Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Putham Puthu Kaalai...
Putham Puthu Kaalai...
Putham Puthu Kaalai...
Ebook470 pages4 hours

Putham Puthu Kaalai...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பிடிவாதமாக ஒன்று சேர்வதில் மட்டுமல்ல...ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்து வாழ்வதில்தான் காதலின் முழு பரிமாணமும் அடங்கி இருக்கிறது என்பதை சொல்லும் அருமையான காதல் கதை...
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580134206041
Putham Puthu Kaalai...

Read more from Viji Prabu

Related authors

Related to Putham Puthu Kaalai...

Related ebooks

Related categories

Reviews for Putham Puthu Kaalai...

Rating: 3.8 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Putham Puthu Kaalai... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    புத்தம் புது காலை...

    Putham Puthu Kaalai...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    சர்வ மங்கல மாங்கல்யே...

    அய்யர் மந்திரம் ஒதியவாறு எடுத்து கொடுத்த மாங்கல்யத்தினை... கெட்டி மேளம் முழங்க... தன் கையில் வாங்கிக் கொண்ட சத்யன்... மங்கல வாத்தியங்கள் முழங்க அதனை தன் அருகில் அமர்ந்திருந்த மது மதியின் கழுத்தினில் கட்டி முடித்தான்.

    பொண்ணோட நெத்தில குங்குமம் வெச்சு விடுங்கோ...

    குடுங்கோ... அதுக்குத்தான் வெயிட் பண்ணின்டிருக்கேன்... பட் ஒரு சின்ன கரெக்சன்... பொண்ணுன்னு சொல்லாம... உன் பொண்டாட்டியோட நெத்திலன்னு சொன்னீங்கன்னா... கேட்க பிளசண்ட்டா இருக்கும்...

    சத்யன் கிறக்கத்துடன் கூறியதைக் கேட்டு... அய்யர் உட்பட... சற்றி இருந்த அனைவரும் சத்தமாக சிரித்துவிட... நாணத்தினால் சிவந்த முகத்துடன் சத்யனின் இடுப்பில் தன் முழங்கையால் செல்லமாக இடித்து அவனை அடக்க முயன்றாள் மதுமதி.

    ஸ்ஸ்... வலிக்குதுடி பொண்டாட்டி...

    மனைவியின் ரகசிய செயலை பகிரங்க படுத்துவதை போல... அதற்கும் முகம் சுளித்து சத்தமாக சத்யன் கேட்க... குங்குமமாக சிவந்துவிட்ட முகத்தினை பிறர் பார்த்துவிடா வண்ணம் தலை குனிந்து அமர்ந்துவிட்டாள் மதுமதி.

    அவளது அந்த நாணத்தினை ரசனையுடன் பார்த்த சத்யனுக்குள்... தான் நினைத்த வாழ்வினை அடைந்துவிட்ட ஆனந்த கர்வம் நிறைந்தது.

    வட்ட முகத்துடன்... கரு வண்டு கண்கள் மீனாக நீண்டிருக்க... இயற்கையாகவே சிவந்திருக்கும் கொவ்வை இதழ்கள் வெட்கத்தில் துடித்திருக்க... அழகோவியமாக அருகில் அமர்ந்திருந்த மதுமதியை பார்த்த சத்யனுக்குள் இத்தனை அழகுக்கும் இனி தானே உரிமையானவன் என்பதைப் போன்றதொரு செந்தம் தோன்ற... அதே உரிமையுடன் சற்று நகர்ந்து மனைவியின் அருகில் நன்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டான் சத்யன்.

    எல்லாரும் பார்க்கிறாங்க... என்னதிது... கொஞ்சம் தள்ளி உட்காருங்க...

    கூச்சத்துடன் கூறியவாறு... விலகி அமர முயன்ற மதுமதியின் கரம் பற்றி அமரச் செய்த சத்யனின் கரம்... உரிமையுடன் மனைவியின் இடை பற்றி... அங்கேயே நிலைத்து நின்று விட்டது.

    யார் பார்த்தா எனக்கென்ன...? நான் உன் புருசன்டி... இப்ப யாருக்காகவும் நான் பயப்பட தேவையேயில்ல... அப்ப்பா...! ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு... இதுக்காக எத்தனை பாடு... எத்தனை கஷ்டம்...! இனி எந்த கவலையும் இல்லை... ஐம் எ ஃபிரீ பேர்ட்... என் பொண்டாட்டியை கொஞ்சுவேன்... கட்டி பிடிச்சுகுவேன்... என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஒரு பய என்னைக் கேள்வி கேட்க முடியாது... புரிஞ்சுதா...

    சலுகையும்... உரிமையுமாக கூறியவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் நிறைந்திருக்க... அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்த மதுமதியின் பார்வை தானாக உயர்ந்து... சற்ற தொலைவில்... மணவறைக்கு சற்று தள்ளி... அந்தக் கல்யாணத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதைப்போல நின்றிருந்த தன்னுடைய பெற்றோரான வர்மனிடமும்... சரண்யாவிடமும் நிலைத்தது.

