Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalainthu Pona Mehangal
Kalainthu Pona Mehangal
Kalainthu Pona Mehangal
Ebook160 pages1 hour

Kalainthu Pona Mehangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலைந்து போன மேகங்கள்
காதலன் கிரிதரனுக்காக தன்பணம், நகை அனைத்தையும் இழந்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறான் சுவாதி.
கிரிதரனின் தங்கைகள் திருமணத்தையும் தன் நகைகளைக் கொடுத்து நடந்துகிறான்.
ஆனால் கிரிதரன் பணமும், பதவியும் வந்ததும் சுவாதியை நிராகதிக்கிறான்.
கோடிஸ்வர இளம்பெண் வர்ணாவோடு பழகுகிறான்… அவளையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறான்.
வீதியில் நிற்கிறான் சுவாதி…
கிரிதரணின் சுயநலகுணம் வர்ணாவிற்கு தெரிந்த்தா?
சுவாதியின் முடிவு என்ன?
கலைந்து போன மேகங்களில் வாசியுங்கள்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305701
Kalainthu Pona Mehangal

Read more from Maheshwaran

Related to Kalainthu Pona Mehangal

Related ebooks

Related categories

Reviews for Kalainthu Pona Mehangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalainthu Pona Mehangal - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கலைந்து போன மேகங்கள்

    Kalainthu Pona Mehangal

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    வணக்கம்! வளர்ந்து வரும் இளையதலைமுறை எழுத்தாளன் நான். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நாவல்களுமே முத்தானவை. சுவாரசியமானவை. இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதப்பட்டவை. இந்நாவல்கள் பிரபல மாத இதழ்களில் வெளிவந்து, வாசகர்களின் பாராட்டைப் பெற்றவை.

    பனிவிழும் மலர்வனம் நாவலில் வரும் மேகலாவும் சரி... கலைந்து போன மேகங்களில் வரும் சுவாதியும் சரி... கொலை தேசம் நாவலில் வரும் ராஜமாதாவும் சரி... மிகமிக வித்தியாசமானவர்கள்... வெவ்வேறு குணங்களைக் கொண்டவர்கள்.

    சொந்த பந்தங்களுக்காக காதலையே... தூக்கி எறிகிற மேகலா... காதலனுக்காக... எல்லாவற்றையுமே இழந்து நடு வீதிக்கு வருகிற சுவாதி... பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காத ராஜமாதா... இம்மூவரும் இந்நாவல்களை வாசிக்கப் போகும் வாசகர்களின் இதயத்தை ஒட்டு மொத்தமாய் கொள்ளையடிக்கப் போகிறார்கள்...!

    உண்மையான பாசம் எது? உண்மையான காதல் எது? உண்மையான வாழ்க்கை எது? உண்மையான சந்தோஷம் எது? என இனம் தெரியாமல் சீரழிந்து போகும் இளைய தலைமுறையினர் இந்நாவல்களைப் படித்தால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

    என்னை நாவலாசிரியராய் அறிமுகப்படுத்திய, என் மதிப்பிற்குரிய தேவியின் பெண்மணி ஆசிரியர் அவர்களுக்கும், மாலைமதி ஆசிரியர் அவர்களுக்கும், என்னுடைய நாவல்களை முழுத்தொகுப்பாக வெளியிட்டுள் உயர்திரு இராம. கண்ணப்பன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் காணிக்கை ஆக்கிக் கொள்கிறேன்.

    மேலும் என்னுடைய எழுத்துக்களை வாசித்து மகிழப் போகும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்து... உங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...

    தங்கள் அன்புள்ள

    க. மகேஷ்வரன்

    1

    சென்னை, விருகம்பாக்கம்.

    ஒரு இயந்திரத்தின் வேகத்தோடும், பரபரப்போடும் ஜனங்கள் இயங்குகிற காலை நேரம் ஒன்பது மணி. சுவர்க் கண்ணாடியில் நெற்றியில் ஒட்டியிருந்த பொட்டை சரிசெய்து கொண்டு, காதோரம் சுருள்சுருளாய் வந்து விழுந்து அலைபாய்ந்த கூந்தல் முடிகளை விரல்களால் ஒதுக்கியபடியே கூடத்துக்கு வந்தாள் சுவாதி.

    சுவாதி... நில்லு... எங்கே கௌம்பிட்டே...?

    சந்துருவுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த அலமேலு ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடியே சுவாதிக்குப் பின்னால் வந்து நின்றாள்.

