Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyire Urugathey
Uyire Urugathey
Uyire Urugathey
Ebook239 pages1 hour

Uyire Urugathey

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்
திரை உலகம் என்பது எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் ஓர் கவர்ச்சியான உலகம். அதைப் பார்த்து ஏங்குபவர்களும், பிரமிப்பவர்களும், பெருமூச்சுவிடுபவர்களும் நிறைய பேர் உண்டு. சினிமா உலகில் இயங்கும் அத்தனை நபர்களும் பணம், புகழ் இவற்றில் ‘எங்கோ’ போய் விடுவதில்லை. தனி நபர்களின் அந்தர வாழ்க்கையில் நிறைய கலைஞர்களுக்கு நிம்மதியோ, சந்தோஷமோ இல்லை என்பது பலரும் புரிந்துகொள்ளாத ஒரு நிழல்.
அழகான கதாநாயகிகளின் முகத்தை ரசிக்கிறோம். பத்திரிகைகளில் வெளிவரும் அவர்களின் புகைப்படங்களைக் கத்தரித்து கதவில், பாடப் புத்தகத்தில், மணிபர்சில் என்றும் பத்திரப் படுத்துகிறோம். அந்த அழகுக்குக் காரணம் கதாநாயகியின் அம்மா, அப்பா தவிர மற்றொன்று! மேக்கப் கலைஞரின் திறமை.
ஒரு ஒப்பனைப் பெண்ணையும், அவரின் மகளையும் மய்யமாக வைத்து நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்ததுண்டு, அந்த எண்ணம் இந்தக் கதையில் நிறைவேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை பிரபாகர்
Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580100905461
Uyire Urugathey

Read more from Pattukottai Prabakar

Related to Uyire Urugathey

Related ebooks

Related categories

Reviews for Uyire Urugathey

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyire Urugathey - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    உயிரே உருகாதே!

    Uyire Urugathey!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்

    திரை உலகம் என்பது எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் ஓர் கவர்ச்சியான உலகம். அதைப் பார்த்து ஏங்குபவர்களும், பிரமிப்பவர்களும், பெருமூச்சுவிடுபவர்களும் நிறைய பேர் உண்டு. சினிமா உலகில் இயங்கும் அத்தனை நபர்களும் பணம், புகழ் இவற்றில் ‘எங்கோ’ போய் விடுவதில்லை. தனி நபர்களின் அந்தர வாழ்க்கையில் நிறைய கலைஞர்களுக்கு நிம்மதியோ, சந்தோஷமோ இல்லை என்பது பலரும் புரிந்துகொள்ளாத ஒரு நிழல்.

    அழகான கதாநாயகிகளின் முகத்தை ரசிக்கிறோம். பத்திரிகைகளில் வெளிவரும் அவர்களின் புகைப்படங்களைக் கத்தரித்து கதவில், பாடப் புத்தகத்தில், மணிபர்சில் என்றும் பத்திரப் படுத்துகிறோம். அந்த அழகுக்குக் காரணம் கதாநாயகியின் அம்மா, அப்பா தவிர மற்றொன்று! மேக்கப் கலைஞரின் திறமை.

    ஒரு ஒப்பனைப் பெண்ணையும், அவரின் மகளையும் மய்யமாக வைத்து நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்ததுண்டு, அந்த எண்ணம் இந்தக் கதையில் நிறைவேற்றப்பட்டது.

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    ***

    1

    விடிந்து கொண்டிருந்தது. நேற்றிரவு மழை மேகங்களின் கச்சேரி காரணமாக தாமதச் சூரியன் புளியங்காய் உலுக்குவது போல மரங்களை காற்று உலுக்கி அவை இலைகளில் சேமித்த தண்ணீரை சிதற வைத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்கள் ஈரமாக இருந்தன.

    ஜன்னல் அருகில் மர இழுத்துப் போட்டுக் கொண்டமர்ந்து, ஜில்லென்ற கம்பியில் கன்னம் பதித்து அதிகாலை வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.

