Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayakkam Kondean Thozhi...
Mayakkam Kondean Thozhi...
Mayakkam Kondean Thozhi...
Ebook244 pages1 hour

Mayakkam Kondean Thozhi...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

சந்தேகம் என்னும் மாய வலையில் சிக்கிக் கொண்ட இளம் ஜோடியின் கதை இது..இருவரும் அதில் இருந்து மீண்டனரா இல்லையா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580134206040
Mayakkam Kondean Thozhi...

Read more from Viji Prabu

Related authors

Related to Mayakkam Kondean Thozhi...

Related ebooks

Related categories

Reviews for Mayakkam Kondean Thozhi...

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayakkam Kondean Thozhi... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    மயக்கம் கொண்டேன் தோழி...

    Mayakkam Kondean Thozhi...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    கண்களில் கனிவும் முகமெல்லாம் சிரிப்புமாக அருள்பாலித்துக் கொண்டிருந்த பெருமாளின் முகத்தைக் கண்கள் பனிக்கப் பார்த்தபடி கைகூப்பி நின்றிருந்தாள் பூமதி...

    மனம் உருக தன் கவலைகளை எல்லாம் அவர் காலடியில் வைத்துவிட்ட நெகிழ்வுடன் திரும்பிய பூமதியின் கண்கள் அவசரமாக அந்தச் சிறிய கோவிலைச் சுற்றி வலம் வந்தது...

    பட்டாம் பூச்சியைப் போல ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த மகனைக் கண்ட பூமதியின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது... ஒரு சிறு புன்முறுவலுடன் மகனது அருகில் சென்று அவனது சிறிய நெற்றியில் பெருமாளின் குங்குமத்தை வைத்து தன் உதட்டைக் குவித்து ஊதிவிட்ட தாயின் மூச்சுக் காற்றின் பரிசம் பட்ட கூச்சத்துடன் அன்னையின் கால்களைக் கட்டிக் கொண்டான் பூமதியின் செல்ல மகன் கண்ணன்...

    கண்ணன்... ஆனந்தக் கண்ணன்... பூமதி தன் வாழ்வில் இழந்த அத்தனை சொந்தங்களின்... அனைத்து சந்தோசங்களின் மொத்த உருவமாக இறைவன் அவளுக்குக் கொடுத்திருக்கும் வரம்...

    மம்மி... அந்த பிளவர் எல்லாம் எப்படி மம்மி இத்தனை டிப்பரென்ட்... டிப்பரென்ட் கலர்ல இருக்கு...?

    அதெல்லாம் நேச்சரோட கிப்ட் கண்ணா...

    ஓஹோ...! அப்போ நேச்சர் கிப்ட்டெல்லாம் கொடுக்குமா மம்மி...?

    ம்ம்ம்... கண்டிப்பா கொடுக்கும் கண்ணா...

    சற்று நேரம் அமைதியாக தாயின் முந்தானையைப் பிடித்து தன் சின்னஞ்சிறு கைகளில் சுற்றி விளையாடிக் கொண்டே நடந்து சென்ற கண்ணன் மெதுவாக பூமதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்...

    மகனது பார்வையைக் கண்ட பூமதியின் மனமெங்கும் வண்ண வண்ண மலர்கள் மலர்ந்து மணம் வீசத் தொடங்க... பூமதி அன்புடன் மகனைக் குனிந்து பார்த்தாள்... அவளது கை தானாக ஆனந்தக் கண்ணனின் மென்மையான தலைமுடியை ஆதரவாக வருடிக் கொடுத்தது...

    என்னம்மா கண்ணா... மம்மிகிட்ட ஏதாச்சும் டவுட் கேட்கணுமா...? அன்னையின் கேள்வியைக் கேட்ட கண்ணன் தன் தயக்கம் விலகியவனாக பூமதியின் முகத்தைப் பார்த்தான்...

    நேச்சர் கிப்ட் கொடுக்கணும்னா நாம என்ன மம்மி செய்யணும்...

    நல்ல-குட் பாயா நடந்துக்கணும்...

    அப்போ நான் குட் பாய் இல்லியா மம்மி...? ஏக்கத்துடன் கேட்ட கண்ணனின் பிஞ்சுக் கரத்தை இதமாக பிடித்துக் கொண்ட பூமதி, மகனது உயரத்திற்கேற்றாற் போல மண்டியிட்டு அவன் அருகில் அமர்ந்தாள்...

