Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Durga
Durga
Durga
Ebook575 pages4 hours

Durga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100606051
Durga

Read more from Devibala

Related to Durga

Related ebooks

Related categories

Reviews for Durga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Durga - Devibala

    http://www.pustaka.co.in

    துர்கா

    (இது உங்களின் கதை)

    Durga

    (Ithu Ungalin Kathai)

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    துர்கா - இது உங்களின் கதை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    *****

    துர்கா, ஆஞ்சநேயர் கோயிலுக்குள் நுழையும்போது இரவு மணி ஏழரை. ஆபீஸ் முடித்து வருவதற்கு தாமதமாகிவிட்டது. ஏப்ரல் 12 ஸ்ரீராம நவமி நாள். கோயிலில் சரியான கூட்டம். அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில். பூஜை செய்யும் கண்ணன், துர்காவைப் பார்த்ததும் ஓடி வந்தார்.

    இப்படி வாங்க துர்கா!

    வேண்டாம் கண்ணன்! வரிசையில நின்னே வர்றேன். எல்லாரும் கால் கடுக்க நின்னு வரும்போது, நான் மட்டும் நடுவுல புகுந்து வர்றது முறையில்ல!

    துர்கா அந்த மாதிரி எல்லாம் செய்யமாட்டாள். அந்த மாதிரி செய்பவர்களையும் உடனே எதிர்த்து, அதனால் பலசமயம் பொது இடங்களில் பிரச்னை வந்தது உண்டு. 'அந்நியன்' அம்பிபோல அவ்வப்போது நியாயங்களைக் கேட்பவள் துர்கா.

    தினசரி காலையில் ஆஞ்சநேயர் கோயிலில் கால்வைத்து விட்டே ஆபீஸுக்குப் புறப்படும் துர்கா... மாலையிலும் அதைச் செய்யத் தவறுவதில்லை.

    அன்று மாலை, திவ்யமாக ஆஞ்சநேயரை சேவித்து, பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு, தன் ஸ்கூட்டியை உதைத்தாள். ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தாள். மணி எட்டு இருபது.

    உள்ளே நுழையும்போது மூன்று வயது மகள் அஞ்சு, ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் ஓடிவந்து இடுப்பைக் கட்டிக் கொண்டாள். பாட்டி அடிச்சாங்க! என்றாள்.

    மாமியார் ராஜம் வேகமாக எதிர்ப்பட்டாள். கையில் கிண்ணம்; அதில் ரசம் சாதம்.

    அரை மணி நேரமா போராடறேன். ஒரு கவளம்கூட சாப்பிடலே. இப்ப நீ உள்ளே நுழைஞ்சதும் என்னைப் பற்றிப் புகாரா? ஊர்ல ஒருத்தர் பாக்கியில்லாம 'திருமதி செல்வம்' பாக்கறாங்க. எனக்குக் குடுத்து வைக்கலை. அட... இன்னிக்கு ஸ்ரீராம நவமி நாளாச்சே! அடுத்தத் தெருவுல உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகலாம்னா, அதுவும் முடியல!

    நடேசன் உள்ளிருந்து வந்தார்.

    ஏண்டீ ஒப்பாரி வைக்கற நீ?

    நான் ஒப்பாரி வைக்கல. வேலைக்குப் போற மருமகளுக்கு மாமியாரா இருந்தா, கடைசிகாலம் வேதனைதான். புள்ளைங்கள் வளர்க்கற வயசா இது?

    சரிடி! வேலைக்குப் போற மருமகளோட பணம் குடும்பத்துக்கு வேணும்னா, 'ஆஞ்சநேயர்', 'திருமதி செல்வம்' எல்லாத்தையும் தியாகம் பண்ணித்தான் ஆகணும்!

    அவ சம்பளத்தைக் கொண்டுவந்து எனக்கா தர்றா? அதுல நான் பட்டுப்புடவையும், நகைநட்டும் வாங்கியா போட்டுக்கறேன்? பேச வந்துட்டீங்களே?

    துர்கா எதையும் பொருட்படுத்தவில்லை. அஞ்சுவை உள்ளே தூக்கிக்கொண்டு போனாள். அது சமாதானமாகி விளையாடத் தொடங்கிவிட்டது. சேலையை மாற்றி, முகம் கழுவி பொட்டு வைத்துக்கொண்டு, சமையல்கட்டுக்கு வந்தாள்.

    மாமியாரின் இந்தப் புலம்பல்... தினசரி சங்கதிதான். சிலசமயம் உச்சகட்டத்தைகூட எட்டும். துர்கா பதிலே சொல்வது இல்லை.

    நாத்தனார் சுதா - ஒரு ஆடிட்டரின் உதவியாளராக இருக்கிறாள். உள்ளே நுழைந்தாள்.

    அம்மா... பசி உயிர் போகுது. என்ன வெச்சுருக்கே?

    "ம்... என்னைக் கடிச்சுத் தின்னு. நாங்களும் மத்தியானம் சாப்பிட்டதுதான். உங்க அண்ணி இப்பத்தான் வந்தா. அவளையே கேளு...''

    நீ ஏதாவது செஞ்சு வைக்கக்கூடாதா?

    இந்த வயசுல புள்ளையைப் பாத்துக்கிட்டு, வீட்டை நிர்வகிக்கறதே அதிகம். சமையல்காரியாவும் ஆக்கப்பாக்கறியா?

    அரிசியைக் கழுவி, குக்கர் வைக்கத் தயாரானாள் துர்கா. அந்தநேரம் உள்ளே நுழைந்தான் ஆனந்த்.