    பனிரெண்டு குடித்தனங்கள் இருக்கும் அந்தக் காலனிக்கு மூன்றே பொதுக் குளியலறைகள். அதிகாலையில் எழுந்தால் தான் நிம்மதியாகக் குளிக்கலாம். ஏழு மணிக்குப் பிறகு அந்தக் காலனிக்கு நெருப்பு பிடித்து விடும். வேலைக்குப் புறப்படுபவர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியவர்கள், காலேஜீக்குப் போக வேண்டியவர்கள் என்று எல்லோருக்கும் முகம் டென்ஷனாகி விடும். குரல் டென்ஷனாகி விடும்.

    எவ்வளவு நேரந்தான் குளிப்பிங்க? மத்தவங்களும் குளிக்க வேணாமா? வெனியே வாங்க.

    ரிக்ஷாக்காரனை இன்னும் காணலைங்க. நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறீங்களா?

    ஒத்தைப் பின்னல் போதும்மா. சீக்கிரம்மா.

    சனியனே! காபிப் பொடி இல்லைன்னு இப்ப வந்து சொன்னா எப்படி?

    இங்கதானே வெச்சிருந்தேன். பஸ் பாஸ் எங்கேப் போச்சு?

    நீ உப்புமா கிளறிக்கிட்டே இரு எனக்கு பஸ் போய்டுச்சின்னா முக்கால் மணி நேரம் லேட்டாய்டும், நான் காண்டீன்ல ஏதாச்சும் சாப்பிட்டுக்கிறேன்.

    எனக்கு ரெண்டு கைதானே இருக்கு. ஆள் ஆளுக்கு விரட்டினா எப்படி?

    பாரதிக்கு இந்த டென்ஷன் குரல்களை ரசிக்கப் பிடிக்கும். ஆனால் தான் அதில் சிக்கிக்கொள்வது பிடிக்காது. எனவே அதிகாலையிலேயே எழுந்து குளித்து. அடிபம்ப்பில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, தலை சீவி பொட்டுவைத்து ரெடியாகி ஒரு நாவல் புத்தகத்தோடு இப்படி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து விடுவாள்.

    கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தபோது பாடப்புத்தகம், இப்போது கதைப் புத்தகம் பி. காம் இறுதி வருடப் பரீட்சைகள் எழுதி முடித்து, விடுமுறை முடிந்து... இதோ இன்றைக்குக் கல்லூரிக்குச் சென்று பரீட்சை ரிசல்ட் பார்க்க வேண்டும்.

    பாஸா, ஃபெயிலா என்று ரிசல்ட் பயம் எதுவும் கிடையாது. எவ்வளவு பர்ஸெண்ட்டேஜ் மார்க்குகள் கிடைத்திருக்கும் என்பது மட்டுமே அவளுக்கு அறிய வேண்டும்.

    பாரதி திரும்பி மேஜை மேல் இருந்த டைம் பீஸில் பணி பார்த்தாள். ஆறு பத்து. கட்டிலில் படுத்து உறங்கிகொண்டிருந்த தன் அம்மாவைப் பார்த்தாள் ஆறே காலுக்கு அம்மா எழுப்பச் சொல்லியிருந்தாள்.

    லேசாக வாய் பிளந்து. மல்லாந்து அடித்துப் போடப்பட்டக் களைப்புடன் உறங்கிக்கொண்டிருந்த அம்மாவின் கைமேல் அமர்ந்திருந்த கொசுவைப் பார்த்ததும் எழுந்து வந்து, கையால் விசிறி அதை விரட்டினாள் பாரதி.

    நேற்று நைட் ஷூட்டிங் என்று இரண்டு மணிக்குத் தான் திரும்பிவந்தாள். எட்டு மணிக்கு கற்பகத்தில் ஷூட்டிங் ஏழு மணிக்கெல்லாம் புரொடக்ஷன் கார் வந்து விடும்.

    அம்மா போய் தான் மேக்கப் போட்டுவிட்டு ஹேர் ட்ரெஸ் செய்து கதாநாயகியை ஷூட்டிங்கிற்குத் தயார் படுத்தியாக வேண்டும். அதற்குப் பிறகு ஹீரோ வராமல் தாமதமாகலாம். கிரேன் வராமல் தாமதமாகலாம். ஒரு குறிப்பிட்ட செட் ப்ரார்ப்பர்ட்டி வராமல் தாமதமாகலாம் ஆனால் ஒரு மேக்கப் வுமன் காரணமாக ஷூட்டிங் தாமதப்பட்டால் எல்லோருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வரும். வார்த்தைகள் வெடிக்கும். நெற்றிக் கண்கள் திறக்கும்.

