Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meera Pallikoodam Pogiraal
Meera Pallikoodam Pogiraal
Meera Pallikoodam Pogiraal
Ebook214 pages1 hour

Meera Pallikoodam Pogiraal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சிறுகதை என்பது ஒரு சின்ன அனுபவமாக இருந்தால்கூடப் போதும். படைத்தவனைப் பாதித்த விஷயம் படிப்பவனை சற்றே சஞ்சலப்படுத்தினால் அதுவே ஒரு சிறுகதையின் வெற்றி." ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்தை விளக்கும் இந்த வரிகளை நான் சிறுகதையை எழுத உட்காரும் போதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அவ்வப்போது இருந்த சூழ்நிலைகளையும் அதையொட்டி எழுந்த சிந்தனைகளையும் பிரதிபலிப்பவை. இவற்றைப் படித்து முடித்த பிறகு இவற்றில் காணும் ஏதாவது ஒரு விஷயம் படிப்பவர்கள் மனதில் நிலைத்து நின்று யோசிக்க வைக்குமானால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றியாக நான் நினைப்பேன்.

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580125805430
Meera Pallikoodam Pogiraal

Read more from Lakshmi Ramanan

Related to Meera Pallikoodam Pogiraal

Related ebooks

Related categories

Reviews for Meera Pallikoodam Pogiraal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meera Pallikoodam Pogiraal - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    மீரா பள்ளிக்கூடம் போகிறாள்

    Meera Pallikoodam Pogiraal

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. மீரா பள்ளிக்கூடம் போகிறாள்.

    2. பொன்னி உன்னை மாற்ற முடியாது

    3. தப்ப முடியாதவர்கள்

    4. அதெல்லாம் அப்படித்தான்

    5. பிறப்பு

    6. கண்ணுக்குத் தெரியாதது

    7. சுமைக்கூலி

    8. தரிசனம்

    9. அர்த்தங்கள்

    10. மயூரி

    11. நேஹாவுக்கு இனி குழப்பமில்லை

    12. திடீர் மாற்றம்

    13. ஓசைகள்

    14. வீடு

    15. தேவைகள்

    16. திருப்பதிசாமி

    17. ஒளியின் உதயம்

    18. முடிவைத்தேடி

    19. கல் உடைந்து

    20. நியாயம்

    21. உயிரே உயிரே

    22. கருவி

    23. உதவி

    24. அச்சாணி

    25. மாற்றம்

    26. ஓமனா முதல் ஒபாமா வரை

    27. என்ன அம்மா அது?

    28. ஐயோ விடுமுறை

    29. மாதவனுக்கு வந்த அழைப்பு

    30. மாமியாரும் பூனையும்

    31. சின்ன வீடு

    32. விளைவின் வடிவம்

    *****

    என்னுரை

    சிறுகதை என்பது ஒரு சின்ன அனுபவமாக இருந்தால்கூடப் போதும். படைத்தவனைப் பாதித்த விஷயம் படிப்பவனை சற்றே சஞ்சலப்படுத்தினால் அதுவே ஒரு சிறுகதையின் வெற்றி. ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்தை விளக்கும் இந்த வரிகளை நான் சிறுகதையை எழுத உட்காரும் போதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

    இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அவ்வப்போது இருந்த சூழ்நிலைகளையும் அதையொட்டி எழுந்த சிந்தனைகளையும் பிரதிபலிப்பவை. இவற்றைப் படித்து முடித்த பிறகு இவற்றில் காணும் ஏதாவது ஒரு விஷயம் படிப்பவர்கள் மனதில் நிலைத்து நின்று யோசிக்க வைக்குமானால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றியாக நான் நினைப்பேன்.

    - லக்ஷ்மி ரமணன்

    *****

    1. மீரா பள்ளிக்கூடம் போகிறாள்!

    மனோகரும் மதுவும் வெவ்வேறு பள்ளிகளில் தான் படித்தார்கள் என்றாலும் பொழுது விடிந்ததுமே தயாராகச் சீருடை அணிந்து பஸ் ஸ்டாப்பில் போய் நிற்கத்தான் நேரம் சரியாக இருக்கும். அவர்கள் பள்ளி நேரம் அப்படி. காலை ஏழே காலுக்குப் பள்ளி மணி ஒலித்ததும் பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கிவிடும்.

