Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enkitte Mothathey!
Enkitte Mothathey!
Enkitte Mothathey!
Ebook94 pages49 minutes

Enkitte Mothathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில பேர் பிறந்து வளர்ந்து வாழும்போது தன் தேவைகளுக்காக கிரிமினலாக மாறுவதுண்டு! வேறு சிலர் பாதிக்கப்படும்போது கிரிமினலாக உருவாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே குற்றவாளிகள். அப்படி ஒரு நபர் தான் நம் ஹீரோ ஜெகன்! ஒரு கிரிமினலை ஹீரோ என்று அழைக்கலாமா? இப்பெல்லாம் ஹீரோக்கள் தான் படா கிரிமினல். இனி கதை.

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580100605404
Enkitte Mothathey!

Read more from Devibala

Related to Enkitte Mothathey!

Related ebooks

Related categories

Reviews for Enkitte Mothathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enkitte Mothathey! - Devibala

    http://www.pustaka.co.in

    என் கிட்டே மோதாதே!

    Enkitte Mothathey!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்குறிப்பு

    சில பேர் பிறந்து வளர்ந்து வாழும்போது தன் தேவைகளுக்காக கிரிமினலாக மாறுவதுண்டு! வேறு சிலர் பாதிக்கப்படும்போது கிரிமினலாக உருவாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே குற்றவாளிகள். அப்படி ஒரு நபர் தான் நம் ஹீரோ ஜெகன்! ஒரு கிரிமினலை ஹீரோ என்று அழைக்கலாமா? இப்பெல்லாம் ஹீரோக்கள் தான் படா கிரிமினல். இனி கதை.

    1

    ஜெகனைப் பற்றி ஒரு முன்கதை சின்னதாக:

    அப்பா பேர் தெரியாமல் பிறந்த மனிதன். அம்மா யாரிடமோ கெட்டுப் போய் சிரிப்பாய் சிரிச்சு, பிள்ளை பெற்றவள். தான் அசிங்கப்படக் கூடாது என ஒரு அனாதை விடுதி வாசலில் தன் குழந்தையை போட்டு விட்டு மாயமானவள்.

    அங்கே உள்ளவர்கள் எடுத்து வளர்த்தார்கள்.

    எட்டு வயது வரை எதுவும் புரியவில்லை.

    அந்த இல்லம் முழுக்க ஜெகனைப் போல அனாதைப் பிள்ளைகள் அபலைப் பெண்கள் - ஆதரவற்ற முதியோர் என அத்தனை பேருமே விலாசம் இல்லாதவர்கள் தான்.

    இந்த உலகில் யாருமே அனாதையில்லை!

    அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற தெய்வ வாக்கை பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு பெரிய மனிதர் - கோடீஸ்வரர் - அவரும் அனாதையாக இருந்து தன் உழைப்பால் படிப்படியாக உச்சம் தொட்டு கோடிக் கணக்கில் சம்பாதித்து இந்த இல்லத்தை நிர்மாணித்து விட்டார்.

    இன்று ஏறத்தாழ 150 பேரை பல வயதிலும் கொண்ட இல்லம் இது!

    பிறந்த உடன் இங்கு வந்தவர்களை அரவணைத்து ஆதரிக்கும் இல்லம்!

    ஆனால் விவரம் தெரிந்து, பேசவும் தெரிந்து விட்டால், இவர்கள் விட மாட்டார்கள்.

    பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவார்கள்.

    படிக்க வேண்டும். இல்லம் திரும்பினால், உழைக்க வேண்டும்! எல்லா வேலைகளும் தெரிய வேண்டும்.

    சோம்பேறியாக உட்கார்ந்தால் ஒரு கவளம் சோறுகூட தர மாட்டார்கள்.

    அவரவர் வயதுக்கு ஏற்றபடி வேலைகள்.

    கௌரவம் பார்க்காமல் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். கழிவுகளை அகற்ற வேண்டும். சமைக்க வேண்டும். ஆண், பெண், பேதமில்லாமலே உழைக்க வேண்டும்.

    எல்லாரும் எல்லாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இது ஐம்பது ஆண்டு கால இல்லம்!

    இங்கே ஜனித்த போது உள்ளே வந்தவர்கள் நன்றாகப் படித்து வேலை பார்க்கிறார்கள்.

    இங்கே உருவானவர்களில் டாக்டர், வக்கீல், என்ஜினியர், சினிமா உலக தொழில் நுட்பக் கலைஞர்கள் என பலரும் உண்டு.

    ஆளான இடம் என்பதால் லட்சக் கணக்கில் பணமும் நன்கொடையாக தருவார்கள்.

    புகழ்பெற்ற இல்லம் கஸ்தூரிபாய் இல்லம்.

    எப்போதும் மீடியா கவரேஜ் உண்டு! இங்கிருந்து போனவர்கள் மீடியாக்களில் நிறைய உண்டு. உலகம் முழுக்க இவர்களது புகழ் பரவி விட்டது.

    பேர் சொல்லும் அளவுக்கு புகழின் உச்சியில் உள்ள பலரை உருவாக்கிய இடம் இதுதான்.

    இதே இடத்தில் உருவான முதல் கிரிமினல் ஜெகன்.

    நல்லவர்களை பற்றி நாலே வரிகளில் சொல்லி விடலாம்.

    ஆனால் மோசமானவர்களை பற்றி அத்தனை சுருக்கமாகச் சொல்ல முடியாது.

    அதில் முதன்மையான நபர் ஜெகன்!

    யார் தாயோ - யார் தகப்பனோ... தப்பான ரத்தம் உடம்பில் ஓடும் ஆசாமி ஜெகன்!

    படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் புத்தகம் தொடங்கி, சக மாணவர்களிடம் பணம் திருடுவது வரை எல்லாம் உண்டு!

    ஆனால் சகல குற்றங்களும் சாதுர்யமாக நடக்கும்!

    ஒரு தடவை கூட மாட்டிக் கொண்டதில்லை. அத்தனை சாதுர்யமான திருட்டு!

    வளர வளர திருட்டு, கூடப் படிக்கும் மாணவிகளின் மேல் மோகம்... மற்ற கூடாத பழக்கங்கள் எல்லாம் உண்டு!

    ஆனால் எதுவும் வெளியில் தெரியாது!

    அதி புத்திசாலி!

    வகுப்பில் எப்போதும் முதல் மாணவன், ஜெகனை படிப்பில் மிஞ்ச ஒருவர் பிறக்க வேண்டும்! புத்திசாலியாக இருந்ததால் பள்ளிக் கூடத்தில் பிரின்சிபல் வரை மிகவும் நல்ல பெயர். மாணவர்களின் தலைவனாக அவனைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இது இல்லம் வரை போய், ஜெகனைப் போல ஒரு புத்திசாலி இல்லை என்ற தகவல் வந்து விட்டதால், இல்லத்திலும் நல்லவன் ஆகி விட்டான்.

    பள்ளியிலும், இல்லத்திலும் ஒரே சமயத்தில் ஹீரோ ஆகி விட்டதால், அவனது ஆட்டம் தொடங்கி விட்டது.

    இரண்டு இடங்களிலும் மற்றவர்களை ஆட்டி வைக்க ஆரம்பித்து

    Enjoying the preview?
    Page 1 of 1