Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Prabalangalum Prachanaigalum
Prabalangalum Prachanaigalum
Prabalangalum Prachanaigalum
Ebook225 pages1 hour

Prabalangalum Prachanaigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஃபேஸ்புக்கால் நான் சந்தித்த பிரபலங்கள் என்று சொல்லி இருக்கிறேனே, யார் அந்த பிரபலங்கள் ?

முதலாவதாக நடிகர் ராஜ்கிரண்.

ஃபேஸ்புக்கில் அடிக்கடி நான் எழுதிக் கொண்டிருக்கும் மனித நேயம் மத நல்லிணக்க பதிவுகளின் மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண்.

வீட்டுக்கு அழைத்தார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். தம்பி என அழைத்து பாசத்துடன் பழகி இப்போதும் அவரது நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் நேசத்தோடும் பாசத்தோடும் என்னை வைத்திருக்கிறார் அண்ணன் ராஜ்கிரண்.

அது போல நடிகர் பாண்டியராஜன். ஃபேஸ்புக்கில் அவர் இல்லாவிட்டாலும் கூட என்னுடைய பாஸிடிவ் பதிவுகளை பற்றி, நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு வீட்டுக்கே வரவழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.

இன்னமும் கூட பல பிரபலங்களின் நட்பு, இந்த ஃபேஸ்புக் மூலம் மட்டுமே எனக்கு கிடைத்தது.

பிரபலங்கள் ஒரு பக்கம் தேடி வர, பிரச்சினைகள் மறு பக்கம் தேடி வந்தன.

கண்ணதாசனின் மகன் என்னை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றார். வழக்கு போடுவேன் என்றார். இதற்கு காரணம் எனது ஒரு ஃபேஸ்புக் பதிவுதான்.

இன்னொரு பக்கம் ஃபேஸ்புக் தோழிகளால் ஏற்பட்டது பெரும் பிரச்சினை.

கடனாக கேட்ட பணத்தை உடனே கொடுக்கவில்லை என்பதால் ஒரு பெண் தோழி என்னை அன்ஃபிரண்ட் செய்தார். அவதூறும் பரப்பினார். இன்னமும் நிறைய நிறைய பிரச்சினைகள்.

இவை அத்தனைக்கும் காரணம் இந்த ஃபேஸ்புக் மட்டுமே.

எல்லாவற்றையும் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133405548
Prabalangalum Prachanaigalum

Related to Prabalangalum Prachanaigalum

Related ebooks

Related categories

Reviews for Prabalangalum Prachanaigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Prabalangalum Prachanaigalum - John Durai Asir Chelliah

    http://www.pustaka.co.in

    பிரபலங்களும், பிரச்சினைகளும்

    Prabalangalum, Prachanaigalum

    Author:

    ஜான் துரை ஆசீர் செல்லையா

    John Durai Asir Chelliah

    For more books

    http://www.pustaka.co.in/home/author/john-durai-asir-chelliah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    120 குழந்தைகளுக்கு அப்பா

    இப்படியும் ஒரு அதிகாரி

    மினிமலிஸ திருமணம்

    கனவு கண்டேன் தோழி

    அங்கீகாரம் தரும் ஆனந்தம்

    என்னது? இது கவுண்டமணியா!

    இயற்கையோடு பேசலாம்

    மனிதாபிமானத்துக்கு மறு பெயர் மஹிதா

    நம்பிக்கைதான் வாழ்க்கை

    வைக்கம் முகம்மது பஷீர்

    பிலிம் நியூஸ் ஆனந்தன்

    லா.ச.ரா. போல ஒரு அப்பா

    உயர்ந்த குணம்

    காலம் ஒரு நாள் கை கொடுக்கும்

    ரஜினி... மிக மிக நல்ல மனிதர்

    அந்த வேலு பிரபாகரனா இவர்

    கண்ணதாசன் எழுதக்கூடாது

    படிப்பும்… பண்பும்

    துருக்கனுக்கு ராமன் துணை

    ஆபத்துக் கோட்டை

    ஹிட் லிஸ்ட்-ல் 'சோ'

    நன்றி மறவாத நல்ல மனம்!