    தலைவலி மண்டையைப் பொளக்குது துர்கா. சூடா ஒரு காபி குடு! குழந்தை ஓடிவந்து அவன் மடியில் உட்கார,

    அவனை விட்டுட்டு உங்கம்மாகிட்டப் போ. அவனே களைச்சு போய் வந்திருக்கான்!

    துர்கா காபி எடுத்து வந்தாள்.

    ராத்திரி சாதமா வெச்சிருக்கே?

    ஆமாம்... ஏன்?

    உங்க மாமாவுக்கு சாதம்னாலே அலர்ஜி. ராத்திரி ஏதாவது டிபன் பண்ணக்கூடாதா?

    மாவு அரைக்க நேரமில்ல. உப்புமா யாருக்கும் பிடிக்காது. மத்தியான சோறு வேற நிறைய பாக்கி இருக்கு. ஒரு துவையலை அரைச்சு, அப்பளத்தை சுட்டா போதாதா? விக்கற விலைவாசிக்கு எந்தப் பொருளையும் வீணடிக்கக்கூடாது...

    - சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

    எங்களுக்கு எது புடிக்காதோ, அதைத்தான் செய்வா. வயசான காலத்துல வேறவழியும் இல்ல!

    ஆனந்த் எரிச்சலுடன் நிமிர்ந்தான்.

    "ஏம்மா அப்படிச் சொல்றே? ஆபீஸ் முடிஞ்சு வீடு திரும்பினா, தினமும் உன் புலம்பல்தான்!''

    ஆமாண்டா! உன் பொண்டாட்டி பேசமாட்டா. அத்தனை அழுத்தம். உன்னைவிட அதிகம் சம்பாதிக்கறா இல்லியா? உனக்கேது பேச வாய்?

    ஆனந்தின் ஈகோவை குத்தி பங்சராக்கினாள். ஆனந்த் எரிச்சலுடன் எழுந்து உள்ளே வந்தான்.

    "துர்கா... அவங்க என்ன கேக்கறாங்களோ, அதையே செய்யேன்...''

    கேட்டதையெல்லாம் தர இது என்ன ஓட்டலா? பொறுப்பு எல்லாருக்கும் உண்டு...

    மெதுவாப் பேசு... அம்மா காதுல விழுந்து தொலைக்கப் போகுது...

    நான் தப்பா எதுவும் பேசல. அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. போய் டிரெஸ் மாத்திட்டு வாங்க. அடிக்கடி காபி குடிக்காதீங்க!

    சாப்பாடு தயாராகிவிட்டது. அஞ்சுவை உள்ளே கொண்டுபோய் படுக்கையில் போட்டு தூங்க வைத்தாள் துர்கா. சில நிமிடங்களில் வெளியே வந்தாள். மற்றவர்கள் சாப்பிட்டு முடித்திருக்க, துர்கா சாப்பிட உட்கார்ந்தாள்.

    ஆனந்த்... நாளைக்கு திருப்பதிக்கு குடும்பத்தோட போகலாமா?

    திடீர்னு நாளைக்குப் போகலாம்னு இப்ப சொன்னா எப்படீம்மா?

    பெருமாள் எப்ப கூப்பிடறாரோ, அப்பத்தான் போகணும்!

    என்ன துர்கா சொல்ற?

    நாளைக்கு எலெக்ஷன். ஓட்டுப் போடணும்.

    நீ ஒருத்தி ஓட்டுப் போடலைனா, மாநிலமே கொந்தளிச்சுப் போகுமாக்கும்?

    நான் ஒருத்தி இல்லை. நம்ம வீட்ல அஞ்சு ஓட்டு இருக்கு. ஓட்டுப் போடறது நம்மோட ஜனநாயக கடமை. நாளைக்கு திருப்பதி போக வேண்டாம்!

    ஆமாம்மா... அவ சொல்றதும் நியாயம்தான்!

    சரி. அவளை நாளைக்கு லீவு போடச் சொல்லு. ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு வந்து புள்ளையை பாத்துக்கட்டும். நான் கல்பனா வீட்டுக்கு அப்பாகூட போகப்போறேன்...

    இல்லீங்க... நாளைக்கு திடீர்னு லீவெல்லாம் போட முடியாது!

    எங்களுக்கு அவசியம் இருக்கே! எங்க பொண்ணைப் பாக்க நாங்க போறதை யாரும் தடுக்க முடியாது. உள்ளூர்ல இருந்துட்டு, அவளாலயும் வர முடியல. இதப்பாரு ஆனந்த்... காலையில் மணி ஆறடிச்சா, காபியைக் குடிச்சுட்டு நானும், அப்பாவும் போகத்தான் போறோம். கல்பனா வீட்டுல நாலுநாள் இருந்துட்டு வர்றோம். புள்ளையை பராமரிக்கற எந்திரம் இல்ல நாங்க. புரியுதா?

    அஞ்சு அழ, துர்கா எழுந்து போனாள். பின்தொடர்ந்தான் ஆனந்த்.

    "துர்கா... அம்மா பிடிவாதம் பிடிச்சா, போய்த்தான் தீருவாங்க. அவங்க பொண்ணு வீட்டுக்குப் போறதை நான் தடுக்கவும் முடியாது. வேற வழியில்ல. நீ லீவு போட்டுத்தான் ஆகணும்!''

    இல்லீங்க... நாளைக்கு கம்பெனியில் ஆடிட்டிங். லீவு போட்டா, நடவடிக்கை எடுப்பாங்க!

    நீயும் இப்பிடி முரண்டு பண்ணினா எப்படி துர்கா? நம்ம குழந்தையைப் பாத்துக்கற கட்டாயம் அவங்களுக்கு இல்லை. இந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறதே உசத்தி!