    அம்மா எப்போது பதினைந்து நிமிடம் முன்னதாகவேப் போய்விடுவாள். தன்னால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்று குறியாய் இருப்பவள்.

    அம்மாவுக்கு சமீபகாலமாக முகத்தில் வயது தெரியத் துவங்கிவிட்டது கண்களுக்குக் கீழே லேசாக சதைப் பைகள். தோலில் மென்மை குறைந்துவிட்டது. முன்னந் தலையில் வெள்ளி ரேகைகள்.

    அம்மா தன்னுடைய பின் கதையை பல காலகட்டங்களில் பகுதி பகுதியாக சொல்லியிருக்கிறாள்.

    எல்லோரின் தலையிலும் பிரம்மா தலையெழுத்தை எழுதிக்கொண்டு வரும்போது, அம்மாவின் முறை வந்த போது இங்க் தீர்ந்துபோய் கண்ணீரைத் தொட்டு எழுதியிருக்க வேண்டும்.

    அம்மாவுக்கு ஆனாலும் நெஞ்சில் உறுதி அதிகம். துணிச்சல் அதிகம் இன்னொரு பெண்ணாக இருந்தால் பூச்சி மருந்து குடித்து தந்திப் பேப்பரில் செய்தியாகியிருப்பாள்.

    அம்மாவின்வா ழ்க்கையை ஆயிரத்தில் ஒரு பங்காக சுருக்கி வரைக என்றால்...

    புதுக்கோட்டை துர்க்கா. அழகை விட, மதமதர்ப்பு அதிகம். ராஜவேலு... ஆட்டோ டிரைவர், புன்னகை + புன்னகை + புன்னகை = இன்ஸ்டண்ட் காதல். வீட்டில்... அவனோட இன்னொரு தடவை உன்னைப் பார்த்தா, செருப்பு பிஞ்சுடும் என்ற அப்பா, அப்பாவின் செருப்பு பிய்ந்து விடக்கூடாதே என்ற அக்கரை காரணமாக அன்றைக்கு ராத்திரியே புதுக்கோட்டைக்கு ஜோடியாய் டாட்டா.

    வருக! வருக!:- இப்படிக்கு சென்னை. ஆட்டோ விற்ற பணமும், கொண்டு வந்த நகையும், ப்ளஸ் நம்பிக்கையும் கையிருப்பு, லாட்ஜ் அறையில் இரவினில் ஆட்டம். பகலிலும் ஆட்டம், துர்க்காவின் மூன்று உத்தரவுகள், 1. குடியிருக்க வீடு பாரு. 2. வேலை செய்ய தொழில் பாரு. 3. தாலிகட்ட நாள் பாரு, கசக்கும் மருந்தான அட்வைஸ் ராஜவேலுக்கு எரிச்சல் தர...

    வந்தானய்யா வில்லன். ராஜவேலு. இப்படி வா. நான் டாக்ஸி ஒட்டறேன். நீயும் ஓட்டறியா? ஆள் ஏத்தற டாக்ஸி இல்லை. சரக்கு ஏத்தற டாக்ஸி, ஸ்டேட் விட்டு ஸ்டேட் போகணும். ஆயிரக்கணக்குல பணம். நீ கூட்டி வந்தியே பொண்ணு, அதை கழட்டி விட்டுடு தாலியா கட்டிட்டே? அதையும் காசாக்கித் தர்றேன். ஃபிப்ட்டி. ஃபிப்ட்டி! என்றான் புது நண்பன்.

    துர்க்காவை சீவி முடித்து சிங்காரிக்க வைத்து, கறுத்த நெற்றியில் பொட்டும் வைத்து ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று தேர் போன்ற பெண்ணைக் காட்டி, இவங்க என் தூரத்துச் சொந்தம் ரெண்டு நாள் இந்த வீட்ல தங்கிக்க. நான் வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்.

    போனவன் போனாண்டி இருந்தவள் சொன்னாடி, உன்னை என் கைல அஞ்சாயிரத்துக்கு வித்திட்டாங்க, தெரியுமில்லே? கஸ்டமர் வருவான். மரியாதையா படு. போதை மருந்து ஊசி வழியாக செலுத்தப்பட்டு... செலுத்தப்பட்டு... மீசையுள்ளவன் இல்லாதவன். தாடி வைத்தவன், வைக்காதவன், டிப்ஸ் கொடுப்பவன், கொடுக்காதவன் என்று... அரங்கேற்றத் தொடர்கதை!