    யாருக்காக சொன்னார் அம்பேத்கர்

    ஞாநி சங்கரனும்.. இயக்குனர் ஷங்கரும்..

    மாயம்மா' ஒரு சித்தர்

    ஃபேஸ்புக்கால் நான் சந்தித்த

    அண்ணன் ராஜ்கிரண்

    அன்பும், ஆகாஷ் தம்பதியும்

    இந்துக் கோவிலில் இஸ்லாமியத் திருமணம்

    ஈர்ப்பு சக்தி

    என் இனிய பொன் நிலாவே

    ஏன் இப்படி செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம்தான்

    கண்ணதாசனுக்கு சீர் கொடுத்த சீமாட்டி

    காதல் இனிக்குதய்யா

    கால தேவதை சிரித்துக் கொண்டிருந்தாள்

    கை கொடுத்த தெய்வம்

    செயின் ஸ்மோக்கர்

    தன்னை அறிவோம் தயக்கத்தை தகர்ப்போம்

    நன்மை மரம்

    நீளம் கூடிய பாம்பு

    பசுமை நிறைந்த நினைவுகள்

    பாக்கியராஜ் பக்கத்தில் இருப்பது யார்?

    பாண்டியராஜன் போர்த்திய பொன்னாடை

    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

    மனிதநேயமும் மணிவண்ணனும்

    மனைவி என்பவள் தெய்வமாகலாம்

    மாதவி ரகசியம்

    முத்தைத்தரு பத்தித் திருநகை

    வாழ்த்துகள் வந்தனா!

    120 குழந்தைகளுக்கு அப்பா

    அந்த பிளாட்பார்ம் பிள்ளைகளைப் பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட முடியவில்லை சரத்பாபுவால்!

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் ரயில்வே கிளார்க் ஆக வேலை பார்த்து வந்தவர் இந்த சரத் பாபு.

    ரயில்வே பிளாட்பார்ம்களில் கந்தல் ஆடைகளுடன் கை நீட்டி பிச்சை எடுக்கும் பிள்ளைகள்.

    ரயில் பயணிகளிடம் திருடி விட்டு போலீசில் அகப்பட்டு அடி வாங்கி அழும் குழந்தைகள்.

    பரிதாபத்திற்குரிய இந்த பிளாட்பார்ம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலை கொண்டார் சரத்பாபு. இவர்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என தீர்மானித்தார்.

    இந்த பிளாட்பார்ம் குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?

    ஆனால் இதை நினைத்து விட்டாரே தவிர நடத்தி முடிக்கும் அளவுக்கு அது ஒன்றும் சாதாரணமான விஷயமாக இருக்கவில்லை.

    காரணம் அதற்குத் தேவையான அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. சேமிப்பில் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அவ்வளவுதான்!

    சரி, முதலில் இந்தக் குழந்தைகள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நெல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார் சரத்பாபு.

    அங்கிருக்கும் பெரியவர்களிடம் இந்தக் குழந்தைகளைப் பற்றி பேசினார்.

    பஞ்சாயத்து கூடியது.

    தற்காலிகமாக வேண்டுமானால் கொஞ்சம் இடம் தருகிறோம் என்றார்கள்.

    அது போதுமே இப்போதைக்கு!

    30 x 15 அடி இடத்தில் ஒரு கூரை கொட்டகை போட்டார் சரத்பாபு.

    இது நடந்தது 1994.

    கொஞ்ச நாள் போனது.

    சரத்பாபுவையும், அந்த கொட்டகையில் இருந்த குழந்தைகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டேதான் இருந்தார்கள் கிராமத்து மக்கள்.

    நாம் மற்றவர்களை கவனிக்காவிட்டாலும், மற்றவர்கள் நம்மை கவனித்துக் கொண்டுதானே இருப்பார்கள்.

    ஒரு நாள், பஞ்சாயத்து மறுபடியும் கூடியது. சரத்பாபுவுக்கும் அழைப்பு வந்தது. போனார்.