    ஸ்ஸ்... என்ன ஊர்ங்க இது! ஒரு ஏஸி இல்லை... பேன் இல்லை... இவ்வளவு சின்னதா ஒரு கல்யாண மண்டபத்தை நான் என் லைஃப் டைமில் பார்த்ததே இல்லை...

    அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல சரண்... இன்னும் கொஞ்சநேரம் பொறுத்துக்க... நாம கிளம்பிடலாம்...

    உடுத்தியிருந்த விலையுயர்ந்த பட்டுச் சேலையின் தலைப்பினால் விசிறியபடி சரண்யா கூற... அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார் வர்மன்.

    ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடலாமா...! இது நீங்க பெத்த... உங்க சொந்த பொண்ணோட கல்யாணம் டாடி... யாரோ ஒரு மூணாவது மனுசன் மாதிரி கிளம்பிடலாம்னு சொல்றீங்க...!’

    மனம் வலிக்க மனதிற்குள் கேட்டுக் கொண்டாள் மதுமிதா.

    என்ன டாடி இது! திஸ் இஸ் டூ பேட்... இது நம்ம அக்கா மதுவோட மேரேஜ்... உடனே கிளம்பிடலாம்னு சொல்றீங்க...? நாட் ஃபேர்ப்பா... நாம இப்படி பண்ணக் கூடாது...

    ஷட் அப் ரோஹித்... பெரிய மனுசன் மாதிரி பேசாத நீ அக்கா... அக்கா... ன்னு உருகுற மாதிரி... உன் அக்காவுக்கு உன் மேலயும்... நம்ம பேமிலி மேலயும் அக்கறை இருக்கணுமில்ல...? அப்படி இருந்திருந்தா... இந்த மாதிரியான ஒரு வொர்ஸ்ட் பிளேசில் நம்மளை கொண்டு வந்து நிக்க வெச்சிருப்பாளா...? அவ செஞ்சிருக்கிற காரியத்துக்கு நாங்க இந்த அளவுக்கு இங்க இருக்கிறதே பெரிய விஷயம்...

    நீங்க என்னமோ செய்யுங்க... ஆனா நான் உங்களோட வர மாட்டேன் நா தாத்தாகிட்ட போறேன்...

    டேய்... ரோஷித்... நில்லுடா...

    மதுமதி மனதிற்குள் கேட்டுக் கொண்ட கேள்வியை... அவள் சார்பாக தன் பெற்றோரிடத்தில் கேட்ட தம்பி ரோஷித்தை அவள் நன்றியும்... பாசமுமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

    அவனை தடுக்க முயன்ற தாயின் குரலினை சட்டை செய்யாதவனாக... அந்த சிறிய கல்யாண மண்டபத்தின் வாயிலின் நின்று... உறவினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த அவர்களின் தாத்தாவான தயாபரனிடம் விரைந்து சென்று விட்டான் ரோஷித்...

    தயாபரன்... மதுமதியின் தந்தையான வர்மனின் தந்தை அவர். தன் சொந்த உழைப்பில் அவர் உருவாக்கித் தந்திருந்த பிஸினெஸ் சாம்ராஜ்யத்தைத்தான் தற்போது வர்மன் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார் என்பதினால்... தன் தந்தை தயாபரனின் வார்த்தைகளை எப்போதுமே மறுத்து பேச மாட்டார் வர்மன்.

    தயாபரனுக்கு... தன் பேரனும் பேத்தியும் தான் எல்லாமே... அவர்கள் இருவரையும் அவரே தன்னுடன் வைத்து வளர்த்தவர் என்பதினால்... மகனை விட பேரக் குழந்தைகளின் மீது பாசம் அதிகம் அவருக்கு.

    உல்லாச பேர்வழியான வர்மனுக்கு ஏற்ற மனைவியாக... சுகவாசியான சரண்யா வந்து வாய்த்து விட்ட காரணத்தினால்... பேரப் பிள்ளைகள் இருவரையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார் தயாபரன்.

    சரண்யா மற்றும் வர்மன் ஆகிய இருவருக்கும்... தயாபரன் குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது ஒரு வகையில் நல்லதாக இருக்க... எந்த கவலையும் இல்லாமல் இருவரும் தங்களது இல்வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே வாரிசான வர்மன்... பரம்பரை பணக்கார தந்தையின் ஒற்றை வாரிசான சரண்யா ஆகிய இருவரின் எண்ண வோட்டங்களும் ஒன்றாகவே இருந்துவிட... மணமொத்த தம்பதியினராகவே வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக...

    இயல்பான எளிமையுடன்... அனைவரையும் சமமாக பாவித்து பழகும் தன்மையுடன் வளர்ந்திருந்தாள் மதுமதி...

    அவளது அந்த இயல்பில்... வர்மனுக்கும் அவரது மனைவிக்கும் மாறாத வருத்தம் உண்டு. அந்த வருத்தத்துடன் மகளை அவர்கள் கண்டிக்கும் போதெல்லாம் மதுமதிக்கு அரணாக இருந்து... அவர்களை தடுத்து விடுவார் தயாபரன்.

