Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannil Maraiyum Minnal
Mannil Maraiyum Minnal
Mannil Maraiyum Minnal
Ebook286 pages1 hour

Mannil Maraiyum Minnal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்களின் வாசத்தை கண்டாலே மண்ணில் மறைந்து விடும் விசித்திரமான ஒரு மூலிகை.அந்த மூலிகையையும் அரசகுல செல்வங்களையும் பெட்டியில் வைத்து புதைத்து விட்டு மரணிக்கும் அரண்மனை வைத்தியர்.மன்னரின் கட்டளைக்கிணங்க மூலிகையையும் குல செல்வங்களையும் தேடி கிளம்புகிறார்கள் ஆதித்தனும் அரிஞ்சயனும்.உடன் இணைந்து கொள்கிறான் பைராகி.இந்த மூவர் குழு தங்கள் வேட்டையில் வெற்றியடைந்ததா என்பதே கதை!

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135305683
Mannil Maraiyum Minnal

Read more from Erode Karthik

Related to Mannil Maraiyum Minnal

Related ebooks

Related categories

Reviews for Mannil Maraiyum Minnal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannil Maraiyum Minnal - Erode Karthik

    http://www.pustaka.co.in

    மண்ணில் மறையும் மின்னல்

    Mannil Maraiyum Minnal

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    http://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    1

    வெற்றியில் ஒரு தோல்வி

    ரணதீரன் அரண்மனை உபரிகையில் நின்று வெளியே நிகழும் வாண வேடிக்கைகளையும், மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தையும் முகத்தில் எந்த சலனமும் இன்றி பார்த்து கொண்டிருந்தான். என் மக்கள்! என் நாடு! நான் பிறந்து வளர்ந்த மண்! என் அரண்மனை! அனைத்தையும் பார்த்து மகிழ தன் தந்தை இல்லையே என்ற ஏக்கம் ஓரு புறம் இருந்தாலும் இப்போது எதிர்கொள்ள போகும் சிக்கல் யாரும் எதிர்பாராதது என்ற எண்ணத்தில் ரணதீரனின் முகம் களையிழந்து காணப்பட்டது.

    அவனது பின்புறம் கைத்தடி ஊன்றும் சத்தம் கேட்டது. ரணதீரன் தன் பின்புறம் வந்த நின்ற அந்த முதியவரை பணிந்து வணங்கினான்.

    என்ன தீரா? வெற்றி பெற்ற மகிழ்ச்சியை உன் முகத்தில் காண முடியவில்லையே? என்றார் கணபதி பட்டர். அவரின் கூரிய விழிகள் ரணதீரனின் கண்களை கூரிய வாளாக துளைத்தன.

    நீங்கள் சொல்வது உண்மை தான் பட்டரே! இந்த போரில் நான் சந்திரவர்மனை நான் கொன்றேன். என் நாட்டை மீண்டும் மீட்டு கொண்டேன். அந்த மகிழ்ச்சியை முழுதாக என்னால் அனுபவிக்க முடியவில்லை

    காரணம்?

    வரும் பெளர்ணமி தினத்தில் முடி சூட ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்

    மகிழ்ச்சியான செய்தி தானே?

    இல்லை. அதில் மகிழ்ச்சியை குலைக்கும் ஒரு விசயம் இருக்கிறது

    என்னவென்று சொல்! பீடிகை போடாதே

    என் தந்தையின் வாளும், செங்கோலும் அந்த பட்டமேற்பு விழாவில் என் கையில் இருக்காது. அவை என் குலத்தின் கீர்த்தி மிகுந்த பொருள்கள் என் மூதாதையரின் கையில் தவழ்ந்தவை. அவை இப்போது எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது

    ஆம்! இக்கட்டான சூழல்! பத்து வருடங்களுக்கு முன்பான போரில் சந்திரவர்மன் உன் தந்தையை கொன்று இந்நாட்டை கைப்பற்றினான். கடைசி போரின் போது சந்திரவர்மன் தன் குல செல்வங்களை கைப்பற்றி விடகூடாது என்பதற்காக உன் தந்தை அதை தனக்கு நம்பிக்கையான யாரிடமாவது கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த போரின் போது நீ சிறு பாலகன். உன்னை காப்பாற்றி தலைமறைவாக வைத்து வளர்த்து படை திரட்டி நாட்டை மீட்க உதவியவன் நான்.

    அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன் பட்டரே! அப்படி என் தந்தையாரிடமாவது குலசெல்வங்களை கொடுத்திருந்தால் அவர்கள் இன்னேரம் நம்மிடம் ஒப்படைத்திருப்பார்கள். நாம் நாட்டை கைப்பற்றி ஒரு வாரம் ஆகிவிட்டது.

    யோசிக்க வேண்டிய விசயம்.

    குல செல்வங்கள் இல்லாமல் அரியணை ஏறுவதை மிகப்பெரும் இழிவாக அவமானமாக கருதுகிறேன் நான். அது நாட்டு மக்களிடையே என் மதிப்பை குறைக்கும். நாளை யாராவது என்னை எள்ளி நகையாடவும் வழிவகுக்கும்.

    புரிகிறது

    என் எதிரிகளும் அதைத்தான் விரும்ப கூடும்

    எதிரிகள் என்று நீ யாரை குறிப்பிடுகிறாய் தீரா? நாம் தான் சந்திர வர்மனை கொன்று விட்டோமே?,

    மறுக்கவில்லை நான். சந்திர வர்மனை காப்பாற்ற தவறிவிட்ட ஆபத்துதவி படைகளின் தலைவன் வீரகேசரியை மறந்து விட்டீர்கள்?

    ஆம்! அபாயகரமானவன்.! மன்னரை காப்பாற்றுவதாக சத்தியம் செய்தவன் அவன். களத்தில் அவனது உடல் கிடைக்கவில்லை. சத்தியம் தவறியதற்காக வெஞ்சினத்தோடு அவன் நம் மீது பாய கூடும். அவனது குறி குல செல்வங்களாகவும் இருக்கலாம். அதை அழிப்பதன் மூலம் தீராத அவமானத்தை நமக்கு அவன் ஏற்படுத்தகூடும்.

    என் அச்சமும் அதுவே தான்! அவனை முந்தி கொண்டு நாம் குல செல்வங்களை கைப்பற்றியாக வேண்டும்.

    ஆம்! பெளர்ணமிக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. அதற்குள் நாம் இதை சாதித்தாக வேண்டும். பெளர்ணமியன்று நான் அரியணை ஏறும் போது அவை என் கையில் இருந்தாக வேண்டும்

    நாம் நாட்டை சீர் திருத்தவே அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த பணியை யாரிடம் ஒப்படைப்பது?

    வீரமும் விவேகமும் கொண்ட யாராவது தான் இதற்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

    அப்படி இருவரை எனக்கு தெரியும். நம் நல்ல நேரம் அவர்கள் மிக அருகிலேயே இருக்கிறார்கள்.

    யார் அவர்கள்,

    இரண்டு கள்வர்கள். இருப்பவர்களிடம் களவாடி இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள். தண்ணீரில் தடம் பார்த்து நடக்க கூடியவர்கள்.

    நீங்கள் சொல்வது அரிஞ்சயனையும் ஆதித்தனையும் தானே?

    ஆம் அவர்கள் தான்

    இந்த வேலைக்கு பொருத்தமான ஆட்கள் தான். அவர்கள் கள்வர்புரத்தில் அல்லவா இருப்பார்கள்?

    இல்லை. இப்போது தங்களின் நண்பன் பைராகிக்கு உதவுவதற்காக சிறுமலைக்கு வந்திருக்கிறார்கள். நான் உடனே அவர்களை வரசொல்லி ஒலை அனுப்புகிறேன்.

    சந்திப்பு இங்கே நடக்க வேண்டாம். ரகசியமான இடத்தில் இருக்கட்டும்.

    கவனம் பட்டரே! இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் என் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். காலமும் மிக குறைவாகவே இருக்கிறது

    கவலை வேண்டாம் தீரா! இவர்கள் தோற்றதாக இதுவரை சேதியில்லை என்றார் கணபதி பட்டர்.