    என் கண்ணன் எப்போதுமே குட் பாய்தான் கண்ணா, ஆனாலும் அப்பப்ப கொஞ்சம்... நல்லாக் கேட்டுக்க கண்ணா... கொஞ்சம்தான்... அப்படிக் கொஞ்சமே கொஞ்சமாக சேட்டை பண்ணுற இல்லியா...? அதையும் குறைச்சுக்கிட்டா... நீ புல்லா குட்பாய் ஆகிவிடுவ கண்ணா...

    ஓகே மம்மி... இனிமே நான் அப்படியெல்லாம் சேட்டை பண்ணவே மாட்டேன் மம்மி... போதுமா...? நீங்க அந்த நேச்சர்கிட்ட சொல்லி எனக்கும் கிப்ட் கொடுக்கச் சொல்றீங்களா...? தலையை அழகாக ஆட்டிக் கொண்டு கண்ணன் கேட்ட விதத்தில் மனதைப் பறி கொடுத்தவளாக மகனது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்து விட்டு எழுந்தாள் பூமதி...

    கண்டிப்பாக சொல்றேன்டா ராஜா... ஆனால் உனக்கு என்ன கிப்ட் வேணும்னு சொன்னால் தானே நான் நேச்சர்கிட்ட சொல்ல முடியும்...?

    பூமதியின் ஆள்காட்டி விரலைப் பிடித்தபடி அவளுடன் இணைந்து நடந்து கொண்டிருந்த கண்ணனின் நடை நின்று விட்டதை அறிந்து பூமதி வியப்புடன் மகனைக் குனிந்து பார்த்தாள்...

    மம்மி... கூல்ல என் பிரண்ட் எல்லோருக்கும் டாடி இருக்காங்கள்ள மம்மி... அதே மாதிரி எனக்கும் ஒரு டாடியை வரவழைச்சு தரச் சொல்லி நேச்சர்கிட்ட கேக்கறீங்களா...?

    பூமதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிய - அவள் திக்பிரமையுடன் அசையமறந்து அப்படியே நின்று விட்டாள்... பூமதியின் காலடியில் இருந்த பூமி அவளை விட்டு நழுவிச் செல்வதைப் போல உணர்ந்த பூமதி தள்ளாடியபடி மகனது கரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்...

    அன்னையின் நிலையை அறிந்துகொள்ளும் அளவிற்கு வயதில்லாத பச்சிளம் பாலகனான கண்ணன் ஏக்கத்துடன் பூமதியை பார்த்தான்...

    கண்ணா... உனக்குத்தான் மம்மி இருக்கிறேனில்ல...? ஆனா இந்த உலகத்தில எத்தனை பேருக்கு மம்மி இல்லைன்னு உனக்குத் தெரியுமா...? அவங்கள்லாம் மம்மி இல்லாம எவ்வளவு கஷ்டப்படுவாங்க...?

    மம்மி இல்லாமலா...?

    ஆமாண்டா ராஜா... அதனாலதான் நேச்சர் உனக்குக் கிப்ட்டாக என்னைக் கொடுத்திருக்கிறார்... ஏன்... உனக்கு என்னைப் பிடிக்கலையா...?

    மம்மி... நான்...

    அப்போ சரிப்பா... நான் நேச்சர் கிட்ட சொல்லிடுறேன்... என் கன்றுக்குட்டிக்கு என்னைப் பிடிக்க...

    நோ நோ... மம்மி... ஐ லைக் யூ வெரி மச் மம்மி... எனக்கு இந்த வேர்ல்டுலயே என் மம்மியைத்தான் ரொம்பப் பிடிக்கும்...

    அவசரமாக தாயை தன் வார்த்தைகளைக்கூட முடிக்கவிடாமல் இடைமறித்து கூறிக் கொண்டே அன்னையின் கால்களைக் கட்டிக் கொண்ட தன் சின்னஞ்சிறு மகனைக் கண்களில் நீர் வழியக் கட்டிக் கொண்டாள் பூமதி...