    என் பேத்திக்கு அவளோட பாட்டி... அதாண்டா... உங்க அம்மா... அவளோட குணம் வந்து வாய்ச்சிருக்கு வர்மா... அவளை அது போக்குல இருக்க விடு...

    அதுக்கில்லப்பா... நம்ம ஸ்டேட்டசுக்கு தகுந்த மாதிரி இவ இருக்கனுமில்லையா...?

    என்னடா பெரிய ஸ்டேட்டஸ்...? எல்லாம் நாமளா உருவாக்கிக்கிறதுதான்... பேசாம போ... உன் ஸ்டேட்டசையும்... அதோட வெட்டி கௌரவத்தையும் நீயே வெச்சுக்க... என் பேத்தி அவ இஷ்டப்படித்தான் இருப்பா...

    அதற்கு மேலும் தந்தையை எதிர்க்கும் திராணி இல்லாதவராக வாய்மூடி நின்றுவிடும் வர்மனை... பார்வையாலேயே சுட்டெரிப்பாள் சரண்யா.

    என்னை மாதிரி பரம்பரையா பணத்தை பார்த்திருந்தா உங்கப்பாவுக்கு ஸ்டேசுன்னா என்னன்னு தெரியும். புதுசா பணத்தை பார்த்தவர்தான... அவர் அப்படித்தான் பேசுவார்... அவர் புள்ளதான நீங்களும்... நீங்க இப்படித்தான் இருப்பீங்க... ரெண்டு பேரும் எப்படியோ போங்க... ஆனா மது வளர்கிற விதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. இது எங்க போய் முடிய போகுதோ தெரியலை... எனக்கு ரொம்ப கவலையா இருக்கு...

    அடிக்கடி சரண்யா கணவனிடம் கவலையாக கூறியதை போலவே... அவர்களது அந்தஸ்திற்கு சற்றும் எட்ட முடியாத நிலையில் இருந்த சத்யானின் மீது காதல் கொண்டிருந்தாள் மதுமதி.

    கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட வர்மன்... மனைவி சரண்யாவின் விருப்பப்படி தன்னுடைய தொழில்களை மேலும் விஸ்தரித்து... சென்னையில் வந்து செட்டில் ஆகியிருக்க...

    கோயம்பத்தூரில் இருந்த ஸ்பின்னிங் மில்... மற்றும் காம்ப்ளெக்ஸ் கடைகள் ஆகியவைகளை நிர்வகித்தவாறு... அங்கேயே தங்கி விட்டார் தயாபரன்.

    அதனால்... தாத்தாவின் செல்ல பேத்தியான மதுமதியும்... கோயம்பத்தூரில் இருந்த பிரபல கல்லூரியிலே தன்னுடைய படிப்பை தொடர தொடங்கினாள்.

    தயாபரன் மதுமதிக்காக தேர்ந்தெடுத்திருந்த கல்லூரி அது. மிகப் பெரிய செல்வந்தர்களின் வீட்டு வாரிசுகள் மட்டும் படிக்ககூடிய அந்த காலேஜில்...

    விவசாய குடும்பத்தை சேர்ந்த... மிகச் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவனான சத்யன்... மாநில அளவில் முதன்மை மாணவனாக தேர்ச்சி பெற்று... அந்த தகுதியின் அடிப்படையில்... ஸ்கால்ஷிப்புடன் கூடிய மெரிட்டில்... அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

    கிராமத்து இளைஞனுக்கேயுரிய துணிச்சலுடன்... யாருக்கும் அடங்காத முரட்டுக் காளையாக... படிப்பிலும்... விளையாட்டிலும் கெட்டிகாரனாக... அழகும் இளமையும் போட்டிபோட்டு நிறைந்திருக்கும் ஆறடி உயர ஆண்மகனாக சத்யனை... அந்த காலேஜே ஹீரோவாக கொண்டாடி கொண்டிருந்தது.

    மதுமதி படிக்க சேர்ந்திருந்த பிடெக் பட்ட படிப்பில்... எம்.டெக் முதலாமாண்டு படித்து கொண்டிருந்த சத்யன்தான் அந்த டிபார்ட்மெண்டின் ரெப்ரசன்டேடிவ்வாக இருக்க...

    படிப்பு சார்ந்த அனைத்து தேவைக்குமே மதுமதி அவனது உதவியைதான் நாட வேண்டியதாக இருந்தது.

    தொடக்கத்தில்... சக மாணவனாக... பின்... ஓரளவிற்கு தெரிந்த தோழனாக... அதன் பின்... நன்கு அறிமுகமான நண்பனாக... சத்யனுடன் பழக தொடங்கிய மதுமிதாவிற்கு மெல்ல மெல்ல சத்யன் அவளது மனதிற்கு நெருக்கமானவனாக... மாறியிருக்க...

    பணத்திமிரும்... படாகோபமுமாக திரிந்தவர்களுக் கிடையே... எளிமையும் மென்மையுமாக இருந்த மதுமதியை சத்யனுக்கும் பிடித்துப் போய் விட்டது.