    சுண்டல் வாங்கித் திங்கறதுக்காக... பீச்சுக்குப் போறேன்மா...

    கிண்டலா? அலமேலு புருவங்களை உயர்த்தி முறைப்பாய்ப் பார்த்தாள்.

    பின்ன என்னம்மா... வழக்கமா எங்கே போவேனோ, அங்கதான் போகப்போறேன்... இதென்ன கேள்வி? சுவாதி மெலிதாய் சிரித்தாள்.

    சுவாதி... உனக்கு வரவர... நாக்கு ரொம்ப நீளமாயிட்டு. நாளைக்கு நீ ஆபீஸ்க்கு லீவு போட்ருன்னு... நேத்திக்கு... காலையிலே நீ ஆபீஸ்க்கு கௌம்பினப்பவே சொன்னேனே... மறந்துட்டியா?

    மறக்கலம்மா

    அப்புறம் எதுக்கு ஆபீஸ்க்கு கௌம்பறே?

    லீவு போடலைம்மா. மானேஜர் லீவு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு. சக டைப்பிஸ்ட் சுகந்தி மெடிக்கல் லீவுல இருக்கா. ஆடிட்டிங் டைம் வேற. எப்படி லீவு கெடைக்கும்? ஹெட் ஆபீஸ்க்கு அனுப்ப வேண்டிய லெட்டர்ஸ்ங்க ஏகப்பட்டது என்னோட டேபிள்ல குவிஞ்சு கெடக்கு. நா ஒருத்தி மட்டும் அவ்வளவு லெட்டர்ஸையும் டைப் பண்ணி ஆகணும். என்ன பண்றது... வேற வழி இல்லையே... நா இன்னைக்கு ஆபீஸ்க்கு போய்தான்மா தீரணும்...

    சுவாதி படபடவென்று பொரிந்தாள்.

    அம்மாவும் மகளும் பேசிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவாறே... இட்லியைப் பிட்டு, கொத்து மல்லி சட்னியில் நனைத்து விழுங்கிக் கொண்டிருந்தான் சுவாதியை விட ஆறு வயது பெரியவனான சந்துரு.

    உனக்கு வீட்ல இருக்க இஷ்டமில்லை. அதனால இப்படி ஒரு பொய் சொல்றே! நானும் தெரியாமத்தான் கேக்கறேன். உம்மனசுல நீ என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கே? ஒவ்வொரு மொறயும் உன்னை பொண்ணு பாக்க வர்றப்ப எதையாவது காரணத்தைச் சொல்லி எப்படியாவது தட்டிக் கழிச்சுடறே? இல்லே... மாப்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம் பார்த்து... ப்ரெண்டுங்க வீட்டைப் பார்க்க ஓடிப் போயிடுறே! கத்தி கத்தி என்னோட தொண்டையே வலிக்கறதுதான் மிச்சமாகுது.

    அப்புறம் எதுக்கும்மா கத்தறே...? நான் தான் திரும்பத் திரும்பச் சொல்றேன். எனக்கு கல்யாணம் இப்போதைக்கு வேணாம். ஒரு வருஷம் ஆகட்டும்னு. நீ காதுல வாங்கினாத் தானே?

    விறுவிறுவென்று திண்ணைக்கு வந்து காலணிகளுக்குள் கால்களை நுழைத்தாள். அலமேலுவும் பின்னாலேயே ஓடிவந்தாள். வருகிற போதே மூச்சு இரைத்தது.

    இப்ப கல்யாணம் பண்ணிக்காம எப்படி பண்ணிக்கப் போறே? கெழவியான பின்னாலயா?

    கெழவியானப் பின்னாலும் பண்ணிக்கலாம்மா... அறுபதாம் கல்யாணம்... குறும்பாய் கண்களைச் சிமிட்டினாள் சுவாதி.

    வயசுப் பொண்ணுன்னு பாக்கறேன். இல்லாட்டி அறைஞ்சுடுவேன். பிடிவாதத்துக்கும் ஒரு அளவு இருக்கு இருபத்திநாலு வயது பொம்பளைக்கு அதிகம். இந்த வயசுல எல்லாம் நீ என்னோட இடுப்புல மூணுவயசு கொழந்தையா இருந்தே. உனக்கு மேலே ஒருத்தன் இருக்கானே அவனை நெனைச்சுப் பாத்தியா?

    நீ யாரைம்மா சொல்றே... எனக்கு மேல யாரு இருக்கா? கடவுளையா? வெள்ளிக்காசுகளை உருட்டிவிட்டாற் போலச் சிரித்தாள்.