    நீங்க லீவுபோட்டு பாத்துக்கறீங்களா?

    நானா?

    ஏன்... என்ன தப்பு... உங்க குழந்தை உங்ககிட்ட இருக்க மாட்டாளா?

    என்ன துர்கா பேசற நீ? அவளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, விளையாட்டு காட்டி, தூங்க வெச்சு... இதெல்லாம் ஒரு ஆம்பளையால முடியுமா?

    ஸாரிங்க! கோபப்படாதீங்க. முடியணும்! நானும் மனுஷிதானே? காலையில நாலுமணிக்கு எழுந்தா, வீட்டையும் கவனிச்சு, வேலைக்கும் போய் சம்பாதிச்சு, மறுபடியும் வீட்டுக்கு வந்து உழைச்சு, படுக்கும்போது ராத்திரி பதினோரு மணி! எல்லாத்தையும் ஒரு மனைவி செய்யும்போது, ஒரு கணவன் எப்பயாவது ஒரு சமயம் பங்கெடுத்துக்கக் கூடாதா?

    ஆனந்துக்கு உச்சந்தலை வரை ஆத்திரம் எகிறியது. ஆனால், பேச வழியில்லை. அவள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை அவனிடம். இது, கணவனுக்கு மனதளவில் சின்ன விரிசலை ஏற்படுத்தும் என்று துர்காவுக்குத் தெரியும். அவள் கவலைப்படமாட்டாள். நியாயத்துக்காக ஏற்படும் மோதலைப் பற்றி துர்கா என்றுமே பயந்ததில்லை. ஆனந்த் திரும்பிப் படுத்துவிட்டான். குழந்தை உறங்காமல், துர்காவையும் உறங்கவிடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தது!

    திரும்பிப் பார்ப்பதற்குள் அலாரம் அடித்துவிட்டது. துர்காவால் எழ முடியவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக எழுந்து, குளித்து சமையல்கட்டுக்கு வரும்போது மணி ஆறு!

    இன்னிக்கு பட்டினியா எல்லாருக்கும்? மாமியார் ராஜம் கேட்க,

    நீங்க காபி குடிச்சிட்டு கல்பனா வீட்டுக்கு போறதா சொன்னீங்களே?

    ஆறு மணிக்கு பதிலா எட்டுக்குப் போனா தப்பா? அவ வீட்ல போய்த்தான் சாப்பிடணுமா?

    ஆனந்த் எழுந்து வந்தான்!

    இதப்பாருங்க... நான் லேட்டா எழுந்துட்டேன். நீங்க எப்படியும் லீவுதானே... மாமி கடைலேருந்து ஏதாவது டிபன் வாங்கிக் குடுத்துடுங்க எல்லாருக்கும். குழந்தைக்கு இட்லி ஊட்டி விட்டுருங்க. மத்தியானம் எடுப்பு சாப்பாடு எடுத்துடுங்க!

    நீ லீவாடா?

    ம்! குழந்தையை பாத்துக்கறது யாரு?

    அவ லீவு போட மாட்டாளா? என்ன ஒரு நெஞ்சழுத்தம்! நீ முடியாதுனு சொல்லிட்டு ஆபீஸுக்கு போடா. உங்களை மாதிரி முதுகெலும்பு இல்லாத புருஷன் இருந்தா, இவளுங்க ஏன் ஏற மாட்டாளுங்க?

    அத்தே... அவர் முடியாதுனு சொல்ல முடியாது. ஏன்னா, குழந்தைக்கு அவர் அப்பா. அவர் சொல்லிட்டா, அப்புறமா நானும் பல விஷயங்களுக்கு முடியாதுனு சொல்ற சூழ்நிலை வரும். உங்க பிள்ளை தாங்குவாரா?

    ராஜம் ஆடிப்போனாள்!

    அதிகம் சம்பாதிக்கற திமிரைப் பாத்தியாடா ஆனந்த்?

    "அத்தே… இது திமிர் இல்லை, நியாயம்! ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கற எனக்கும் ஒடம்பு அசந்து போகலாம். அதைப் புரிஞ்சுக்கற பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. குழம்புக்கு எத்தனை மிளகாய் போடணும்னு மாமியாரை, மருமகள் கேக்கற பாசாங்கான காலம் இல்ல இது. பரஸ்பரம் கஷ்டங்களைப் புரிஞ்சுகிட்டு விட்டுக்கொடுத்து வாழற காலம். அப்படி செஞ்சாத்தான் உறவுகள் நீடிக்கும். எனக்கு நேரமாச்சு!''

    குளிக்கப் போனாள் துர்கா.

    *****

    அத்தியாயம் 1

    பாத்தீங்களா, அவ பேசற பேச்சை?

    தப்பு ராஜம். நீ எல்லாத்துக்கும் குறை கண்டுபுடிச்சு, அந்தப் பொண்ணை பேச வைக்கறே அவளே கூடுமானவரைக்கும் பேசறதில்லை...

    மருமகளுக்கு ஜால்ராவா?

    இல்லையே ராஜம்... அவ பக்கம் நியாயம் இருந்தாலும், அவளுக்கு எதிர்ல உன்னை விட்டுக்கொடுக்கக் கூடாதுனு உனக்குத்தானே ஜால்ரா போடறேன். அவ சம்பளம் வந்தும்கூட, ஆனந்தால் சமாளிக்க முடியலைனு உனக்குத் தெரியாதா?

    உங்களுக்கும் பென்ஷன் சுளையா மாசம் ஏழாயிரம் வருது!

    அதை குடும்பச் செலவுக்குக் கொடுக்க நீ விடறியா? நம்ம சேமிப்புலதானே இருக்கு?