    பஞ்சாயத்தில் சொன்னார்கள்:

    உங்க பிளாட்பார்ம்" குழந்தைகளுக்காக எங்களோட நாலரை ஏக்கர் இடத்தை இலவசமாக எழுதி கொடுக்கப் போகிறோம். இது தற்காலிகமாக இல்லை.

    நிரந்தரமாக!

    அளவில்லாத சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சரத்பாபு.

    அந்த கிராமத்து மக்கள் மட்டும் அல்ல;

    சரத்பாபுவின் இந்த நல்ல முயற்சியை பற்றி கேள்விப்பட்ட பலரும், தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாகவே முன்வந்து தாராளமாக செய்தார்கள்.

    இன்று...

    120 பிளாட்பார்ம் குழந்தைகளுக்கு அப்பா வாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எளிமையான மனிதர் சொல்கிறார்:

    "எந்த ஒரு விஷயமுமே ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். இதுவும் அப்படித்தான். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

    பிளாட்பார்மில் இருந்து இந்தப் பிள்ளைகளை இந்த இல்லத்துக்கு கூட்டி வந்து விட்டேன். ஆனாலும் அவர்கள் குணம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறவே இல்லை. என்னிடமே பிக்பாக்கெட் அடித்திருக்கிறார்கள். ஆனாலும் எனது தொடர்ந்த முயற்சி வெற்றியை கொடுத்தது."

    ஆம். இங்கு தங்கிப் படித்த பிளாட்பார்ம் குழந்தைகள், இன்று பெரியவர்களாக வளர்ந்து நல்ல நிலையில், ஆசிரியர்களாக, இன்ஜினியர்களாக, அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

    ஒரு காலத்தில் கந்தையோடு பிளாட்பார்மில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பையன், சரத்பாபுவின் ஆதரவில் இந்த இல்லத்தில் வளர்ந்து இன்று போலீஸில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறாராம்.

    இதை விட சந்தோஷம் வேறு என்ன வேண்டும்?

    இன்று அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத்தான்.

    முதல் விருந்து அவர்களுக்குத்தான்!

    சந்தோஷமாக இருக்கும் சரத்பாபுவிடம் கேட்டிருக்கிறார்கள்: நீங்கள் வளர்த்து விட்ட இந்தக் குழந்தைகளிடமிருந்து, நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

    புன்னகையோடு சரத்பாபு சொன்ன பதில்:

    நான் அவர்களுக்கு உதவி செய்தது போலவே, அவர்களும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இது மட்டும்தான் எனது எதிர்பார்ப்பு!

    "ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்

    அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"

    இப்படியும் ஒரு அதிகாரி

    அந்த காலை நேரத்தில் கொஞ்சம், இல்லை இல்லை, ரொம்பவே கோபத்துடன்தான் நான் அந்த அறைக்குள் நுழைந்தேன்.

    அது செங்கோட்டை BSNL அலுவலகம். உயர் அதிகாரி உள்ளேதான் இருந்தார். (பழைய அதிகாரி எனக்கு பழக்கமானவர். இவர் புதிதாக வந்தவர்) யாருடனோ போனில் கதைத்துக் கொண்டிருந்தார்.

    நான் கோபத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். கோபத்துக்கு காரணம் மூன்று நாட்கள் நெட்வொர்க் அவுட். கம்ப்ளைன்ட் பல கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.

    பேசி முடித்து விட்டு நிமிர்ந்தார்: உட்காருங்க ஸார். என்ன விஷயம்?

    நான் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்: என்னோட BSNL பிராட்பேண்ட் கனெக்ஷனையும் லேண்ட்லைனையும் கட் பண்ணிடுங்க, உடனடியா!

    ஏன் ஸார், என்ன பிரச்சினை?

    சொன்னேன்.

    அவர் குழப்பத்துடன் என்னது? மூணு நாளா ஒர்க் பண்ணலியா?