    சில நிமிடங்கள் தாமதமாக வரும் குழந்தைகளுக்குக்கூட அதில் கலந்து கொள்ளும் உரிமை கிடையாது. லேட் கமர்ஸ் என்று ஒதுக்கி வைக்கப்படுவார்கள். அதோடு பிரார்த்தனைக்கு நேரத்தில் இனி வருவதாக நூறு முறை எழுதும்படி தண்டனையும் கிடைக்கும். அதைவிடக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போய்ச் சேரவே குழந்தைகள் விரும்புவார்கள்.

    அதிகாலையில் எழுந்து இருவரும் இறக்கை கட்டிக் கொண்டது போல பறப்பார்கள். மதுவின் புத்தகம் கிடைக்காது. முதல் நாள் தூங்கப் போகும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டதை அவர்கள் அடியோடு மறந்து விட்டிருப்பார்கள்.

    இந்த அவசரத்தில் சுடவைத்த பாலைக் குடிக்காமலேயே அவர்கள் போய் விடுவார்கள். தயாரித்து வைத்த சிற்றுண்டியை டிபன் பாக்ஸுடன் விட்டு மறந்துபோன நாட்களும் உண்டு.

    இத்தனை அமர்க்களத்துக்கும் நடுவில் கடைக்குட்டி மீரா வேறு எழுந்து தானும் சீருடை அணிந்து பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று அழுவாள்.

    அவளுக்கு மூன்றாவது வயது நடந்து கொண்டிருந்தது. மற்ற இரண்டு குழந்தைகளும் படுகிற அவஸ்தைகளைக் கண்டு ஏற்கெனவே தாயார் கங்கா மலைத்துப் போயிருந்தாள். மீராவையும் அந்த அவசரக் கெடுபிடிகளுக்கு உள்ளாக்க அவளுக்கு விருப்பமில்லை.

    அம்மா நானும் ஸ்கூல் போவேன்.

    ஆகட்டும் இன்னும் கொஞ்சம் பெரியவளானதும் போவாயாம்...

    இப்பவே போணும்

    நீ சின்னப் பெண். உன்னை ஸ்கூலில் எடுத்துக்க மாட்டார்கள்

    இதோ பார் நான் பெரியவளாய் விட்டேன்

    மீரா நாற்காலியின் மீது ஏறிக் குதிக்கால்களை உயர்த்திக் கொண்டு நிற்பாள்

    சரி ரொம்ப சந்தோஷம்

    நான் ஒன்னைவிட பெரியவளாக்கும்

    ஆனால் நானும் ஸ்கூல் போகல்லே நீயும் போகாதே

    பொய் நீ காலேஜ் படிச்சிருக்கே....

    சரி

    நீ ரொம்பக் கெட்ட அம்மா மனசில் நிற்கிற கோபத்தை வெளிப்படுத்த மீராவுக்கு வேறு வார்த்தைகள் தெரியாது.

    பெரிய குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விட்டால் மீராவுக்குப் பொழுது போகாது. தந்தையும் ஆபீசுக்குப் போய் விட்டால் கங்காவின் காலைச் சுற்றிச் சுற்றி வருவாள்.

    அம்மா என்னையும் ஸ்கூல்லே சேத்தூது

    சேர்த்துத் தொலைச்சாத்தான் நேக்கு நிம்மதி

    மீரா கேட்ட புத்தகங்களை ஒருவிதமாக வாங்கி நிரப்பியாகிவிட்டது.

    சின்னஞ்சிறு பையில் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. ஒரு ஏ பர் ஆப்பிள்... புத்தகம், டிபன் பாக்ஸ், பென்ஸில் பெட்டி. இவை தவிர காகிதங்கள், துண்டு பலப்பங்கள், இன்னும் வீட்டில் வேண்டாம் என்று எறியப்பட்ட சாதனங்கள் அவள் பைக்குள் தஞ்சம் புகுந்தன. பெரிய குழந்தைகளைப் போலவே டிபன் பாக்ஸில் சிற்றுண்டி அவளுக்கும் போட்டு வைக்க வேண்டும். பையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து விட்டு ஒரு மூலையை பார்த்து உட்கார்ந்து கொள்வாள்.

    அங்கேதான் அவள் வகுப்பறை. சாப்பாடும் படிப்பும் அங்கேதான். நாளின் பெரும் பொழுது அங்குதான் அவளுக்குக் கழியும். சில சமயங்களில் விளையாடிக் கொண்டே அவள் தூங்கியும் போய்விடுவதுண்டு. தான் பள்ளிக்கூடம் போகவில்லையே என்ற ஏக்கம் அந்தப் பிஞ்சு மனத்தில் படிந்துவிடுமோ என்கிற கவலை கங்காவுக்கு.