    பட்டர் ஓலையை எடுத்து கொண்டு யாரங்கே? என்றார்.

    சிறிது நேரத்தில் ஓலையுடன் ஒரு குதிரை வீரன் அரண்மனையின் பின்பக்க வழியாக கிளம்பினான்.

    2

    சிறுமலையில் தன்னுடைய பணியாட்கள் மூலிகைகளை பறிப்பதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் பைராகி. எல்லோரும் எல்லா மூலிகை செடிகளையும் பறித்து விடகூடாது என்பதால் ஆளுக்கு ஐந்து மூலிகைகளை பிரித்து கொடுத்திருந்தான் பைராகி. அவனுக்கு அருகே நின்றிருந்தனர் ஆதித்தனும் அரிஞ்சயனும். சற்று தூரத்தில் குதிரைகளும், குதிரை வண்டிகளும் மரத்தில் கட்டப்பட்டிருந்தன.

    உன்னுடைய மூலிகை சேகரிப்பை வேடிக்கை பார்க்கவா எங்களை அழைத்து வந்தாய் நண்பா? என்றான் ஆதித்தன்.

    இங்கே சில அதிசயங்கள் இருக்கின்றன. அவற்றை காட்டவே உங்களை இங்கே அழைத்து வந்தேன்,

    அப்படி என்ன அதிசயத்தை காட்டி விடபோகிறாய்? என்றான், அரிஞ்சயன்.

    இது என்ன? என்று தன் அருகே வளர்ந்திருந்த நீண்ட புல்லை காட்டினான் பைராகி.

    இது வெறும் புல் என்றான் ஆதித்தன்.

    இல்லை. இதன் பெயர் ஜோதி புல். இதை காய வைத்து எரித்தால் பத்து மணி நேரம் எரியும் சக்தி படைத்தது. இதை இரவில் கான கவாசிகள் பயன்படுத்துவார்கள்.

    ஆச்சரியமான விசயம்

    இன்னமும் இருக்கிறது. இதோ இந்த செடியின் பெயர் ரோமவிருட்சம். தலையில் பக்குவம் செய்து தேய்த்தால் முடி அடர்த்தியாக வளரும். உடலில் பட்டு விட்டால் உடல் முழுவதும் கரடிபோல் முடி வளர்ந்துவிடும்.

    நீ சொல்வதை நம்ப முடியவில்லையே?

    நான் சொல்வது உண்மை. இன்னொரு விசயத்தை சொன்னால் நீ நம்பவே மாட்டாய்?

    என்ன அது?

    ஆதளம். இப்படி ஒரு மூலிகை. இதை சரியான முறையில் பக்குவப்படுத்தினால் ஆள் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாகி விடுவான். சித்தர்கள் இதை பயன்படுத்தி அரூபமாக வாழ்வதாக கேள்வி.

    ஆச்சரியமும் வியப்பும் உண்டாகிறது.

    இன்னமும் நிறைய இருக்கிறது நண்பா! நாம் ஒற்றையடி பாதையில் நடந்தால் நம் பின்புறம் பாதையை மூடி நம்மை திக்குமுக்காட செய்யும் மூலிகை. துண்டு துண்டாக வெட்டப்பட்ட கறி துண்டுகளை ஒரே சதையாக கூட செய்யும் மூலிகை என ஏராளமான மூலிகைகள் உண்டு. இவற்றை மருந்துக்காக பயன்படுத்தும் போது நகத்தை வெட்டி விட்டு நகக்கண்ணால் நோகாமல் கிள்ள வேண்டும். அந்த செடிகளிடம் மன்னிப்பு கேட்டு மருத்துவத்திற்கு பயன்படுத்த மந்திரங்களும் உண்டு.

    செடிகளுக்கு உயிர் உண்டா?

    இருக்கிறது என்பது என்னுடைய அனுபவம். நான் தேடி வருவது வேறோரு மூலிகை. இதுவரை அது என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. இனியும் படாதென்றே நினைக்கிறேன்.