    எவராலும் அசைக்க முடியாத சத்யனின் இதயத்திற்குள்... மதுமதி மிக ஈஸியாக குடியேறிவிட... தன் இதயமானவளை... தன்னுடைய உயிராக எண்ணி அன்பு காட்ட தொடங்கிவிட்டான் சத்யன்.

    சத்யனின் முரட்டுத் தனமான அன்பும்... உரிமையான காதலும்... மதுமதியை முழுமையாக அவனிடம் கொண்டு சேர்த்து விட... தன்னுடைய காதலானவனை தன்னுடைய இதயமாக எண்ணி வாழ தொடங்கி விட்டாள் மதுமதி.

    பைனல் இயல் வந்து விட்டது... இதோ... இன்னும் இரண்டே வாரங்களில்... காலேஜ் படிப்பு முடிந்து விடும் என்கிற நிலையில்... மதுமதியை தங்களது வழக்கமான இடத்தில் வந்து சந்தித்திருந்த சத்யனின் முகத்தில் ஒரு முடிவிற்கு வந்து விட்ட உறுதி நிறைந்திருந்தது.

    இன்னிக்கு நான் உன்ன டிராப் பண்ணுறேன் மது... உனக்காக வெயிட் பண்ற காரை திருப்பி அனுப்பி விடு...

    இல்ல... இருக்கட்டும்... நான் எப்பவும் போலவே போய்க்கறேன்...

    சத்யன் கூறியதைக் கேட்டு பயம் கொண்டவளாக மறுத்தவளாக எழுந்த மதுமதியின் கரம் பற்றி இழுத்து அவளை தன் மடி மீது சரித்துக் கொண்ட சத்யன்... மெல்ல குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட...

    தன் மறுப்பினை மறந்தவளாக... சத்யன் தனக்களித்த முதல் முத்தத்தின் காரணமாக உள்ளே எழுந்த சிலிர்ப்புடன் கண்மூடிக் கொண்டவளின் விழியோரத்தில் கண்ணீர் துளிர்விட தொடங்கியது.

    ஏய்... இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி... சரியான லூசுடி நீ... மதும்மா... இங்க பாரு... மது...

    காதலயின் கண்ணீர் கண்டு மனம் பதற... அவளை எழுப்பி அமர்த்தினான் சத்யன்.

    என்னன்னு சொல்லுடி... நான் கிஸ் பண்ணுனது பிடிக்கலையா...

    அவளது கண்ணீருக்கான காரணம் புரியாதவனாக... சத்யன் ஒரு மாதிரிக் குரலில் வெறுமையாக கேட்க... சட்டென்று திரும்பி... அவனது தோள் அணைத்து... அவன் கன்னத்தில் முத்தமிட்டு... பின் மெதுவாக விலகிய மதுமதியை... ஒருவித ஆவேசத்துடன் இறுக்கமாக அணைத்து விலகிய சத்யனிடம்... அவனது பழைய உறுதி மீண்டிருந்தது.

    சரி வா... கிளம்பலாம்... லேட்டாகிருச்சு...

    எழுந்துநின்று மதுமதிக்காக கரம் நீட்டிய சத்யனின் முகத்தை தயக்கமாக பார்த்தாள் மதுமதி.

    வேண்டாம் சத்யா... நானே போயிக்கறேனே...

    வான்னு சொன்னேன்... எழுந்திரு...

    மதுமதியின் தயக்கத்தினை சட்டை செய்யாதவனாக... சத்யன் உறுதியுடன் கூற... வேறுவழியின்று... தயக்கம் மாறாத முகத்துடன் எழுந்து நின்றாள் மதுமதி.

    இப்ப எதுக்கு இப்படி மூஞ்சியை உம்முன்னு வெச்சிருக்க...? என்கூட பைக்கில் வர பிடிக்கலையா...?

    வாங்க போகலாம்...

    சத்யனின் கேள்விக்கு பதிலாக... உறுதியுடன் கூறிவிட்டு... அவனைவிட வேகமாக சென்று... சத்யனின் பைக் அருகே சென்று நின்று கொண்ட மதுமதியை பார்த்தவனின் முகத்தில் மென்மை படர்ந்தது.

    உள்ளுக்குள்ள இவ்வளவு ஆசை இருக்குல்ல... அப்புறம் எதுக்கு பயப்படுற மது...? என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா...?

    கேட்டவாறு பைக்கில் ஏறியமர்ந்த சத்யன்... அதனை ஸ்டார்ட் செய்யும் முன்பாக... பைக்கில் ஏறியமர்ந்து... உரிமையுடன் அவனது இடையை இறுக்கிக் கொண்டாள் மதுமதி.

    பார்ட் டைம் ஜாப் பார்த்து பைக் வாங்குனதுக்கு... இப்பத்தான் பலன் கிடைச்சிருக்கு... யூ நோ ஒன் திங்க் மது... என் பைக்குல உட்கார்ர முதல் பொண்ணு நீதான் தெரியுமா...

    கடைசி பொண்ணும் நானாத்தான் இருப்பேன்... கிளம்புங்க... போலாம்...