    மீராவைக் கண்டிப்பாக அப்போது பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்று மூர்த்தி தடுத்து விட்டான்.

    ஒரு முறை மீராவுக்குக் கடுமையான ஜுரம் கண்டது. ஜுர வேகத்தில் கண்கள் மூடி இருந்தபோதிலும் அம்மா ஸ்கூல் போணும்! என்று வாய் அரற்றிக் கொண்டிருந்தது.

    அப்போதே கங்கா தீர்மானித்து விட்டாள். ஜுரம் இறங்கிச் சற்று உடல் தேறியதும் அவளைப் பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என்று.

    பிரபல நர்சரிப் பள்ளியொன்றில் மனு வாங்கிப் பூர்த்தி செய்து மீராவுக்குக் காண்பித்தாள். அவளுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் கரை புரண்டன. தான் ஸ்கூல் போகப் போகும் விஷயத்தை அவள் சொல்லாதவர்களே கிடையாது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்தன. மீராவைப் பள்ளியில் கொண்டு விடக் கங்காவே நேரில் போனாள்.

    அங்கு உபாத்யாயினிமார்கள் அனைவருமே குழந்தையிடம் பிரியமாகச் சிரித்த முகத்துடன் இருந்தனர். மீராவும் தைரியமாகக் கையசைத்து டாட்டா சொல்லிவிட்டு வகுப்புக்குள் போய்விட்டாள்.

    மீராவின் நெடுநாளைய ஆசை பூர்த்தியாகிவிட்டதென்ற திருப்தி கங்காவுக்கு.

    வீட்டுக்கு வந்தவுடன் சுமை இறங்கினாற்போல் இருந்தது. தன் வேலைகளைக் கவனிப்பதில் அவள் முனைந்தாள்.

    பதினோரு மணி சுமாருக்குப் பள்ளியிலிருந்து போன் வந்தது. குழந்தை வீட்டுக்குப் போக வேண்டும் என்று ரொம்ப அழுகிறாள் என பள்ளித் தலைவி அழைத்தாள்.

    கங்காவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடினாள். மீராவின் உப்பிய கன்னங்கள் அவள் அழுதிருக்கிறாள் என்பதை உணர்த்தின.

    கங்காவைப் பார்த்ததும் மீரா ஓடி வந்து இடுப்பில் ஏறிக் கொண்டாள்.

    அம்மா வீத்துக்குப் போலாம்...

    ஸ்கூலுக்குப் போணும்னு தினம் சொல்லுவியே....?

    இப்போ ஸ்கூல் வேணாம். வீத்துக்குப் போலாம். நான் ஸ்கூல் போகமாட்டேன்.

    கற்பனையிலிருந்து மீராவின் பள்ளிக்கூடம் எப்படி மாறுபட்டிருந்தது என்பது கங்காவுக்குப் புரியவில்லை.

    ஒன்று மட்டும் புரிந்தது.

    அவளது அன்றாடக் காலைப் போராட்டங்களில் இன்னும் கூட ஒன்று அதிகமாகி விட்டது. மீராவைக் கிளப்பித் தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதுதான் அது.

    - கல்கி

    *****

    2. பொன்னி.... உன்னை மாற்ற முடியாது

    வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பொன்னி தயங்கினாள்.

    அதற்கு என்ன அர்த்தம் என்று சுகந்திக்குத் தெரியும் இருப்பினும்,

    என்ன பொன்னி? என்றாள்.

    என் கொளுந்தியா மவளுக்கு வளை அடுக்கறாங்க. நான் வெறும் கை வீசிக்கிட்டுப் போக முடியுமா? வெத்திலை பாக்கு, பூ, பழம், பொடவை, ரவிக்கை எல்லாம் வாங்கோணும். கடனா ஆயிரம் ரூபா குடு. மாசம் நூறு சம்பளத்திலே பிடிச்சுக்க. சரியா?

    சுகந்தி யோசித்தாள்.