    மம்மி ஆல்ஸோ லைக் யூ வெரி மச் கண்ணா, அதனால நீ இனிமேல் டாடியைப் பத்திப் பேசக்கூடாது... அப்படிப் பேசினால் கடவுள் மம்மியை அவர்கிட்ட கூப்பிட்டுக்கிட்டு... அதுக்கு அப்புறமாகத்தான் உனக்காக ஒரு டாடியை அனுப்பி வைப்பார்...

    மம்மி... பயத்துடன் தன் கழுத்தைக் கட்டிக் கொண்ட கண்ணனின் முதுகை ஆறுதலாக வருடிக் கொடுத்தாலும் முகத்தில் மாறாத உறுதியுடன் அவனைத் தன்புறம் திருப்பினாள் பூமதி...

    அப்போ இனிமேல்...

    நோ மம்மி... நான் டாடியைப் பத்திப் பேசமாட்டேன் மம்மி... எனக்கு டாடியே வேண்டாம் மம்மி...

    குட் பாய்... இதோ பார் கண்ணா... மம்மியைப் பார்... நான் இப்போ உன்கூடத்தானே இருக்கிறேன்...? இனி மேலும்... எப்பவுமே... உன்கூட மட்டும்தான் இருப்பேன் கண்ணா... பயப்படக்கூடாது... மகனுக்கு தேறுதல் கூறிக்கொண்டே அவனைத் தூக்கிக் கொண்ட பூமதியின் மனம் வலித்தாலும், மகனுக்கு அவனது நிலையை உணர்த்திவிட்ட திருப்தி தோன்றியது...

    தங்களது நிலையை கண்ணன் உணர வேண்டியதின் அவசியத்தைத் தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்ட பூமதி மகனது கவனத்தைத் திசை திருப்பும் விதமாக பலவித கதைகளைக் கூறிக் கொண்டே வர, கண்ணனது முகம் தெளிவடையைத் தொடங்கியது...

    ஐயோ மம்மி... நான் என்ன சின்னப் பையனா...? கண்ணன் பெரிய மேனாக வளரத் தொடங்கிட்டேன் தெரியுமா...? இனிமேல் என்னை இப்படியெல்லாம் தூக்கிக்கிட்டு நடக்காதீங்க மம்மி... எனக்கு ஸேம் ஸேம்மா இருக்கு... அதுவரை குழந்தையாய் அன்னையின் தோள் வளைவில் முகம் புதைத்துக் கிடந்த கண்ணன் பெரிய மனிதனைப் போன்ற தோரணையுடன் கூறிக் கொண்டே இறங்கிக் கொள்ள புன்சிரிப்புடன் அவனை இறக்கி விட்டாள் பூமதி...

    கண்ணன் தான் நிறுத்திய இடத்தில் இருந்து தனது கேள்விகளைத் தொடர ஆரம்பிக்க, அவனுக்குத் தக்கபடி பதிலைச் சொல்லிக் கொண்டே வந்த பூமதியின் மனம் வேதனையுடன் கனக்கத் தொடங்கியது...

    என்னதான் பூமதி தன் உயிரைக் கொடுத்து உழைத்தாலும் கண்ணனது தேவைகளை அவன் கேட்காதபோதே நிறைவேற்றிக் கொடுத்தாலும்... கண்ணனே தன் உலகம் என்று எண்ணி வாழ்ந்து வந்தாலும்... அவனது மனதில் தந்தைக்கான வெற்றிடம் ஏக்கத்துடன் காத்திருப்பதை உணர்ந்து கொண்ட பூமதியின் உள்ளம் நிம்மதியை இழந்து தவிக்கத் தொடங்கியது...

    இத்தனை வருடங்களாக யாரைப் பற்றிய சிந்தனையை முற்றிலுமாக தன் வாழ்வில் இருந்தே பூமதி விலக்கி வைத்து இருந்தாளோ... அவனுடைய சிந்தனைகள்... அவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே... பூமதியின் மனம் முழுவதும் நிறைந்து அவளது உணர்வுகளை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது...

    எப்பொழுதெல்லாம் பூமதிக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றுமோ... அப்போதெல்லாம் தன்னுடைய ஆருயிர் மகனது முகத்தைப் பார்த்தே... அத்தனை சிந்தனைகளிலும் இருந்து மிக இலகுவாக வெளிவந்து விடும் பூமதிக்கு, அன்றோ அந்த ஆருயிர் மகனது முகமே அவனது எண்ணவோட்டத்தினை அதிகரித்துக் கொண்டிருந்தது...