    சுவாதி... எரிச்சலைக் கௌப்பாதே. சந்துருவுக்கு இப்பவே முப்பது முடிஞ்சுட்டு. அவனைத் தொட்டு இன்னமும் பேசாம இருக்கான். எதிர்வீட்லே ப்ளஸ்டூ படிக்கற பையன் எவளோ ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிப் போய்ட்டான். உனக்குத் தெரியும்ல. சந்துருவோட பிரண்ட் ரவிக்கு ஏழு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. சந்துரு வேலைக்கும் போய்ட்டான். கை நெறைய சம்பாதிக்கறான். காலா காலத்துல அவனுக்கொரு கல்யாணம் பண்ணிப் பாக்க வேண்டாமா?

    தாராளமா... நானா... வேணாம்கறேன்? தோள்களைக் குலுக்கினாள்.

    குதிர் மாதிரி வளர்ந்து நிக்ற பொண்ணை வெச்சுக்கிட்டு... அவனுக்கு எப்படிடி கல்யாணம் பண்ண முடியும்? உன்னை ஒருத்தன் கையில புடிச்சுக் குடுக்காம அவனுக்கு கல்யாணம் பண்ணினா... பாக்கறவங்க சிரிக்க மாட்டாங்க? நாலு விதமா பேசுவாங்கடி. நீ இப்ப தாராளமா ஆபீஸ்க்குப் போ. ஆனா சாயங்காலம் வீட்டுக்கு வந்துதானே ஆகணும். மத்தியானம் ஒரு மணிக்கு வர்றேன்னு சொன்ன மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை சாயங்காலமா வரச்சொல்லிடுறேன். இதுல எந்த மாற்றமும் இல்லை.

    அலமேலு உறுதியான குரலில் கத்துவதைப் பொருட்படுத்தாமல் வாசலில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் சுவாதி.

    வழக்கமாய் ஏறுகிற டவுன் பஸ்சில் ஏறி, வழக்கமாய் இறங்குகிற ஆபீஸ் ஸ்டாப்பில் இறங்காமல், பீச் ரோட்டில் இறங்கிக் கொண்டாள். லீவு போடவில்லை என்று அலமேலுவிடம் சொன்னதெல்லாம் சுத்தப்பொய், நேற்றைக்கே அரை நாள் லீவு எழுதிக் கொடுத்திருந்தாள். வீட்டில் அம்மாவிற்கும் தனக்கும் நடந்த உரையாடலை அசைபோட்டபடியே. ஜனக்குவியலுக்குள் தானும் ஒரு சிற்றெறும்பாய் மெல்ல ஊர்ந்தாள்.

    ‘இனிமேலும் அம்மாவைக் காக்க வைக்க முடியாது.'

    'ஏதாவதொரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.’

    'கிரியிடம் என்னுடைய இக்கட்டான நிலைமையைச் சொன்னால் என்ன சொல்வான்?'

    'வழக்கமாய் பாடுகிற பல்லவியைத்தான் பாடுவானா?’

    எதிர்ப்பட்ட ஒரு டெலிபோன் பூத்தினுள் நுழைந்தாள்.

    கிரிதர் குடியிருக்கும் மாடிபோர்ஷனின் கீழே இருக்கும் ஐயங்கார் வீட்டு டெலிபோன் எண்களை அழுத்தினாள்.

    ரிஸீவரைக் கையிலெடுத்து ஹலோ... ஜட்ஜ் சார் வீட்டு மாமியா... மாமி... ப்ளீஸ்... ஒரு நிமிஷம் கிரியைக் கூப்பிட முடியுமா? என்றாள்.

    சுவாதியா? காலங்கார்த்தால... அப்படியென்னடியம்மா அவசரம்? கிரி என்னைக்கு இருந்தாலும் ஒருநாள் நோக்கு சொந்தமாகப் போறவன்தானே... சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்து... ஆற அமர பேசிக்கறதுக்கென்ன... கிரி எங்கே ஓடிப்போயிடப் போறான்... ம்...

    இல்லை மாமி... ஒரு முக்கியமான சேதி... அதை கிரிகிட்டே உடனடியா சொல்லியே ஆகணும். மாடிப்படியிலே ஏறினா உங்களுக்கு மூச்சு இரைக்கும். வாஸ்தவம்தான்... ப்ளீஸ் மாமி... கோச்சுக்காம... எனக்காக கிரியை கூப்பிடுங்க... கெஞ்சுகிற தொனியில் சொன்னாள்.

    "சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1