    பின்ன? நாளைக்கு இவ பேச்சைக் கேட்டு ஆனந்த் நம்மை துரத்திட்டா, தனிச்சு வாழப் பணம் வேண்டாமா?

    துர்கா... குளித்து, உடைமாற்றிக் கொண்டாள்!

    அண்ணே! என் சிநேகிதி கல்யாணத்துக்கு கிஃப்ட் தரணும். பணம் கொடு... சுதா வந்து கேட்க,

    அவன்கிட்ட ஏதுடி பணம்? காபி செலவுக்குக்கூட பொண்டாட்டி கையை எதிர்பார்த்துத்தானே நிக்கறான்? அவனும் சம்பாதிக்கறான்னு பேரு. இப்படி ஒரு அவலப் பொழப்பு!

    சுதா! உனக்கு எத்தனை வேணும்!

    "ஆயிரம் ரூபா அண்ணி!''

    துர்கா தன் கைப்பையைத் திறந்து எடுத்துத் தந்தாள்!

    சுதா! நீயும் சம்பாதிக்கறே... சல்லிக்காசு குடும்பத்துக்கு தர்றதில்லை!

    குத்தறீங்களா அண்ணி? இந்தப் பணம் வேண்டாம் எனக்கு!

    கோபப்படாதே... சேர்த்து வெச்சுக்கோ! நாளைக்கு உனக்கும் கல்யாணம் காட்சினு வருமில்லையா?

    ஓ... அவளே பணம் சேர்த்து கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றியா?

    அத்தே... நான் சுதாகிட்ட பேசறேன்!

    சுதா, என் பொண்ணு!

    அப்ப நீங்களே ஆயிரம் ரூபா குடுங்க!

    வெடுக்கென பணத்தைப் பறித்துக்கொண்டு துர்கா உள்ளே போய் விட்டாள். கடுப்பான சுதா,

    கிடைச்சதையும் இல்லாம் செஞ்சிட்டியே... நீ நல்லா இருப்பே! அம்மாவுக்கு சாபம் விட்டாள்.

    என்னங்க... நாம் புறப்படலாமா? - என்றபடி தன் வேலையில் குறியானாள் ராஜம்.

    "பசிக்குது. சாப்டுட்டுப் போகலாம். கல்பனா வீட்ல போய் பஞ்சப்பாட்டு பாட வேண்டாம். மாமி கடையில் நான் போய் டிபன் வாங்கிட்டு வர்றேன்!''

    - கட்டிய வேட்டியுடன் இறங்கி நடந்தார் நடேசன். துர்கா புறப்பட்டு விட்டாள். ஸ்கூட்டியை உதைத்தாள். ஆனந்த் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு குழந்தை டாட்டா சொன்னது!

    "புருஷன் உயிருக்கே போராடினாலும், இந்தக்காலப் பொண்ணுங்க ஆபீஸ் போறதை நிறுத்த மாட்டாளுங்க!''

    - ராஜம் முனகிவிட்டு உள்ளே போக, அடுத்த ஒரு மணி நேரத்தில் நடேசன் வாங்கி வந்த டிபனை அனைவரும் சாப்பிட்டுவிட்டு அப்பா, அம்மா இருவரும் கல்பனா வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.

    ஏண்டி.... உன் மருமகள் வாய் கிழிய விமர்சனம் பண்றியே... பிள்ளை தனியா பேத்தியோட தவிக்கறாளேனு இரக்கப்பட்டு, நீ கூடவே இருக்கியா? அவளைச் சொல்ல உனக்கு யோக்கியதை இல்லடி!

    "விடுங்கப்பா! புறப்படுங்க!''

    அவர்கள் வாசலில் இறங்க, தடாலென சத்தம் கேட்க, மூவரும் உள்ளே ஓடினார்கள். அங்கே... பயங்கர அலறலுடன் கீழே விழுந்து கிடந்தாள் அஞ்சு. எங்கோ ஏறி, எதையோ எடுக்க முனைந்தவள், தலைகீழாக விழ, மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

    ஐயோ! டாக்டர் வீட்டுக்குப் போகணும்டா! ரத்தமாக் கொட்டுதே! குழந்தையைத் தூக்கு!

    ராஜம் அலற , குழந்தை மயங்கி சரிய, ரத்தம் நிற்காமல் வழிய, ஆனந்துக்கு கை, கால்கள் நடுங்க,

    சுதா... உங்க அண்ணி ஆபீஸுக்குப் போய் சேர்ந்திருப்பா. தகவல் கொடு. லீவு போட்டுட்டு வருவா.

    சுதா போன் செய்தாள்!

    மிஸஸ் துர்கா ஆனந்தைக் கொஞ்சம் கூப்பிடுங்க!

    ஓரிரு நிமிட இடைவெளி

    "அவங்க இன்னிக்கு லீவ்!''

    இருக்காது!

    "இப்பத்தாங்க போன் பண்ணி லீவுக்குச் சொன்னாங்க!''

    என்னைத் தவிக்கவிட்டு, லீவு போட மாட்டேன்னு குழந்தையையும் சுமத்திட்டு இப்ப லீவு போட்டுட்டு எங்கே போயிருக்கா துர்கா?

    - ஆனந்துக்கு ரத்தம் தலைக்கேறியது!

    *****

    அத்தியாயம் 2

    ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு, காற்றடித்து முடித்து, பெட்ரோல் பங்கிலிருந்து வெளிவந்த நிமிடம், செல்போன் அழைத்தது! இது அவளுடைய செல்போனின் ரிங்டோன் அல்ல. வேறுவிதமாக இருந்தது. ஓரமாக வண்டியை நிறுத்தி, கைப்பையிலிருந்த செல்போனை வெளியே எடுத்தாள் துர்கா.