    ஏற்கனவே பொன்னி வாங்கிய கடன் கணக்கில் இன்னும் இரண்டாயிரம் பாக்கி நின்றது. அது முடிந்து இந்தக் கடனுக்கான தொகையைக் கழிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்கு வேறு ஏதாவது பணத்தேவை வந்துவிடும். பொன்னியின் கடன் கணக்கு என்று அதற்காகப் பிரத்யேகமான நோட்டுப் புத்தகத்தையே வைத்திருந்தாள் சுகந்தி. "நான் உனக்கு இன்னும் எத்தனை ரூபா திருப்பித் தரணும்? என்று சில சமயம் திடீரென்று கணக்குக் கேட்பாள். அப்போதே அடுத்த கடனுக்கான அப்ளிகேசன் வரப்போகிறது என்பதை சுகந்தி ஊகித்து விடுவாள். அவளுக்கு நோட்டுப் புத்தகத்தைக் காட்டி, கணக்கு சொல்ல சௌகரியமாக இருக்கும் என்றுதான் இந்த ஏற்பாடு.

    பொன்னியுடைய உறவு வட்டம் மிகப்பெரியது. சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள சக்தியையும் மீறிச் சில சம்பிரதாயங்களைப் பின்பற்றவேண்டி வந்ததுதான் அவளைச் சங்கடப்படுத்திய விஷயம்.

    நாத்தனார் மகளுக்குத் தாலி கோப்பது என்றால் அதற்காக மாமா சீர் செய்ய வேண்டும் என்று கடன் கேட்பாள். புக்கக உறவில் ஏதாவது கல்யாணம் வந்தால் அதற்குக் கணிசமான தொகை மொய் எழுத வேண்டும். பெண்ணைக் கொடுத்த சம்பந்தி வீட்டில் மரணம் சம்பவித்தால் அதற்கும் சீர் புடவை எல்லாம் வாங்க வேண்டும். இதன் மத்தியில் குடிகாரப்புருஷன் உடம்புக்கு வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் மருந்து, ஸ்கேன் என்று அந்தச் செலவு வந்து விடும். அப்படிப்பட்ட திடீர் செலவுகளைச் சமாளிக்க சுகந்தி மட்டும் கை கொடுத்தால் போதாது. அவள் அணிந்திருந்த சொற்ப நகைகளும், வீட்டுப்பத்திரமும் பண்டங்களும் மார்வாடி கடையில் அடகு வைக்கப்படும். பொன்னி... உன் சக்திக்கு மீறி இப்படி அடிக்கடி சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க சீர் செய்யத்தான் வேணுமா? உன்னால் முடிந்ததைச் செய்தால் போதாதா? பொன் வைக்கிற இடத்தில் பூ வையேன். அண்ணன், தம்பிக்கு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சீர் செய்தால் செலவு குறையுமே. தனித்தனியாக எதுக்கு?

    உன்னால் இப்போ கடன் கொடுக்க முடியுமா முடியாதா? முடியாதுன்னா சொல்லு நான் பால் போடுற இடத்துலே கேட்டுப் பார்க்கிறேன் என்றாள் அவள் சற்றுக் கோபமாக. பொன்னியை சுகந்திக்குக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவள் கஷ்டங்களை உணர்ந்ததால் தான் அப்படிச் சொல்லுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பேசிய விதம் வியப்பை அளித்தது. அவள் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுக் கணக்கில் எழுதிக் கொண்டாள்.

    பொன்னியின் புருஷன் ராசு ராயப்பேட்டையிலிருந்த பன்மாடிக் கட்டட வீட்டில் வாட்ச்மேனாக இருந்தான். அவன் மாதம் எத்தனை சம்பளம் வாங்கினான் என்பது பொன்னிக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு முறை கூட அவன் தன் முழுச் சம்பளத்தையும் அவளிடம் கொண்டு வந்து கொடுத்தது கிடையாது. சம்பள நாளன்று அவன் அநேகமாய்க் குடி மகனாகத்தான் வீடு திரும்புவான். சாராயக்கடை பாக்கி, சிநேகிதர்களிடம் கைமாத்தாக வாங்கிய தொகையெல்லாம் போய் மீதி ஐம்பது ரூபாய் கூட அவன் கைக்கு வராது. இரண்டு பெண்களை எப்படியோ வளர்த்துத் திருமணம் செய்து புக்ககம் அனுப்பிவிட்டாள். அடுத்தடுத்து தீபாவளி, வளைகாப்பு, மகப்பேறு என்று வந்த செலவுகளையும் சமாளித்துவிட்டாள்.

    மேற்படி பொறுப்புகளை நிறைவேற்ற

    Enjoying the preview?
    Page 1 of 1