    அப்படி என்ன மூலிகை நண்பா?

    அதன் பெயர் தெரியவில்லை. அதனுடைய தன்மை வினோதமானது. மனித நடமாட்டமோ வாசனையோ பட்டுவிட்டால் உடனே பூமிக்கு அடியில் மின்னலாக ஓடி விடும். மண்ணில் மறையும் மின்னல் என்றொரு பெயரும் அதற்கு உண்டு

    இது கற்பனையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். மனிதர்களை பார்த்தாலே மறைகிறதென்றால் அதை எப்படித்தான் கண்டுபிடிப்பது?

    இதே சந்தேகம் எனக்கும் இருந்தது. இதோ இந்த தாயத்து அந்த மூலிகையின் வேரால் நிரப்பப்பட்டது. இதை மண்ணில் போட்டதும் நடப்பதை கவனியுங்கள்.

    பைராகி தன் இடுப்பிலிருந்த தாயத்தை மண்ணில் வீசினான். தாயத்து மெல்ல மண்ணுக்குள் புதைந்து உள்ளே சென்றது.

    இருவரும் ஆச்சரியமாக அதை பார்த்து கொண்டிருந்தார்கள்.

    இந்த செடியைத் தான் நான் தேடி கொண்டிருக்கிறேன். கண்டுபிடிக்கும் வழிதான் தெரியவில்லை என்றான் பைராகி.

    தூரத்தில் எழுந்த மண் புயலை கவனித்த ஆதித்தன் நம்மை தேடி யாரோ வருகிறார்கள் என்றான்.

    ரணதீரனின் தேடலும் பைராகியின் தேடலும் ஒரே புள்ளியில் இணைய போவதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

    3

    அசலை போலநகல்

    எதிரே எழுந்த சிறு மணல் புயலை காட்டி ஆதித்தன் நம்மை தேடி யாரோ வருகிறார்கள் என்றதும் வாய்விட்டு சிரித்த பைராகி இந்த வனத்திலும் உங்களை தேடி வர ஆட்கள் இருக்கிறார்களா? என்றான்.

    நகைக்காதே நண்பா! எங்களின் உதவியாருக்காவது தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. அதனால் எங்களை தேடி வருகிறார்கள் என்றான் அரிஞ்சயன்.

    அதுவும் பெரிய மனிதர்களுக்குத்தான் உங்களின் உதவி அதிகம் தேவைப்படுகிறது.

    என்ன செய்வது? அவர்களுக்குத்தான் தீர்க்க இயலாத பிரச்சனைகள் வந்து சேர்கின்றன. அதை தீர்க்க எங்களை நாடுகின்றனர். இந்த முறை எங்களுடன் நீயும் வருகிறாய். எங்களின் கஷ்டங்களை பார்த்தால் தான் எங்கள் பணியின் தீவிரம் புரியும்.

    எனக்கும் இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மனம் சலிப்படைந்து விட்டது. புதிதான ஒரு அனுபவத்திற்கு நானும் ஏங்குகிறேன்.

    பிறகென்ன? உன் ஆட்களை மூலிகைகளை பறித்து கொண்டு ஊர் திரும்ப சொல். வருகிறவன் என்ன மாதிரியான தொல்லையை சுமந்து வருகிறானோ தெரியவில்லையே? என்று ஆதித்தன் கூறிகொண்டிருந்த போது அந்த குதிரை வீரன் தன் குதிரையை மரத்தில் கட்டி விட்டு அவனுக்கு அருகே வந்தான்.

    யார் ஐயா நீ? என்றான் ஆதித்தன்.

    நான் மலை நாட்டிலிருந்து வருகிறேன். என் நாட்டின் அமைச்சர் கணபதி பட்டர் உங்களுக்கு ஒரு ஓலையை கொடுத்தனுப்பி உள்ளார். என்றவன் ஓலையை ஆதித்தனிடம் கொடுத்தான்.

    நாங்கள் யாரென்று உனக்கு தெரியுமா? என்றான் அரிஞ்சயன்.

    உங்களை நான் அறிவேன். அதோ அவர் உங்களின் நண்பர் பைராகி தானே?