    அடடா! சுதாவோட செல்போன். அவசரத்துல மாத்தி தூக்கிட்டு வந்துட்டேனே. அவளுக்கு வந்த கால் நான் எடுக்கலாமா..?' - ஒரு நொடி யோசித்தாள். தப்பில்லை. எடுத்து, யாராக இருந்தாலும் உண்மையைச் சொல்லலாமே? 'அன்வர் காலிங்' என்று திரை மின்ன, பட்டனை அழுத்தினாள். யாரென்று யோசிக்காமல் எதிர்முனையில் படபடவென பேச்சு புறப்பட்டது!

    சுதா, சீக்கிரம் வர்றேன்னு சொன்னே. அரை மணி நேரமா உனக்காக நான் இங்கே காத்துக்கிட்டிருக்கேன்... - துர்காவுக்கு சுருக்கென்றது.

    இந்த விஜயா மஹால் வாசல்ல எவ்வளவு நேரம்தான் நிக்கறது. படக்குனு வா. டிபன் சாப்பிட்டுட்டு கோல்டன் பீச்சுக்குப் போயிடலாம். என்ன பதிலே இல்ல? - துர்காவுக்கு ஒரு சில நொடிகளில் அத்தனையும் உள்ளுக்குள்ளே இறங்கிவிட்டது. சுதாவைக் காதலிக்கும் இளைஞர் அன்வர். அவர்களிருவருமே தேர்தல் நாளான அன்று, கோல்டன் பீச் போக திட்டமிட்டு விட்டார்கள். இதை இப்படியே ஆறப்போடக் கூடாது. சில நொடிகள் யோசித்தாள்.

    நீ வர்றியா... இல்லையா?

    ம்!

    செல்லை அணைத்தவள், 'இன்னிக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங். கட்டாயம் போயாகணும். ஆனா, அதைவிட முக்கியம்... சுதாவோட வாழ்க்கை' என்று மாற்றி மாற்றிக் குழம்பியவள்... கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, போன் செய்து லீவ் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

    இங்கே வீடு அமளிதுமளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனந்த், ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்.

    சரிடா! அவ மேலே உள்ள கோபம் இருக்கட்டும். இப்ப ஆட்டோ கொண்டு வா! - அப்பா சொல்ல,

    அம்மா, எனக்கு வேலை இருக்கு. நான் போகட்டுமா..? - சுதா படபடக்க, குழந்தைக்கு அடிப்பட்ட நேரத்துல, வயசான நாங்க தவிக்கறோம். நீயாவது எங்ககூட இருடி!

    வேண்டாம்மா! குழந்தையை பெத்தவளுக்கே கவலையோ, அக்கறையோ இல்ல. சுதாகிட்ட நான் எதிர்பார்க்க முடியுமா? நான் சமாளிச்சுக்குவேன். கொடு குழந்தையை!

    என்னடா ஆனந்த் இப்பிடி பேசறே? சுதா... நீ போகாதே. வந்தவளுக்கு அக்கறை இல்லை. ஆனந்துக்கு நாமதான் துணையா இருக்கணும்! - அம்மா ராஜம் ஏற்றிவிட,

    இது துர்காவோட செல்போனாச்சே? விட்டுட்டு போயிட்டாளா? - அப்பா கேட்டபடி மேஜையில் இருந்து எடுத்து வர, சுதா அப்போதுதான் நினைவு வந்தவளாக தன் செல்போனைத் தேடினாள். காணவில்லை.

    ஆட்டோ பிடித்து அடுத்த இருபது நிமிடங்களில் 24 மணிநேர கிளினிக்குக்கு போக... ட்ரீட்மென்ட்டை ஆரம்பித்த டாக்டர், வெளியே வந்து, காயம் பெரிசா இல்லை. ரத்தம் பார்த்து எல்லோரும் பயந்துட்டீங்க. பயத்துலதான் குழந்தைக்கும் மயக்கம். சீக்கிரமே தெளிஞ்சிடும். எதுக்கும் ஒரு எக்ஸ்-ரே எடுத்துடலாம். அவ கண் முழிச்சதும் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்க. யாரு இங்கே குழந்தையோட அம்மா?

    "வேலைக்குப் போயிட்டா. அவளுக்கு பொறுப்பே கிடையாது டாக்டர்...''

    குடும்பப் பிரச்னை எனக்கு அவசியமில்ல. ஜாக்கிரதையா பாத்துக்குங்க...

    அதற்குள் மூத்த சகோதரி கல்பனா, தம்பி ஆனந்துக்கு போன் போட, அவன் விவரம் சொல்ல, அவள் பதறினாள். அம்மா ராஜம் போனை வாங்கி, "கல்பனா, நானும், அப்பாவும் உன் வீட்டுக்கு வர முடியாது. நீ கிளம்பி வா!''

    சரிம்மா...!

    அம்மா! அக்கா வர்றாளே.... நான் போகட்டுமா? - சுதாவுக்கு அன்வரின் கவலை!

    "ஏய்... நீயும் போனா, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!''

    கையில் தன் செல்போனும் இல்லாமல் சுதா பதறிய நேரம்... பாண்டிபஜார், விஜயா மஹால் வாசலில் வண்டியை நிறுத்தி, துர்கா இறங்கினாள். பூட்டிவிட்டு, விழிகளை சுழலவிட்டாள். பைக்கின் மேல் சாயந்தபடி வெளிர் நீல ஜீன்ஸும், கறுப்பு டி-ஷர்ட்டும் அணிந்து, லேசான ஃபிரெஞ்சு தாடியுடன், நல்ல வெள்ளை நிறத்தில் ஓர் இளைஞன் விழிகளை சுழலவிட... துர்கா நெருங்கி,

    மிஸ்டர் அன்வர்!

