Kavithavin Kaadhalan
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
Navagrahangal Rating: 1 out of 5 stars1/5En Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Arputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAshtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsEnakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Poochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kavithavin Kaadhalan
Related ebooks
Vaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsAasai Alaigal Rating: 5 out of 5 stars5/5Ninaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsNinnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Mudindhu Vitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nila Rating: 0 out of 5 stars0 ratingsSeethobadesam Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Manathile... Yetho Ninaivile... Rating: 5 out of 5 stars5/5Thoduvaanam Rating: 3 out of 5 stars3/5Kathiyindri Rathamindri... Vidhya Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Azhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Puthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsSwaroopa - Oru Vanna Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsVankkathirkuriya Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Ezhuthathey! Rating: 0 out of 5 stars0 ratingsKalyana valaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Manthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kavithavin Kaadhalan
0 ratings0 reviews
Book preview
Kavithavin Kaadhalan - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
கவிதாவின் காதலன்
Kavithavin Kaadhalan
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajaratnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
*****
அத்தியாயம் 1
அந்த மாருதி சுசுகியிலிருந்து இறங்கிய கவிதாவைத் தொடர்ந்து கிருபா, சித்ரா, வேணி என்று இறங்கினார்கள்.
குரல்களில் ஐஸ்க்ரீம் குளுமை, சிரிப்பில் வெள்ளிச் சதங்கைகள் குலுக்கின. சளசளவென்ற பேச்சொலி.....
கவிதாவைத் தொடர்ந்து தியேட்டரினுள் அனைவரும் நுழைந்தார்கள்.
கவிதாவைப் பற்றி இங்கே கொஞ்சம்...
பிரபல தொழிலதிபர் சந்திரசேகரின் ஒரே வாரிசு. அவள் பெயரில் தான் பல தொழிற்கூடங்கள் இயங்கி வந்தன. அவளுக்கென்று தனி கார். தினம் ஆயிரக் கணக்கில் செலவு செய்பவள்....
வாட்ட சாட்டமான ஊட்டமான உடம்பு.... அழகு என்பதற்கு அவள் தான் உதாரணம் என்பது போல் மதமதப்பு... சந்தனத்தைக் குழைத்துத் தடவினாற் போன்ற வழவழப்பு.... கன்னக் கதுப்பின் சிவப்பில் இளம் ஆப்பிளின் வண்ணம்...
இவளைப் பார்த்து ஆசைப்படாத இளைஞர்கள் இருக்க முடியுமா?
எப்பொழுதுமே இவள் தரிசனத்திற்காக ஒரு இளைஞர் பட்டாளம் காத்துக் கிடக்கும்.
டேய், நான் இவ கால் செருப்பாகவாவது இருக்கக் கூடாதா?
நான் நெயில் பாலிஷாகவாவது இருக்கலாம்.
டேய், பிரம்மா எப்படிடா இவளை மட்டும் இத்தனை அழகா படைச்சான்?
இரு... நான் போய்க் கேட்டுட்டு வரேன்
கைத்தட்டிக் கேலிச் சிரிப்புக்கள்.
இவ பேர் என்னடா?
நான் கண்டுபிடிச்சுட்டேன். இவ பேர் கவிதா
ஐயோ... ஐயோ இவ கண்கள் கவிதை எழுதுதடா
நிச்சயம் உன்னைப் பார்த்துப் பாடாதுடா
என்று ஒருவன் காலரை நிமிர்த்த...
என் கிட்ட இவளை மண்டி இட வைக்கிறேன்.. இல்லேன்னா என் பேர் விஸ்வேஷ் இல்ல
கோஷ்டிக் கைத்தட்டல்கள் அவனை உற்சாகப்படுத்த...
அன்று முதல் இந்த கோஷ்டி, கவிதா எங்கே போனாலும் படை எடுத்தது.
டேய், என்னவோ பெரிசா சபதம் போட்டே.... ஒண்ணையும் காணோமே... அவ பின்னாடி சுத்தறது தாண்டா தண்டம்
என்றான் ஒருவன்.
அவ பணக்காரி.... ஐஸ்க்ரீம் பார்லரில் ஆயிரம் ரூபாய் பில் வச்சிட்டு வரா. நம்மால் முடியாதும்மா
என்றான் கருணாகரன்.
மாசம் மூணாச்சு... பெரிசா சபதம் போட்டானே?
நண்பர்கள் உசுப்பி உசுப்பிவிட விஸ்வேஷ் டென்ஷனானான். இவளை எப்படி சந்திப்பது?
டேய் இன்னிக்கு கவிதா கோஷ்டி சினிமா போகுதுடா. நாம் போகலாமா?
இதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் சான்ஸ். இதுக்கு மேல அனாவஸ்யமா செலவு பண்ணத் தயாரா இல்ல நாங்க
இன்னிக்கு மட்டும்டா
கவிதாவின் கார் வருகையை நோக்கித் தவம் கிடந்தார்கள் இந்த இளைஞர்கள்.
இந்தப் பெண்களின் பின்னால்தான் இவர்கள் புக் பண்ணி இருந்தார்கள். இதற்காக லஞ்சம் கொடுத்தது தனிக் கதை.
கவிதா குழு போனதும் விஸ்வேஷும் நண்பர்களுடன் உள்ளே போனான்.
டேய், கவிதாவுக்குப் பின்னாடி எனக்கு ஸீட். எவனாவது உட்கார்ந்துகிட்டு எந்திரிக்க மாட்டேன்னு சொன்னீங்க... பல்லைக் களட்டிடுவேன்
விஸ்வேஷ் முரடன். பி.ஏ.வைக் கடக்க முடியாமல் வயதைக் கடந்து கொண்டிருந்தான். முரட்டுத்தனம் உள்ளவர்கள் நண்பர்கள்.
வரிசை வரிசையான இருக்கைகளில் கவிதா நடுவில் அமர காவல் போல தோழிகள் அமர.....
கவிதாவுக்குப் பின்னால் விஸ்வேஷ் அமர்ந்தான்.
விஷ்! முந்திரி சாப்பிடறாங்கடா?
என்றான் கணி.
இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மதன் நாட்டுக்கு மந்திரியே
சின்னக் குரலில் பாடினான் விவேக்.
"சே,