Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello 100
Hello 100
Hello 100
Ebook88 pages48 minutes

Hello 100

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100905281
Hello 100

Read more from Pattukottai Prabakar

Related to Hello 100

Related ebooks

Related categories

Reviews for Hello 100

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello 100 - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஹலோ 100

    Hello 100

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    திருச்சி, செம்பட்டு, விமான நிலையம்.

    ஆரஞ்சு வர்ண பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்து, அரை மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானத்திற்காகக் காத்திருக்கும்...

    நான், காப்பிக் கொட்டை நிறத்தில் சூட் அணிந்திருக்கிறேன். க்ரீம் நிறத்தில் சட்டை ஓவர் கோட்டின் கத கதப்பில். மலேயா தங்கத்தில் டை பின். ஹோல்டரில் பொருத்தின ரோத்மன்ஸ் சிகரெட். காலடியில் அரிஸ்டோகிராட் சாம்பல் நிற சூட்கேஸ். அதற்குள் வியாபாரக் காகிதங்கள்.

    ஒரு டீஸண்ட்டான பிஸ்னெஸ்மேன் போலத் தெரிகிறேனா?

    உண்மை

    ஆனால்...

    கடந்துபோன நமது முப்பத்தி ஒன்பதாவது சுதந்திர தினத்து மாலையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

    பஸ் ஸ்டாப்பில் பஸ்சிற்காக அல்லது காதல் பார்ட்னருக்காகக் காத்திருந்தீர்களா? சினிமா தியேட்டரில் பாப்கார்ன் வாங்கிக்கொண்டா? டி.வி.யில் தலைவர்களின் சுதந்திர தினச் செய்திகளைப் பார்த்திருந்தீர்களா? சுதந்திர தினச் சிறப்பிதழ்களில் புதிய தொடர்கதை படித்துக்கொண்டா?

    இதெல்லாம் செய்யவில்லை நான்.

    ஒரே ஒரு புண்ணிய காரியம் செய்தேன்.

    ஒரு உயிருக்கு, ஒரு உடம்பிலிருந்து சுதந்திரம் தந்தேன்.

    தமிழில் கொலை என்று சொல்வார்கள் அதை.

    விமானம் வர நேரமிருக்கிறது.

    அதுவரை... சூட்கேசிற்குள் இருக்கும் சிட்னி ஷெல்ட்டனை எடுத்துப் படிக்கலாம். எனக்கு நேரெதிராக கால் மேல் கால் அணிந்து, இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தனது ஸ்கர்ட்டை உயரே எழும்ப அனுமதிக்கும் அந்தப் பெண்ணைப் பருகலாம்.

    எனக்கு இவற்றில் விருப்பமில்லை.

    உங்களோடு பேசட்டுமா? நேரமிருக்கிறதா உங்களுக்கு?

    வெல். எங்கே துவங்கட்டும்? உயிரற்ற அந்த விழிகள் என்னையே முறைத்...

    வேண்டாம். இப்படி அரைகுறையாக வேண்டாம். அஸ்தி வாரத்திலிருந்து வருகிறேன். ஒவ்வொரு செங்கல்லாய்ச் சொல்கிறேன்.

    நான் ஈஸ்வரன்.

    என்னைச் சற்று அகலமாக அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது.

    என் அப்பாவுக்கு நான் ஒரே பையன். அதனால் மிகவும் பிரியப்பட்டு சாகும் முன் அவர் எனக்குச் சேர்த்து வைத்து விட்டுச் சென்ற ஒரே சொத்து என் இனிஷியல்.

    பம்பாய் மாதுங்காவில் மாமா வீட்டில் வளர்ந்தேன். பள்ளிக்கூடம் போவேன். வருவேன். படிக்க மாட்டேன். மாமாவின் கார் துடைப்பேன். டேஷ்போர்டில் அவர் வைத்திருக்கும் அஞ்சு அஞ்சு அஞ்சு சிகரெட் திருடி ரகசிய தம் அடிப்பேன். ரேடியோ, ஒரு ஸ்க்ரூ டிரைவர் கிடைத்தால் போதும். அரை மணி நேரத்தில் அத்தனை உதிரிப் பாகங்களையும் தனித் தனியாய் எடுத்து வைத்திருப்பேன். மறுபடி ஒழுங்காகப் பொருத்தவும் தெரியும்.

    எனக்கு மீசை முளைக்கத் துவங்க... என் மாமா பெண் மகேஸ்வரியை வேறு பார்வை பார்த்தேன். மகேஸ்வரி ஒரு அசடு. ஜிங் என்று உடம்பை மட்டும்தான் வளர்த்து வைத்திருந்தாள்.

    மகேஸ்வரி, மொட்டை மாடிக்கு வருகிறாயா விளையாடலாம் என்றால்...

    என்று குலுங்க குலுங்க எனக்கு முன்னால் படியேறுவாள்.

    என்ன விளையாடலாம்? என்பேன்.

    நீயே சொல்லு என்பாள்.

    சரி, நான் தான் டாக்டராம். நீதான் நோயாளியாம். என் கைதான் ஸ்டெத்தாஸ்கோப்பாம், என்ன?

    சரி

    டாக்டர், எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று சொல்

    சொல்வாள். நான் ஸ்டெத்தாஸ்கோப்பால் இந்த இடமா, இந்த இடமா என்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிமிடத்திற்குக் குறையாமல் சோதனை செய்வேன்.

    மண்டு! நிமிர்த்திக் காட்டிக்கொண்டு நிற்கும்.

    ஒரு நாள்... வியாதி முற்றிப் போய்... சட்டையைக் கழற்றினால் தான் சரியாய் வைத்தியம் செய்யலாம் என்று நான் சொல்ல... அவளும் மடமடவென்று திறக்க... நான் பிரமிப்பாய், நடுக்கமாய் சோதனை செய்து கொண்டிருக்கும்போது...

    மாமா பார்த்து விட்டார்.

    இரண்டு செருப்புகளும் பிய்யப் பிய்ய அடித்தார். என் டிரங்குப் பெட்டியைத்

    Enjoying the preview?
    Page 1 of 1