    சடக்கென திரும்பியவன்... மேடம்! நீங்க யாரு... எப்படி என் பேரை..?

    சுதாவுக்காக காத்துக்கிட்டிருக்கீங்களா? - அவன் முகத்தில் அதிர்ச்சி!

    நான் சுதாவோட அண்ணி... துர்கா! அவ செல்போன் என் கையில தவறுதலா... என ஆரம்பித்து சற்றுமுன் நடந்ததைச் சொல்ல, அன்வர் ஒரு மாதிரி பேச முடியாமல் நின்றான்.

    மிஸ்டர் அன்வர்! இது உங்களுக்கும், எனக்கும் கொஞ்சம்கூட எதிர்பாராத திருப்பம் இல்லையா? இந்த ரோட்டுல நிறைய ஓட்டல்கள் இருக்கு. எதுலயாவது ஒண்ணுல உக்காந்து பேசலாமா..?

    சரிங்க!

    கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குள் ஒரு உணவகம் இருந்தது. காபி ஆர்டர் செய்தார்கள்.

    ஸாரி மிஸ்டர் அன்வர்... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். சாதி, மத பேதங்களை ஒழிப்போம்னு பேசினாலும், தனிப்பட்ட முறையில் அவரவர் குடும்பங்களுக்கு பாரம்பரிய எதிர்பார்ப்புகள் இருக்கில்லையா? எங்க குடும்பத்துல இது பெரிய புயலை உண்டாக்கும். எத்தனை நாளா இந்தக் காதல்?

    மேடம்... நான் பி.டெக் முடிச்சிட்டு, விப்ரோல் வேலை பார்க்கறேன். மூணு வருஷ சர்வீஸ். சம்பளம் பிடித்தம் போக, நாப்பதாயிரம். எங்கப்பா கார்மென்ட் பிஸினஸ்ல இருக்காரு. அம்மா குடும்பத்தலைவி. ரெண்டு சகோதரிகள் - கல்யாணமானவங்க. சொந்த வீடு இருக்கு. சுதாவை நான் கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா விரும்பறேன். அவளைக் கல்யாணம் செய்துகிட்டு கண்ணியமா குடித்தனம் நடத்த என்னால முடியும்!

    "உங்க வீட்ல இந்தக் காதல் தெரியுமா!''

    இல்ல... சொன்னா, முதல்ல ஒரு சலசலப்பு இருக்கும். ஆனா, கன்வின்ஸ் பண்ண என்னால முடியும்! - குரலில் திடமும், நம்பிக்கையும்!

    எங்க வீட்ல இந்தக் காதலை ஏத்துக்க மாட்டாங்க அன்வர்! என்ன செய்ய போறீங்க..?

    சுதாதான் முடிவெடுக்கணும்! உங்களை எல்லாம் அவ தூக்கி எறிஞ்சிட்டு வரணும்னு நான் நினைக்கல. அதுக்காக பின்வாங்கறதுலேயும் உடன்பாடு இல்ல. போராட நான் தயார். நம்ம கையில் எதுவும் இல்லை. அல்லா மாலிக்!

    "இறைவனை எஜமானன்னு சொல்றீங்களா..? நீங்க சீரடி சாய் பக்தரா?!''

    சிரித்தான் அன்வர். அவனை ஏற இறங்கப் பார்த்தாள் துர்கா. கண்களில் கலங்கமில்லாத சிரிப்பு. ஆண் மகனுக்குள்ள கம்பீரம். ஒளிவு மறைவில்லாத வார்த்தைகள்.

    என்னை அளவெடுக்கறீங்களா அக்கா?

    அக்காவா? என்று குரலில் அதிர்ச்சி காட்டியவள், வேறு எங்கோ பார்வையை சுழலவிட்டாள்.

    சுதாவுக்கு அண்ணினா, எனக்கு அக்காதானே? என்று அவளை தன் பக்கம் திருப்பினான் அன்வர்.

    ஓ... உறவுக்குள்ளே புகுந்தாச்சா? அத்தனை நம்பிக்கையா?

    நியாயமான நல்ல வாழ்க்கைக்கு நம்பிக்கைதானே வேர்? புயல் வீசினாலும், இதுல எங்க ரெண்டு பேருக்கும் பக்கபலமா இருப்பீங்கனு உள்மனசு சொல்லுது. அதான் அக்கானு கூப்பிட்டேன்!

    தேர்ந்தெடுத்த இனிமையான வார்த்தைகளால், துர்காவை அடித்துச் சாய்த்துவிட்டான்.

    "சுதாவுக்கு நான் அண்ணிதான். அவளைப் பெத்தவங்க, அக்கா, அண்ணானு ஒரு குடும்பமே இருக்கு. அவங்கள்லாம் முடிவெடுக்கணும். நான் சுதாகிட்ட தனியா பேசணும்.

    அவசரப்பட்டா நெருப்புல கைவிட்ட மாதிரி ஆயிடும். முதல் சுற்று பேசி முடிச்சிட்டு, கான்டாக்ட் பண்றேன்!''

    "சரிக்கா. இது என் விசிட்டிங் கார்ட். என்னைப் பற்றி நீங்க தரோவா விசாரிக்கலாம்!''

    வாசலுக்கு வந்து பைக் உதைத்து, ஒரு முறை கையசைத்துவிட்டு போக்குவரத்தில் அவன் கலக்க, துர்கா முகத்தில் இளம்சிரிப்பு!