    ஆம்!

    வணக்கம் ஐயா! என் மாமியாருக்கு தீராத மூட்டு வலி. அதற்கு ஏதாவது மருந்து கிடைக்குமா? என்றான் அவன்.

    மாமியாரின் மீது பாசமுள்ள மருமகனை இப்போது தான் பார்க்கிறேன் என்றான் பைராகி.

    பாசமல்ல ஐயா! அந்த கிழவியால் எனக்கும் என் மனைவிக்கும் தீராத சண்டை வருகிறது. அந்த கிழவி அமைதியாக இருந்தால் என் வீடும் அமைதியாக இருக்கும். அதனால் தான் மருந்து கேட்கிறேன்.

    அதோ என் சீடர்களிடம் கேள். அவர்கள் மருந்து தருவார்கள்

    நல்ல தய்யா! இது கணபதி பட்டரின் முத்திரை மோதிரம். அவரை சந்திக்கும் இடத்தில் இது உதவி செய்யும் அவன் பைராகியின் சீடர்களை நோக்கி போனான்.

    ஓலையை படித்து முடித்த ஆதித்தன் மலைநாட்டின் நிலவரத்தை சுருக்கமாக எடுத்து கூறினான்.

    பதினைந்தாம் நாள் பட்டமேற்பு விழா! அதற்குள் நாம் குல செல்வங்களை கண்டறிய வேண்டும். குறைவான கால அவகாசமே நமக்கு இருக்கிறது. மொத்தம் பதிநான்கு நாட்கள் என்றான் ஆதித்தன்.

    நம்மால் சாதித்துவிட முடியுமா? பத்து ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன பொருளை இப்போது கண்டு பிடிப்பது சாத்தியமாக தோன்றவில்லை என்றான் அரிஞ்சயன்.

    எனக்கும் இதே ஐய்யம்தான் என்றான் பைராகி.

    ஓரு வேளை அந்த குல செல்வங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாவிட்டால்?

    வேறு வழியை யோசிப்போம். என்றான் பைராகி.

    வேறு வழியென்றால்?

    அதை போன்ற நகல் ஒன்றை செய்து விடுவது தான் மாற்று வழி. ரணதீரன் தன்னுடைய 15வது வயதில் சில முறை தான் அவற்றை பார்த்திருக்க முடியும். அதனால் அசலுக்கும் போலிக்கும் அவனால் வித்தியாசம் காண முடியாது

    பைராகியின் யோசனை கேட்ட சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

    நல்ல யோசனைதான். இதை கடைசியாக செயல்படுத்தலாம். குல செல்வங்கள் கிடைக்காத பட்சத்தில்.! இப்போது நாம் கிளம்பலாம் என்றான் அரிஞ்சயன் -

    மலைநாட்டை நோக்கி மூன்று குதிரைகள் கிளம்பின.

    4

    வீரகேசரி

    அந்த அடர்ந்த வன பகுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 12 பேர் இருந்தனர். மரங்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் அவர்கள் தங்கியிருந்தனர். தொலைதூரத்தில் வருபவர்களையும் கண்காணிக்க அந்த மர வீடுகள் வசதியாக இருந்தன. மரங்களிடையே இருந்த வெற்றிடத்தில் விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. குளிருக்கு இதமாக அவர்கள் அதை சுற்றி உட்கார்ந்து தீதீக் காய்ந்து கொண்டிருந்தனர்.

    மர வீடு ஒன்றினுள் இருந்து வெளிப்பட்ட வீரகேசரி கிழக்கில் உதித்த சூரியனை வணங்கி விட்டு நூலேணி மூலமாக கீழே இறங்கி வந்தான். அவனை பார்த்ததும் மரியாதை செலுத்தும் முகமாக எழ முயன்றவர்களை கையை அசைத்து அமரும்படி கட்டளையிட்டவன் தானும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டான். தன் கைகளை தேய்த்து சூடேற்றி கொண்டவன்

    "பார்த்தீர்களா நண்பர்களே! ஒரே

    Enjoying the preview?
    Page 1 of 1