    ஏய்... ச்சீ... நான் எவ்வளவு சந்தோசமா பேசிக்கிட்டு இருக்கேன்... இப்ப போய் கடைசி... அது இதுன்னு பேசிக்கிட்டு... எப்பவுமே என் பின்னால... இப்படி என்னக் கட்டி பிடிச்சுக்கிட்டு நீ வரனும்... எனக்கு அது போதும் மது...

    அப்படியா... அது மட்டும் போதுமா...

    சத்யனின் மயக்கம் நிறைந்த குரல் கொடுத்த குதூகலத்துடன்... தன்னை மீறி குறும்புடன் கேட்டு விட்ட மதுமதி... நாக்கை கடித்து தன்னை நிதானித்து கொள்ளும் முன்... வேகமாக பைக்கினை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கீழிறங்கிய சத்யனின் கரங்கள்... அடுத்த நொடியே அவளை தனக்குள் சிறைபிடித்துக் கொண்டிருந்தது.

    போதாது மது... எனக்கு நீ வேணும்... முழுசா என்னோட மதுவாக வேண்டும்... வாழ்நாள் முழுவதும் உன்கூட... இதே காதலோட நான் வாழணும்...

    சத்யனின் குரலில் எல்லையற்ற ஏக்கம் நிறைந்திருக்க... அதனை புரிந்து கொண்டவளாக... அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள் மதுமதி.

    இதுக்கு மேல தாங்காது... போதும்டா சத்யா... கண்ட்ரோலை மீறி போறதுக்குள்ள கிளம்பிடு...

    ஒரு சில நொடிகள்... அவளை தன்னுள் சிறைப்படுத்தி வைத்திருந்த சத்யன் தனக்குத் தானே கூறியவாறு... மதுமதியை விடுவித்து விட்டு... கலைந்திருந்த அவளது கேசத்தினை தன் கைகளால் நீவி சரி செய்தவாறு அவளை பைக்கில் நன்றாக அமரச் செய்ய... புன்சிரிப்புடன் அவனது இடையணைத்து நெருக்கமாக அமர்ந்து கொண்டாள் மதுமதி...

    மதுக்கண்ணா... வந்துட்டியாடா... இன்னிக்கு என்ன இவ்வளவு லேட்...?

    காலடி ஓசைக் கேட்டு... ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த தயாபரன் திரும்பிப் பார்த்தவர்... மதுமதியுடன் இணைந்து நின்றிருந்த சத்யனைக் கண்டவுடன் கேள்வியாக புருவம் சுளித்தவாறு எழுந்து நின்றுவிட்டார்.

    மதுமதியின் தயக்க தோற்றமும்... அவளருகில் நின்றிருந்தவனின் முகத்தில் தெரிந்த உரிமை கலந்த உறுதியையும் பார்வையிட்டவருக்கு... உள்ளே எதுவோ புரிந்து விட... மௌனமாக சத்யனை அளவிட்ட விழிகளுடன்... சோபாவை நோக்கி கை காட்டினார் தயாபரன்.

    தாத்தா... இவர்...

    ஐம் சத்யன்... எம்.டெக் பைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்கேன். மது மதியோட காலேஜ்தான்...

    பயத்தில் வார்த்தைகள் தொண்டைக் குழியை தாண்டி வராமல்... வெறும் காற்றாக வெளிவர... கூற தொடங்கியவளை... பார்வையால் தடுத்துவிட்டு... அழுத்தமாக உறுதியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டவனின் தன் நம்பிக்கை தயாபரனுக்குள் அவன் மீதான மரியாதையை தோற்றுவித்தது.

    எனக்கு மதுவை பிடித்திருக்கிறது தாத்தா... மதுவுக்கும்தான். என்னடா இவன்... இப்பதான படிச்சிக்கிட்டு இருக்கான்... இவன் எப்படி நம்ம பேத்தியை வெச்சு காப்பாத்த போறான்னு நினைக்க வேண்டாம் தாத்தா... இந்த நிமிசம் வரைக்கும்... காலேஜ் டாப்பர் நான்தான்... கேம்பஸ் செலக்சனின்... மூணு கம்பெனி என்னை வேலைக்காக செலக்ட் செய்திருக்கு... காலேஜ் முடித்து மறு மாசமே... எந்த கம்பெனியில நல்ல சேலரி கிடைக்குதோ... அந்த கம்பெனியில ஜாயின் பண்ணிருவேன்...

    உங்க பேமிலியை பத்தி சொல்லலையேப்பா... கல்யாணம்ங்கிறது... நீ மட்டுமே பேசி முடிவெடுக்கிற விசயம் இல்லயே...

    அப்பா வடுகநாதன்... விவசாயி. அம்மா பேரு பிரமீளா... பாமா ன்னு ஒரு தங்கை இருக்கா... எங்க சொந்த ஊரு அய்யப்புரம். சின்ன கிராமம்தான்... இருந்தாலும்... என் பொண்டாட்டியை எப்படி நல்லபடியா வாழ வைக்கணும்னு எனக்கு தெரியும்...

