ணாடிகளை இறக்கி விட்டு, ஸ்டார்ட் செய்தார். அந்த லேஸ் வைத்த கவுன் அணித்த பொம்மைப் பெண் இமைக்க ஆரம்பித்தாள். காரின் ஹெட்லைட் புல்வெளியைத் தாண்டி, கேட் மூடாத காம்பௌண்ட் விளிம்பு வழியாக எதிர் சாலையின் கடைசியில் சுவரில் இலக்கியக் கூட்டத்தின் சிங்கிள் கலர் போஸ்ட்டரை ஏணி மேல் நின்று ஒட்டிக் கொண்டிருந்தவன் முதுகில் பாய... அவன் திரும்பிப் பார்த்து விட்டு ஒட்டினான்.

    மகேந்திரன் கிளப்பின் எல்லையில் இருந்து விடுபட்டு சாலையில், அநாவசியமாய் ஹார்ன் உபயோகித்துச் சீறியதும்...

    காத்திருந்த அவன் சற்று வேகமாகப் போய் ஒரு கடையின்

    Enjoying the preview?
    Page 1 of 1