    நல்லவனா இருக்கான். சுதாவுக்கு இவன் கிடைச்சா, யோகம்தான்! இது நடக்குமா?

    வெளியே வந்தாள். 'ஆபீஸுக்கும் லீவு சொல்லியாச்சு. மாமா, அத்தை கல்பனா வீட்டுக்குப் போயிருப்பாங்க. அவர், அஞ்சுவை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுவார். வீட்டுக்குப் போனா, உதவியா இருக்கும். மெதுவா இந்த அன்வர் மேட்டரை அவர்கிட்ட உடைக்கலாம்!' வண்டியை இயக்கினாள்.

    துர்கா!- குரல் கேட்டுத் திரும்ப, ஆட்டோவிலிருந்து பாலாஜி இறங்கினார். துர்காவின் அக்கா கல்யாணியின் கணவர்.

    என்னம்மா? ஆபீஸுக்கு லீவா?

    நீங்க என்ன இந்தப்பக்கம்?

    உங்கக்காவுக்கு டாக்டர் எழுதிக்கொடுத்த ஒரு ஸ்பெஷல் மாத்திரை, தேனாம்பேட்டை அப்போலோ ஹாஸ்பிட்டல்லதான் இருக்குமாம். வாங்க வந்தேன். இப்பத்தான் உனக்கு போன் பண்ணினேன். ஸ்விச்ட்டு ஆஃப்னு வருது!

    சரி, வீட்டுக்குத்தானே போறீங்க?

    ஆமாம்மா! வர்றியா? நீ வீட்டுக்கு வந்து ஒரு மாசமாச்சு. உங்கக்கா ஏங்கிப் போயிட்டா.

    யோசித்தாள் துர்கா!

    சரி, ஆட்டோவை அனுப்பிடுங்க. என் வண்டியில் போயிடலாம்!

    அவள் வண்டியை இயக்க, பாலாஜி பின்னால் உட்கார, சிக்னலில் வண்டி நிற்க, ஆட்டோவுக்குள் இருந்த துர்காவின் மூத்த நாத்தனார் கல்பனா, இருவரையும் பார்த்தாள். சிக்னல் விடுபட, துர்கா வண்டி வேறு திசையில் பயணிக்க, கல்பனாவுக்குக் குழப்பம்.

    இருபது நிமிடங்களில் பாலாஜி வீட்டுக்கு வந்துவிட்டாள் துர்கா. பத்து வயதுச் சிறுவன் ராஜா, 'அக்கா' என ஓடிவந்து துர்காவின் இடுப்பைக் கட்டிக்கொள்ள, என்னை சித்தினு கூப்பிட நீ ஒருத்தன்தான் இருக்கே! நீயும் அக்கானு கூப்பிட்டா எப்படி?

    பாலாஜி அருகில் வந்து, நீ எனக்கும் உங்கக்காவுக்கும் மூத்தமகள் இல்லையா? அதான் அக்கானு கூப்பிடறான்!

    கல்யாணி படுத்திருந்தாள். துர்காவை பார்த்ததும் அழுதாள்.

    "என்னக்கா... எதுக்கு அழுகை?!''

    உடம்புல ஒரு வியாதி பாக்கியில்ல துர்கா. உங்க அத்தான் வாங்கற சம்பளத்துல பாதிக்குமேல மருந்துக்கே போகுது. வீட்ல எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு, ஆபீஸுக்கும் அவர் போறார். எதுக்கும் உபயோகமில்லாத நான், ஏன் உயிரோட இருக்கணும்?

    என்னக்கா பேசுற நீ?

    நல்லா கேளு துர்கா!

    இதப்பாருங்க... சுறுசுறுப்பா, நல்ல ஒரு குடும்பத்தலைவியா நிர்வாகம் பண்ண வேண்டியவ இப்படி முடங்கிக்கிடந்தா, வாழற ஆசையே இருக்காதுங்க. அனுபவிச்சாத்தான் தெரியும் அந்தக் கஷ்டம்.

    ஏன் அத்தான்ட்ட கோவப்படற?

    அவ கோபப்படல. இயலாமையில் விரக்திதானே வெடிக்கும்?

    துர்கா அருகில் வந்து உட்கார்ந்து, அக்காவை தன் மேல் சாய்த்துக் கொண்டு கூந்தலை வருடிக் கொடுத்தாள்.

    நீ தைரியமா இருக்கணும். அத்தான் கஷ்டப்பட மாட்டார். உன் குழந்தை தவிக்கமாட்டான். நான் உள்ளூர்லதானே இருக்கேன். அத்தானுக்கும் தம்பிக்கும் நான் இன்னிக்கு சூப்பரா சமைச்சுப் போடறேன் பாரு...! அத்தான்! கூட மாட உதவி செய்யவாங்க. மெனு சொல்லுங்க. இன்னிக்கு அசத்திடலாம்!

    துவண்டு போயிருந்த வீட்டுக்குள் ஒரு துள்ளல் வந்துவிட்டது! மாலை ஆறு மணி வரை நேரம் போனது தெரியவில்லை.

    மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துர்கா புறப்பட்டாள். வீட்டை அடையும்போது மணி ஏழரை!

    மூத்தவள் கல்பனா உட்பட, அத்தனை பேரும் வீட்டுக்குள் இருந்தார்கள். உள்ளே தலையில் கட்டுடன் அஞ்சு படுத்திருக்க, அருகில் ஆனந்த்!

    என்னாச்சு குழந்தைக்கு? ஏன் தலையில் கட்டு? - பதறிய துர்கா அவளை நெருங்க,

    கொஞ்சம் தள்ளி நில்லு. ஏன் இத்தனை சீக்கிரம் வந்துட்டே?