    மதுமதி திகைப்புடன் வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க... நிமிர்வுடன் தன்னையும்... தான் மதுமதியின் மீது கொண்டிருக்கும் அன்பையும் ஒன்றாக தயாபரனிடம் அறிமுகப்படுத்திவிட்டு... அவரது பதிலை எதிர் பார்த்திருப்பவனாக கேள்வியாக அவரை பார்த்தவனிடம் அதே மரியாதையுடன்... புன்னகையுடன் கரம் நீட்டி... அவனது கை பற்றி பராட்டுதலாக குலுக்கினார் தயாபரன்.

    எனக்கு உன்ன புடிச்சிருக்கு சத்யா... என் பேத்திக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா... கூடக் கொஞ்சம் புடிச்சு போச்சு... ஆனா... மதுவோட வாழ்க்கைய நான் மட்டும் முடிவு பண்ண முடியாது. அவளோட பேரண்சோட உரிமையை நான் தட்டி பறிக்க முடியாதில்லையா...? அதனால கொஞ்சம் வெயிட் பண்ணு... பார்க்கலாம்... சரியா...?

    தன்னை அவருக்கு பிடித்து விட்டது என்பதிலேயே முகம் மலர்ந்து விட்ட சத்யன்... அவன் இறுதியாக கூறியதைக் கேட்டு... சிந்தனையாக மதுமதியை திரும்பிப் பார்க்க...

    அவனது பார்வையில் அன்று தான் கண்ட ஏக்கத்தின் நினைவுடன்... தற்போது கணவனாக தன்னருகில் அமர்ந்திருக்கும் சத்யனின் கரத்தினை கெட்டியாக பற்றிக் கொண்டாள் மதுமதி.

    2

    பெத்த பொண்ணோட கல்யாணம் என்கிற நினைப்பு துளி கூட இல்லாம எம்புட்டு தெனாவெட்டா அந்தம்மா நின்னுக்கிட்டு இருக்கு பாரு. எல்லாம் உன் சீமந்தபுத்திரனால வந்த வினை...

    சரிங்க... கொஞ்சம் பொறுமையாத்தான் பேசுங்களேன்... கூட்டம் கும்பல்ல பேசுற பேச்சா இரு...?

    கூட்டம் கும்பல்ல தலை நிமிர்ந்து நிக்குற மாதிரியா இங்கே எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு...? பெண்ண பெத்தவ... எனக்கென்னன்னு ஒரு ஓரத்துல போய் நின்னுக்கிட்டு இருக்கா... அவ புருசன்காரன் என்னன்னா... விட்டா அவ கால்ல விழுந்து சேவை செய்ய தயாரா இருக்க மாதிரி பொண்டாட்டிக்கு விசிறிவிட்டுக்கிட்டு நிக்கிறான்... நல்ல கூத்துதான் போ...! இதுல எந்தம்பியை நீ அடக்கி வெக்க நினைக்கிறயா பிரமீளா... இதுவும் நல்லாத்தான் இருக்கு... ஹீம்...!

    திருமணம் முடிந்து... உறவினர் கூட்டத்தில் பாதிப் பேர் விருந்துண்டு கொண்டிருக்க... விருந்துக்காக காத்திருந்த மீது உறவினர்கள் அங்கங்கே தத்தமது நெருக்கமான உறவு மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து சொந்தகதை... ஊர்க்கதை என்று பேசிக் கொண்டிருந்தாலும்.

    அனைவரின் பார்வையுமே... எதிலும் ஒட்டாமல் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த வர்மன் மற்றும் சரண்யாவின் மீதே நிலைகொண்டு இருப்பதைக் கண்டு பொறுமிய வடுகநாதனை அடக்க முயன்ற பிரமீளாவை தன் கணீர்க் குரலினால் அதட்டினாள் வளர்மதி.

    வளர்மதி... வடுகநாதனின் உடன் பிறந்த அக்கா அவள். நினைவு தெரிந்த நாள் முதலாக... அக்கா வளர்மதியின் கணீர் குரலிற்கு அடி பணிந்தே பழகி இருந்த வடுக நாதன்... அப்போதும் தன் சார்பாக பேசிய அக்காவின் வார்த்தையை ஆமோதிப்பவராக தலையாட்டியவாறு... மனைவியை முறைக்க தொடங்கினார் அவர்.

    அதுக்கில்லண்ணி... அவங்க கொஞ்சம் வசதிப்பட்ட மனுசங்க... நம்ம ஊரு பழக்கவழக்கம் தெரியாதுல்ல...? நாமதான் கொஞ்சம் அனுசரித்து போகணும்...

    அட... இங்க பார்த்தியா வடுக நாதா...! உன் பொண்டாட்டிக்கு இப்படி கோர்வையா பேச வரும்னு எனக்கு இன்னிக்குதான் தெரியுது...! நீ பேசு பிரமீளா... பெரிய இடத்து சம்பந்தகாரியா போயிட்ட... இனிமேலும் இந்த ஏழப்பட்ட அண்ணிகாரியோட தயவு உனக்கெதுக்கு...? அதனால... இனிமேல என்ன செய்யணும்னு நீ சொல்லு... நான் அதுப்படி நடக்க பழகிக்கறேன்... டேய் தம்பி... நீயும் பழகிக்கடா... போற போக்க பார்த்தா நீயும் உன் சம்பந்தகாரன் மாதிரி பொண்டாட்டிக்கு விசிறி விட்டுக்கிட்டுதான் திரியப் போறன்னு நினைக்கிறேன்... ஹீம்... எல்லாம் தலையெழுத்து...