    ஆமா ஸார். உங்க ஈமெயில் ஐடியை கொடுங்க. பல ஊர்களில் இருந்தும் என்னைப் போல பாதிக்கப்பட்டவங்க ஃபேஸ்புக்கில் எழுதியதை எல்லாம் உங்களுக்கு அனுப்பறேன்.

    என்ன எழுதி இருக்காங்க?

    உண்மையை சொல்லட்டுமா?

    சொல்லுங்க.

    எல்லா ஊர்களிலும் BSNL அதிகாரிகள் வேணும்னே இப்படி பண்றாங்கன்னு எல்லா கஸ்டமரும் ஃபீல் பண்றாங்க.

    அவர் குழம்பினார்: புரியலியே, நாங்க ஏன் ஸார் வேணும்னே இப்படி பண்ணணும்? அதனாலே எங்களுக்கு என்ன லாபம்?

    அப்போதானே ஏர்டெல், வோடபோன் எல்லாம் டெவெலப் ஆகும்?

    அவர் சற்றே உஷ்ணமானார்: அப்போ நாங்க ஊழல் பண்றோம்னு...

    நான் சொல்லலை. கஸ்டமர்ஸ் எல்லோருமே சொல்றாங்க!

    அவர் குரல் உயர்ந்தது: ஸார், நீங்க ஒரு BSNL ஆபிசர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க. என்கிட்டய வந்து நாங்க ஊழல் பண்றோம்னு...

    என் குரலும் உயர்ந்தது: பின்ன என்ன ஸார்? மூணு நாளா லேண்ட்லைன் போனும் ஒர்க் ஆகல. நெட்வொர்க்கும் இல்ல. இதையெல்லாம் இந்த மாச பில்லில் கழிச்சுக்கிடுவீங்களா? திரும்ப திரும்ப சொல்லியும் இதுவரை சரி பண்ண யாரும் வரலை.

    அவர் அவசரம் அவசரமாக தன் முன் இருந்த போனை எடுத்து ஊழியர்கள் யார் யாரிடமோ பேசினார். எதிர்முனை பதில்கள் அவருக்கு திருப்தி தரவில்லை.

    போனை வைத்து விட்டு நிமிர்ந்தார்: உங்க வீடு எந்த தெரு ஸார்?

    சொன்னேன்.

    உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டெலிபோன் போஸ்ட்டை ஒட்டி கொஞ்சம் ரோட்டை தோண்ட வேண்டியது இருக்கும். உதவி செய்ய உங்க வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ரெண்டு பேர் வருவாங்களா?

    ஸாரி. இப்போ யாரும் இருக்க மாட்டாங்க.

    ஓகே. நீங்க இப்போ வீட்டுக்குத்தானே போறீங்க?

    இல்லை, திருநெல்வேலி போறேன்.

    சரி ஸார். போயிட்டு வாங்க. நான் உடனடியா பார்க்க சொல்றேன்.

    திருநெல்வேலியில் இருந்து நான் திரும்பி வரும்போது மாலை மணி நான்கு இருக்கும்.

    வீட்டுக்கு முன் நாலைந்து பேர் வேர்க்க விறுவிறுக்க தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

    நான் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றேன்.

    நான் சாப்பிட்டு முடித்து விட்டு கைகளை கழுவும்போது லேண்ட்லைன் போன் அடித்தது.

    எடுத்தேன். மறுமுனையில்: ஹலோ, இப்போ ஃபோன் ஒர்க் ஆகுதா?

    ஆம்என்றேன். நெட்வொர்க்கும் வேலை செய்தது.

    வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். தோண்டிய பள்ளத்தை மூடிக் கொண்டிருந்தார்கள்.

    அந்த ஊழியர்களின் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தவர்...

    காலையில் நான் கடுமையாகப் பேசிய அந்த தலைமை அதிகாரி. அவரும் அந்த கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து குழி தோண்டி இருந்திருக்கிறார்.

    சட்டை பனியன் எல்லாம் வியர்வையில் தொப்பல் தொப்பலாக நனைந்து நின்றிருந்தார்.

    நான் கொஞ்சம் பணிவோடு கேட்டேன்:

    Enjoying the preview?
    Page 1 of 1