    "என்ன பேசுறீங்க?'

    ராஜம் உள்ளே வந்தாள்.

    அக்கா புருஷனோட ஆயிரம் வேலைகள் அவளுக்கு இருக்கும்! சீக்கிரம் வர முடியுமா?

    துர்கா நிமிர்ந்தாள்.

    என்ன பொய் சொல்லலாம்னு யோசனை பண்ணிட்டு வந்தியா? கல்பனா - உன்னை, உங்க அத்தானை ஒரே வண்டியில் பார்த்துட்டா. இனி இல்லைனு சொல்ல முடியாது!

    அடுத்து, சுதா ஆவேசமாகத் தொடங்கினாள்... நீங்க அந்தப்பக்கம் போனதும் குழந்தைக்கு அடிபட்டாச்சு. உங்க செல்போன் சார்ஜ் இல்லாம வீட்ல. ஆபீஸ்ல கேட்டா, லீவு. ஆடிட்னு பொய் சொல்லிட்டு அக்கா புருஷன்கூட ஊரைச் சுத்தறீங்களா?

    துர்கா, சுதாவை நெருங்கினாள்.

    "உன் செல்போனை தவறுதலா நான் எடுத்துட்டுப் போயிட்டேன்!'' - துர்கா சொன்னதைக் கேட்டதுமே, சைலன்ட் மோடில் எங்கோ கிடக்கிறது என்று நினைத்து காலையில் இருந்து வீட்டில் சல்லடை போட்டு தன் மொபைலை தேடிக்கொண்டிருந்த சுதாவுக்கு திக்கென்றிருந்தது!

    ''அக்கா புருஷன்கூட ஊரை சுத்தறீங்களானு கேட்டியே? பதில் சொல்லிடட்டுமா? அல்லா மாலிக்!"

    சுதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. நரம்புகள் புடைத்து, வியர்வை ஊறி, கைகள் நடுங்கின.

    இறைவனே எஜமானன்னு சொல்றேன்! எல்லாருக்கும்தான். என் குழந்தையை அவர் காப்பாத்துவார். அத்தானைப் பார்த்தேன். அக்காவுக்கு முடியலைனு தெரிஞ்சப்போ, அவர் கூடப் போனேன். என்ன தப்பு? தாலியைக் கட்டிட்டு வந்துட்டா, பிறந்த வீடு இல்லைனு அர்த்தமில்ல. ரெண்டுமே ஒரு பொண்ணுக்கு ரெண்டு கண்கள்தான். என்னை யாரும் குற்றவாளிக் கூண்டுல ஏற்ற வேண்டாம். அப்புறமா நான் பேச ஆரம்பிச்சா, இந்த வீடு, கோர்ட் ஆயிடும். ஆகணுமா?

    அவளது அழுத்தமான கேள்விகள் அத்தனை பேரையும் துளைக்க, வீட்டு போன் அலற, துர்கா போய் எடுத்தாள். எதிர்முனை என்ன சொன்னதோ தெரியவில்லை... துர்காவின் முகம் படிப்படியாக மாறிகொண்டே வந்து அதிர்ச்சியில் உறைந்தது!

    துர்காவின் முகம் படிப்படியாக மாறிக்கொண்டே வந்து அதிர்ச்சியில் உறைந்தது. சுதாவுக்குக் கலவரம். தன் தொடர்பான அடுத்த அதிர்ச்சியா என்ற பீதியுடன் அவள் பார்க்க, குடும்பத்தார் குழப்பத்துடன் விழிக்க... துர்கா வேகமாக உள்ளே போய் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு நொடியில் வெளியே வந்தாள்.

    மறுபடியும் எங்க போற? - ராஜம்.

    எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கற ஒருத்தர் இறந்துட்டார். அவங்க வீட்டுக்குப் போறேன்!

    இந்த ராத்திரி நேரத்துலேயா? நீ ஒரு பொம்பளைங்கறது மறந்து போச்சா? ராஜம் நெருப்பைக் கக்க,

    நான் வந்து விவரம் சொல்றேன்! என்று துர்கா வேகமாக நடக்க, மாமா நடேசன் நெருங்கினார்.

    இருட்டிப் போச்சேம்மா... எதுவானாலும் விடிஞ்சு போகக்கூடாதா?

    மாமா... பிரச்னை பெரிசு. நான் போயே ஆகணும். புரிஞ்சுக்கோங்க!

    விடுங்கப்பா... அவ எங்கே வேணும்னாலும் போகட்டும், எப்ப வேணும்னாலும் வரட்டும். ஆம்பளைக்கு அடங்காத ஒரு பொண்ணு யார் சொல்லிக் கேக்கப்போறா? - ஆனந்த் சீற, துர்கா ஒரு நொடி நின்றாள். அவனை அழுந்தப் பார்த்துவிட்டு வெளியேறினாள். வீட்டுப் பெண்கள் மொத்தப் பேரும் துர்காவை வாயில் போட்டு வறுத்துக்கொட்ட, துர்கா ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

    நேரம் இரவு பத்து மணி. நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு கனமாக ஏறி உட்கார்ந்துவிட்டது. இறந்துபோன பரமு வீடு இருந்த தெருவை துர்கா அடைய, கணிசமான ஒரு கூட்டம். போலீஸ் வேன் நின்றிருந்தது. துர்கா ஆட்டோவிலிருந்து இறங்க, அவளுடன் வேலை பார்க்கும் பத்ரி ஓடி வந்தான்.

    எதுக்கு துர்கா இங்க வந்தே?

    "பரமு தற்கொலை பண்ணிக்கிட்டதா நீங்கதானே தகவல்

    Enjoying the preview?
    Page 1 of 1