    அசந்த சந்தர்ப்பத்தில் அட்வென்சர் தப்பித்தல், சமூக சேவகி வசந்தா வீட்டில் தங்கி... வாந்தியெடுத்து... உன்னை விட்டுட்டு ஓடிப்போனவனோட கருவை எதுக்காக சுமக்கணும்? கலைச்சுடு.

    துர்க்கா ஏற்கவில்லை. கருவில என் உசிரும் இருக்கும்மா. அந்த சிசு என்ன தப்பு செஞ்சதுன்னு அதை கழுத்தைத் திருகணும்? நான் பெத்துப்பேன் வளர்ப்பேன்.

    அப்பன் யாருன்னு ஊரு கேட்டா?

    செத்துப் போய்ட்டான்னு சொல்லுவேன்

    நாளைக்கு உன் குழந்தையே கேட்டா?

    ஓடிப்போய்ட்டான்னு உள்ளதைச் சொல்லுவேன்?

    சொன்னபடி பெற்றாள். வசந்தா ஒரு சினிமாவில் அம்மாவாக நடிக்க... உதவிக்கு துர்க்கா செல்ல... டச்சப் மேக்கப், ஹேர் ட்ரெஸ்ஸிங் எல்லாம் கற்று... அசோசியேஷனில் சேர்ந்து...

    வசந்தா மரணம். துர்க்கா தனி வீடு. மேக்கப்பைத் தொழிலாக்கிக் கொண்டு... கம்பெனியின் மேக்கப் வுமனாக பணி செய்து... அந்தஸ்து உயர்ந்து முன்னணி கதாநாயகி தரங்கிணியின் பர்சனல் மேக்கப் வுமனாக இப்போது நான்கு வருடங்களாக...

    பாரதிக்குக் கண்கள் கலங்கின. எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கிறாள் என்னை வளர்க்க! மானம், தன்மானம் என்று எல்லா அடிப்படை அத்தியாவசிய உணர்வுகளையும் உதிர்த்திருக்கிறாள்.

    ஒரு இரவு தன் மடியில் படுத்திருந்த பாரதிக்கு தலையல் பேன் சீப்பை ஓட்டியபடி மெதுவாகக் கேட்டாள் துர்க்கா.

    பாரதி, இப்ப நீ சின்னப் பொண்ணு இல்லை. வளர்ந்தவ, ரொம்ப நாளா உன்னை ஒண்ணுக் கேக்கனும்னு நினைச்சிட்டிருக்கேன்.

    கேளும்மா.

    இவளுக்குப் போய் மகளாப் பொறந்தமேன்னு நீ அடிமனசுல நினைச்சுக்கிறதுண்டா பாரதி?

    திடுக்கிட்டுத் திரும்பினாள் பாரதி.

    என்னப் பேச்சும்மா இது? நீ எனக்கு ஒரு உசுரு கொடுக்கலைம்மா. ரெண்டு உசுரு! கரு உருவானப்போ முதல் உசுரு என்னை கலைச்சிடச் சொல்லி பல பேர் உன் கிட்ட சொன்னப்ப, முடியாதுன்னு மறுத்து பெத்துக்கத் தீர்மானிச்சப்ப, ரெண்டாவது உசுரு கொடுத்தவம்மா நீ. உன்னனப் போய்...

    அப்படி இல்லைம்மா. என்னோட வாழ்க்கை பெருமையா சொல்லிக்கிற மாதிரி அமையலை பாரதி.

    அது உன் தப்பில்லைம்மா. உன்னைத் தவிக்க விட்டுட்டுப் போன அந்தப் பொறுக்கியோட தப்பு.

    அனுபவிக்கிறது நாமதானே? கழுத்தில் தாலி இல்லாம இத்தனை வருஷம் ஒட்டிட்டேன். இது வரைக்கும நீ சின்னப் பொண்ணும்மா. இனிமேதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும். நல்ல புருஷன் அமையணும் அப்பன் வீட்ல இல்லாத குடும்பத்திலேர்ந்து பொண்ணு எடுத்துக்க ஒரு நல்ல மாப்பிள்ளை முன்வரணுமேம்மா.