    எப்படியாவது அந்த கல்யாணம் நல்லபடியாக நடந்தேறி முடிந்துவிட்டால் போதும் என்பதற்காக... மிகவும் நைச்சியமான குரலில் கூறிய பிரமீளாவிடம்... ஒரு வித எள்ளலுடன் வளர்மதி கூறி முடிக்கும் முன்பாக... தோளில் கிடந்த துண்டினை கையில் உருவிக் கொண்டு... மனைவியை அடிப்பதைப் போல கை ஓங்கியவரின் தோற்றத்தைக் கண்டு பயத்துடன் ஒரு அடி பின்னடைந்து நின்று விட்டாள் பிரமீளா.

    எம்புட்டு தைரியம் இருந்தா... என் அக்காவுக்கே புத்தி சொல்ல நினைச்சிருப்ப...! இங்க பாருடி... உங்க சம்பந்தகாரங்களோட பணம் பவுசை பார்த்து ஆசைப்பட்டு நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு திரியுற மனுசங்க... நாங்க இல்ல... புரிஞ்சதா...? அவங்களோட பவுசு அவங்களுக்கு... எங்களுக்கு அதெல்லாம் தேவையேயில்ல... இங்க... இப்படித்தான் இருக்கனும்னா... அவங்க அப்படி இருந்து தான் ஆகனும். அதவிட்டுட்டு... நாங்க அவுகளை அனுசரிச்சு போகணும்னு இன்னொரு தடவை பேசுனா... பேசுன நாக்கு உன் வாயில தங்காது... தெரிஞ்சுக்க...

    அட விடுடா... இவள்ளாம் ஒரு ஆளுன்னு இவ கிட்ட போய் பேசிக்கிட்டு... நீ வா. சொந்த பந்தம்... உறவு மொறைன்னு அத்தனசனமும் காத்துக்கிட்டு நிக்குது... அவுகளை வழியனுப்பி வெச்சுட்டு... அப்புறமா மத்தத பார்க்கலாம்...

    சரிக்கா... நீ முன்னால போ... நா இந்தா வந்துடறேன்... ஏய்... இங்க பாரு... மசமசன்னு நிக்காம போய் பந்தியில சாப்பாட்ட பாரு... ஏதாவது வேணுமின்னா... ஒரு குரல் கொடு... சரியா...? தேவையில்லாம அந்த பணக்கார கூட்டத்துகிட்ட போய் பல்லை இளிச்சுக்கிட்டு நின்னேன்னா எனக்கு கெட்ட கோபம் வந்துரும்... அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்...

    இல்லங்க... நான் அவங்ககிட்ட பேச மாட்டேன். பொண்ணு மாப்பிள்ளையை ஆசீர்வாதம் மட்டும் பண்ணிட்டு...

    ஆமா... இவ பெரிய இவ... நீ அவுங்களை ஆசீர்வாதம் பண்ணினவுடனே தேனும் பாலும் அப்படியே இங்கே வந்து பாஞ்சு ஆறா ஓடிற போகுது... அட போடி இவளே... எல்லாம் நான் ஆசீர்வாதம் பண்ணினா போதும்... நீ போய் ஆகுற வேலைய பாரு போ...

    சரிங்க...

    பெற்ற மகன்... மாலையும் கழுத்துமாக மனைவியின் அருகில் நிற்பதை கண்ணால் பார்ப்பதே தான் செய்த பெரும் பாக்கியம் என்பதைப் போல... மணமேடையை ஏக்கமாக பார்த்தவாறு கண்களில் படர்ந்த கண்ணீரினை சேலை தலைப்பினால் துடைத்தவாறு அங்கிருந்து விலகி செல்ல தொடங்கினாள் பிரமீளா.

    பிள்ளைகள பெத்தவங்க வாங்கப்பா... வந்து பொண்ணையும் பிள்ளையையும் ஆசிர்வாதம் பண்ணுங்க...

    நெருங்கிய உறவினர்கள்... ஊர்ப் பெரியவர்கள்... என மேடையேறி வந்த ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி முடித்த மணமக்கள்... ஓய்வாக நின்று கொண்டு இருக்க... அப்போதுதான் அவர்களை பெற்றவர்களின் நினைவு வந்தவராக குரல் கொடுத்தார் ஒரு பெரியவர்.

    வர்மா... உன்னத்தான் கூப்பிடறாங்க... காதில் விழலையா...?

    எல்லாம் விழுந்ததுப்பா... ச்சு... ஐ டோண்ட் வாண்ட் டு டூ இட்...

    பெரியவரின் குரலினை தொடர்ந்து அனைவரின் பார்வையும் வர்மன் தம்பதியினரிடம் திரும்புவதைக் கண்டு இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்த மகனை கண்டிப்புடன் பார்த்தார் தயாபரன்.