    தாயின் மனம் தன்னை எண்ணித் தவிப்பதை அறியாதவனாக பட்டாம் பூச்சியைப் பிடிக்க அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தான் ஆனந்தக் கண்ணன்...

    அவர்கள் வாழ்வது கொடைக்கானல் மலைச் சரிவில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான ‘ராயல் எடேட்’ என்ற மிகப் பெரிய தேயிலை எடேட்டின் தொழிலாளர்கள் குடியிருப்பில். மலையும், மலைசார்ந்த இதமான தட்ப வெப்ப நிலையும் தந்த செழிப்புடன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலையன்னை பச்சைப் பட்டைப் போர்த்திக் கொண்டு கண்ணுக்கும் மனதிற்கும் குளுமையைத் தந்து கொண்டிருந்தாள்...

    கண்ணன் பூமதியின் வயிற்றில் ஆறு மாதக் கருவாக இருக்கும் போது அந்த ராயல் எடேட்டின் சிறிய கூலிற்கு டீச்சராக வந்து வேலையில் அமர்ந்தாள் பூமதி.

    அந்த எடேட்டின் முதலாளியான டீபனின் நன்மதிப்பிற்கும், அவனது மனைவியான கிரேசியின் தோழமைக்கும் பாத்திரமாகிவிட்ட பூமதி, அங்குள்ள மனிதர்களின் அன்பையும் சேர்த்து பெற்று விட்ட காரணத்தினால் அவளுடைய வாழ்க்கைத் தரமும் படிப்படியாக உயர்ந்து, இப்போது அந்த எடேட்டின் மேனேஜராக உயர்ந்து இருந்தாள் பூமதி...

    எடேட்டின் மேனேஜருக்கு நல்ல சம்பளத்துடன், அழகான அடக்கமான பங்களாவைப் போன்ற குவார்ட்டர் தனியாக இருந்தாலும் பூமதி அந்தக் குடியிருப்பு வீட்டினை மறுத்துவிட்டு அவள் முதன் முதலாக குடிவந்த சிறிய அடக்கமான வீடே போதுமென்று டீபனிடம் கூறிவிட்டாள்...

    யாருமற்ற தனிமையான மனதுடன் பூமதி அந்தச் சிறிய வீட்டிற்குக் குடிபுகுந்தபோது, தங்களது சொந்த மகளைப் போல அவளை அரவணைத்துக் கொண்ட எலிஸபெத் தம்பதியினர் அங்கு குடியிருப்பதும் கூட அதற்கு ஒரு காரணம்...

    எலிஸபெத், ஜான் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே என்பதனால் பூமதியை அவர்கள் தங்களது மகளாகவே மனதளவில் தத்தெடுத்துக் கொண்டார்கள்... பூமதியும் ஜானின் இரண்டு மகன்களையும் தன்னுடைய உடன்பிறப்புகளைப் போலவே எண்ணி அன்பு காட்டி வந்ததால் அவர்களுக்கு இடையில் சொந்த பந்தங்களின் அன்னியோன்யத்தைவிட அதிகமான அன்பு தோன்றியிருந்தது...

    மகனது கை பிடித்துக் கொண்டே அவனுடன் கதை பேசியபடி வந்த பூமதியைக் கண்ட எலிஸபெத் அவர்களுக்காகவே காத்திருப்பவளைப் போல எழுந்து அவர்களின் அருகில் வந்தாள்...

    பாட்டி... நாங்க கோவிலுக்குப் போனோமே... அங்கே பட்டர்பிளை பாத்தேன் பாத்தி... தன் அழகிய கண்களை உருட்டிக் கூறிய கண்ணணைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டாள் எலிஸபெத்.

    காலையில இவ்வளவு சீக்கிரமா எங்கே போனீங்கன்னு தெரியாமல் தவிச்சுப் போயிட்டேன் பூமதி, எங்கே போவதாக இருந்தாலும் சொல்லிட்டுப் போறதில்லையா கண்ணு...?