    அம்மா, எனக்குக் கல்யாணத்துக்கு அவசரமில்லை. என் படிப்பு முடியட்டும் முதலில் என்னை காலேஜுக்கு அனுப்பி படிக்க வைக்கிறதுக்கும், வளர்க்கறதுக்கும் நீ எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கே. ரொம்ப உழைச்சுட்டேம்மா.

    அதுக்காக?

    உன்னை வீட்ல உக்காரவச்சி நான் காப்பாத்தணும்மா. ஆம்பளையாப் பொறந்தாதான் அந்த கடமையா நான் வேலைக்குப் போய் சம்பாரிக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். உன் அலைச்சலுக்கு ஓய்வு கொடுக்கணும்மா.

    கண்கள் கலங்கிப் போன துர்க்கா, இப்படி எல்லாம் நினைக்கிறியே, அதுவே எனக்குப் பெருமையா இருக்கும்மா என்று பாரதியின் நெற்றியில் முத்தமிட்டாள்.

    துர்க்கா புரண்டு படுத்தவள், தன் அருகில் கைகட்டி நின்றபடி தன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த பாரதியை மசமசப்பாகப் பார்த்து, தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

    மணி பார்த்துப் பதறி, ஆறரை மணி ஆச்சி, உன்னை ஆறேகாலுக்கு எழுப்பச் சொன்னா என் மூஞ்சையேப் பார்த்துகிட்டு நின்னுக்கிட்டிருக்கியா? என்ன பொண்ணும்மா நீ. என்று அவசரமாக எழுந்தாள்.

    ரொம்ப களைப்பா தூங்கிட்டிருந்தேம்மா. எழுப்ப மனசே வரலை...

    அது சரி. ஏழு மணிக்கு வண்டிவந்துடுமே.

    துர்க்கா துண்டும் மாற்றுடைகளும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு விரைந்தாள். இருபது நிமிடங்களில் பரபரவென்று கொண்டை போட்டுக்கொண்டு தயாரானாள்.

    பாரதி காபி நீட்ட, வாங்கிப் பருகினாள். இன்னைக்குதானே ரிசல்ட் வருது உனக்கு? என்றாள் துர்க்கா சூடான காபியை ஊதி ஊதி, டம்ளரை அசைத்துக் குடித்தபடி.

    ஆமாம்மா.

    கற்பகம் ஸ்டுடியோலதான் ஷூட்டிங் நீ காலேஜ் போய்ட்டு ரிசல்ட் பார்த்துட்டு ஒரு டப்பா நிறைய சாக்லேட் வாங்கிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சி ஸ்டுடியோவுக்கு வந்துடு.

    போம்மா, எதுக்கும்மா என்னை அங்கெல்லாம் வரச் சொல்றே?

    என்னைச் சுத்தி என்னோட பொழுதன்னைக்கும் வேலை பார்க்கற யூனிட்டும் எனக்கு ஒரு குடும்பம் மாதிரி தான் பாரதி, என்னோட சுக, துக்கத்தைப் பகிர்ந்துக்கறதுக்கு வேறயாரு இருக்கா எனக்கு? ஒரு டிகிரி கிளாஸ். என் பொண்ணை படிக்க வெச்சிருக்கேன் பாருங்கன்னு நான எல்லோருகிட்டயும் பெருமையடிச்சுக்க வேணாமா?

    எனக்கு எப்பவுமே ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வர்றது பிடிக்காதுன்னு உனக்குத் தெரியுமில்லை. உடம்பு கூசும்.

    "எல்லாரும் மனுஷங்கதான்டி, ரெண்டு கண்ணு தப்பாதான் பார்க்கும், அது ஷட்டிங் ஸ்பாட்ல மட்டுமில்ல. தெருவில நடந்து போனாலும் பார்க்கும் எல்லாரும் மோசமில்லைம்மா, மனசு சுத்தமா உள்ளவங்களும் வருஷா வருஷம் சபரிமலைக்கு மாலை போட்டுக்கிறவங்களும் நிறைய பேர் இருக்காங்கம்மா - அதுவுமில்லாம, ‘உன் பெண்ணை அழைச்சுட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1