    இது என்ன பேச்சு வர்மா...! நம்ம குழந்தையை நாமளே ஆசீர்வாதம் பண்ணாட்டி எப்படி...?

    குழந்தை...! இன்னொரு முறை அந்த மாதிரி சொல்லாதீங்கப்பா... இவ நாம நினைச்ச மாதிரி... நம்ம வீட்டு குழந்தை இல்லப்பா... அதோ நிக்கிறான் பாருங்க... அவனோட பொண்டாட்டியதான்... நாம நம்ம வீட்டு பிள்ளையா வளர்த்திருக்கோம்...

    வர்மா... கீப் கொயட்... நம்ம கோபத்தை வெளிக்காட்டுற நேரம் இல்ல இது... போ... போய் ஆசீர்வாதம் பண்ணு... அண்ட்... மனப்பூர்வமா மது நல்லா இருக்கணும்னு நினைச்சு ஆசீர்வாதம் பண்ணுடா... நீ சொன்ன மாதிரி அவ சத்யனோட பொண்டாட்டியாவே இருந்துட்டு போகட்டும். ஆனா... அவ நல்லா இருந்தால் தான்... உன் அப்பா... நான் நிம்மதியா இருப்பேன்...

    இப்படி செண்ட்டிமெண்ட்டா பேசிப் பேசியே உங்க பேத்தி நினைச்ச மாதிரியே எல்லாத்தையும் நடந்து முடிச்சுட்டீங்க மாமா. பட்... யூ நோ ஒன் திங்க்... இது உங்க பேத்திக்கு ஏற்ற வாழ்க்கையா இருக்க போறதுல்ல... அது மட்டும் கிளியர்கட்டா புரியுது. நீங்களும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க... நீங்க வாங்க டியர்... கடைசியா ஒரு பிளஸ் பண்ணிட்டு போயிடலாம்... அவ்வளவுதானே...? கம்...

    ம்ம்... இவளுக்காக எவ்வளவோ பண்ணிட்டோம்... இதையும் பண்ணிடலாம்... வா சரண்...

    மகனிடம் பேசிக் கொண்டிருந்த மாமனாரை இடைமறித்து கோபத்துடன் கூறிவிட்டு... ஆறுதலாக கணவனின் தோள்தட்டி கூறிய மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவராக அவளுடன் இணைந்து செல்ல தொடங்கிய மகனை வேதனையுடன் பார்த்தவாறு... அவர்களை பின் தொடர்ந்து தானும் மணமேடையை நோக்கி செல்ல தொடங்கினார் தயாபரன்.

    டாடி... மாம்...

    மேடையேறி வந்த பெற்றவர்களை கண்டவுடன்... இனிதான் அவர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்கிற பிரிவுத்துயருடன் கை நீட்டி அழைத்த மகளின் அருகில் கூட செல்லாமல்... சற்று தொலைவிலேயே நின்று விட்டாள் சரண்யா...

    அவளது விலகலை கண்டு மனம் விக்கித்து நின்று விட்ட மனைவியின் துயர் புரிந்து... ஆறுதலாக அவளது கரம் பற்றிக் கொண்டான் சத்யன்.

    நாம எதிர்பார்த்ததுதான மதி...? கவலபடாதடா...

    எதிர்பார்த்ததுதான் என்றாலும்... மனசு வலிக்குது சத்யா... என்னால முடியல...

    மதுமதியின் குரலில் தாங்க முடியாத துயரத்தின் வலி தெரிய... அவளது தோளணைத்து அவளுடன் நெருங்கி நின்று கொண்டான் சத்யா...

    சரிடா... எல்லாரும் பார்க்கிறாங்க... வா மதி...

    மதுமதியை அணைத்த நிலையிலேயே அவளை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோரிடம் சென்று நின்று... வேண்டாவெறுப்பாக பாதி குனிந்து பின் படக் கென்று சத்யன் நிமிர்ந்து நின்றுவிட...

    சாஷ்டாங்கமாக காலில் விழுந்து நமஸ்கரித்த மகளை... தூக்கிவிடவும் தோன்றாதவராக... சத்யனை முறைத்தவாறு நின்றுவிட்டார் வர்மன்.

    பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு... அவர்களது ஆசீர்வாத வார்த்தைக்காக தலை நிமிர்ந்து பார்த்த மதுமதி... பெற்றவர்களும்... தன் கணவனும் ஒருவரையொருவர் எதிரியாக எண்ணி முறைத்துக் கொண்டிருப்பதை கண்டு... கண்ணில் பெருகிய கண்ணீர் கன்னத்தில் வழிய... தானாக எழுந்து நின்றாள்.

    "இப்ப எதுக்கு இப்படி கண்ணீர் விட்டு டிராமா பண்ணுற மது...? ஸ்டாப் ஆல் திஸ் இடியட்...! நீ நினைச்ச மாதிரி எல்லாத்தையும் நடத்தி குடுத்துட்டோமே... இது

    Enjoying the preview?
    Page 1 of 1