    எலிஸபெத்தின் ஆதூரமான குரல் பூமதியின் வேதனையான உள்ளத்திற்கு இதமளிக்க, அவள் கண்கள் பனிக்க எலிஸபெத்தைப் பார்த்தாள்...

    இன்னிக்குக் கண்ணனோட பிறந்த நாள்ம்மா... அதான் காலையிலேயே கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு போயிருந்தோம்... மெல்லிய குரலில் கூறிய பூமதியின் முகத்தைக் கூர்ந்து பார்த்த முதியவளின் கண்களில் கருணை தோன்றியது...

    அழுதியா கண்ணு...?

    எலிஸபெத்தின் அன்பான கேள்வியைக் கேட்ட பூமதியின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது... பூமதி அவசரமாக தன் சேலையினால் கண்ணைத் துடைத்தபடி வரவழைத்துக் கொண்டே சிரிப்புடன் எலிஸபெத்தைப் பார்த்தாள்...

    கலங்காத கண்ணு, ஆயிரம் பேர் ஆறுதல் சொல்ல இருந்தாலும்... தனதாளு பக்கத்தில இல்லாமப் போனா வருத்தமாத்தான் இருக்கும், எல்லாம் நாம வாங்கிட்டு வந்த வரம்னு நினைச்சுகிட வேண்டியதுதான்... மனசைத் தேத்திக்கம்மா.

    பூமதிக்கு ஆறுதல் கூறினாலும் எலிஸபெத்தின் கண்களும் கலங்கத்தான் செய்தது... கண்ணனைக் கொஞ்சுவதைப் போன்ற பாவனையில் குனிந்து பூமதி அறிந்து விடாத வண்ணம் தன் துயரத்தை மறைத்துக் கொண்டாள் அவள்...

    ஆனந்துக் கண்ணு... இன்னிக்கு உன்னோட பிறந்த நாளா ராசா...? வா... பாட்டி உனக்கு பணியாரம் சுட்டுத் தரவா... நல்லா... சூடா... இனிப்பா என் கண்ணனுக்குப் பிடிச்சதைப்போல பாட்டி சுட்டுத் தருவேனாம்... என் ராசா வேணாம்னு சொல்லாம அத்தனையையும் சாப்பிட்டு விடுவியாம்... இந்த மாமாப் பயலுகளுக்கு எல்லாம் எதுவுமே மிச்சம் இல்லாமல் நாமே எல்லாத்தையும் சாப்பிட்டு விடுவோமாம்...

    பூமதியைக்கூட மறந்தவனாக எலிஸபெத்தின் தோளில் சலுகையுடன் சாய்ந்துகொண்டு தலையாட்டிய மகனைப் பார்த்துச் சிரித்தாள் பூமதி...

    2

    அந்தப் பெரிய மாளிகையின் வெளியில் இருந்த கேட்டின் முன் தன் காரை நிறுத்திய சுசித்ராவின் கண்கள் அம்மாளிகையை அழுத்தமான அமைதியுடன் ஒரு முறை பார்த்துக் கொண்டது... காலை ஒன்பது மணியாகிவிட்ட பின்னரும்கூட கேட்டில் வந்து நிற்க வேண்டிய வாட்ச்மேன் முனுசாமி தன் வேலையில் கவனம் இல்லாதவனாக தோட்டக்காரனுடன் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை ஒரு சிறு முகச்சுளிப்புடன் கவனித்த சுசித்ரா தன் காரின் ஹாரனை தொடர்ந்து ஒலிக்கச் செய்தாள்...

    காரின் ஹாரன் ஒலியைக் கேட்ட முனுசாமி தன் பேச்சை உடனடியாக நிறுத்திவிட்டு ஓடிவந்து வேகமாகக் காம்பவுண்டு கேட்டினைத் திறந்துவிட்டு சுசித்ராவின் கோபத்தைத் தணிக்கும் எண்ணத்துடன் பெரிய வணக்கத்தைத் தெரிவிக்க, அவனைக் கவனிக்காதவளாக காரைச் செலுத்திக் கொண்டு போய் போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிய சுசித்ரா முனுசாமியைப் பார்த்து விரல் சொடுக்கி அழைத்தாள்...

    அன்று காலை தான் கண் விழித்த முகத்தை எண்ணி மனதிற்குள்ளேயே

    Enjoying the preview?
    Page 1 of 1